Showing posts with label நேரம் நல்ல நேரம்1965. Show all posts
Showing posts with label நேரம் நல்ல நேரம்1965. Show all posts

Monday, October 26, 2026

சுபம் வரும் வேளை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும். மதுரையை விட்டு
சென்னை செல்லும் வேளை.
தம்பிகளைச் சித்தப்பா வீட்டில் விட்டு வந்தார் அப்பா.

45 வயது அப்பா, 37 வயது அம்மா.
இருவருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது 
ஒன்றும் தெரியாது.
சென்று இறங்க பாட்டி வீடு இருந்ததோ பிழைத்தோமோ.

அதற்குள் அப்பாவின் மாமா மனைவி வீட்டுக்கு வந்தார்.
'' பெண் பார்க்கணும்னா அவர்கள் தானே வரவேண்டும்?
நாராயணா நீ ஏன் விட்டுக் கொடுக்கிறாய்?'' என்று வெளுத்து வாங்கினார்.

அங்கே கமலாவின் மாமியார் மாமனார்  எல்லோரும் பார்க்க வேண்டுமாம் அம்மாமி ''

என்று அப்பா சமாதானப்
படுத்தினார். எல்லாவற்றுக்கும்  வளைந்து கொடுக்காதே
உன்  தளத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றவர்,
சென்னைக்குச் சென்று  என் வருங்கால மாமியாரிடமும்
வம்பு ஏத்திவிட்டு வந்தார்.

இங்கே ஒரு விஷயம் சொல்லணும். என் அப்பா அம்மாவைப் போல
அமைதிப் புறாக்களைப் பார்க்கவே முடியாது.

உலகம் முழுவதும் நல்லவர்களால் ஆனது 
என்று நினைப்பவர்கள்.  என் மாமியார் ,மாமனார், பாட்டி ,தாத்தா 
அந்த வகைதான்.
மாமனார் 18 வயசிலேயே, 14 வயது மாமியாரைப்   பார்த்துத் தன் திருமணத்தை நிச்சயித்துக் கொண்டவர். இருவருக்கும் ஜாதகம் கிடையாது. மாமனாரின் தங்கையும் என் மாமியாரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.:)
 எங்களை வந்து பார்த்த அம்மாமி என் மாமியாரிடமும்  கலகம்
செய்து பார்த்தார்.
அந்தக் கால ஆபட்ஸ்பரியில் திருமணம் நிகழ்த்துபவர்கள்.கொஞ்சம் தூண்டிவிட்டுப் பார்த்தார்கள்.

இப்போது மதராஸ்க்கு வண்டி ஏறலாமா:)
எப்போதும் போல ஒவ்வொரு ஸ்டேஷனிலும்  வண்டி நிற்கும் போதெல்லாம் பயணத்தை ரசித்தபடி  செங்கல்பட்டு வந்ததும் 
தூங்கி விட்டேன்:)

தாவணி பாவாடையில் வந்து இறங்கிய என்னைப் பார்த்து இரண்டு மாமாவுக்கும் சிரிப்பு. 

இப்படியே கல்யாணம் பண்ணிக்கப் போறியா. ? நாளைக்கு
புடவை கட்டிக் கொள்ள வேண்டும் தெரியுமா?
என்றனர்.
அந்த வருடம்

அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி  வந்ததால் ஹாஜீ  மூசாவில் ஒரு ஆரணிப் பட்டுப் புடவையும் ஊதா வண்ண ரவிக்கையும் 
எனக்கான டிரெஸ். 
அம்மா அதையே அந்த  பெண் பார்க்கும் படலத்துக்கு எடுத்து
வைத்திருந்தார்.
எழும்பூரில் இருந்து புரசவாக்கம் வருவதற்குள் 
அம்மா சமாசாரம் சொல்லி முடித்தார்.


ஆஜிப் பாட்டி, தாத்தா.
மீண்டும் பார்க்கலாம்.

.



சுபம் வரும் வேளை.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.  மதுரையை விட்டு சென்னை செல்லும் வேளை. தம்பிகளைச் சித்தப்பா வீட்டில் விட்டு வந்தார் அப்பா. 45 வயது...