Blog Archive

Friday, August 31, 2018

முதுமை சுதந்திரம்.....

Vallisimhan

சுதந்திரம் என்பது கொடுத்து வருவதா. நாமாக எடுத்துக் கொள்வதா.
பெரியவர்கள் இருக்கும் வீட்டில்
மருமகள்களுக்கெல்லாம் சீக்கிரம் சுதந்திரம் என்கிற வார்த்தையை

உபயோகிக்க முடியாது.
பெரியவர்கள் காலையிலிருந்தே ஒரு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். அது கோவிலாக இருக்கலாம், உறவினர்கள் வருகையாக இருக்கலாம்,

நம் குழந்தைகளின் பள்ளி விஷயமாக இருக்கலாம்.
 வைத்தியர் வருகையாக இருக்கலாம்.
எல்லாவற்றையும் யோசித்து நாம் இன்று 75 பைசா தொலைவில்
இருக்கும் பெற்றோரைப் பார்த்துவிட்டு  3 மணிக்குள் திரும்பலாம் என்று ,
யோசித்துப் பாட்டியிடம் பர்மிஷன் வாங்கினால்
, நாளைக்குப் போயேன். அரைமணி நேரத்தில் உன் பெரிய மாமனார் மாமியார்
வருகிறார்கள். அவர்கள் கிளம்ப மதியம் ஆகிடும். 
என்று சொன்னதும் எனக்கு சுருதி இறங்கிவிடும். என் மாமியார் அப்போது கை கொடுக்க நினைப்பார்.
அவள் போகட்டும். அவ அம்மாவுக்குக் கையே தூக்க முடியலையாம்.
என்னன்ன்னு போய்ப் பார்த்து விட்டு வந்துவிடுவாள். நான் இங்கே
பார்த்துக் கொள்கிறேன் என்பார்.

உன்னை நம்ப முடியாது. திடீர்னு தலைவலி வந்தால் கஷ்டம்.
நாளைக்குப் போகட்டுமே என்பார்  பாட்டி.

முடிந்தது அன்றைய உரையாடல். ஒரு மணிக்குப் பாட்டிக்குக் காப்பி
போட்டுக் கொடுக்கவும், விருந்தாளிகள் வரவும்.
அரிசி உப்புமா கிண்டவும் நேரம் போய்விடும்.


எதற்கு இந்த விலாவரிக் கதை என்று தோன்றும்.
எல்லா வீடுகளிலும் நடக்கும் விஷயம் தானே.

 ஆனால் 28 வயதில் இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை.
எதிர்த்துப் பேச பெற்றோர் கற்றுத்தரவும் இல்லை.

மீண்டும் 1989க்கு வருவோம்.  7 வருடங்கள் கழித்து மகள் திருமணம்.
அவள் அப்பா காரோட்ட, என் அப்பா வழிகாட்ட  அந்தத் திருமணம் நல்லபடியாக
நடந்தது.

அந்தத் திருமணத்துக்கு, என் ஐந்து வருட சம்பாத்தியமும்
 ஒரு நகையாக அவள் கழுத்தில் ஏறியது.

வரிசையாக வாழ்வின் ஏற்றம் பள்ளம் எல்லாம்
தாண்டிக் கண்விழிக்கையில் 2006 வந்திருந்தது.
இப்பொழுது என்னை இரு என்று சொல்லவும் ஆளில்லை.
போ என்று சொல்லவும் சந்தர்ப்பம் இல்லை.
குழந்தைகள் இருக்குமிடம் உதவி செய்யப் புறப்பட்டோம்

சிங்கம் எங்கும் சென்று வந்துவிடுவார். எனக்கு போகும் இடைத்திலும் வீட்டு சம்பந்தமான வேலைகள் இருக்கும். அன்பினால் செய்ய வேண்டிய
தேவைகள் அவை.
2010லிருந்து இருவருக்குமே வெவ்வெறு சிகித்சைகள்.

தவறேதும் இல்லை. கண்ணியமான சந்தோஷத்துடன் கடந்தது வாழ்க்கை.
2013இல்  சிங்கம் இறைவனடி சேரும் வரை.
பிறகு என் வாழ்க்கை  குழந்தைகள் கையில்.

வரச்சொன்னால் போவேன். அந்த ஊர் விசா முடிந்ததும் வேறு இடம்.
அவர்கள் உலகம் வேறு. என் உலகம் வேறு.
இணையத்தில் புகுந்தததால் 80 சதவிகித விடுதலை.
முன்பு முதுமை வரமா சாபமா என்று ஒரு தொடர் போனது.
\
இப்பொழுது சொல்கிறேன்
முதுமைக்கு உண்டான தளர்வு வந்தாலும் உடல் ஆரோக்கியமும்
மனத்திடமும், கை நிறையப் பணமும், எது நடந்தாலும்
பொறுமை காப்பதும் தெரிந்தால் இது சுதந்திர முதுமையே.
வாழ்க வளமுடன்.

Thursday, August 30, 2018

அன்று பெய்த மழை

Vallisimhan

''பசங்களா பொசல் வருது யாரும் வெளில போக வேண்டாம்.
ரேவதி நீ போய் கெரசின் இருக்கா பார்த்துக்கோ. ஹர்ரிக்கேன் லைட்

துடைச்சு வச்சுடுமா.செட்டியார் கடைல மெழுகுவர்த்தி ஒரு டஜன்,
கொத்துக்கடலை அரைக்கிலொ,பொரி அரைக் கிலோ,வேர்க்கடலை எல்லாம் கொண்டுவரச் சொல்லு.

உருளைக் கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய்,  எல்லாம் நிறைய
வாங்கி வச்சுடு.

எத்தனை நாள்மழைபெய்யுமோ!''இவ்வளவையும்

சொல்லிவிட்டு, சென்னை ஒன்றின் வானொலிப் ப்ரொக்ராம்களைக்கேட்க ஆரம்பித்துவிடுவார்.
அதிலதான் மணிக்கொருதடவை புயல் சின்னம் நகரும்,

வழிகளையும் வேகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!!!

ஓ!பக்கத்தில வந்துடும் போலிருக்கே,
நெல்லூர் ,பிரகாசம்தானே போகும். சொல்லிக்கொண்டிருக்கும்போதே


மழை ,காற்று ஆரம்பித்துவிடும்.


வாயில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு. வாயில் வழியெ
வரும் சாரலைத்

தன்னுடைய பெரிய மர ஈஸி சேரைப் போட்டுக் கொண்டு, பட்டு சால்
Add caption
வையைப் போர்த்திக் கொண்டு,  ரசித்தபடி  கருங்குயில் குன்றத்துக்கொலையை நான்காவது  தடவையாகப் படிக்க ஆரம்பிப்பார்.

பக்கத்தில் ஒரு முக்காலியில் வேகவைத்த வேர்க்கடலை,
நறுக்கிய ஆப்பிள் துண்டுகளில் உப்பும் பச்சை மிளகாயும் அரைத்துக் கலந்த
கலவை இருக்கும்.
அதை அடுத்துத் தரையில் எங்கள் பசங்களும் அவர்களின் தோழர்களும்
 காரம்போர்டு, சைனீஸ் செக்கர்ஸ் என்று விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
பாட்டியும் ரசித்துப் பார்ப்பார். ஒரு அற்புதமான ஓவியம் பார்ப்பது போலத் தோன்றும்.

1977 என்று நினைக்கிறேன். நாகைப் பட்டினத்தில் வீசிய புயல், சென்னையில் மின்சாரத்தைப் பறித்துக் கொண்டது.

தண்ணீர் இறைக்கும்  பம்ப் இயங்காததால்,
மழையில் நனைந்து கொண்டே கிணற்றில் தண்ணீர் இறைத்தது நினைவிருக்கிறது,.
துணிகளின் தோரணம் மாடி அறை எங்கும்.
சாம்பிராணி போட்டுச் சமாளித்தேன்.

வாசல் போர்ட்டிகோவில் படுத்துக் கொள்ளும் தனக்கோடி,
எங்கள் மாமனாரிடம் வேலைபார்த்தவரைப் பாட்டி உள்ளே வந்து படுத்துக் கொள்ளச் சொன்னதும்
 குழந்தைகள் வியப்போடு பார்த்ததும் நிழலாடுகிறது.
அவருக்கு எப்போதும் டிசில்வா ரோடு முனையில் சாசு நிற்பதாக ஒரு பயம்.
சாசுன்னால் பிசாசு.

இவ்வளவு நினைவுகளையும் கொண்டு வந்தது நேற்று இங்கு பெய்த //பி//சாசு மழை.

Wednesday, August 29, 2018

எது சுதந்திரம்.

Vallisimhan


உடலொன்றைக் கொடுத்த கடவுள்,
உயிரையும் நினைவுகளையும் அதனுள் புகுத்தி இன்னார இன்னார் உனக்கு அன்னை தந்தையர் 
என்று அறிமுகப் படுத்திவைக்கிறான்.

குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம்,பிறகு திருமணம்.
இதில் ஆண் குழந்தைகளுக்குப் பொறுப்பும், சுதந்திரமும் கூடுதல்.
பெண் குழந்தை  திருமணம் ஆகும் வரை அப்பா
சொல்படி.
அப்படியே திருமணமான பிறகு கணவன் சொல்படி.
Add caption


என் வாழ்க்கை இப்படித்தான். மற்ற பெண்களின் வாழ்க்கை பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டது என் புக்ககப்   பெரியோர்களின் கட்டுமானத்துக்குள் கற்றது.

பெரிய குடும்பமாக இருந்ததால் அவர்களுக்குள் ஒற்றூமையாக இருக்கும் போது இந்தச் 
சின்ன மருமகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

வேலை எல்லாம் முடிந்தததா, பக்கத்தில் இருக்கிற ஆஞ்சனேயரைப் பார்த்து விட்டு வாயேன்
என்பார் பாட்டி.
போவேன்.
அறுபத்து மூவர் உற்சவங்கள் போது தினப்படி வெளியே போக 
அனுமதி உண்டு.
என் கணவர் கேட்பார். உனக்கு மட்டும் புது செருப்புத் தேவைப்படுவதே 
இல்லையே.
அவரிடம் சொல்ல முடியுமா, வெளியில் சென்றால்தானே செருப்பு உபயோகமாகும். என்று.
15  வருடங்களுக்குப் பிறகு நிலைமை  மாறியது.
குழந்தைகள்  கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
திடீரென்று வேலை முடிந்தால் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்
என்பது எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

வலியத் தேடி வந்த வாய்ப்பு ஒரு பப்ளிஷிங்க்  நிறுவனத்தில்
அழைப்பு வந்ததுதான்.
கோவிலில் சந்திக்கும் பெண் தான் வேலைபார்க்கும் கம்பெனியில் சேர விருப்பமா. என்றதும் திகைத்துப் போனேன்.
நான் பட்டதாரி இல்லையே என்றேன்.
உனக்குப் புத்தகங்கள் பிடிக்குமா. என்றாள்.
என் உயிரே அவைதான் என்றேன்.
அப்போது வந்து பார். பிடித்தால் சேர்ந்து கொள்.
உனக்கு முடிந்த நேரங்களில்
புத்தகங்களை அறிமுகப் படுத்திப் பள்ளிகளில் அவற்றை விற்கவேண்டும்..

அவை விலை உயர்ந்த வெளினாட்டுப் புத்தகங்கள்.
குழந்தைகளின் படிப்பு, குழந்தை வளர்ப்பு  ஆரோக்கியம், 
 விஞ்ஞான வளர்ச்சி, சமையல் கலை என்று பத்துப் பதினைந்து வகைகள் இருக்கின்றன.
என்று சொன்னதுதான் தாமதம்.சரி என்று விட்டேன்.
சுதந்திரமாகச் செயல் பட்டது அப்போதுதான்.
இப்போது சுதந்திரமாக இல்லையா என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
எப்போது  முழு சுதந்திரம்.




Tuesday, August 28, 2018

Bangor, Bar Harbor ,Maine

Vallisimhan
மலையோரப்  பாதை

பார் ஹார்பரிலிருந்து அடுத்த நாள் கிளம்பியபோது விடிந்துவிட்டது. காலை க்கதிரவன்   உதயம் பார்க்க வைத்திருந்த திட்டம்  கைவிடப்பட்டது.

அக்கேடியா தேசிய பூங்காவுக்கு வழி தேடி ,
காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.
 கிளம்பும்போதே சில்லென்ற மழைச் சாரல். கூட வந்த தம்பதியர் இருவருக்கும்  ஒரே உத்ஸாகம். 

நாம்  பார் ஹார்பர்.  சுற்றி விட்டு  மலை ஏறலாம். அதற்குள் மழை நின்றுவிடும்.
இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ள ப்பட்டது.



பார் ஹார்பரில் ஒரு வியூ 

நாங்கள் பார்க்காத சூரிய உதயம்.

மெயின் ஸ்ட்ரீட்.
மரநிழலோடு உணவருந்த ஏற்ற இடம்.
எல்லா இடங்களையும் சுற்றி வர இரண்டு மணி நேரம்
 ஆயிற்று.  வழியில் சாப்பிட  subway sandwhich
வாங்கி கொண்டு  சாப்பிட இடம் தேடினோம். மேற்கொண்டு பயணம் தொடருவதற்கு முன்     கைகால் சுத்தம் செய்து கொள்ள இடம் தேடினால் 72 படிகள் ஏறிப்போனால்   இருக்கு என்று ஒரு பலகை சொன்னது.
நான் அசந்து உட்கார்ந்துவிட்டேன்.

என்னைப்  பார்த்துப் புன்னகைத்தபடி வந்த அந்த ஊர்க்காரப் பெண், கவலைப்படாதே நமக்குத் தனி இடம் இருக்கு இந்தப் பக்கமாகப் போ என்றார்.
அம்மாடி வாழ்க நீ அம்மா என்று வாழ்த்தியபடி வண்டியை அந்த மேட்டில் ஏற்றினார் மாப்பிள்ளை. 
சுலபமாக வேலையை முடித்துக் கொண்டு சாப்பிட உ ஒரு இடத்தை 
தேடிக் கண்டு பிடித்தோம்.
அழகான  பெஞ்ச் பிகினிக் 
மேஜைகளும் .மர  நிழல்களும் கொண்ட இடம் கிடைத்தது.
வயிறார   உண்டு வீட்டுக் கிளம்பினோம்.
பார்க்கைக் கண்டு பிடித்தது இன்னொரு கதை.






Saturday, August 25, 2018

அக்கேடியா தேசியப் பூங்கா ஆகஸ்ட் 16,17,18

மலைகள் நடுவே தேங்கிய  நீர்.
கரையைத் தாண்டா கடல்.
நாளை மீண்டும் வருவேன் என்னும் சூரியன்.
என்னைத் தொடாமல் எண்ணத்தைத் தொட்டுச் சென்ற அலைகள்.
வளைந்து நெளிந்து போகும் பாதை.
Vallisimhan
மாலை  நேர வண்ணம் காட்டும் நீர் 

Friday, August 24, 2018

Thanga Therodum Veethiyile Song Laxmi Kalyanam

Vallisimhan
Engal Blog  வலைத்தளத்துக்கான  பாடல். #எங்கள் ப்ளாக் 

ஆகஸ்ட் 16,17,18 இரண்டாம் பயணம் அகேடியா மலைப் பகுதிகள்

ஸ்டார்பக்ஸ் Maine

Vallisimhan
தண்ணீரோடு ஒன்றிய  நேரம்.
செல்லும் வழியெல்லாம் கூடவே வந்த கடல்.

நடுவில்  ஒரு நாள் ஒட்டியவர்களுக்கு வேறு வேலை இருந்தது.  வீட்டில் சமையல்
வேலைகளையும் முடித்து, அடுத்த நாட்களுக்கான உடைகள்,
வழியில் உண்ணுவதற்கான  கொரிக்க  முறுக்கு,தட்டை, உ.கி வறுவல் வகைகள், புளிக்காய்ச்சல்,
ஊறுகாய்,
தவிர்க்க முடியாத  ரொட்டி  வகைகள் எல்லாம் வண்டியின் பின்புறம் நிரப்பியாச்சு.
 இருக்குமிடத்திலிருந்து நான்கு   மணி நேர பயணம்.
 நமக்குத்தான், காப்பிக்கடை, ரெஸ்ட் ரூம்  எல்லாம் நிறுத்தணும்.

4 மணி அளவில்   புறப்பட்டோம்.
அழகான  நீல விண்ணப் பாலத்தைக் கடந்து ஹைவேயில்
நுழைந்தோம் .
வழி நெடுக  பசுமை சூழ்ந்ததிருந்தது. நடு நடுவே நீல மாகக் கடல்
கண்ணாமூச்சி விளையாடிய  படி வந்தது.

கடலில் இருந்து பிரிந்து வந்த  சிறு தேக்கங்கள்.
சேரப்போகும் நதிகள் என்று பல 
வகை களில் மனத்தைத் தூண்டியது.
 நின்று நின்று   நாங்கள் பார்ஹார்பர்  வந்து சேர்ந்த பொது இரவு உணவுக்கான   நேரம் வந்து
விட்டது.
கம்ஃ பார்ட்   விடுதியில்   நுழைந்ததும்  கைகால் கழுவி  சாப்பாட்டைப் பிரித்தோம்.

நான்  தூங்கப் போவதாகச் சொல்லி அன்று எடுத்த படங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறியவர்களுக்கு ஈடாக என்னால் நடக்க முடியாததோடு
அவர்கள் நேரத்தையும் வீணாக்குவது பிடிக்கவில்லை.
அவர்கள் பக்கத்தில் இருக்கும்   பூங்காவிற்கும் ஒரு
 ஷாப்பிங் மாலு க்கும் போய் வந்தார்கள்.

சுகமான நித்திரை ஆட்கொண்டது.
அவர்கள் அடுத்த நாளுக்கு வேண்டிய திட்டங்களை போட்டு விட்டு,12 மணி 
க்குத் தான்  அவர்கள் அறைக்குத் தூங்கப் போனார்கள்.
 In Maine

பார் ஹார்பர்

Wednesday, August 22, 2018

முதல் நாள் பயணம் ஆகஸ்ட் 14. 2018

Breakers Mansion
பாஸ்டன்  பாலம் 
சூரியன் மறையும் நேரம் இந்நாள் பயணமும் முடிந்தது.
கரையை மோதும் அலைகள்.
The beach.
Vallisimhan
Add caption
Rose Cliff  Mansion

Sunday, August 12, 2018

அன்பினால் என்றும் ஒன்றாய் வாழணும் 2

திருவிடை மருதூர் மஹாலிங்க  சுவாமி.


Vallisimhan
திருவிடைமருதூர்  அம்பாள் பார்வதி

திகைப்புடன்  பார்த்தார் கௌரி. எதுக்குங்க  வெறும்
மயக்கத்துக்குப் போய்  இப்படி பயப்படுறீங்க.
இல்லம்மா. நீ விழுந்த விதம் என்னைக் கலங்கடித்துவிட்டது.
இங்க இருக்கு தஞ்சாவூர்.
அங்கே   மீனாட்சி ஹாஸ்ப்பிட்டலில் எல்லா வசதியும் இருக்காம்.
சென்னை  போய்  தனியா உன்னைக் கவனிக்க எனக்குத் தெம்பில்லை.
நம் குமாரசாமியும், உன் ரத்த அழுத்தம் பார்த்துப் பயப்படுகிறான்.
உறவுகாரங்க துணை இருக்கு.
ஒரு நாலு மணி நேரம் அங்க டெஸ்ட்   செய்துக்கறதுல
தப்பில்லை என்றார் சபேசன்.

எனக்கென்னவோ வீணா கலவரப்படற மாதிரி இருக்கு. நீங்க சொன்னால் மீற  வேண்டாம்னு வரேன் என்று 
எழுந்த   கௌரி,தன்   களைத்த மன நிலையைப் பார்த்து வியந்தாள். எங்க போச்சு என் தைரியம்.


என்று நினைத்தபடி சபேசன் துணையுடன் நடந்து முகம் கழுவி , புடவையை  மாற்றி வெளியே வருவதற்குள் வியர்த்துக் கொட்டியது.

வைத்தியம் செய்து கொள்வதே நல்லது என்று நினைத்தபடி மகாலிங்க சுவாமியை மனதில் இருத்தித் தஞ்சாவூருக்கு கிளம்பினார்கள்.
குமாரசாமியும், கௌரி தம்பி வைத்தியம் வந்தார்கள்.

கௌரிக்கு எப்பொழுதும் எதற்கும் பயம் கிடையாது. தன கணவர் உடல் நிலை பற்றித்தான்   கவனமாக இருப்பார்.

73 வயதில் இது என்ன சோதனை. என்னால் மற்றவர்களுக்குத் துன்பம் வராகி கூடாதே என்று நினைத்தவள் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான் தம்பி வைத்தி.
அக்கா ,இந்த ஹார்லிக்ஸ் சாப்பிடு. கொஞ்சம் தெம்பு வரும் என்று கொடுத்தான்.
சிந்தாமல் கவனமாகக் குடித்தவர் கண்ணில் நீர். எனக்கு ஏதாவதுன்னா,  அத்தானைப் பாத்துப்பியாடா என்று கேட்டார்.
பதறிப் போனார் வைத்தி.
சும்மா வாய் வார்த்தையாக்கூட சொல்லாதே அக்கா.
டெஸ்ட்   செய்து மருந்து கொடுப்பார்கள். நீயே பார்.
எனக்கு அங்கே இருக்கும்   தலை மருத்துவரைத் தெரியும்.
நீ சாய்ந்து கண்ணை மூடிக்கொள்.//என்றார்.

தஞ்சாவூரும்  வந்தது.
மீனாக்ஷி ஹாஸ்பிட்டலில் விரைவாக  கௌரி யைச் சோதிக்க ஆரம்பித்தார்கள்.
எம் ஆர் ஐ, எக்கோ, ஈசிஜி எல்லாம்  காக்க வைக்காமல் நடந்தன.
ரிப்போர்ட் ரெடியாக ஒரு மணி நேரம் ஆகும்.
அம்மாவுக்கு காரம் உப்பு குறைவாக  உணவு வாங்கி கொடுங்கள்.
என்ற டாக்டரின் சொல்படி அனைவருமே  அங்கிருந்த காண்டினில் உணவு வாங்கிச் சாப்பிட்டார்கள்.
 கௌரிக்கு இந்த இடமும் டாக்டரின் அணுகு முறையும் பிடித்திருந்தது.
சாப்பாடு உள்ளே போனதும் மனதும் தெளிவானது.


சொன்ன நேரத்தில் அழைப்பு வந்ததும்  அனைவரும் வைத்தியரின் அறைக்குச் சென்றனர். அங்கு மாட்டி இருந்த மீனாட்சியின் படம் தெவீகமாக ஒளிவிட்டது.

வைத்தியர் ஆரம்பித்தார்.

கௌரிம்மா , 
உங்க வயதுக்கேற்ற உடல் நிலைதான் இப்போது இருக்கிறது.
கவலை வேண்டாம் .

இதயம் வெகு சிறக்க இருக்கிறது. 
தலை ஸ்கானில்  ஒரு கடுகு அளவு ஸ்பாட் தெரிகிறது. அதை நாங்கள் அன்யுரிசம் என்போம்.

நீங்கள் அதிகமாக  ஸ்ட்ரெஸ்  எடுத்துக் கொள்ளும்போது தலைவலி வந்தால் 
எடுத்துக் கொள்ள மருந்து தருகிறோம்.
அதைவிட, தேவை இல்லாமல் டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
யோகா செய்யுங்கள். கணவரோடு , கவனிக்கவும் அவர் வந்தால் தான் நீங்கள் வெளியே செல்லலாம்.  நடப்பு பயிற்சிக்குப் போகலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை உணவு உட்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் இருவருமே இதைக் கடைப்பிடிக்கலாம் .

இப்போ தலைவலி இருக்கா  என்று வினவினார் டாக்டர்.
இல்லை டாக்டர் , நான் வந்ததுமே மருந்து கொடுத்தார்கள் என்றார் கௌரி. 

இந்த அநியூரிஸ்ம்  சின்ன அளவில் இருக்கிறது. 
அபாயம்   குறைவு தான்  என்றாலும் ,  இதுவே பெரிய 
அளவில் இருந்தால் 
 அறுவை சிகித்சை சொல்லி இருப்பேன்.
அதிர்ந்தார் சபேசன்.   இது போல  இவளுக்கு வராகி காரணம் என்ன  என்று கேட்டார். அம்மாவுக்கு முன் மண்டையில் நெற்றிக்கு மேல் பகுதியில்  இருக்கிறது.
மாதாமாதம்   செக் செய்துக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து   ஆஸ்பிரின் வரவழைத்துக் கொடுக்கிறேன்.

வயிற்று க்குச் சங்கடம் இருக்காது.
மதியம் படுத்துக்க கொள்வதற்கு முன் ஒன்று எடுத்துக் கொண்டால் போதும்.
ஒரு மாதத்திற்குப்  பிறகு நம் ஊரிலேயே  கிடைக்கும்  மருந்து 
வாங்கி கொள்ளலாம்.

தீர்க்க முடியாத பிரச்சினை இல்ல.
அமெரிக்காவா இருந்தால் காலை ல போயி   மூன்றாம்  நாள் வீட்டுக்கு வந்துடலாம்.ஆஞ்சியோ பிளாஸ்ட்டி எங்க அம்மாவுக்கு செய்யும்போது மூன்றாம் நாள்  வீட்டுக்கு வந்துட்டாங்க.

கௌரிம்மா மத்தபடி நல்லா இருக்காங்க.
என்று நல்ல விதமாக முடித்தார் டாக்டர்.

 அம்மா நீங்க உங்களுக்கு கொடுத்திருக்கிற அறைக்குப் போய் ஓய்வெடுத்துக்குங்க.  நாளை சென்னைக்குப் போகலாம் என்றார்.

நான் இவங்ககிட்ட மருந்து    எழுதித் தருகிறேன். என்று சொல்லிவிட்டு, வைத்தி தம்பி நீங்களும்  அக்காவை வீல் சேரில்  அழைத்துப் போங்க என்றார்.

விட்டால் போதும் என்று எழுந்தார் கௌரி, சக்கர நாற்காலியில் அமர்ந்து டாக்டரைப் பார்த்துப் புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு அறைக்கு வந்தார்கள்.

அக்கா  நானும் வடிவும் உங்க வீட்டில தங்கப் போறோம்.
உங்கள் இருவரையும் பார்த்துக்கறோம் என்றார் வைத்தி.

எனக்கு ஒன்னும் வியாதி இல்லைடா. நான் சரியாகத்தான் இருக்கேன். தலைவலி வந்தால்தான் கஷ்டம் என்றார் கௌரி.
அங்கே மருத்துவர் அறையில் ,   சிரியஸான முகத்துடன் டாக்டர் 
சபேசனையும் , மகன் குமாரனையும் விழித்துப் பேசினார். உண்மையாகவே மகாலிங்க சுவாமிதான் காப்பாற்றி இருக்கிறார்.
குமாரசாமி டாக்டர் , புரிந்து கொண்டு மருந்து கொடுத்திருக்கிறார்.
இல்லாவிட்டால் ஸ்ட்ரோகே  வந்திருக்கும்.

இனி நிஜமாகவே  கவனமாகப் பார்த்துக் கொள்ளணும் .
 ஓவராகக் கவலைப் படவிடக்கூடாது.

வாழ்க்கையின்   தரம்   சுகமாக இருக்கும்படி  கவனித்துக் 
கொண்டால்   சுகமே என்றார்.
++++++

நான் பார்த்தவரை கௌரி  நன்றாகவே இருக்கிறார்.
அவர்கள்   வாழ்க்கையும் சலனமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

பயணம் சென்றால்   சுகமான வண்டி எடுத்துக் கொண்டு போய் வருகிறார்கள்.
சபேசன் திருவிடைமருதூர்  சுவாமியை மாத மாதம் வந்து தரிசிப்பதற்காக வேண்டிக் கொண்டு 
போய் வருகிறார். இரண்டு   மாதங்களுக்கு ஒரு தடவை 
கௌரியும்  வருவார்.           இரண்டு மூன்று நாள் இருந்துவிட்டு  திரும்புவார்கள்.
 ஒரு வருட செக்கப்பில்   ஈஸ்வரன் கிருபையில் அந்த  கலக்கமும் தீர்ந்தது.......
தஞ்சை வைத்தியருக்கே ஆச்சர்யம். இயற்கையாகவே நல்ல ஆரோக்கியம் கொண்டவருக்கு  கடவுள் கருணையும் சேர்ந்ததில் 
நோய்க்குத் தீர்வு கிடைத்திருக்கிறது.
அடுத்த வருடம் செக்கப் வந்தால் போதும் என்றார்.

இனி எல்லாம் நலமே.
சபேசன் கௌரி தம்பதியருக்கு குடும்பத்துக்கும் 
நலவாழ்த்துகள்.




Saturday, August 11, 2018

ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும் 1

Vallisimhan

++++++++++++++++++++++++++++++++++++++++++++
வளமுடன்  வாழ்க.
+++++++++++++++++++++
இது போல என்றும் இருக்கணும் கௌரி என்று தட்டிக் கொடுத்தார்.
சபேசன்.  உம்ம்ம். நீங்களும் தான்.
 திருவிடை மருதூர் மஹாலிங்கம் அருள் .நம் சதாபிஷேகம்
நல்லபடி பூர்த்தியாச்சு.

 பசங்க ரெண்டு பேரும் வந்திருந்ததுதான் சந்தோஷம்.
ஓ ஆமாம்.// அது அவங்களே எடுத்துச் செய்ய வேண்டிய விஷயம்மா இது. நாம் அழைத்து
 அவர்கள்
 வந்து நடத்திக் கொடுக்க வேண்டியது.

நீ என்ன பண்ணே, அவர்களுக்கு லெட்டர் போட்டூ வரவழைத்தே.//

 // ரயில் செலவு முதற்கொண்டு ஏற்பாடு செய்து,
மருமகள்களுக்கு  புடவைகள் வாங்கிக் கொடுத்து, சம்பந்திகளுக்கு
பரிசு வாங்கி , உறவினர்களுக்குச் சொல்லி,
பத்திரிகை ப்ரஸ்ஸில் சொல்லி, மெயில் செய்து .....
அசந்து போய் உட்கார்ந்திருக்கே. அவர்கள் எல்லோரும் அரட்டையும் சந்தோஷமுமாய்
 உட்கார்ந்திருக்கிறார்கள்.

 நீ  இன்னும் மேடை யில் எல்லாப்
பொருட்களையும் ஒழித்து வைத்து, தட்டுகள் எடுத்துவைத்து, பிரஹஸ்பதி சம்பாவனை கொடுத்து நீண்டு கொண்டே போகிறது உன் பணி ....//

கௌரி அம்மா , உடம்பு தள்ளாட்டத்தைச் சமாளித்துக் கொண்டுதான் எல்லாம் செய்தார்.
 சென்ற வருடம்   சபேசனுக்கு  டெங்கு ஜுரம் வந்து 
மஹா பாடு பட்டு  மீண்டு வர வேண்டியிருந்தது.
45 நாட்கள்  அவஸ்தைப் பட்டார்.
அப்போதே முடிந்த வைத்த நினைப்பு 
மகாலிங்க சுவாமி சந்நிதியில்  எண்பதாவது 
பிறந்த நாளை, சாஸ்திரிகள் உதவியோடு 
 உறவினர்களை அழைத்துச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

உயரமும் ,பருமனையும் சரியாக வலுவான உடம்பு 
கொண்டவரைத் தளரவைத்துவிட்டது அந்த ஜுரம்.

பிள்ளைகள் இருவரும் சரியான நேரத்தில் வந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.  கௌரி  அதை எல்லாம்  கண்டு கொள்ளவில்லை. கணவரையும் கவனித்து, அவர்களையும் பொறுப்புடன் பார்த்துக் கொள்வது அவளுக்குச் சிரமமாகவே 
இருந்தது.

அவரைச் சரியாக வேளைக்குத் தகுந்த மருந்து ,உணவு கொடுத்துப்பார்த்துக்கொண்டது  கௌரிமாதான்.

அதில்  அவளுக்கு அலுப்பு ஒன்றுமில்லை . கவலைப் படத்தான் தெம்பில்லை.

வைத்தியர் மெச்சும்படிக் கவனித்து அவர் நலத்தைத் தேற்றினார்.
பழையபடி இல்லாவிட்டாலும்   திடமாகவே இருந்தார்.

அதனாலேயே இந்த பயணம் சாத்தியமானது..
நடுவில்  தன்  உடம்பையும்   கவனிக்க வேண்டி வந்தது.

இரத்த அழுத்தம், ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க,
உணவு முறைகளை மாற்றி அமைக்க வேண்டி வந்தது.

சபேசனின் தம்பி வழியாக உறவுக்கார அம்மாள் , வந்து சமையல் பொறுப்பை    ஏற்றுக் கொண்டார்.

கௌரிக்கு  மிக உதவியாக இருந்தார்.
  இந்த ஒரு நாளுக்காக   மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டாள் .
 நல்லபடியாக நிறைவேறியது.
மாலையும் கழுத்துமாக ஈஸ்வரன் சந்நிதியில் நின்றதும்  திருப்தியும் பூரிப்பும்  மிகுந்தன .

எல்லோரும் சாப்பிட உட்காரும்போதுதான்,  அவளது களைப்பு மீறியது.  உட்கார முடியாத தலைசுற்றல்.

மெல்ல மெல்ல கௌரி சாய்வதைக் கண்டு அதிர்ந்து போனார் சபேசன்.
டே,
குமரா ,அம்மாவைப் பிடி. விழுந்துடப் போறா .

மயங்கிய நிலையில்  கௌரியை  நண்பர் குமாரசுவாமியின்   வைத்தியசாலைக்கு  அழைத்துச் சென்றார்கள். ரத்தஅழுத்தம் அதிகம் என்று 
உடனே  ஊசி போட்டு,   சலைன்  ஏற்ற ஏற்பாடு செய்தார், அந்த டாக்டர். சபேசனின்  சித்தப்பா மகன்தான்.

அண்ணா , அன்னிக்கு டோட்டல் செக் அப் எப்போ செய்திய்ங்க. இப்படி மாயன்கள் கூடாதே. என்றதும்,
சபேசன் மனம்  கவலை கொண்டது. இதுக்கு முன்ன ஒரு தடவை இது போல வந்த பொது வைத்தியர் 
     
வயசுக்கு ஏத்த மாதிரி ரத்த அழுத்தம் ஏற இறங்கும்  வண்ணம்  இருக்கும். நிறையக்கவலைப்பட்டு 
சாப்பாடு சரியாக  , உள்ளே  போயிருக்காது.
ரத்த அழுத்தத்துக்கு மருந்து கொடுக்கிறேன்.

என்று இரண்டு வேளைக்கும் கொடுத்தார்.
ஒரு மாதம் கழித்து நிறுத்திவிட்டார்.

அவளும் கட்டுப்பாடாக  உணவு, நடை  எல்லா வழியிலும் 
அவர் சொன்னதைகேட்டு   நடந்தாள் .

தளர்வா இருந்தாலும்  சமாளித்துக் கொண்டு வந்தாள் .
இந்த சதாபிஷேகம் அதற்கான ஏற்பாடுகள் செய்ததில் 
ஜாஸ்தியாகிவிட்டது.
என்ன செய்யலாம்னு சொல்லு.

அன்னிக்கு இன்னிக்கு  ஒய்வு தேவை. நாளை தஞ்சாவூர் 
மீனாக்ஷி  மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லலாம்.
அருமையாக நடத்துகிறார்கள்.

அங்கே  , எம் ஆர் ஐ  செய்தால்  தெரியும். ஒன்றும் 
இல்லாமலும்  இருக்கலாம்.  பாதுகாப்புக்கு இந்த சோதனை செய்து கொள்ளலாம்.
அது  கார்டியாலஜி தானே  முக்கியமாகப் பார்க்கிறார்கள் என்று   கேட்டார்  சபேசன்.

மற்ற   பெஸிலிடிசும்    உண்டு. 

நீ இப்போ  ஓய்வெடுத்துக்கோ. , நாளை மீண்டும் அண்ணியைக் கவனித்துக் கொண்டு கிளம்பலாம்.
இரவுத் தூக்கம்  நன்றாகத் தூங்கி எழுந்ததும்  கௌரி 
 கலகலப்பாக  இருந்தார்.

கணவரை நோக்கி  மன்னிச்சுக்கோங்க 
உங்க நல்ல நாளை நான்  சங்கட நாளாகப் பண்ணிப்புட்டேனே என்றார்   கலக்கத்துடன்.

அருகில் வந்து உட்கார்ந்த  சபேசன். ஒன்றும் நடக்கவில்லை. நீ கவனமா உடல் நலம் பார்த்துக் கொள்ள வேணும் 

அதற்குத்தான்  கொஞ்ச  நேரம்  கழித்து தஞ்சை செல்கிறோம்.
அங்கே நல்ல மருத்துவரிடம்  காண்பிக்கப் போகிறோம்.
ஒன்னும் சொல்லாதே.  இன்னிலேருந்து நான்தான் சத்தியவான். சாவித்திரியைப் பார்த்துக் கொள்ள ப் போகும் 
நல்ல  கணவன்.  தொடரும் 
Add caption












Monday, August 06, 2018

கயாவிலிருந்து ரிஷிகேஷ்

Vallisimhan

 கயாவில் பூர்த்தி செய்ய வேண்டிய கர்மாக்களை முடிந்ததும்
நடேசன் கொடுத்த அற்புதமான சாப்பாட்டு வகைகளை
 அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து திருப்தியாகச் சாப்பிட்டனர்.

 அடுத்த நாள் காலை தில்லிக்கு விமானப் பயணம்.
 அங்கிருந்து மோட்டார் காரில் தான் ரிஷிகேஷ் செல்ல வேண்டும்.
அவர்களுக்கு வண்டி யோட்டி வந்தவரையும்
சாப்பிடச் சொன்னார்கள்.
அவர்தான் சொன்னார். நீங்கள் விமானத்தில் பயணிப்பதைவிட
ரயிலில் செல்லலாம். சௌகர்யமாக இருக்கும்.
இன்று இரவு ஏறிப் படுத்துக் கொண்டால் காலை தில்லி சென்று விடலாம்.

சாதாரண டகோடா விமானம். தூக்கித் தூக்கிப் போடும்.
 என் எளிமையான கருத்து இது என்றதும், அனைவருக்கும் ஆனந்தம் தான்.
லக்ஷ்மியும் நாராயணனும் காலை ரயிலில் கிளம்புவதாக இருந்ததே வஞ்சு வாசுவுக்கு வருத்தமாக இருந்தது.
காரோட்டியை உடனே சென்று, விமான டிக்கட்டுகளை ரத்து செய்துவிட்டு இரவுக்கான
ரயில் முதல் வகுப்பில்  ரிசர்வ் செய்து வரச் சொன்னார்கள்.
அவரும் சந்தோஷமாகக் கிளம்பினார்.

நாம் இங்கே வெய்யிலில் இருப்பதற்குப் பதில் பக்கத்தில் இருக்கும்
கடைகளுக்குச் சென்று ராமர் பாதம்,இந்த ஊர்ப் படங்கள் வாங்கி வரலாம்
என்று கிளம்பினார்கள்.
காலாற நடந்து சென்று அங்கிருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு
அவர்கள் வரவும், காரோட்டி வினாயக் திரும்பி வரவும்
சரியாக இருந்தது.
இரவு உணவுக்கு உங்களை இங்கிருக்கும்  சுஜாதா உணவு விடுதிக்கு அழைத்துப் போகச் சொன்னார்.
அங்கே உங்களுக்கு ஏற்ற காரம் இல்லாத  சப்பாத்தி,கூட்டு வகைகள் கிடைக்கும். அங்கு சாப்பிட்டுவிட்டு  நேரே  ரயில்வே ஸ்டேஷனில் விட்டு விடுகிறேன்.
10 மணிக்குக் கிளம்பும் வண்டி நாளை காலை 11 மணிக்கு
தில்லி சென்று விடும்.
 தில்லியில் கொஞ்சம் குளிர் . அம்மாவுக்கேற்ற படி ஷால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
அதெல்லாம் நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்று லக்ஷ்மி சொல்லவும்.
உங்களை விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்.
வேகமாகச் செல்லும் லாரிகள் வரும் நேரம் என்று கிளம்பினார்
வினாயக்.
அதுவரை சும்மா இருந்த லக்ஷ்மி , அப்போ வஞ்சுவை நான் விடுவதாக
இல்லை.. இவர் என் தம்பி வரதனுக்குத் தொலைபேசியில் சொல்லியாச்சு.
வண்டியுடன்  தில்லி ஸ்டேஷனில் காத்திருப்பான்.
நாமேல்லோரும் அங்கே  போகிறோம்.
என்றார்.
ஆஆஆ. அதெல்லாம் சரியில்லை. அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது.
என்று ஆரம்பித்த வாசுவை அமர்த்தினார்  நாராயணன் . எங்கள் ராஜன் விருந்தோம்பலுக்கே
பிறந்திருக்கிறான்.
அவன் மனைவி ஜயா வோ அதற்கு மேல்.
எங்கள் மாமியார் ருக்மணி அம்மாவும் அங்கே வந்திருக்கிறார்.

குடும்பத்தோடு சௌகர்யமாக இருந்துவிட்டு நாம்
ரிஷிகேஷ் செல்கிறோம் என்று முடித்தார்.

நாம் புறப்பட்ட வேளை மிக மிக நல்ல வேளை. ஒரு நல்ல குடும்பத்துடன்
சம்பந்தம் கிடைக்கிறதே என்ற சந்தோஷத்தோடு உணவை முடித்துக் கொண்டனர்.
 அவர்கள் நிதானமாக எதிரில் இருக்கும் கயா ரயில் நிலையத்தை அடைந்து
முதல் வகுப்புக்கான இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

வாசுவும் நாராயணனும் ஸ்டெஷன் மாஸ்டரிடம், ரயிலில் காலை உணவு கிடைக்குமா என்று
விசாரித்து வந்தனர்.
ரொட்டியும், தயிரும், வெண்ணேயும் கிடைக்குமாம்.
கவலை இல்லை என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் வாசு.
ரயிலும் வந்தது.
போர்ட்டரின் உதவியுடன் பார்த்து ஏறிக்கொண்டனர்.
தில்லியை நோக்கிப் பயணம் கிளம்பியது. வாழ்க வளமுடன்.
Add caption