Blog Archive

Saturday, August 11, 2018

ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும் 1

Vallisimhan

++++++++++++++++++++++++++++++++++++++++++++
வளமுடன்  வாழ்க.
+++++++++++++++++++++
இது போல என்றும் இருக்கணும் கௌரி என்று தட்டிக் கொடுத்தார்.
சபேசன்.  உம்ம்ம். நீங்களும் தான்.
 திருவிடை மருதூர் மஹாலிங்கம் அருள் .நம் சதாபிஷேகம்
நல்லபடி பூர்த்தியாச்சு.

 பசங்க ரெண்டு பேரும் வந்திருந்ததுதான் சந்தோஷம்.
ஓ ஆமாம்.// அது அவங்களே எடுத்துச் செய்ய வேண்டிய விஷயம்மா இது. நாம் அழைத்து
 அவர்கள்
 வந்து நடத்திக் கொடுக்க வேண்டியது.

நீ என்ன பண்ணே, அவர்களுக்கு லெட்டர் போட்டூ வரவழைத்தே.//

 // ரயில் செலவு முதற்கொண்டு ஏற்பாடு செய்து,
மருமகள்களுக்கு  புடவைகள் வாங்கிக் கொடுத்து, சம்பந்திகளுக்கு
பரிசு வாங்கி , உறவினர்களுக்குச் சொல்லி,
பத்திரிகை ப்ரஸ்ஸில் சொல்லி, மெயில் செய்து .....
அசந்து போய் உட்கார்ந்திருக்கே. அவர்கள் எல்லோரும் அரட்டையும் சந்தோஷமுமாய்
 உட்கார்ந்திருக்கிறார்கள்.

 நீ  இன்னும் மேடை யில் எல்லாப்
பொருட்களையும் ஒழித்து வைத்து, தட்டுகள் எடுத்துவைத்து, பிரஹஸ்பதி சம்பாவனை கொடுத்து நீண்டு கொண்டே போகிறது உன் பணி ....//

கௌரி அம்மா , உடம்பு தள்ளாட்டத்தைச் சமாளித்துக் கொண்டுதான் எல்லாம் செய்தார்.
 சென்ற வருடம்   சபேசனுக்கு  டெங்கு ஜுரம் வந்து 
மஹா பாடு பட்டு  மீண்டு வர வேண்டியிருந்தது.
45 நாட்கள்  அவஸ்தைப் பட்டார்.
அப்போதே முடிந்த வைத்த நினைப்பு 
மகாலிங்க சுவாமி சந்நிதியில்  எண்பதாவது 
பிறந்த நாளை, சாஸ்திரிகள் உதவியோடு 
 உறவினர்களை அழைத்துச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

உயரமும் ,பருமனையும் சரியாக வலுவான உடம்பு 
கொண்டவரைத் தளரவைத்துவிட்டது அந்த ஜுரம்.

பிள்ளைகள் இருவரும் சரியான நேரத்தில் வந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.  கௌரி  அதை எல்லாம்  கண்டு கொள்ளவில்லை. கணவரையும் கவனித்து, அவர்களையும் பொறுப்புடன் பார்த்துக் கொள்வது அவளுக்குச் சிரமமாகவே 
இருந்தது.

அவரைச் சரியாக வேளைக்குத் தகுந்த மருந்து ,உணவு கொடுத்துப்பார்த்துக்கொண்டது  கௌரிமாதான்.

அதில்  அவளுக்கு அலுப்பு ஒன்றுமில்லை . கவலைப் படத்தான் தெம்பில்லை.

வைத்தியர் மெச்சும்படிக் கவனித்து அவர் நலத்தைத் தேற்றினார்.
பழையபடி இல்லாவிட்டாலும்   திடமாகவே இருந்தார்.

அதனாலேயே இந்த பயணம் சாத்தியமானது..
நடுவில்  தன்  உடம்பையும்   கவனிக்க வேண்டி வந்தது.

இரத்த அழுத்தம், ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க,
உணவு முறைகளை மாற்றி அமைக்க வேண்டி வந்தது.

சபேசனின் தம்பி வழியாக உறவுக்கார அம்மாள் , வந்து சமையல் பொறுப்பை    ஏற்றுக் கொண்டார்.

கௌரிக்கு  மிக உதவியாக இருந்தார்.
  இந்த ஒரு நாளுக்காக   மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டாள் .
 நல்லபடியாக நிறைவேறியது.
மாலையும் கழுத்துமாக ஈஸ்வரன் சந்நிதியில் நின்றதும்  திருப்தியும் பூரிப்பும்  மிகுந்தன .

எல்லோரும் சாப்பிட உட்காரும்போதுதான்,  அவளது களைப்பு மீறியது.  உட்கார முடியாத தலைசுற்றல்.

மெல்ல மெல்ல கௌரி சாய்வதைக் கண்டு அதிர்ந்து போனார் சபேசன்.
டே,
குமரா ,அம்மாவைப் பிடி. விழுந்துடப் போறா .

மயங்கிய நிலையில்  கௌரியை  நண்பர் குமாரசுவாமியின்   வைத்தியசாலைக்கு  அழைத்துச் சென்றார்கள். ரத்தஅழுத்தம் அதிகம் என்று 
உடனே  ஊசி போட்டு,   சலைன்  ஏற்ற ஏற்பாடு செய்தார், அந்த டாக்டர். சபேசனின்  சித்தப்பா மகன்தான்.

அண்ணா , அன்னிக்கு டோட்டல் செக் அப் எப்போ செய்திய்ங்க. இப்படி மாயன்கள் கூடாதே. என்றதும்,
சபேசன் மனம்  கவலை கொண்டது. இதுக்கு முன்ன ஒரு தடவை இது போல வந்த பொது வைத்தியர் 
     
வயசுக்கு ஏத்த மாதிரி ரத்த அழுத்தம் ஏற இறங்கும்  வண்ணம்  இருக்கும். நிறையக்கவலைப்பட்டு 
சாப்பாடு சரியாக  , உள்ளே  போயிருக்காது.
ரத்த அழுத்தத்துக்கு மருந்து கொடுக்கிறேன்.

என்று இரண்டு வேளைக்கும் கொடுத்தார்.
ஒரு மாதம் கழித்து நிறுத்திவிட்டார்.

அவளும் கட்டுப்பாடாக  உணவு, நடை  எல்லா வழியிலும் 
அவர் சொன்னதைகேட்டு   நடந்தாள் .

தளர்வா இருந்தாலும்  சமாளித்துக் கொண்டு வந்தாள் .
இந்த சதாபிஷேகம் அதற்கான ஏற்பாடுகள் செய்ததில் 
ஜாஸ்தியாகிவிட்டது.
என்ன செய்யலாம்னு சொல்லு.

அன்னிக்கு இன்னிக்கு  ஒய்வு தேவை. நாளை தஞ்சாவூர் 
மீனாக்ஷி  மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லலாம்.
அருமையாக நடத்துகிறார்கள்.

அங்கே  , எம் ஆர் ஐ  செய்தால்  தெரியும். ஒன்றும் 
இல்லாமலும்  இருக்கலாம்.  பாதுகாப்புக்கு இந்த சோதனை செய்து கொள்ளலாம்.
அது  கார்டியாலஜி தானே  முக்கியமாகப் பார்க்கிறார்கள் என்று   கேட்டார்  சபேசன்.

மற்ற   பெஸிலிடிசும்    உண்டு. 

நீ இப்போ  ஓய்வெடுத்துக்கோ. , நாளை மீண்டும் அண்ணியைக் கவனித்துக் கொண்டு கிளம்பலாம்.
இரவுத் தூக்கம்  நன்றாகத் தூங்கி எழுந்ததும்  கௌரி 
 கலகலப்பாக  இருந்தார்.

கணவரை நோக்கி  மன்னிச்சுக்கோங்க 
உங்க நல்ல நாளை நான்  சங்கட நாளாகப் பண்ணிப்புட்டேனே என்றார்   கலக்கத்துடன்.

அருகில் வந்து உட்கார்ந்த  சபேசன். ஒன்றும் நடக்கவில்லை. நீ கவனமா உடல் நலம் பார்த்துக் கொள்ள வேணும் 

அதற்குத்தான்  கொஞ்ச  நேரம்  கழித்து தஞ்சை செல்கிறோம்.
அங்கே நல்ல மருத்துவரிடம்  காண்பிக்கப் போகிறோம்.
ஒன்னும் சொல்லாதே.  இன்னிலேருந்து நான்தான் சத்தியவான். சாவித்திரியைப் பார்த்துக் கொள்ள ப் போகும் 
நல்ல  கணவன்.  தொடரும் 
Add caption












No comments: