Showing posts with label Maasi maatham. Show all posts
Showing posts with label Maasi maatham. Show all posts

Tuesday, March 13, 2018

மாசி மாதமும் வடாம் பிழிதலும்.7

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 லிஸ்ட் போட்டு முடிந்ததும், 

அரைத்த மாவை வழித்து வைக்கும் அக்கா,தங்கையைப் பார்த்தார்

ஜயம்மா. இந்தத் தடவை கூழ் கிளறத் தானும் கீதுவும் போதும் 

என்று தீர்மானித்தவராய்,

அவர்களை அழைத்து ஆளுக்கு ஒரு டம்ப்ளர் பால் சாப்பிட்டுவிட்டு 

வீட்டுக்குப் போங்கோ.மேகம் கூடறது.

கார்த்தால விடிஞ்சு வாங்கோ. மழைக்கு முன்னால கிளம்புங்கோன்னு

 முடிக்கு முன்னால் இடி ஒலி கேட்டதும்,

பாலைக் குடித்துவிட்டு சகோதரிகள் விரைந்தனர்,.

பாண்டியன் சைக்கிள் ரிக்ஷா வாசலில் இருக்கு. சீக்கிரம் போய் இறங்கிக்கோங்கோ. 

பஸ்ஸிற்குக் காக்க வேண்டாம் என்று அனுப்பினார்.

நான் அவனுக்குப் பணம் கொடுத்துக்கறேன். வாசலுக்கு வந்து 

,பாண்டியனிடம் விவரம் சொல்லி அனுப்பினார்.

சர சரவென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

சரி,மாடித் தரை எல்லாம் படு சுத்தம் ஆகிடும்.

 நாம  கூழ் கிளற ஆரம்பிக்கலாம் என்று கீதுவை அழைத்தாள். 

காஸ் அடுப்பைக் கீழே இறக்கி  பெரிய பித்தளை அடுக்குகளை அடுப்பில் ஏற்றிப் போது மான தண்ணீரையும்  விட்டாள்.

மழை சத்தம் அதிகமாகியது. 

சட்டென்று நினைவு வர சீனு அந்த அரை ட்ரம் இரண்டையும் மழைஜலம் பிடிக்க வையப்பா. திடீர்னு கார்ப்பரேஷன் ஜலம் வரலைன்னால், பாத்திரம் தேய்க்க உதவும் என்று சொன்னதும் சீனுவும் செய்தான்.

சரியான அஷ்டாவதனி உங்க மன்னி என்று சீனு கேலி காட்டினார்.


சொல்ல மாட்டேளா, என் வேலை,பொறுப்பு எனக்கு.  நீங்க

உங்க பணக்கணக்கைப் பாருங்கோ. லஸ் பிள்ளையாருக்குத்

 தேங்காய் உடைக்க வேண்டிக்கிறேன்.,

என்றபடி முடிச்சுப் போட்டுக் கொண்டார்.

அடுத்த ஒரு மணி நேரம் , கூழ் கிளறி முடித்தாச்சு. ஆறட்டும்.

 மோர், பெருங்காயம்,உப்பு, பச்சை மிளகாய் அரைத்து போட்டுக் 

கலக்கி வைத்துவிட்டால் சீக்கிரம் படுத்துக் கொள்ளலாம்.

 மணி எட்டாறது. சாப்பிடலாமா என்ற படி , 

சரகு இலைகளை எடுத்து வைத்தாள்.

முகம் ,கை கால் அலம்பிக்கொண்டு அனைவரும் உட்கார

சுற்றி உட்கார்ந்து காலையில் சகோதரிகள் தயாரித்த 

வத்தல் குழம்பு,கீரை மசியல், காய்ச்சின அப்பளம்

போட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள். ஆளுக்கொரு டம்ப்ளர் மோருடன்

சாப்பாடு முடிந்தது.

9 மணிவாக்கில் கிளறிய கூழுடன், அரைத்த பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் 

உடன் கணிசமான அளவு கெட்டி மோரையும் சேர்த்தார் ஜயம்மா. 

இது அவர் செய்யும் முறை.

 நாளைக்கு காய்கறி இருக்கோ. அந்தக் குழந்தைகளுக்கு லகு வா சமைக்கிற மாதிரி

சீரா ரசமும், அவரைக்காய் கூட்டும்  செய்து கொள்ளட்டும் என்றபடி

பாயை விரித்துக் கொண்டார். மழ நிக்கட்டும் பிள்ளையாரப்பா என்று சொன்னவர் 

அடுத்த நிமிடம் தூங்கியாச்சு. எல்லாம் சாத்தி இருக்கிறதா என்று பார்த்து விட்டு

சீனுவும்,மாதுவும் படுத்துக் கொண்டார்கள்.

பனிரண்டு மணி வாக்கில் மழையும் நின்றது....தொடரும்.

Add caption

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...