எங்கள் ப்ளாக் பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவை இல்லை:)
ஆரம்பித்த சில நாட்களில் வாசகர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்ட
பாசக் குடும்பம்.
யாரையும் கவருவதற்காகத் தனி முயற்சி எடுக்காமல் இயல்பாகவே
நன்மை நிறைந்த பதிவுகள்.
புத்தகமாக ஒரு மாத இதழாக வெளிவர என்ன தகுதி வேண்டுமோ
அத்தனையும் கொண்ட ஒரு வலைப்பூ.
அதில் சில வாரங்களுக்கு முன் நடத்தின ''தங்கத்தவளைப் பெண்ணே ''நகைச்சுவை போட்டி எல்லாரையும் ஈர்த்தது. என்னையும் கவர்ந்தது.
புருடா விடுவது,லாஜிக் இல்லாமல் கதை எழுதுவது எல்லாமே எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.
இதில் என்ன சங்கடம் என்றால் என்னை மாதிரியே எங்கள் ப்ளாக் வாசகர்களும் இருந்ததுதான்.
என்னை மாதிரி என்றா சொன்னேன். என்னைவிடப் புத்திசாலிகள் என்று எழுதி இருக்கவேண்டும்.
கீதா சாம்பசிவம், மீனாக்ஷி, அப்பாதுரை, கணேஷ்,குரோம்பேட்டைக் குறும்பன் இப்படி எல்லாரும் போட்டியில் இறங்கிவிட்டார்கள்.
அட அசடே ஒரு நல்ல கதை எழுதக் கூட லாயக்கில்லையே என்று என்னையே தலையில் குட்டிக் கொண்டேன்.
ஆச்சர்யம் என்னவென்றால் எனக்கும் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் ஒரு ஞாயிறு பிற்பகல் எங்கள் ப்ளாக் குழுவின் ஒரு(!!!)
ஆசிரியர் கௌதமன் படபடக்கும் வெய்யிலில் நம் வீட்டுக்கு பரிசுப் புத்தகத்தோடு வருகை தந்தார்.
காப்பி கீப்பி சாப்பிடுவாரோன்னு பார்த்தால் தண்ணீர் போதும் என்று விட்டார்,. நம் வீட்டுக் காப்பி மகிமை அவ்வளவு தூரமா பரவி இருக்கிறது என்று வியந்தபடி அவர் அன்போடு அளித்த புத்தகத்தைப் பார்த்தேம்.
''ஆநந்ததுக்கு ஒரு மிஸ்டு கால்''
புத்தகத்தின் தலைப்பே வியப்பைத் தந்தது,. அப்படியெல்லாம் சந்தோஷம் நம்மைத் தேடி வருமா என்ன?
என் சந்தேகத்தை அவர் போக்க முனையவில்லை. படித்துப் பாருங்கள்.
அவசியம் ஃபீட் பாக்'' கொடுக்க வேண்டும் என்ற அன்புக்கட்டளை வேறு.
இப்போது புத்தகம்
இதை ஆங்கிலத்தில் எழுதியவர் ஸ்ரீ சுரேஷ் பத்மநாபன்.
ஆன் க்ளௌட் 9'' என்கிற புத்தகத்தின் தமிழாக்கம்
ஆநந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்''
இதைத் தமிழாக்கம் செய்தவர்
தமிழ்ப் பெயர் சூட்டியவர் நம்
இதயம் பேத்துகிறது வலைப்பூவின் கே ஜி ஜவர்லால்.
************************************************************
வெளியிட்டவர்கள் கிழக்குப் பதிப்பகத்தார்.
சமீபகாலமாக இவர் பதிவுகளைப் படிக்க முடிகிறது பின்னூட்டம் இட முடியவில்லை.
இப்போது இந்தப் பின்னூட்டம் வழியாக் முறையிட்டுக் கொள்ளுகிறேன்.:)
முன்னுரை மட்டும் முடித்திருக்கிறேன்.
புத்தகங்களைப் படிக்கும் அளவு அவைகளை விமர்சிக்கும்
புத்தி எனக்குக் குறைவுதான்.
ஆனால் நன்றாக இருந்தது என்று சொல்லி முடிக்கவும் விருப்பமில்லை. அது தவறு கூட. ஏன் என்றால் அருமையான சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திரூக்கிறது இந்த நாவல்,கட்டுரை,புதினம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
அதனால் கொஞ்சம் மூளையைக் கசக்கிவிட்டு
அடுத்த பதிவில் என் கருத்தைத் தொடருகிறேன்.
சரியா.
