Showing posts with label நேற்று இன்று என்றும்2026/2/4. Show all posts
Showing posts with label நேற்று இன்று என்றும்2026/2/4. Show all posts

Sunday, February 04, 2024

நேற்று இன்று என்றும்

வல்லிசிம்ஹன்
அனைவருக்கும் இனிய தினங்களுக்கான  வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

புத்தகங்கள் துணையாக இருக்கும் குளிர்காலம்.
அடுத்து வரப்போகும் இளவேனிலுக்காக காத்திருக்கும் வேளை.

குளிரில் மனமும் சுருங்கி விடுகிறது.

அன்புத் தோழி எனது எழுத்துக்களைப்
பதிப்பித்து வெளியிடலாம், என்று மிக 
விருப்பம் தெரிவித்தார்.

புத்தகம் போடுவது இருக்கட்டும். 
அது எத்தனை நபர்களைப் ;போய் அடையும்?

என்னைவிடப்பெரிய திறமை வாய்ந்த
 எழுத்துலகின் அருமையான  எழுத்துகள்
சீக்கிரம் விற்றுப் போக வழியுண்டு.
எனக்கு இருக்கும் பயம், ஒரு 500 புத்தகங்கள் எங்கள் வீட்டு வரவேற்பறையில் காவல்
இருக்க வந்து விடுமோ என்பதுதான்:)))))))

கணவர் இருந்தால் கருத்து சொல்லி இருப்பார்.
(60 ) 47வருடங்களை என்னுடஇருப்பில்  வைத்துவிட்டு
அவரும் கிளம்பிவிட்டார்.

இந்தத் தைமாத திருமண நாளில் 
எனக்கே நான் வாழ்த்து சொல்லிக்
கொண்டு மிச்சம் இருக்கும் நாட்களை வலி இல்லாமல்
கடத்த வாழ இறைவனை வேண்டி நிற்கிறேன்.
அன்பு நட்புகளுக்கு நன்மைகள் வளரட்டும்.



இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)

வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1  கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம்.  எல்லோரும் நல் வாழ்வு ப...