Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, October 23, 2011

சினிமாவில் காதலும் காதலர்களும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
முன்பொரு தடவை'' டூ ஃபார் த ரோட் ''
என்ற படத்தை விமரிசித்துப் பதிவொன்று போட்டிருந்தேன்.
காதலர்களாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள், காலப் போக்கில் எப்படி மாறுகிறார்கள்
 என்பதை எனக்குத் தெரிந்த விதத்தில் எழுதி இருந்தேன்.
ஆட்ரி  ஹெப்பர்ன்   எனக்கு மிகவும் பிடித்த நடிகை.
அந்த மான் போல விழிகள் இன்னும் என்னை  மயக்கிவைத்திருக்கின்றன.

அதில் வரும் ஒரு வசனம்.
கணவன் மனைவியைப் பார்த்துக் கேட்பது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பேசாமல் இருக்கும்  ஆணையும் பெண்ணையும்
 பற்றி என்ன நினைக்கிறாய் என்பதே.
அவள் சொல்வால் ''ஒ. தே  மஸ்ட்  பி மார்ரீட்"  என்று
 அந்த அளவுக்கு அவர்கள் காதல் கசந்து போயிருக்கும்.

இந்தப் பதிவில் நான் பேசுவது சில நிறைவேறாத நிஜம் காதலைப் பற்றி.
சங்கம் படம் இந்தியில்  வந்தது.
அப்பொழுது ராஜ்கபூர் வைஜயந்திமாலா  காதல் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. அது நிஜமோ பொய்யோ தெரியாது.
அப்புறம் நடந்தது எல்லாம்  நமக்குத் தெரியும்.
  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால்  அமெரிக்க வாழ்
திரு.பிரகாஷ் ஸ்வாமி நம் பத்மினியைப் பேட்டி எடுத்துப் போட்டு இருந்தார்.

அதில் பத்மினி தன்   பழைய காதலைப் பற்றி க் கண்ணீர் சிந்தாத குறையாகப் பேட்டி கொடுத்திருந்தார்.
  நடிகர் திருசிவாஜிகணேசனுக்கும்   தனக்கும் நடுவில் இருந்த ஈர்ப்பு  எப்படி நிறைவேறாமல் போனது என்று விரிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

இப்பொழுதும் தில்லானா மோஹனாம்பாள் படத்தில் வரும் ''நலந்தானா '' பாடலைப் பார்க்கும் போது அவர்களிடமிருந்த ''கெமிஸ்ட்ரி''  அற்புதமாக
வெளிப்படும். நம் மனமும் அவர்கள் காதலுக்காக   வலி  அடையும்.

 அதே போல    ரோமன் ஹாலிடே  படம்.
கிரிகரி பெக்  ,ஹெப்பர்ன் ஜோடி   படத்தில் தான் காதலர்கள். நிஜ வாழ்வில் இல்லை. ஆனால் என்ன ஒரு நடிப்பு. ரொமான்ஸ் என்றால்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அங்க அசைவிலும் தெரியும்படி நடித்திருப்பார்கள்.

அதே வரிசையில் ''கிங் அண்ட் ஐ'' என்கிற படம் யூல் ப்ரன்னரும் டெபோரா கெர்ரும் நடித்தது.

படித்த கௌரவமான ஆங்கில கவர்னஸாக டெபோரா சையாம் நாட்டுக்கு வருவார். அந்த ஊர் அரசனாக யூல் ப்ரென்னர்.
பல மனைவிகள் இருபது முப்பது குழந்தைகளுக்குத் தந்தை.

இந்தப் படமெல்லாம் ''க்ளாஸிக்''  வகையைச் சேர்ந்தவை.
தன் மூர்க்கமான நடிப்பினாலயே  டெபோராவிடம் தன்   காதலை வெளிப்படுத்திவிடுவார்.
சட்டம் மதம் இரண்டும் அவர்களைச் சேரவிடாமல் இரும்புத்திரையாக நிற்கும்.
அதைப்பற்றி அவர்களுக்கும் தெரியும்.
அரசனின் கடைசிப் படுக்கையில்   டெபோரா  மரியாதையே உருவாக
தலைகுனிந்து  முழந்தாள் இட்டு அவருக்கு மரியாதை
செலுத்தி நிமிரும்போது அரசனின்  கண்கள் தன் மேல் நிலைத்திருப்பதைப் பார்த்து  உணர்ச்சிவசப்படுவார்.
நிதானமாகத்   தன் மகனின் கைகளைப் பற்றியபடி வெளியேறி விடுவார்.
ஒரு விரசம் கிடையாது. ஒரு முகம் சுளிக்கும் வசனம் இருக்காது.
இவர்களும் மணம் புரிய நினைத்துப் பிரிந்தவர்கள்.

அந்த வழியில் நான் நினைவு   கொள்வது அபூர்வ ராகங்கள் படம்.
ஸ்ரீவித்யாவின் நயன மொழிக்கு உலகையே அள்ளித் தரலாம்.
வாழ்வில்  சோகத்தைத்  தவிர வேறு எதைக் கண்டாரோ.

மொகலேஆசம். மதுபாலா திலீப் குமார் நிஜ வாழ்க்கைக் காதலர்கள்.

உண்மையாகவும் பிரிந்தார்கள்.


   சில சமயம் தோன்றும்    உண்மையான காதல்   சேர்ந்தாலும் காதலர்கள் சேருவதில்லையோ.
இல்லை காதல் வெற்றியாகக் கல்யாணத்தில் முடிந்தாலும்
அலுத்துக் கொள்ளாமல்  வாழ்க்கை போகிறதா:)
எப்பவோ  எழுதின  பதிவு.
இப்பொழுது எவ்வளவோ   காலம் மாறிவிட்டது.










Sunday, October 04, 2009

அருள்,பொருள்,இன்பம் , தொடர் ,கவிநயாவின் அழைப்பு









அன்னை










திருமணம்





கடவுள்







பொருள்,பணம்...



















அழகு முகங்கள்












அன்புக் கவிநயா ஒரு வலைத் தொடரில் மாட்டிக் கொண்டு, நம்மையும் அதில் இழுத்துவிட்டார்.
தந்த தலைப்போ தாண்டிக் கடந்து வந்த வருடங்களையே விழுங்கிவிடும்:)
 
இந்த வயதில் கடவுள் பக்கம் போய்க் கொண்டு இருக்கிறோம். அதனால் உணர்ந்து எழுதுவது சுலபமே.
அடுத்தது பணம். பொருளில்லாத உலகம் ஏது அதையும் எழுதிடலாம்.
அழகு??காண்பவர் கண்ணில் இருக்கிறது இல்லையா. சரி ஓகேதான் அதுவும்.
காதல்,
ஆஹா......... தொலைக் காட்சி படங்களில் தவிர காதலை வேறேங்கும் பார்க்கறது இல்லையே. இதை பற்றி என்ன எழுதுகிறது???
சரி விதி வலியது.
நான் எழுத நீங்களும் படிக்கணும்னு சனிப் பெயர்ச்சி போதே முடிவாகிவிட்டது.
எழுதுவதோடு நில்லாமல் இன்னும் நால்வரை அழைக்கணுமாம்.
அதனால் நான் அழைக்கப் போகும் நால்வரை முதலில் சொல்லிவிடுகிறேன்.
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.
******************************************************
1 கோமதி அரசு
2, ஷைலஜா, திருவரங்கப் பாவை,
3,சஹாரா தென்றல்,
4, கயல்விழி முத்துலட்சுமி.
 
எழுதிடுவாங்க. எல்லாம் அந்த அந்தக் கட்டத்தில இருக்கறவங்க தான்.
*********************************************************************************************************
இப்போ நாம், முதலாக
காதல்.
கண்டும் கேட்டும் பிறகு பார்த்தும் ,புரிந்தும் வரும் காதல் நிலைக்கும்.
சந்தேகம் வந்தால் முறியும்.
சந்தோஷம் தரும்.
புது உலகிற்கு இருவரையும் அழைத்துச் சென்றுவிடும்.
இந்த நிலை மாறாமல் காதலைக் கொண்டாடினால் வாழ்வு நுனிக் கரும்பு போல இனிக்கும். நுனிக் கரும்பு நிலையில், வயதில் இருப்பதால் சொல்கிறேன். காதலாகிக் கண்ணீரும் விட்டு, கஷ்டங்களைத் தாண்டி., இப்போது ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறோம்:)

அடுத்தது,
கடவுள்..
இல்லாமல் ஏது வாழ்க்கை. இவர் ரொம்ப அவசியம்.
அப்பப்போ திட்டு வாங்க இவரை விட்டால் ஆள் கிடையாது. அப்புறம் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளணும்னாலும் இவரிடம் தான் பேசணும்.
எத்தனையோ வடிவங்களில்,நிகழ்ச்சிகளின் மூலமாக,மனிதர்கள் உதவிக்கரங்களாக அவர் எங்களிடம் வந்திருக்கிறார்.
இன்னும் இந்த நொடியில் இந்த 11.12 நிமிடம் இரவு வேளையில் எழுதும் ஊக்கமும் அவர்தான் கொடுத்திருக்கிறார். நான் நம்புகிறேன்.

மூன்றாவது பணம், பொருள்.
வேண்டும். அதைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பக்குவமும் நம் அறிவு நமக்குக் கொடுக்கவேண்டும்.
வந்த போது அள்ளி வீட்டுப்,பரப்பி விட்டு இல்லாத போது மற்றவரிடம் கையேந்தா அளவில் நம் புத்தியையும் மனதையும் கூர்மையாக வைத்துக் கொள்ளணும்..
 
நாலாவது அழகு.
புன்னகை,அன்பு,மகிழ்ச்சி,ஆரோக்கியம் இருந்து விட்டால் அழகு தானே நம்மிடம் இருக்கும், வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
சரியா.
கவிநயா எழுதிட்டேன்பா.!!!
 
 
 










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...