Blog Archive

Wednesday, August 31, 2016

லண்டன் அனுபவம் 1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

லண்டன்  வந்ததும் பேத்தியின் அன்பு ஆக்கிரமித்துக் கொண்டது. மிக சுட்டி. அழகாகப்  பெரியவர்களை புரிந்து கொள்கிறது.

 என் முழங்கால் வலிக்கு உடனே டைகர்  பாம் கொண்டுவந்து கொடுத்து,  நிறைய நடந்தால் சரியாகிவிடும் என்று புத்திமதி சொல்கிறாள்.

என்னென்ன எல்லாம் எழுதுகிறேன்.  வாட்ஸ் ஆப் நல்லதா, முகநூல்
சரியா.  என்  படம் போடாதே என்ற கண்டிப்பும் கூடவே சொல்லிவிட்டது.
எட்டு வயதுக்கு  நல்ல கூர்மை . இன்னும் பள்ளி ஆரம்பிக்கவில்லை.
 
 பக்கத்தில் தோழிகள் யாரும் இல்லாததால் கொஞ்சம் சுணக்கம் .பாவம் குழந்தை.  குழந்தையை என்னிடம்   பேசிக்கொண்டிருக்கச்  சொல்லிவிட்டு நான் கணினியிலோ முகநூலில் உட்கார்வது சரியென்று தோன்றவில்லை . அனைவரும் வாழ்க  வளமுடன்.

Monday, August 22, 2016

நிலவு கண்ட காதலர்கள்

4th   February   1967.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

    ஒரு தை மாத நிலவு.
   ஒரு கணவன் மனைவி. இருவருக்கும் மிக இளவயது.
திருமணமாகி  ஒரு வருட பூர்த்தியைக் கொண்டாட
ஒரு திரைப்படத்தையும்  பார்த்துவிட்டு  வீட்டுக்கு
நடந்தே  வந்து கொண்டு இருந்தார்கள்.
 அதிக அரவற்றமற்ற சாலை. கடந்து போகும் பஸ்களின் வெளிச்சமும். திட்டு திட்டான
டீக்கடைகளும்  அவற்றிலிருந்து  வரும் வெளிச்சங்களுமெ
வழிகாட்டி.
நிறையப் பேச அவர்களது முதல் வருட வாழ்க்கையில் நேரமில்லை.
திருமணம் முடிந்த முதல் மாதமே கருத்தரித்ததாலும்,
பெண்ணின் பிறந்தகம் ,புக்ககம் மாற்றி மாற்றி அழைத்ததாலும்
 எப்பொழுதும் இருக்க வேண்டிய  பாசப் பரிமாறல்கள் குறைவே.
அந்த வாலிபனது பணியும் அவரை இறுக்கக் கட்டிப் போட்டதின் விளைவு.
பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை.
ஆனால் அந்த ஒரு நல்லிரவு  நிலா வெளிச்சத்தின் நடையில் கைகள் பின்னிக் கொண்டு நடந்த போது ஒரு அரிய புரிதல் இருவருக்கும் உண்டானது.
உதடுகள் பேசாததை உள்ளங்கள் பேசியது அப்போதுதான் புரிந்தது.
அன்றிலிருந்து நிலவு அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியானது.
இந்த நொடி வரை அப்படித்தான்.
Add caption


Sunday, August 07, 2016

இன்று ஆடிப் பெருக்கு...நினைவுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நம் காவேரி
ஆடிப் பெருக்கன்று பதிவு செய்திருக்க வேண்டிய எழுத்து. வேலைகளுக்கு நடுவில் விட்டுப் போனது.  நாங்கள் திருச்சியில் வாழ்ந்த சிலகாலங்களில் பை பாஸ் ரோட்டுக்கு அடியில்  காவேரி தண்ணீரில்  ஓரமாகக் குழந்தைகளை விளையாட விட்டதுண்டு. அப்போதே ஓடை போலத்தான் ஓடிக்கொண்டிருந்தால் காவேரி.  இங்க விட  கல்லணை முக்கொம்பில் நிறையத் தண்ணீர் ஓடும் சார். அங்கே நீச்சல் கூட அடிக்கலாம் என்று அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் சொல்வார்கள்.
 நாங்கள் ஒரு தடவை முக்கொம்பு போய் வந்த அனுபவத்தை ஏற்கனவே எழுதியாகிவிட்டது.
மறக்க முடியாதாகிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரிடம் பயம் இருக்கக் கூடாது என்பதற்காகவே  இந்த இடத்துக்கு அழைத்து வருவோம்.
 ஸ்ரீரங்கம், சமயபுரம் ,பைபாஸ் காவேரி பிறகு வீடு என்பது ஞாயிற்றுக் கிழமைகளில்  எழுதாத விதி முறைகள்.  ஜங்க்ஷன் வரும்போது எங்கள் கிபியட் சொல்லாமலேயே காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கும் பழைய புத்தகக் கடைக்குப் போய்விடும்.  ஆர்ச்சி, ஹார்வி  காமிக்ஸ், மார்வெல் காமிக்ஸ் என்று விதவிதமாக வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து
சப்பாத்தி செய்யத்தான் நேரம் இருக்கும். இனிய நாட்கள் அவை.

Friday, August 05, 2016

திரு ஆடிப்பூரத் திரு நாள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  1.  அருள் மிகு ஆண்டாள் ரெங்கமன்னார்  வில்லிபுத்தூரை வலம் வருகிறார்கள்.

    .

    .ஆடி வெள்ளி
அதிலும் பூர நட்சத்திரம். 
கோதையின் அவதார நாள். பத்து நாட்களாக நடைபெறும் திருவிழா. அன்னையும் அப்பனுமாக வெவ்வேறு வாகனங்களில்  ,
அரசன் அரசியாக வில்லிபுத்தூரை வலம் வருகிறார்கள்.
கண் நிறையும் காட்சி.
திருமஞ்சனம் முடிந்ததும் கையில் ஏறும் கிளிக்குத் தான் எத்தனை தாபம்.
 அதை உணர்ந்தது போல இருவர் முகத்தில் பளபளக்கும் குறு முறுவல்.
தெய்வ அனுபவம் .மகன் ஏற்பாடு செய்திருக்கும் இணைப்பில் 
காலையில் பார்த்துக் களித்த காட்சிகள். இன்னும் தேர் உலா வரவில்லை. அது நாளைக்கோ என்னவோ.
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் அழகைக் கண்டுதான் உணர வேண்டும்.
வலையில் தேடிய போது கிடைத்தக் காட்சியைப் பதிந்திருக்கிறேன்.
ஆண்டாளும்  வடபத்ர சாயியும் நம்மை எப்போதும் ஆண்டு அருளட்டும்.
Add caption

Wednesday, August 03, 2016

யாரடி வந்தார்........Swiss effect.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 நேற்று ஆடிப்பெருக்கு.  எல்லாப் பொருட்களும் எடுத்துவைத்தாச்சு.
வடை சுட ,எண்ணெய் இல்லை. மகனுக்குத் தொலைபேசினால் வீட்டின் அடித்தளத்தில் இருப்பதாகச் சொன்னான்.
சரி அங்க போய்ப் பார்க்கலாம் என்று  வாசல் கதவைப் பூட்டி, லிகிப்ட்டில் இறங்கி   செல்லர் கதவைத் திறக்கப் போனால் அங்கிருந்து  தமபதியார் இருவர் வெளியே வந்தனர்.
நான் ஹா வென  பின்னால் என் குரல் கேட்டு அவர்கள் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு விட்டார்கள். ஹா ஹா.
அந்த மனுஷர் என்னை ஒரு டெர்ரரிஸ்ட்ன்னு நினைச்சுட்டாரோ என்னவோ, வழமையான உடுத்தும் ஜீன்ஸ் ஷார்ட் போடாமல் சல்வார் அதுவும் ஒரு மெஜந்தாகி கலரில் கண்ணைப் பறிக்கும்  சல்வார்,பெரிய பொட்டு ....பாவம் அவர்களை பயமுறுத்தி இருக்க  வேண்டும்.

ஒரே ஓட்டமாக மாடி ஏறியதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
சாமி. ................அம்மா பயப்படலை. ஐயா தான் பயந்துவிட்டார்.
எனக்கு அங்க எண்ணெயும் கிடைக்கவில்லை. லிப்ட்டில்    ஏறி ய பிறகு
இனம் புரியாமல் சிரிப்பு . எனக்கு.
கொஞ்ச எண்ணெயில் வடை பொறித்து,தேங்காய் சாதம்,தயிர் சாதம் செய்து முடித்து விட்டேன்.
சாயந்திரம் வந்த மகனிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும்,
டெரரிஸ்ட் பட்டம் வாங்காத தெரிஞ்சியே  அம்மா. என்று சிரிக்க ஆரம்பித்தான்.
எனக்குச் சொல்லி முடிப்பதற்குள்  மீண்டும் மீண்டும் நகைப்புத்தான்.
பாவம் அந்தத் தம்பதியினர் இனிமேல் படிகள் வழியாகத் தான் போவார்கள் என்று நினைக்கிறேன்.
எலிவேட்டரில் என்னைச் சந்திக்கும் பாக்கியம் அவர்களுக்கு வேண்டாம். ஹா ஹா.