Blog Archive

Sunday, June 06, 2021

மாட்டு வண்டி பூட்டி கிட்டு..................

பிறந்ததிலிருந்து திருமணமாகும் வரை 
காலையில் கண் விழிக்கும் முன் 
மாட்டு வண்டிகளின் சக்கரங்கள் போடும் கட கட சத்தமும்,
மாடுகளின் கழுத்து மணி சத்தமும்
காதுகளை அடையும்.
அவ்வப்போது பஸ் ஒலி கேட்கலாம்!!!
இப்போதெல்லாம் அறவே கிடையாது.

60களில் தஞ்சாவூர்ப்பக்கம் ஏதோ திருமணத்துக்குப் 
போனபோது ,....
அது ஒரு தை மாதம் என்ற நினைவு.

வரிசையாக வண்டிகள் போகும் சத்தம் 
இளங்காலையிலிருந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
 ஊரின் செழுமை அந்த வண்டிகளில் 
நிறைந்து சென்ற நெல் மூட்டைகளில் தெரிந்தது.
மீண்டும் மாலை அவை திரும்பிச் செல்லும் சத்தம்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வண்டியிலேறி பக்கத்தில் இருக்கும்
திருவண்ணாமலைக் கோவிலுக்குச் சென்ற ஞாபகம்.
வண்டி  ஓடும் வேகத்தில் பக்கத்துப் பக்கம் தலை 
இடித்தது நல்ல வலி.:)
பயணங்கள் மாறி வண்டிகளும் மாறியாகிவிட்டது.

நல்ல பயணங்கள் தொடரட்டும்.
21 comments:

Bhanumathy V said...

ஆமாம், சிறு வயதில் கேட்டது மாடுகளின் கழுத்து மணி சப்தம், மற்றும் மாட்டு வண்டிகளின் கடகட ஓசை! பாடல்கள் நிறைய இருக்கின்றன. மெதுவாகத்தான் கேட்க வேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

சிறு வயதில் மாட்டு வண்டியில் பயணித்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன

வெங்கட் நாகராஜ் said...

மாட்டு வண்டிப் பயணம் - ஓரிரு முறை மட்டுமே அமைந்திருக்கிறது. இனிமையான நினைவுகள் அவை.

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் காணொளி இசை : ஆகா...!

கருத்துள்ள பாடல்கள் : என்றும் இனிமை...

Geetha Sambasivam said...

நான் கல்யாணம் ஆன பின்னரே மாட்டு வண்டிப் பயணம். குதிரை வண்டி, ரிக்‌ஷா உண்டு. மதுரையில் அவை நிறைய. இப்போல்லாம் நினைச்சால் கூட இவற்றில் உட்காருவது கஷ்டம். அம்பேரிக்காவில் சான் அன்டானியோ போயிருக்கையில் ஒரு நீர் விளையாட்டில் பரிசல் மாதிரி ஒன்றில் உட்காரணும். அவர் உட்கார்ந்துட்டார். நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். 20 நிமிஷப் பயணம் எனக்கு 20 யுகம் மாதிரித் தெரிந்தது. படகில் எல்லாம் இப்போது உட்கார முடியுமானு சந்தேகமே!

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா மாட்டு வண்டிப் பயணம்...நானும் செய்திருக்கிறேன் ஆனால் அதிகம் இல்லை. அது போல குதிரை வண்டிப் பயணமும். மாட்டு வண்டி வில் வண்டியில், அப்புறம் திறந்த மாட்டு வண்டியிலும்....அப்போ சின்னக் குழந்தை என்பதால் முதலில் ஜாலியாக இருந்தது ஆனால் மாட்டை அடிப்பதைப் பார்த்ததிலிருந்து அப்புறம் ஏறியதில்லை.

மூன்று பாடல்களும் இனிய பாடல்கள். கேட்டிருக்கிறேன் மீண்டும் கேட்டு ரசித்தேன் அம்மா

கீதா

மாதேவி said...

மாட்டு வண்டி பயணம் சிறுவயதில் பாடசாலைக்கு சென்றிருக்கிறேன்.

இப்போது ஆடு மாடுகளை காண்பது குறைந்து விட்டது. கண்டால் மிகவும் சந்தோசமாக பேரனுக்கு காட்டுவேன். அவனும் மகிழ்வான்.

மனோ சாமிநாதன் said...

இனிய பகிர்வு. மாட்டு வண்டி பயணம் என் வாழ்க்கையில் மிகவும் ஒன்றிப்போன ஒரு விஷயம்! பாடல்கள் நினைவலைகளை மிகவும் இனிமைப்படுத்துகின்றன.

நெல்லைத் தமிழன் said...

குதிரை வண்டியில் பிரயாணம் செய்திருக்கிறேன். மாட்டுவண்டியை பார்த்திருக்கிறேன், மக்கள் பயணிப்பதையும் பார்த்திருக்கிறேன்.

40 வருடங்களில் எங்கேயோ போய்விட்டோம். இனி அடுத்தது, விர்சுவலாக ஒவ்வொரு இடத்துக்கும் நேராக போகவேண்டியதுதான்

கோமதி அரசு said...

மாட்டு வண்டி பயணம் முதல் முதலில் தெருவெண்காட்டில்.
அப்புறம் மாயவரத்தில் இரண்டு மூன்று முறை. ஆழ்வார்குறிச்சியில் ஒரு முறை என்று பயணம் செய்து இருக்கிறேன்.

மாட்டுப்பொங்கல் அன்று மாட்டு வண்டிகளை அல்ங்காரம் செய்து அதில் சிறு குழந்தைகள் மாட்டுப்பொங்கல் பொங்கலோ பொங்கல்! என்று உற்சாகமாய் குரல் கொடுத்து கொண்டு போவார்கள் மாயவரத்தில்.

பாடல்கள் என்றும் இனிமை.

கோமதி அரசு said...

மாட்டு வண்டியின் முதல் காணொளி

ஜல் ஜல் சலங்ககை ஒலி சல சல வென்று சாலையிலே செல் செல் காளைகளே! பாடலை நினைவு படுத்தியது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
மாட்டு வண்டி சத்தம் அண்மையில் கேட்டது ஒரு பழைய திரைப்படத்தில்.

பழைய நினைவுகளில் சாலை சத்தங்கள் , கோயில் மணி., கீரைக்காரம்மா, பலகார வண்டி என்று இந்த ஒலிகளுக்கு முக்கியத்துவம் உண்டு.
பாடல்களை எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம் பா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா அன்பு ஜெயக்குமார். உங்கள் ஊரில் தான் நல்ல ஒலிகள் நிறைய கேட்டேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
எல்லோருக்கும் மாட்டு வண்டி பிடித்திருக்கிறது அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்.

மதுரை மாவட்டத்தில் இருந்த வரை, நல்ல சப்தங்களுக்குக் குறைவில்லை.
உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்தது மகிழ்ச்சி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

மதுரை சித்ரா பௌர்ணமி ஓசைகள் இன்னும் நினைவில். உங்கள்
கிராம்ப் பயணங்கள், ஆற்றைக் கடப்பது எல்லாம் படிக்கப் படிக்க இனிமை.

சான்அனடோனியோ தண்ணீர்ப் பயணம்? ஆளை விடும்மா. நீங்களாவது ஏறி உட்கார்நதீர்கள்.

நான் அந்தப் பக்கமே போயிருக்கவே மாட்டேன் .தலை சுத்துமே!ஏதோ குடை ராட்டினமே
60 வயதுக்கு மேல் ஒத்துக் கொள்ளவில்லைமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதா,

நீங்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்ததே அதிசயம்! அதெல்லாம் அப்போது நடந்தது. சுற்றுச்சூழலும் பிழைத்தது்.

குதிரை வண்டி மிக சகஜம் . வெகு வருடங்களுக்கு இருந்தது. வில்லு வண்டி மகா. சொகுசு.
நல்லமெத்தை போட்டு. பக்கவாட்டில் துணி வைத்து தைத்திருக்கும். ஶ்ரீவில்லிபுத்தூர். பக்கத்து வீட்டு
அம்மாவுக்கு நான் செல்லம்.
அடிக்கடி அழைத்து செல்வார். நல்ல நினைவுகளைக் கொண்டு வந்து விட்டீர்கள் மா. மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

எத்தனை இனிமையான நாட்களைக் கண்டிருக்கிறீர்கள். மிக மகிழ்ச்சிமா. ஆடு மாடு பார்கக வேண்டும் என்றால் இனி பண்ணைகளுக்குத்
தான் செல்ல வேண்டும். தங்கள் பேரனுக்கு என் அன்பு. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,

எல்லோருக்கும் மாட்டு வண்டிப் பயணம் வாய்த்திருக்கிறது என்பதே மிக மகிழ்ச்சி.
நாம் எல்லோரும் கிராமங்களில் இருந்துதான் வருகிறோம். நல்லதொரு பாரம்பரியம். நம்முடையது.

தங்கள் கருத்துக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

குதிரை வண்டிதான் எல்லோருக்கும் பழகி இருக்கும் அதுவும் உங்கள் தலைமுறையுடன்
நின்றிருக்கும் பா.

குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியவே வாய்பபில்லை.
ஆமாம் போர்ட்டல். விசிட் தான் அடுத்த ஸ்டெப்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன் மா.
திருவெண்காட்டில் மாட்டு வண்டிகள் புழக்கத்தில் இருந்ததா.
உங்களுக்குத் திருமணமான புதிதில்
சென்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
மாயவரத்தில் வயல்வெளிகளும், பயிர் வேலைகளும்
இருக்கும் நிலத்தில் மாட்டு வண்டிகளும் பயன் பாட்டில் இருந்திருக்கும்.


இந்த மாட்டுவண்டிச் சத்தன் கேட்டதும்
எனக்கும் ஜல்ஜல்சப்தம் 'பாசம்' படப் பாடல் தான் நினைவுக்கு வந்தது.

அந்தக் குட்டி வில்வண்டிக்கும் எதோ ஒரு பெயர்
உண்டு.
ரேவதி, கார்த்திக் நடிக்கும் படத்தில் கூட இந்த அலங்கார
வண்டி வரும்.படம் பெயர் நினைவில் இல்லை.