Blog Archive

Friday, August 28, 2009

மனதில் நிற்கும் காட்சிகள்

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்கா


ஒரு சர்ச்













போகும் பாதை .

சைக்கிள் கடை.






கல் பதித்த தெரு
ஒன்று.











பாலம் இரவு நேரத்தில் ,


இப்போது மழைக்காலம் சென்னையில். இனிமையாக இருக்கும் வீட்டினுள் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு.
இதே மழையின் போது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பட்டபாடும் இப்போது இனிமையாக இருக்கிறது.
மூன்று குழந்தைகளும் மூன்று பள்ளியில் படித்தார்கள்.
அதில் பெரியவனின் பள்ளிப் ஸ்கூல் பஸ் காலை 7 மணிக்கு வந்துவிடும்.
அதற்குள் சாப்பிடக் கொடுத்து கையிலும் டிபன் பாக்ஸ் கொடுக்க வேண்டும்.
அடுத்தவண்டி பெண். அடுத்தாற்போல் சின்னவன்.
மழையில் ஒவ்வொருவரையும் அவரவர் வண்டி நிற்கும் இடத்திற்குக் குடையையும் பிடித்துக் கொண்டு, குழந்த கையையும் பிடித்துக் கொண்டு போவது, இல்லாத ப்ளாட்ஃபார்மில் நடந்து, பஸ்ஸில் வழுக்காமல் ஏறுகிறதா என்று பார்த்துவிட்டு
கையில் குடை பறக்க, (அந்தக் குடை மேல்நோக்கித்தான் பார்க்கும்:) )
எதிர்த்தாற்போல் இருக்கும் ராமதூதனையும் கண்டுகொண்டு,
வீட்டிற்குத் திரும்பினால்,
பெரியவர்களின் வேலைகள் காத்து இருக்கும்.
அசை போட வைத்த மழைக்கும் நன்றி.
கூடவே சூடு பறக்கும் வேர்க்கடலை வாசமும்,
தொலைக்காட்சி இல்லாத புத்தக நாட்களானதால்,
வானொலியில் நல்ல பாடல்களும்,
கைகளில் புத்தகமுமாகக் கழிந்த வருடங்கள் ஒரு ஐந்து எண்ணம் இருக்குமா:)
படங்கள் இல்லாமல் பதிவு போட மனமில்லை.
ஸ்விட்சர்லாண்ட் காட்சிகளை,
மகன் இருக்கும் ''பாசில் ''பேட்டையைப் படங்களால் நினைவு கொள்கிறேன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, August 24, 2009

பிறந்த நாள் வாழ்த்துகள் நானானி!!

நைன்வெஸ்ட்
தளத்தின் உரிமையாளரும்
இனிய குணம் கொண்டவரும்,
பதிவர்களின் அன்பரும்
நண்பருமான நானானிக்கு
இன்று பிறந்த நாள்.

அன்பு நானானியும்,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .

ஹாப்பி பர்த்டே நானானி .
வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .



எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, August 21, 2009

கன சங்கடங்கள் விலக என்ன வழி?















காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி பாடியதைப் பற்றி, மரத்தடி ஹரிஅண்ணா
என்று அன்போடு அழைக்கப் படும் ஸ்ரீ ஹரிகிருஷ்ணன் அவர்களின் ''நினைவில் நின்ற சுவைகள்'' புத்தகப் பக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது,
படிக்கும் போது தான் அனு ,
அதான் என் உடல் நிலை கண்டு கவலைப் பட்டு ,
கல்யாண சாப்பாட்டில் ஒரு நல்லதை ஒரு பாசந்தி கூட சாப்பிட விடாமல் செய்துவிட்டு
நான் உனக்குப் போன் செய்யறேன்னு பயமுறுத்திவிட்டு வேறு போயிருந்தாளே, அந்த அனு,
இப்ப இந்தப் புத்தகத்தை அனுபவிக்க முடியாமல் போன் செய்தாள்.:)
ஹேய் நான் சொல்றதைக் கேட்டியானால் நாலே மாசம், உன் எடை குறைந்துவிடும் , கேக்கிறியா என்று நிறுத்தினாள்.
நல்ல நாளிலியே எனக்குக் கேட்கும் சக்தி குறைவு:)
இப்ப வேற ஏகப்பட்ட மருந்து மாத்திரை, கொஞ்சம் சாப்பாட்டுக் குறைப்பு,
அப்போது 12 மணி மதிய சாப்பாட்டுக்குப் போகத்துடிக்கும் கால் களையும் கைகளையும் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட மனுஷி கிட்ட,
இப்படி ஒருத்தி அட்வைஸ் ஆரம்பித்தால் கோபம் வருமா வராதா!!!
எனக்கு வரவில்லை. 'ம்ம் சொல்லும்மா. என்றபடி கேட்க ஆரம்பித்தேன்.
புத்திமதி சொல்கிறவர்களுக்கு ஒன்று மட்டும் நினைவில் இருப்பதில்லை.
தனக்கு இருக்கும் அறிவில் பாதியாவது தன் வயதே ஆன தோழிக்கும் இருக்க வாய்ப்பு உண்டு என்ற உணர்வுதான் அது.
பள்ளிக்காலத்தில் கணக்குப் பாடத்தில் எப்போதும் எனக்கு அவளுக்கும் போட்டி. இறுதிப் பரிட்சையில் அவளுக்கே முதல் இடம். ஒரு பத்துமார்க் குறைவுதான் எனக்கு.
கவனமே போதாதுடி உனக்குனு அவள் சொல்லும்போது நானும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டேன்.
பரீட்சை ஹாலில் அளவுக்கு மேல பயத்தால் இருமுவது நானாகத்தான் இருக்கும்.
அவள் பேப்பருக்கு மேல் பேப்பர் கேட்க நான் தண்ணீர் கேட்பதற்குத்தான் அதிகம் எழுந்து நிற்பேன்.
ட்ரிக்னாமெட்ரி என்ற அரக்கன் என்னைக் கைவிட மதிப்பெண்களையும் கோட்டைவிட்டேன்.
அதை இன்னும் அவள் மறக்கவில்லை என்பது அவள் பேச்சிலிருந்து தெரிந்தது.:))
எப்பவுமே கடைசி நிமிடத்தில் நீ பின்வாங்கிவிடுவாய்.அந்த அக்ரெஸிவ் நோக்கம் உனக்கு வரவே இல்லையே இவளே.
நான் பாரு, இப்ப இந்த வேலையில் ஓய்வெடுத்த பின்னாலும் கன்சல்டண்டாக இருக்கிறேன்.
நீ கூடக் கவிதை எல்லாம் அப்போ எழுதின மாதிரி எனக்கு லேசா நினைவிருக்கிறது என்றாள்.
ஆமாம் அதெல்லாம் ஒரு காலம் என்று மிகச் சோகக் குரலில் பதில் சொன்னேன்.:)
சே, ரொம்ப வீணாகப் போச்சுப்பா உன் நேரமெல்லாம். எப்படியோ வந்திருக்கலாம் என்று அவள் ஆரம்பித்ததும் அவளை ட்ராக் மாத்த வெயிட் லாஸ் பத்திச் சொல்கிறேன் என்றாயே என்று நினைவு படுத்தினேன்.
ஏதாவது காய்கறி ரெசிப்பி, சர்க்கரை இல்லாத உணவுக் குறிப்புகள் ஏதாவது சொல்லுவாளோ என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.
ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து
அழகைக் கட்டாயம் வரவழைக்கும், (சிறிது நாளில் தொலைந்து போய் விடும் )
ஒரு நிலையத்தைத் தனக்கு மிகத் தெரிந்த நண்பி நடத்துவதாகச் சொல்லி தள்ளுபடி விலையில் எனக்கு ஒரு டீல் வாங்கித்தருவதாகவும் சொன்னாள்.
நானும் அந்த நிலையத்தைப் பேரனுக்கு தலை முடி வெட்ட அழைத்துப் போகும்போது பார்த்திருக்கிறேன்.
ஓடும் மெஷினும் குலுங்கும் உடல்களுமாக அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. வருபவர்களின் வண்டிகளே இருபது லட்சம் ரூபாய் (,அந்தக்) கணக்கில் இருந்தது.
பாதிப் பேச்சைக் கோட்டைவிட்ட நிலையில்,
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, அவள் சொன்ன எல்லாக் குறிப்புகளையும் பின்பற்றுவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.
இதனால் ஒரு நல்லது நடந்தது. என் தைராய்டு அளவு பரிசோதனைக்குப் போனபோது, வைத்தியரிடம் கேட்ட போது, அவர் எனது இந்தத் திடீர் எடை கூடுதலுக்கு விளக்கம் சொன்னார்.
தைராய்ட் அளவு க்கு அதிகமாக இருப்பதாகவும், இன்னும் வேறு உணவு முறை பின் பற்ற வேண்டும் என்றும் சொன்னார்.
ஒரு வகையில் ஆறுதல்.
ஏதோ பகாசுரி லெவலுக்கு நாம் போக வில்லை.
இதுவும் கடக்கும்னு சமாதானப் படுத்திக்கொண்டு என் கீரையையும் சப்பாத்தியையும் சாப்பிடப் போனேன்:)



வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, August 20, 2009

சங்கடங்கள் எடையைக் குறைக்குமா?



சில நாட்களுக்கு முன் என் தோழியைப் பல வருடங்களுக்கு அப்புறம் சந்தித்தேன்.
ஒரு திருமணத்தில் பார்த்தபோது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
எனக்கோ அவளைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.
நான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, எங்க 64ஆம் வருட பரிசோதனைக் கூட நாட்களை நினைவு படுத்தியதும் தான் சிரித்த வண்ணம் ஒத்துக்கொண்டாள் நான் நான் தான் என்று.
என்னசெய்வது அவள் எதிர்பார்த்தது 48 கேஜி
ஒட்டடைக் குச்சியை.
இப்போது பார்ப்பது கிட்டத்தட்ட ( ம்ஹ்ம்ம்) ஒரு 75 கிலோ பாட்டியை.:)
அவள் மட்டும் ஓரிரண்டு நரை முடியைத் தவிர
அது என்ன 50 கேஜி தாஜ் மகால் ஆகவே இருந்தாள். அவள் என்னை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.
'
கொஞ்சம் அதிர்ச்சி,நிறைய வியப்பு என்று என்னை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். நீ எப்படி இவ்வளவு வெயிட் போட்ட. என்னாச்சு. சாப்பாட்டுப் பிரச்சினையா. சந்தோஷம் அதிகமானா சாப்பாடும் கட்டுப்பாடில்லாம போகும்னு சொல்லுவாங்களே, அதுப்போல
உனக்கும் வாழ்க்கை இனிமையாகப் போயிருக்கும். நீதான் படிக்கிறதை 18 வயசிலியே நிறுத்திட்டியே.???
படிப்ப நிறுத்தினா உடம்பு பெருக்குமா என்ன. கணக்கு சரியாயில்லையே என்று நான் அவளை முறைப்பதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
ஷி வாஸ் இன் ஷாக்!!!
பசங்க உண்டா எப்படி இருக்காங்க கல்யாணம் ஆச்சா அவங்களுக்கெல்லாம். பேரன் பேத்திகள் உண்டா என்று அவள் மூச்சு விடாமல் கேட்க எனக்கு மூச்சு வாங்கியது.
பின்னே!
அவள் எறும்பை விட வேகமா நடந்து கொண்டே பேசினால் நான் என் சரீரத்தையும் அழைத்துக் கொண்டு பின்னால் போக வேண்டியது சுலபமான காரியமா.
நாற்காலிகளுக்கு நடுவே படு சுலபமாக அவள் போக, நான் எல்லாருடைய கால்களை இடித்து, பாதங்களை மிதித்து,
அவர்களின் நற நறக் கடிப்பு வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போனேன்.
ஒருவழியாக நாதஸ்வர இரைச்சலிலிருந்து(!!!) கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.
'இப்போ சொல்லு. எப்படி இருந்த நீ இப்படி ஆன??
என்ன சொல்லன்னு தெரியாமல் விழித்தேன்.
ஒரு 45 வருஷக் கதையை அவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமா....
தொடரும்( சங்கடங்கள்.
)









எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Saturday, August 15, 2009

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்
அனைவருக்கும் இனிய சுதந்திரத்திருநாள்
வாழ்த்துகள்
வளமே பெறுவோம் .
வாழ்க பாரதத் திருநாடு .

Thursday, August 13, 2009

குருவாயூரப்பனும் நாராயண பட்டத்ரியும்

















அட்டமி தினமான
இன்று எல்லோர் மனத்திலும் ஆடும் கண்ணன் எப்போதும்
நின்றாட நம் துதிகள் அவனை எட்டட்டும்.
அவன் குழலோசை எப்போதும் நம் மனம் நிறைந்து அமைதி
கொடுக்கட்டும்.
நாராயணீயத்தில் பட்டத்ரி கண்ணனை அடிக்கடி சந்தேகம் கேட்பாராம்.
''கண்ணா, உனக்கு ஐந்து வயதாயிருக்கும் போது எப்படி காளிங்கன் தலைமீது தலை வைத்து ஆடினாய்.சிறிய குழந்தை அல்லவா நீ என்றாராம்
குருவாயூரப்பன் உடனே நேரிலேயே அவர் முன்னால் ஆடிக்கட்டினாராம்.!!!
அதே போல அவ்வளவு வெண்ணெயுமா சாப்பிட்டாய் என்று
அதிசயப்பட்டபோது,
அவர் முன்னாலேயே சாப்பிட்டுக் காட்டினானாம்
அந்த மாயக்காரன்.
இப்படி ஒவ்வொரு கட்டத்திலேயும் அவரோட சந்தேகங்கள் அனைத்துக்கும்,சரியான திருப்தியான பதில்களைக் கொடுத்து அவரிடம் நாராயணீயம் எழுதி வாங்கி,அவருக்கு இருந்து நோயையும் போக்கினான் நம் கண்ணன்.
இன்று எங்கு பார்க்கிலும் கண்ணன்.
எல்லாச் சானல்களிலும் வலம் வருகிறான்.
குழந்தைகளுக்குக் கண்ணன் அருள் புரிந்து, இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்,
முற்றும் நம்மை விட்டு விலகக் காவலிருக்க வேண்டும்.
காத்து இருப்பான் கமலக் கண்ணன்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
முதல் பிறந்த நாள் வாழ்த்துகள் இந்தவருடத்துக்கு இன்று!!!
இரண்டாவது பிறந்தநாள் செப்டம்பர் 12ம் வருகிறது.
ருக்மணிக்காக ஒருதடவையும்,
சத்யபாமைக்கு மனக்களிப்பு தர இன்னோரு தடவையும் வருகிறானோ:))
 

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, August 10, 2009

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே













குழந்தையும் தெய்வமும் கொண்டாடப்படும் இடமாக 60 நாட்கள் ஓடிவிட்டது.
மழலை அள்ளித் தெளித்து,
பாட்டுகளும் பாடி,
அம்மா கொஞ்சம் கோபித்தால் ''ஏம்மா காரமாப்
பேசறேன்னு'' கேட்டு அசத்தின உழக்குப் பையன்
 
நீயும் என்னோட வரியான்னு கேட்டு விட்டு, அப்பாவைப் பார்த்துட்டு உனக்கு கம்ப்யூட்டர்ல ஹலோ சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
என்றபடி
திறந்த கதவு வழி குழந்தைகளும் மகளும் விரைந்து விட்டனர்.
என்னைச் சுற்றி நிற்பவர்களைப் பார்த்தேன் . சில பேர் கண்களில் கலக்கம். கண்ணீர்.(நானும்தான்)
சில கண்களில் பெருமிதம்.
நல்லபடியாப் போய்விட்டு வாம்மா.
பத்திரமாக இருங்க.
விமானத்தில ஓட வேண்டாம்.
பப்பிள் கம் தொண்டையில் மாட்டிக்கும் எடுத்துடு.
பாட்டி நீ அடுத்த வருஷம் வரயா.
சுதந்திரதினத்தை ஒட்டி செய்திருந்த பாதுகாப்புச் சட்டத்தை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.
கண்ணாடி வழி கூட உணர்ச்சிகள்
போய்ச் சேரும் என்பதை கிட்டத்தட்ட 600 அடிகள் தொலைவிலிருந்து என் பெண் கண்ணில் பார்த்தேன்.
அவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்!!
மீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, August 04, 2009

உங்கள் எழுத்து சுவாரஸ்யமானது



வலையில் வலம் வந்து கொண்டிருக்கும் எண்ணில்லாத விருதுகள்,
வலைத்தளம் எவ்வளவு மாறிவிட்டது என்று பறை சாற்றுகிறது.
 
முன்பு விளையாடிய,ஆறு,எட்டு,பத்து எண்கள் தொடர் ஒரு பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி நம்மை,
நாமே சுய சிந்தனைக்குள் மூழ்க வைத்துக் கொண்டு அலசி எடுத்த சில பார்வைகளை,
மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுத்தோம்.
இப்போது பல இளைஞர்களும்,கணினித் துறை சேர்ந்த தேர்ந்த எழுத்தாளர்களும்
தமிழ்மணத்தில் சூறவளி வேகத்தில் எண்ணங்களையும், தொழில் நுட்பங்களையும் பகிர்ந்து கொடு வருகிறார்கள்,
கவிநயா எனக்கு அன்புடன் வழங்கிய இந்த சுவாரஸ்யம் மிகுந்த விருதை எனக்குத் தெரிந்த சில என்னை விட சுவாரஸ்யமாக படைப்புகளை அளித்து வரும்
சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
 
 
உஷா ராமச்சந்திரன்....நுனிப்புல் பதிவு
**********************************************************
நல்ல தெளிவான சிந்தனைக்கு உரியவர்.
சமுதாய நலனில்,அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில்
மிகவும் கவனம் வைத்து எழுதுபவர்.
***********************************************************

மதுமிதா.
******************
காற்றுவெளிக்குச் சொந்தமானவர். கவிதாயினி,சமூகப் பொறுப்பு மிக்கவர்.
பல தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து சேவை செய்பவர்.
நல்ல எழுத்துக்கும் , பல புத்தககங்களை வெளியிட்ட பெருமைக்கும் உரியவர்.
****************************************************************************

ஒலிக்கும் கணங்களுக்குச் சொந்தமான நிர்மலா.

***************************************************************************
மிகத் திறமைசாலி.முற்போக்குச் சிந்தனையாளர்.
நல்ல படிப்பாளி.
பதிவுலகில் மீண்டும் அவர் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்
என்பதே என் ஆவல்.

அருணா ஸ்ரீனிவாசன்
*********************************

அலைகள் தளத்துக்குச் சொந்தமானவர்.
பொருளாதாரத்தில் பெரிய அளவில் படித்தவர்.
இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்பவர். அடக்கம் அவரது முதல் பண்பு. அவருக்கும் இந்த விருது
மிகப் பொருந்தும்.
**************************************************************

துளசி கோபால்.

**************************
துளசிதளத்துக்குச் சொந்தக்காரர்.
இவருக்கு எல்லாம் அறிமுகம் தர நமக்கு ஞானம் போதாது.
வலையுலக வரலாற்று ஆசிரியை.
தொடாத சப்ஜெக்ட் கிடையாது.
தெரியாத விஷயம் கிடையாது.
இவரைவிடச் சுவாரஸ்யமானவர் யாரும் இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றும்.

ஆறாவதாக நான் விருது கொடுக்க நினைப்பவர் நானானி.

***************************************************************************************
நைன்வெஸ்ட் தளத்துக்குச் சொந்தக்காரர்.
யாராவது இவருக்கு இதற்குள் இந்த விருதை அளித்திருப்பார்கள்.
இருந்தாலும் நானும் பகிர்ந்து கொண்டேன் என்கிற பெருமை வேண்டுமே.:)
சகலகலாவல்லியான நானானிக்கும் இந்த விருதைப்
பங்கிட்டுக் கொள்கிறேன்.
நீங்களும் உங்களுக்குச் சுவாரஸ்யமாகப் படும் ஆறு நபர்களுடன் விருதுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற'வேண்டுகோளோடு
என் நீண்ட பதிவை முடித்துக் கொள்கிறேன்:)
 





எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

வாழ்வின் ருசி சுவாரஸ்யமாகிறது


நன்றி கவிநயா. எதிர்பார்க்கவில்லை. அதனால் இனிக்கிறது. மிகவும் நன்றி.
இதை எப்படி என் பதிவில போட்டுக்கறதுனு யோசிக்கிறேன்.:)




மீண்டும் கவிநயாவுக்கு நன்றி


போட்டிருக்கிறேன்.
சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்:)
சுவாரஸ்யமான பாட்டின்னு பேர் எடுத்தாச்சு.
பதிவுக்கும் சுவாரஸ்யம் கூட்டும் இந்த அவார்ட்
உண்மையிலியே க்ரேட்!!


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.