Thursday, August 13, 2009

குருவாயூரப்பனும் நாராயண பட்டத்ரியும்

அட்டமி தினமான
இன்று எல்லோர் மனத்திலும் ஆடும் கண்ணன் எப்போதும்
நின்றாட நம் துதிகள் அவனை எட்டட்டும்.
அவன் குழலோசை எப்போதும் நம் மனம் நிறைந்து அமைதி
கொடுக்கட்டும்.
நாராயணீயத்தில் பட்டத்ரி கண்ணனை அடிக்கடி சந்தேகம் கேட்பாராம்.
''கண்ணா, உனக்கு ஐந்து வயதாயிருக்கும் போது எப்படி காளிங்கன் தலைமீது தலை வைத்து ஆடினாய்.சிறிய குழந்தை அல்லவா நீ என்றாராம்
குருவாயூரப்பன் உடனே நேரிலேயே அவர் முன்னால் ஆடிக்கட்டினாராம்.!!!
அதே போல அவ்வளவு வெண்ணெயுமா சாப்பிட்டாய் என்று
அதிசயப்பட்டபோது,
அவர் முன்னாலேயே சாப்பிட்டுக் காட்டினானாம்
அந்த மாயக்காரன்.
இப்படி ஒவ்வொரு கட்டத்திலேயும் அவரோட சந்தேகங்கள் அனைத்துக்கும்,சரியான திருப்தியான பதில்களைக் கொடுத்து அவரிடம் நாராயணீயம் எழுதி வாங்கி,அவருக்கு இருந்து நோயையும் போக்கினான் நம் கண்ணன்.
இன்று எங்கு பார்க்கிலும் கண்ணன்.
எல்லாச் சானல்களிலும் வலம் வருகிறான்.
குழந்தைகளுக்குக் கண்ணன் அருள் புரிந்து, இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்,
முற்றும் நம்மை விட்டு விலகக் காவலிருக்க வேண்டும்.
காத்து இருப்பான் கமலக் கண்ணன்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
முதல் பிறந்த நாள் வாழ்த்துகள் இந்தவருடத்துக்கு இன்று!!!
இரண்டாவது பிறந்தநாள் செப்டம்பர் 12ம் வருகிறது.
ருக்மணிக்காக ஒருதடவையும்,
சத்யபாமைக்கு மனக்களிப்பு தர இன்னோரு தடவையும் வருகிறானோ:))
 

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

11 comments:

Raghav said...

கண்ணன் எனும் கருந்தெய்வத்திற்கு பிறந்தநாள் பாட்டு கிடையாதா வல்லியம்மா.. பாட்டு பாடி அசத்திருப்பீங்கன்னு நினைச்சேன்.. செப்டம்பர் 12 எதிர்பார்க்கலாமா :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராகவ், நான் பாடுவேன் என்று யார் சொன்னது.

ஓஹோ .நம்ம ரவியா.
இல்ல... மௌலியா.
பாடலாமே. கண்ணனுக்கு இல்லாத பாட்டா.


கண்ணனுக்கும் நமக்கும் உறவு வைத்தான்.

கணக்கில்லாமல் வரவு வைத்தான்.
ஆவணி ரோகிணி அஷ்டமி நாளில்

அவனே என்னைப் பாட வைப்பான்:)

ஆணிப் பொன்னூஞ்சலில் ஆடிடும் கண்ணனுக்கு
அன்பு வெண்ணெய் எடுத்துவைத்தேன்.

அவலும் பாலும் சேர்த்து அருந்திடவே
அழகாய் நீ ஆடி வாராயோ
என் ஆரமுதே கிருஷ்ணா.

துளசி கோபால் said...

இன்னிக்கு ஸ்ரீகிருஷ்ணஜெயந்தியை இங்கே நாச்சியாரில்தான் கொண்டாடறேன்.

'எல்லோருக்கும் நல்ல வழி காட்டு கண்ணா'ன்னு வேண்டிக்கறேன்ப்பா.

வாசல்தான் வழின்னு சொல்லாம இருக்கணும் அந்தக் குறும்புக்காரன்:-)

கோமதி அரசு said...

//இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும்
நோய்,முற்றும் நம்மை விட்டு விலக்க
காவலிருக்க வேண்டும்.

காத்து இருப்பான் கமலக்கண்ணன்.//

ஆம் நிச்சியம் காத்து இருப்பான்
கமலக்கண்ணன்.

நம்பினார் கெடுவதில்லை .

Kailashi said...

கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் வல்லியம்மா. இப்போது எல்லாரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் பன்றி காய்ச்சல் இவ்வுலகத்தை விட்டே மறைய கண்ணனை வேண்டிக்கொள்வோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மத்தக்களிற்று வசுதேவர் தம்முடைய
சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம்நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரோ
முகிழ் நகையீர் வந்து வல்லியம்மாவின்
பதிவில் கண்ணனின் மொத்த அழகையும் காணீரோ
கண்டால் பன்றி அவதரம் செய்தவனுக்கு
பன்றிக்காய்ச்சலை தவிர்த்திட தெரியாதா என்ன?

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி மனதில் கோபாலன் நிறைந்திருக்கும் போது உங்களுக்கு என்றும் கண்ணன் பிறந்த நாள் தான்.


அன்பு கோமதி எல்லோரும் இன்புற்றிருக்கக் கண்ணனை ஸ்பெஷலாக வேண்டிக் கொள்ள ஏதுவாக அமைகிறது இந்த நாள்.

அன்பு தி.ரா.ச. கிருஷ்ணன் பேரனாக வந்து பிறந்துவிட்டான்.
இல்லை முருகனோ:)
நன்றி மா. கட்டாயம் காப்பார் நம் வராஹப் பெருமாள்.

ராமலக்ஷ்மி said...

//காத்து இருப்பான் கமலக் கண்ணன்//

நன்றி வல்லிம்மா, அருமையான படங்களுக்கும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கைலாஷி, அன்பு ராமலக்ஷ்மி,
கண்ணன் அருள் எப்பொழுதும் நிலைக்கட்டும்.
நன்றி.

மதுரையம்பதி said...

கிருஷ்ணன் பிறந்து ஒரு நாள் கழித்துத்தான் வரமுடிந்தது. அதனாலென்ன அவன் குறும்புகள் நமக்கு என்றுமே அலுப்பதில்லையே?.


சமயத்துக்கு ஏற்ற பிரார்த்தனையையும் வைத்திருக்கீங்க வல்லியம்மா. தனது பிறந்த தினப் பரிசாக சகலமானவருக்கும் நோயற்ற வாழ்வு அளித்திட நானும் ஸ்ரீகிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறேன். :)

வல்லிசிம்ஹன் said...

varanum mauli,
sorry for replying so late.
engaLukku september12 thaan SRIJAYANTHI.:)