Blog Archive
Monday, August 10, 2009
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
குழந்தையும் தெய்வமும் கொண்டாடப்படும் இடமாக 60 நாட்கள் ஓடிவிட்டது.
மழலை அள்ளித் தெளித்து,
பாட்டுகளும் பாடி,
அம்மா கொஞ்சம் கோபித்தால் ''ஏம்மா காரமாப்
பேசறேன்னு'' கேட்டு அசத்தின உழக்குப் பையன்
நீயும் என்னோட வரியான்னு கேட்டு விட்டு, அப்பாவைப் பார்த்துட்டு உனக்கு கம்ப்யூட்டர்ல ஹலோ சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
என்றபடி
திறந்த கதவு வழி குழந்தைகளும் மகளும் விரைந்து விட்டனர்.
என்னைச் சுற்றி நிற்பவர்களைப் பார்த்தேன் . சில பேர் கண்களில் கலக்கம். கண்ணீர்.(நானும்தான்)
சில கண்களில் பெருமிதம்.
நல்லபடியாப் போய்விட்டு வாம்மா.
பத்திரமாக இருங்க.
விமானத்தில ஓட வேண்டாம்.
பப்பிள் கம் தொண்டையில் மாட்டிக்கும் எடுத்துடு.
பாட்டி நீ அடுத்த வருஷம் வரயா.
சுதந்திரதினத்தை ஒட்டி செய்திருந்த பாதுகாப்புச் சட்டத்தை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.
கண்ணாடி வழி கூட உணர்ச்சிகள்
போய்ச் சேரும் என்பதை கிட்டத்தட்ட 600 அடிகள் தொலைவிலிருந்து என் பெண் கண்ணில் பார்த்தேன்.
அவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்!!
மீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//சுதந்திரதினத்தை ஒட்டி செய்திருந்த பாதுகாப்புச் சட்டத்தை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.
கண்ணாடி வழி கூட உணர்ச்சிகள்
போய்ச் சேரும் என்பதை கிட்டத்தட்ட 600 அடிகள் தொலைவிலிருந்து என் பெண் கண்ணில் பார்த்தேன்.//
பிரிவின் சோகமும்,சற்று தூரமாவது கூடவே வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும்,கண்ணீர் முட்டும் கண்களோடு கண்ணாடி கதவுகளினை மீறிச்செல்லும் பார்வையில் தென்படும் உறவுகளை காண்பது வெளிப்படுத்த இயலா ஒர் உணர்வு :(
அப்படியே சொல்லிவிட்டீர்கள் ஆயில்யன்.
வழக்கமாக நான் இந்தக் கண்ணீர் வரை போக மாட்டேன். இந்தத் தடவை ஏதோ இயலாமை
என்னைத் தளர்த்திவிட்டது.
நன்றிம்மா. சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.
கண்டிப்பாக மீண்டும் ஒரு வசந்தம் வரும்! உங்கள் நம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது! :-) இடுகை ஒரு கவிதை மாதிரி இருந்தது....கொஞ்சமே கொஞ்சம் சோகமாக!!
வாங்கப்பா முல்லை.
நானும் அம்மாவீட்டுக்குப் போய் வந்து இருக்கிறேன்.
மனம் என்வீடு திரும்புவதிலியே இருக்கும்.
அம்மாவிடமிருந்து அடுத்த நாள் கண்டிப்பாக ஒரு போஸ்ட் கார்ட் வரும். குழந்தைகளைப் பார்த்துக்கோ.
வேளைக்குச் சாப்பிடு.
பெரியவனுக்கு டானிக் கொடு. என்று .
கடைசி வரி தயங்கித் தயங்கி தன் வீட்டு வெறுமையைச் சுட்டிக் காட்டும்:))
இந்தியாவுக்கு போகும்போது ஒரே குஷியாய் இருக்கும். திரும்பி வரும்போது ....
சந்தனமுல்லை said...
//உங்கள் நம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது! :-) இடுகை ஒரு கவிதை மாதிரி இருந்தது....//
எனக்கும் அப்படியே.
எனக்கும் கவிதை எழுத வருதுன்னு சொல்றீங்க. சரிப்பா. இந்த முத்துச்சரத்தைக்
கழுத்தில் போட்டுக் கொள்ளுகிறேன்.
நன்றி ராமலக்ஷ்மி.
வாங்கப்பா சின்ன அம்மிணி.
இரண்டு மனம் வேணுனு பாட்டு. ஆனால் பெண்களுக்கு இரண்டு உடல்கள் இருந்தால் சரிப்படுமோ!!!
//அவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்!!
மீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)//
முத்திரை வாக்கியம்.
//சின்ன அம்மிணி said...
இந்தியாவுக்கு போகும்போது ஒரே குஷியாய் இருக்கும். திரும்பி வரும்போது ....//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!
விமான நிலையத்தில் இறங்கி நடந்த போது நினைத்திருந்த தருணங்கள் ரிப்ளை ஆகிக்கொண்டிருக்கும் ஏறி உக்காந்திருக்கும்போது.....! :(
\\அவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்!!
மீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)
\\
கண்டிப்பாக..! ;)
வரணும் கோபி.
வசந்தம் வரணும். இந்த வெய்யிலை யார் தாங்குவது:)
ம்ம்ம்! இன்னும் பத்து நாள் கழிச்சு நானும் இப்படி.... தயார் படுத்திக்கிறேன்!
தம்பி வாசுதேவனுக்கு ,
யார் கிளம்பிப் போகிறார்கள். பெண்ணா,பிள்ளையா.
சரியாகி விடும். அதான் வெப்காம், ஸ்கைப் எல்லாம் இருக்கே.
கவலை வேண்டாம்.
// யார் கிளம்பிப் போகிறார்கள். பெண்ணா,பிள்ளையா.//
பையன் நாட்டுப்பெண், பேத்தி.
// சரியாகி விடும். அதான் வெப்காம், ஸ்கைப் எல்லாம் இருக்கே.
கவலை வேண்டாம்.//
கிராமத்திலே அந்த வசதி எல்லாம் கிடையாது. :-))
// மீண்டும் ஒரு வசநதம் வரும் காத்திருப்போம்.//
நானும் அப்படித்தான் காத்திருக்கிறேன்.
கவலையை போக்கும் மருந்து, வெப்காம்,ஸ்கைப்த்தான்.
ஓ. அட ராமா.
கிராமமா:))??
சரியாப் போச்சு.
நான் கணினி யுகத்தில்
இது இல்லாத இடங்களே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்!!
சென்னையிலிருந்து வாங்கிப் போய்ப் போட்டுக்கொள்ள முடியாதா.
வாங்கப்பா கோமதி.
நம்ம ஊரு பூராவும் இப்படித்தான் இருக்கு என்று நினைக்கிறேன்.
கணினி இல்லாம இல்லை, இணையம்தான் இல்லை!
நம்ம கேஸ் கொஞ்சம் வித்யாசமானது. அயல்நாட்டில்ருந்து விடை பெரும்போது மறுமகள் கண்ணில் கண்ணீர் மகன் முகத்திலெந்த பாதிப்பும் தெரியவில்லை.
தி.ரா.ச,
மறுமகளுக்குத் தானே மாமியாரின் அருமை தெரியும். அதுவும் இப்போது குழந்தை பிறந்து,அருமையாகப் பார்த்துக்கொண்ட மாமியும் மாமனும் கிளம்பும்போது வருத்தமாகத்தான் இருக்கும் .பாவம்.
Post a Comment