Blog Archive

Tuesday, August 04, 2009

உங்கள் எழுத்து சுவாரஸ்யமானது



வலையில் வலம் வந்து கொண்டிருக்கும் எண்ணில்லாத விருதுகள்,
வலைத்தளம் எவ்வளவு மாறிவிட்டது என்று பறை சாற்றுகிறது.
 
முன்பு விளையாடிய,ஆறு,எட்டு,பத்து எண்கள் தொடர் ஒரு பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி நம்மை,
நாமே சுய சிந்தனைக்குள் மூழ்க வைத்துக் கொண்டு அலசி எடுத்த சில பார்வைகளை,
மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுத்தோம்.
இப்போது பல இளைஞர்களும்,கணினித் துறை சேர்ந்த தேர்ந்த எழுத்தாளர்களும்
தமிழ்மணத்தில் சூறவளி வேகத்தில் எண்ணங்களையும், தொழில் நுட்பங்களையும் பகிர்ந்து கொடு வருகிறார்கள்,
கவிநயா எனக்கு அன்புடன் வழங்கிய இந்த சுவாரஸ்யம் மிகுந்த விருதை எனக்குத் தெரிந்த சில என்னை விட சுவாரஸ்யமாக படைப்புகளை அளித்து வரும்
சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
 
 
உஷா ராமச்சந்திரன்....நுனிப்புல் பதிவு
**********************************************************
நல்ல தெளிவான சிந்தனைக்கு உரியவர்.
சமுதாய நலனில்,அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில்
மிகவும் கவனம் வைத்து எழுதுபவர்.
***********************************************************

மதுமிதா.
******************
காற்றுவெளிக்குச் சொந்தமானவர். கவிதாயினி,சமூகப் பொறுப்பு மிக்கவர்.
பல தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து சேவை செய்பவர்.
நல்ல எழுத்துக்கும் , பல புத்தககங்களை வெளியிட்ட பெருமைக்கும் உரியவர்.
****************************************************************************

ஒலிக்கும் கணங்களுக்குச் சொந்தமான நிர்மலா.

***************************************************************************
மிகத் திறமைசாலி.முற்போக்குச் சிந்தனையாளர்.
நல்ல படிப்பாளி.
பதிவுலகில் மீண்டும் அவர் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்
என்பதே என் ஆவல்.

அருணா ஸ்ரீனிவாசன்
*********************************

அலைகள் தளத்துக்குச் சொந்தமானவர்.
பொருளாதாரத்தில் பெரிய அளவில் படித்தவர்.
இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்பவர். அடக்கம் அவரது முதல் பண்பு. அவருக்கும் இந்த விருது
மிகப் பொருந்தும்.
**************************************************************

துளசி கோபால்.

**************************
துளசிதளத்துக்குச் சொந்தக்காரர்.
இவருக்கு எல்லாம் அறிமுகம் தர நமக்கு ஞானம் போதாது.
வலையுலக வரலாற்று ஆசிரியை.
தொடாத சப்ஜெக்ட் கிடையாது.
தெரியாத விஷயம் கிடையாது.
இவரைவிடச் சுவாரஸ்யமானவர் யாரும் இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றும்.

ஆறாவதாக நான் விருது கொடுக்க நினைப்பவர் நானானி.

***************************************************************************************
நைன்வெஸ்ட் தளத்துக்குச் சொந்தக்காரர்.
யாராவது இவருக்கு இதற்குள் இந்த விருதை அளித்திருப்பார்கள்.
இருந்தாலும் நானும் பகிர்ந்து கொண்டேன் என்கிற பெருமை வேண்டுமே.:)
சகலகலாவல்லியான நானானிக்கும் இந்த விருதைப்
பங்கிட்டுக் கொள்கிறேன்.
நீங்களும் உங்களுக்குச் சுவாரஸ்யமாகப் படும் ஆறு நபர்களுடன் விருதுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற'வேண்டுகோளோடு
என் நீண்ட பதிவை முடித்துக் கொள்கிறேன்:)
 





எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

22 comments:

துளசி கோபால் said...

விருதுக்கு ரொம்ப நன்றிப்பா.

ஏற்கெனவே மூணு பேர் கொடுத்துருக்காங்க. இப்போ நாலாவதா நீங்க.

கட்டாயம் எழுதத்தான் வேணும். 'வீண்டும் சில வீட்டுக் கார்யங்கள்' வந்துருச்சுன்னுக் கொஞ்சம் தள்ளிப்போட்டுக்கிட்டே இருக்கேன் . இன்னும் ஆறுபேர் கொடுத்துட்டா........கணக்குச் சரியாயிரும்.

ஆமாம்.....இப்படி ஒவ்வொருத்தரும் பெரிய லிஸ்ட்டா எடுத்துக்கிட்டா.........எப்படி?

கலைமாமணி ரேஞ்சுக்குப் போயிருச்சேப்பா இதெல்லாம்:-)

என்னையும் ஒரு பொருட்டாக நினைச்சு விருது வழங்கிய நண்பர்களுக்கு இப்போ இந்த நிமிஷம் நாச்சியார் மூலம் நன்றி சொல்லிக்கறேன்.

கோமதி அரசு said...

வாழ்க வளமுடன்,வல்லி.

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம்
இருந்து விருது பெற்ற எல்லோருக்கும்,
என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

உங்களுக்கும்...உங்களிடம் இருத்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))

Anonymous said...

விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஷைலஜா said...

விருது பெற்ற வல்லிமாக்கும் . வல்லிமா கையால இங்கே விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

துளசிமா,
சீக்கிரம் எழுதுங்கோ.
எப்படி உங்க எழுத்தைப் படிக்காமல் இருக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

கோமதி அரசு, நான் விருது கொடுக்க நினைத்தவர்களுள் நீங்களும் பின் வரும் மூவரும் அடக்கம்.
ஆறு என்று குறிப்பிட்டதால்
சிறிதாகிவிட்டது லிஸ்ட். நன்றி.மா

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சின்ன அம்மிணி.

சுவாரஸ்யமும் பிரபலமும் பணிவும் சேர்ந்தவர்கள் நீங்களும்,கோபியும்,ஷைல்ஸும்.

தெமேன்னு ஒரு பத்து பேருக்குக் கொடுத்திருக்கலாமோ.!!நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க ஷைல்ஸ்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிந்த மாதிரி எனக்கும் விருது கொடுத்துவிட்டார்கள்:)
நானும் தெரிந்த ஆறு பேரைக் கைகாட்டிவிட்டேன்.

அரங்க பக்தி ரத்னா விருது ஏற்பாடு செய்து,ம்ம் நல்ல யோசனை:)
நன்றிம்மா.

நானானி said...

thank U so much'pa! for awarding me. i am the one who scribbling the thoughts which are running in my mind, for which this is romba tooo much'pa!
once again thank U for remembering me.

if it goes like this not only 'kalaimamani' soon i expect a 'padmasri', bharatrathna' too!!!

நானானி said...

thank U so much'pa! for awarding me. i am the one who scribbling the thoughts which are running in my mind, for which this is romba tooo much'pa!
once again thank U for remembering me.

if it goes like this not only 'kalaimamani' soon i expect a 'padmasri', bharatrathna' too!!!

ராமலக்ஷ்மி said...

விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ராமலக்ஷ்மி.

சுவாரஸ்யம்தானான்னு இனியும் நிருபிக்கணும்.:)
நன்றி தென்றல்.

நீங்க எல்லாரும் எழுதுவதைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
இனிமே ல் இன்னும் முயற்சி எடுத்து எழுதுகிறேன்:)

Kavinaya said...

ஸாரி அம்மா. இப்பதான் பார்த்தேன். உங்களுக்கும், உங்களிடமிருந்ந்து விருது பெற்றவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா.

என்னப்பா இதில ஸாரி சொல்ல ஒண்ணுமில்ல. சங்கடம் வேண்டாம்.
நான் சொன்னவங்கள்ள யாருக்குமே நேரம் இல்ல எழுத.:)
இன்னும் நாலு பேருக்குச் சிபாரிசு செய்யலாமான்னு பார்த்துக் கொண்டு இருக்கேன்!!!

மதுமிதா said...

விருதுக்கு நன்றி வல்லிம்மா. சுவாரஸ்யமான வலைப்பதிவுன்னு சொன்னதுக்கு:) நிஜமாவே சுவாரஸ்யமா இருக்கா என்ன:)

ஆமா ப்ரொபஷனல் வலைப்பதிவுன்னு இருக்கே அது என்ன?

ம‌ன்னிக்க‌ணும். இப்போதான் இதைப் பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மதுமிதா,
இது போன மாதம் ஒருத்தொருக்கு ஒருத்தர், சுவாரஸ்யமா எழுதறவங்களுக்குக் கொடுத்துக் கொண்ட விருது.
அந்த இண்டரஸ்டிங் அவார்ட்
படத்தை உங்கப் பதிவில் போட்டுக் கொள்ளவும்:)
பிறகு இன்னும் ஆறு பேருக்கு அதைக் கொடுக்கலாம். உங்க இஷ்டம்.
கடைசியா என்னைத் தேடி வந்தது. கவிநயா கொடுத்தாங்க. அட்குக்குள்ள எனக்குத் தெரிந்தவங்களேல்லாரும் இரண்டு மூன்று !! அவார்ட் வாங்கி வைத்துக் கொண்டுவிட்டார்கள்:)

Anonymous said...

எங்க புடிச்சீங்க அந்த கார்டூனை?!!! :) யாரோ க்ரியேடிவா எடிட் பண்ணிருக்காங்க போல இருக்கு!? :)

ரசித்தேன்! :)

வல்லிசிம்ஹன் said...

மதுரா, வேற எங்க பிடிக்கறது. எல்லாம் வலை வீசினா மாட்ற மீன்கள் கூகிள் ஆண்டவர் கோடிக்கணக்கா வச்சு இருக்காரே:)

மதுமிதா said...

விருதுக்கு நன்றி வல்லிம்மா. தாமதத்துக்கு மன்னிச்சுக்கோங்க.

http://madhumithaa.blogspot.com/2009/09/2.html

மதுமிதா said...

விருதுக்கு நன்றி வல்லிம்மா. தாமதத்துக்கு மன்னிச்சுக்கோங்க.

http://madhumithaa.blogspot.com/2009/09/2.html