Showing posts with label கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020. Show all posts
Showing posts with label கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020. Show all posts

Monday, January 06, 2020

கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும்   வளமாக  வாழ வேண்டும் .

கோதையின் திருப்பாவை  21  ஏற்ற கலங்கள் 

Image result for krishnas cows

கோவிந்தனின் பசுக்கள் . 
அவைகளை ஒத்த ஆச்சார்ய  வள்ளல்கள் .

இருபத்தி ஓராவது  பாஸுரம் 
ஆண்டாள் அருளிச்செய்தது.

// ஏற்ற கலங்கள்  எதிர்பொங்கி மீதளிப்ப 
மாற் றாதே பால் சொரியும் வள்ளல்   பெரும்பசுக்கள் 
ஆற்றப்  படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்றம்  உடையாய்  பெரியாய் உலகினில் 

தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் 
மாற்றார் உனக்கு வலி  தொலைந்துன்  வாசலில் 
ஆற்றாது வந்து உன் அடிபணியுமாப்போலே 
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.//
+++++++++++++++++++++++++++++++++++
ஆயிரம் ஆயிரம் பசுக்களைக் கொண்ட நந்த கோபனின் 
பசுக்கள், கண்ணன் கரம் பட்டு ,நிற்காமல் 
பால் சொரிகிறதாம்.
அவைகளை வாங்கி கொள்ளும் கலங்கள் 
பொங்கி வழிய வழிய  வள்ளலாக வழங்கும் 
அந்தப் பசுக்கள் போலத்தான் நம் ஆச்சார்யர்களும் 
தங்கள் உபதேசங்களை சொல்லிக் கொண்டிருப்பார்களாம்.
சுகாச்சாரியார் பாகவதம் சொன்னது போல்,
வால் மீகி ராமாயணம் சொன்னது போல,வேதவியாசர் மஹாபாரதம் வழங்கியதை 
போல, பின் வந்த ஆழ்வார் பெருமக்கள்  திவ்யப் பிரபந்தங்களை 
அருளியது போல என்று உவமை சொல்கிறாள்.

இதற்கெல்லாம் காரணமாய் நின்றவனே நீதானே 
கண்ணா.

நீ சொன்ன உபதேசங்களை காதில் வாங்காமல் அபசாரம் செய்பவர்கள் 
தானே உணர்ந்து, உன் வாசல் அடைந்து உன் அடிபணிந்து உன் அருளை 
வேண்டுவது போல,
உன்னைப் போற்றி நாங்கள் வந்திருக்கிறோம். எங் களைக் கைதூக்கிவிடுவாய் என்று பணிந்து நிற்கிறாள்.

ஸ்ரீஆண்டாளின்  பணிவும், கண்ணனின் மேன்மையும் நம்மைக் காக்கட்டும்.





பழைய கதை. முதல் கொலு.

வல்லிசிம்ஹன் 1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம்.  இப்போதைய பெரியவர்கள் அப்போது சின்னப் பசங்க:) நவராத்திரி நாட்கள் வந்தன. மகளுக்கு மா...