வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள்
கோவிந்தனின் பசுக்கள் .
அவைகளை ஒத்த ஆச்சார்ய வள்ளல்கள் .
இருபத்தி ஓராவது பாஸுரம்
ஆண்டாள் அருளிச்செய்தது.
// ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற் றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசலில்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமாப்போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.//
+++++++++++++++++++++++++++++++++++
ஆயிரம் ஆயிரம் பசுக்களைக் கொண்ட நந்த கோபனின்
பசுக்கள், கண்ணன் கரம் பட்டு ,நிற்காமல்
பால் சொரிகிறதாம்.
அவைகளை வாங்கி கொள்ளும் கலங்கள்
பொங்கி வழிய வழிய வள்ளலாக வழங்கும்
அந்தப் பசுக்கள் போலத்தான் நம் ஆச்சார்யர்களும்
தங்கள் உபதேசங்களை சொல்லிக் கொண்டிருப்பார்களாம்.
சுகாச்சாரியார் பாகவதம் சொன்னது போல்,
வால் மீகி ராமாயணம் சொன்னது போல,வேதவியாசர் மஹாபாரதம் வழங்கியதை
போல, பின் வந்த ஆழ்வார் பெருமக்கள் திவ்யப் பிரபந்தங்களை
அருளியது போல என்று உவமை சொல்கிறாள்.
இதற்கெல்லாம் காரணமாய் நின்றவனே நீதானே
கண்ணா.
நீ சொன்ன உபதேசங்களை காதில் வாங்காமல் அபசாரம் செய்பவர்கள்
தானே உணர்ந்து, உன் வாசல் அடைந்து உன் அடிபணிந்து உன் அருளை
வேண்டுவது போல,
உன்னைப் போற்றி நாங்கள் வந்திருக்கிறோம். எங் களைக் கைதூக்கிவிடுவாய் என்று பணிந்து நிற்கிறாள்.
ஸ்ரீஆண்டாளின் பணிவும், கண்ணனின் மேன்மையும் நம்மைக் காக்கட்டும்.

10 comments:
படித்தேன், கேட்டேன், ரசித்தேன்.
தெள்ளத்தெளிவான கருத்துரை. படம் மிக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
வள்ளல் பெரும் பசுக்கள்...
கோதையின் தமிழ் பரமானந்தம்...
ஆண்டாள் திருவடிகள் போற்றி...
//உன்னைப் போற்றி நாங்கள் வந்திருக்கிறோம். எங் களைக் கைதூக்கிவிடுவாய் என்று பணிந்து நிற்கிறாள்.//
அவரை தவிர நம்மை கைதூக்கி விடுவோர் யார்?
ஸ்ரீஆண்டாளின் பணிவும், கண்ணனின் மேன்மையும் நம்மைக் காக்கட்டும்.
பணிவே துணை கண்ணனை அடைய.
அருமையான விளக்கம்.
மிக மிக நன்றி ஸ்ரீராம். இனிய மாலை வணக்கம்.
அன்பு கீதாமா,
கண்ணன் அழகு ,மார்கழி அழகு,ஆண்டாளின் பாவை அழகு
வேறென்ன வேண்டும்.
எழுதத் தெரியாதவர்கள் கூட எழுதி விடுவார்கள்.
நன்றி மா.
அன்பு துரை ,
இனிய மாலை வணக்கம்.
கடுந்தமிழ் இல்லாமல்,பழகிய தமிழில்
எனக்கும் கூடப் புரிந்த மாதிரி இருக்கிறது.
உள்ளே எத்தனையோ கவித்துவம் நிறைந்த பாடல்கள்.
பக்தி மட்டுமே கண்ணில் படுகிறது.
நீங்கள் எல்லாம் வந்து படிப்பதும் ஒரு
உற்சாகம் தான்.நன்றி மா.
அன்பு கோமதி மா.,
பெரியாழ்வார் பெற்றெடுக்காவிட்டாலும் வளர்த்த
குழந்தை. பணிவதிலே உள்ள அனுபவம்
அவளுக்குத் தான் தெரியும். நீங்களும் அதை ரசித்தது
தான் அருமை. நன்றி மா.
மிகவும் அருமையான பாசுரம்.
கேட்டும், படித்தும் இரசித்தேன் மா...
தொடரட்டும் மார்கழியில் பாசுர அமுதம்.
உண்மைதான் அன்பு.வெங்கட். அவள் கருணையில் தொடரட்டும்.
Post a Comment