ஸ்ரீரங்கமன்னார் கோதையோடு ஆண்டுகொண்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்ததும் இன்னும் வளம் நிறைந்தது.
குடும்பம் கொஞ்சம் விரிந்தது.சுற்றங்கள் வந்து போகும் இடம் ஆனது.
ஆண்டாளைச் சேவிக்க வருகிறவர்கள் ராத்தங்கல் என்று சிரம பரிகாரம் செய்து கொள்ளும் இல்லமானதும் ஒரு அதிர்ஷ்டமே.
பெரியவர்கள் பெருமாள் கதை பேச அம்மமவும் அப்பாவும் அவர்களை உபசாரம் செய்து,வசதிகள் செய்து கொடுப்பது பார்க்க அருமையாக இருக்கும்.
வீட்டில் இரண்டு கிணறு இருக்கும்.
சமையலறை முற்றத்தில் ஒன்று.
கொல்லைப்புறம் போகும்தோட்ட வழியில் ஒன்று. இரண்டிலும் எட்ட்ட்ட்டிப் பார்த்தால் தான் தண்ணீர் தெரியும்:))
இராமனாதபுரம் ஜில்லா தண்ணீர்ப் பஞ்சத்துக்குப் பேர் வைத்துக்கொண்டிருந்த காலம்.
இருந்தும் அந்த ஊர் மனிதர்களுக்கு ஆண்டாள் ஒருத்தி போதும்.
தங்கள் வீட்டுப் பெண்ணாக ஒரு உற்சவம் விடாமல் கோவிலி திரண்டு வந்து, பூ தொடுத்து, பபட்டுப் பபடி,கோலாட்டம் ஆடி. அந்த அழகான் கம்பீரமானத் தேரை இழுத்து அதை தேர்நிலைக்குக் கொண்டுவர அத்தனை பாடுபடுவார்கள்.
அந்தத் தேருக்கோ எல்லா இடத்திலும் நின்று எல்லாரையும் பார்த்து ஆனந்தப் பட்டு அப்பப்போ நின்று விடும்.
அப்படி எங்க வீட்டு வாசலிலும் ஒரு தடவை நின்று விட்டது:)
அப்பா அம்மா இருவர் கைகளிலும் தேர் வடங்கள் போட, அளித்த அன்புத் தடங்கள் வெகு நாட்களுக்கு இருந்தது.
நான் சொல்வது 55 வருடங்களுக்கு முந்தின கதை.
அப்புறம் டி.வி.எஸ் கம்பனி ஏற்பாட்டில் நல்ல விதமாகத் தேர் ஓடுவதாகக் கேள்விப்பட்டேன்.
இருந்தாலும் தேர் எங்க வீட்டு வாசலில் நின்ற அந்த நாட்கள் அமிர்தமானவை.
காலயில் எழுந்ததும் பல் கூடத் தேய்க்காமல், ஓடி வந்து வாசலில், அத்தனாம் உயர்த்தில் ஆடிக் கொண்டிருக்கும் தொம்பைகளையும், மகா பெரிய தேர்ச் சாக்கரங்களையும்
அதில் பதிந்திருக்கும் அழகிய சிற்பங்களையும், கம்பீரக் குதிரைகளையும், தள்ளி நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டுக்குள் போய் விடுவோம்.
வோம் என்றால் என் முதல் வகுப்பு, பக்கத்து வீட்டுத் தோழிகள் இந்திரா,செல்லி,கமலி இவர்கள்தான்.
பிறகுதான் வேடிக்கை. இப்போது மாதிரி 8 மணி பெல் அடிக்கும் வழக்கம் அப்போது ஏது.?
ஏதாவது சாப்பிட்டுவிட்டு ஒரு ஸ்லேட் ஒரு சிலேட்டுக் குச்சி எடுத்துக் கொண்டு தேரில் ஏறி விளையாட வேண்டியதுதான்.
தேர் நின்ன உடனே ஆண்டாளும் ரங்க மன்னாரும் அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. (கொஞ்சமா நஞ்சமா இரண்டு பேருடைய நகையும்!) அதனால் எங்கள் விளையாட்டைத் தடுப்பவர்கள் யாரும் இல்லை.
அப்பபவுக்குத் தலமை குமாஸ்தாவாகப் பொறுப்புக் கொடுத்துத்
திருமங்கலம் என்ற தாலுகாவுக்கு ( டவுன்)மாற்றினார்கள்.
அங்கு கஸ்தூரிபாய் ஆதாரப் பள்ளியில் ஆண்டாளுக்கும் அவள் தம்பி ஸ்ரீனிவாசனுக்கும் ஒரே மாதிரி மூன்றாம் வகுப்பில் சீட் கொடுத்ததால் ,(பின்னே! உலகே மாயம் பாட்டு, துன்பம் நேர்கையில் யாழெடுத்து பாட்டு எல்லாம் கரதலைப் பாடமாகப் பாடத்தெரிந்த பெண்ணுக்கு,
உயிரெழுத்து 12 சொல்லத்தெரியவில்லை..
பெரிய மிஸ்ஸைப் பார்த்துப் பயம்) ஆண்டாள் யாருக்கும் தெரியாமல் மதியம் வீட்டுக்கு வந்தாச்சு.:))
27 comments:
இன்பச்சுவை பெருக்கும் இனிய கதையை இன்னுறச் சொல்லி எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள் அம்மா!
எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
படங்களும் வெகு அருமை!
நினைத்துப் பார்க்கிறீங்களா? :) திருவில்லிபுத்தூர் என்றால் ஆண்டாள்தான். அடுத்தது பால்கோவா.
திருவில்லிபுத்தூரைப் பத்திச் சொல்லும் போது பக்கத்துல இருக்கும் திருவண்ணாமலை பத்தியும் சொல்லுங்க.
(I will comment tomorrow)
பெரிய மிஸ்ஸைப் பார்த்துப் பயம்) ஆண்டாள் யாருக்கும் தெரியாமல் மதியம் வீட்டுக்கு வந்தாச்சு.:))
ஆஹா நம்ப சிங்கம் கேட்டவுடன் சந்தோஷப்பட்டிருப்பாரே!நம்மை கதிகலங்கிக் கொண்டிருக்கும் ஆண்டாளயையே பயமுறுத்தின ஆளாஎன்று?
அருமை...அருமை ;))
\\பின்னே! உலகே மாயம் பாட்டு, துன்பம் நேர்கையில் யாழெடுத்து பாட்டு எல்லாம் கரதலைப் பாடமாகப் பாடத்தெரிந்த பெண்ணுக்கு,
உயிரெழுத்து 12 சொல்லத்தெரியவில்லை..
பெரிய மிஸ்ஸைப் பார்த்துப் பயம்) ஆண்டாள் யாருக்கும் தெரியாமல் மதியம் வீட்டுக்கு வந்தாச்சு.:))\\
ஆஹா...வீட்டுக்கு வந்த பிறகு என்ன ஆச்சு..மிகுந்த ஆவலுடன் வெயிட்டிங் ;)
அல்லல் தீர்க்க மாட்டாயா.......கண்ணேஏஏஏஏஏஏஏஏஏஏ
ஆடிக் காட்ட மாட்டாயா? :-)))))
ஹை தேரு வருதே.....
நான் இதுவ்வரை தேருலே ஏறுனதே இல்லை.
அப்ப அதுலே பள்ளிக்கூடம்ன்னா தேர் ஜோர்!
திருமங்கலம்தான் நம்ம கல்விக் கண்ணைத்திறந்த ஊர்.
கொஞ்சம் பிந்திப்போச்சு பூமிக்கு வர(-:
//துன்பம் நேர்கையில் யாழெடுத்து பாட்டு எல்லாம் கரதலைப் பாடமாகப் பாடத்தெரிந்த பெண்ணுக்கு,
உயிரெழுத்து 12 சொல்லத் தெரியவில்லை//
இது ரொம்ப அநியாயம் வல்லியம்மா!
உயிரெழுத்து 12 சொல்லத் தெரியவில்லைன்னாலும் உயிரெழுத்து மொத்தம் 12 ன்னு தெரிஞ்சிருக்குல்ல! போதாதா? :-))
அப்பறம் அந்தக் கோயில் படத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்! கோபுரம் இல்லாமல் வெறும் மண்டபம் மாதிரி இருக்கே! ஏன்?
தேரில் வந்த முருகனும் வள்ளியும்,
நேரில் வீட்டுக்கு வராமல் போனது கொஞ்சம் சோகம்தான்.:)
அடுத்த தடவை பார்க்கலாம்.
இன்னும் சுவை படச் சொல்லலாம். தாமிரபரணித் தண்ணீருக்கு அப்புறம் வேறு நீரும் உடலில் கலந்ததால் சில சமயம் சில விஷயங்கள் விட்டுப் போகிறது.:)
நன்றி வி எஸ்கே சார்.
வரணும் ராகவன். திருவண்ணாமலை ஸ்ரீனிவாசர் கோவிலுக்கு மாட்டு வண்டி பூட்டிப் போன நினைவு இருக்கிறது.
அழகிய குளம் நினைவு இருக்கிறது. புளியோதரை,வடகம் ,குடத்துட் தண்ண்ணீர் என்று உணவும் நினைவு இருக்கிறது.
பால்கோவா, தென்காசித்துண்டு,தாழம்பூ,ஊஞ்சல் கூடம்,பராசக்தி பார்த்து அழுதது ,கடலை மிட்டாய்
எல்லாம் நினைவு இருக்கிறது.
ஆறு வயதுக்கு அவ்வளவுதான் மெமரி பவர் என்று நினைக்கிறேன்.:)))
நன்றிம்மா.
தான்க் யூ சாமான்யன்.
see you tomorrow!
சிங்கத்துக்கு என் பயம் பலம் எல்லாம் தெரியும். அதனால்தான் அவர் சிங்கமா இருக்கிறார்.
நான் வெறும் ஊசிப்பட்டாசு.
சத்தம் மட்டுமே:)))
அதனால் அவரை இம்ப்ரஸ் செய்யணும்னால் இமயமலையில் ஏறினால் ஒரு வேளை:)))
பெயர் சொல்லாமல் பின்னூட்டமா! வரணும் தி.ரா.சா. முன் இருக்கும் பின்னூட்டம் உங்களுக்குத் தான்.
:)))
கோபி நாத். எங்க அம்மா ரொம்ப இனிமையான மனுஷிதான்,.
கோபம் ,அதுவும் நியாயமான கோபம் வந்தால் முதுகு பழுக்கும்:))
ஆமாம், துளசி ஐந்து வர்உடங்கள் முன்னால வந்திருந்தால் நாம ரெண்டு பேரும் லூட்டி அடித்திருக்கலாம்.
ஸ்ரிவில்லிபுத்தூர் போகலையாப்பா இன்னும்?
தேர் பார்க்கவேண்டிய ஒண்ணு.
அந்தக் கம்பீரம்,ஆஹா என் மேல ஆண்டாள் வருகிறாள் அப்படீனு சொல்றமாதிரி உயிர் உள்ள தேர்.
உயிரெழுத்து 12 னு நான் சொல்லலை!!
ரவி !! 13னு சொன்னேன்:)
அக்கன்னா என்ன பாவம் பண்ணித்துன்னு என் விவாதம்:))
அதனால் அடிப்படை கருத்து வேறுபாடு எனக்கும் தமிழ் வாத்தியாருக்கும்:))
நன்றிம்மா.
ரவி, அது எங்க திருக்குறுங்குடி கோவில்.
அழகிய நம்பி உறைவிடம்.
ஒரு வழியா திருமங்கலம் வந்தாச்சு, பள்ளிக்கூடத்தில் அட்டகாசம் ஆரம்பமாயாச்சி!! நடக்கட்டும். நடக்கட்டும். :))
//பாடத்தெரிந்த பெண்ணுக்கு,
உயிரெழுத்து 12 சொல்லத்தெரியவில்லை..
பெரிய மிஸ்ஸைப் பார்த்துப் பயம்//
hahaaaa :)
மிஸ் உங்களை பாத்து பயப்படாம இருந்தா சரி தான்!
தேர் போல கதை நிக்க வேண்டாம், மேலே நகரட்டும். :))
கொத்ஸ்,
அது எலிமெண்டரி ஸ்கூல்!!!
கையில் ஸ்கேல் வைத்த டீச்சர்கள்.
ஏதாவது ஆட்டம் என்றால் வெளியில் வந்த பிறகுதான்.
ஒரு நாலு அடி உயரக் குழந்தைக்கு ஆறடி உயர, பெர்ர்ர்ர்ர்ர்ரீஈஈஈஈய்ய்ய்ய டீச்சரைப் பார்த்தால்
கொஞ்சம் பயம் வரத்ததன்பா செய்யும்:)
அம்பி, இதோ படங்கள் கிடைத்ததும் தேரை நகர்த்த வேண்டியதுதான்.
நானும் ஆண்டாள் உற்சவங்களை பார்த்திருக்கேன். அடா, ரொம்ப நாஸ்டாலஜிக்கா பீல் பண்ண வச்சுட்டீங்க...
கொஞ்சம், கொஞ்சமா மதுரையை நெருங்கி வருகிறீர்கள் வாங்க. வாங்க. :-)
திருமங்கலம் - ‘79.
ஆமாம். சரியாக 25 வருடங்கள் கழித்து, நானும் ‘கஸ்தூரிபாய் காந்தி ஆரம்பப்பள்ளி'-யில் தான் முதல் வகுப்பில் சேர்ந்தேன். PKN பள்ளியில் தான் 6ம் வகுப்பு முதல் +2 வரை.
மேலும் உங்கள் பதிவுகளைப் படிக்க ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன்,
சௌந்தர்.
நன்றி மௌலி. மதுரையை நாம் பிரிய முடியுமா.
எழுத்தால் அருகில் போகலாம்.
மனசை விட்டு மதுரை நீங்கவில்லை.
வாங்க சௌந்தர்.
என்ன ஒரு அதிசயம்!!
இன்னும் ஒருத்தர் வலை உலகில் அதே பள்ளியில் படித்து இருக்கிறார்
என்றால் அதிசயமாக இருக்கிறது.
நநன் படிக்கும்போதே மிகவும் சிதிலமான நிலையில் இருந்தது.
ஒருவேளை நல்ல கட்டிடமாகச் செப்பனிட்டு இருக்கிறார்களோ.
பிகேஎன் பள்ளியில் என் தம்பி படித்தான்.
அப்போதுதான் அந்த இடத்துக்குப் புதூர் என்று பெயர் கூட வைத்தார்கள்:))
சிவாஜி கணேசன் ஒரு தடவை அங்கே வந்தார்!!
நன்றி.
நல்லா இருக்கு வல்லி, உங்க அனுபவம், என்னோடது எப்படின்னா, நான் பிடிவாதமா 2-ம் வகுப்பிலே படிக்கிற என்னோட அக்கா(பெரியப்பா பெண்) வகுப்பிலேயோ அல்லது, 5-ம் வகுப்பு படிச்ச என்னோட அண்ணா வகுப்பிலேயோ உட்காருவேன்னு அடம் பிடிச்சதாச் சொல்லுவாங்க. கடைசியில் என்னோட பெரியப்பா பெண்தான் எனக்காக முதல் வகுப்பிலே மீண்டும் வரவேண்டியதாப் போச்சு! :))))))))
ஹா ஹா:)) கீதா!!! இது!!!
அய்யோ பாவம் உங்க அக்கா.
ரொம்ப நல்லா இருக்கே இந்த அடம்;))
pkn schools in thirumangalam celebrate their 100years on jan 23,24-2010. plz all old students participate! contact kidcha@gmail.com
Post a Comment