Follow by Email

Saturday, June 25, 2011

கண்ணதாசனும் நம் வாழ்க்கையும்


கவிஞர் கண்ணதாசனின் பாடல்களும்   நம் வாழ்க்கையோடு  எவ்வாறு  இழைந்து வந்தன என்று  யோசிக்கப் போகும்போது தான், எத்தனை சுமைகளை நம் மனதிருந்து இறக்கி வைத்திருக்கிறார் அவர் என்னும் உண்மை புலப்படுகிறது.


அப்போது வந்த படங்களும் அப்படி. அரிவாள்,கத்தி,சுவிட்சர்லாந்த், ,நியூசிலாந்த்  என்ற   லோகேஷனுக்காக எழுதப் படும் பாடல்களாக இல்லை.

எங்கள் பள்ளி நாட்களில் சீனப் போர் வந்தது.

அதற்காக யார் யார் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்தோம்.
 அப்போது வந்த படம்   சிவாஜி கணேசனும் சாவித்திரி அம்மாவும் சேர்ந்து நடித்த 'ரத்தத் திலகம்'
நாயக நாயகி காதல் நிறைவேறாமல் போனாலும் அமரத்துவம் பெறுகிறது படத்தின் இறுதியில்.
அதில் பலபாடல்கள் கண்ணதாசனின் முத்திரைப் பாடல்கள். 
மிகப் பிடித்தது.
பனிபடர்ந்த மலையின் மேலே   படுத்திருந்தேன்' என்று ஆரம்பிக்கும் உணர்ச்சி பூர்வமான பாடல்.பாடலின் கடைசி வரிகளாகக் கதாநாயகன், போரில் வாடிய இந்தியத்தாயின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக 
'' வீரர் உண்டு,
தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும்  மானம் உண்டு.
தானம் உண்டு   தர்மம் உண்டு.
தர்மம்  மிக்க தலைவன் உண்டு'
 ***********
''அன்னை சிரித்தாள்
அடடா  ஒ!  அச்சிரிப்பில்  
முன்னைத் தமிழ்மணமே 
முகிழ்தேழுந்து
நினறதம்மா' என்று முடியும்.
இதைக் கேட்டு அழாத  நெஞ்சங்கள் எங்கள் பள்ளியில் இல்லை. 
நாங்களே போர்முனைக்குச் சென்ற   உணர்ச்சிதான்  மிகுந்திருந்தது.

கவிஞரே என்பைத்தைத்து
  வயதுதானே ஆகிறது. . இன்னும் இருந்து எங்களைத் தேன் அருந்த
  விட்டு இருக்கலாமே.
ஆனால் இப்போதிருந்தால்
இந்நிலைமையே உங்களை
  வழி அனுப்பி இருக்கும்.
எங்கள் வாழ்க்கையின் இனிய கட்டங்களுக்குப் பாடல் எழுதிக் கொடுத்த தமிழனுக்கு

  ஆத்மார்த்தமான நன்றிகளும் 
மனம் நிறைந்த வாழ்த்துகளும்.


 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, June 22, 2011

குழந்தைகளும்ஊசிகளும் குழந்தைகளும்

''அம்மா  உனக்கு  கோல்ட் சரியாப் போச்சா.'
கொஞ்சம் இருக்குமா.''
அப்போ டாக்டரைப் பார்த்துட்டு வா. நான் அப்பாவோட இருக்கேன்''
சரி.
அடுத்த நாள் பள்ளியிலிருந்து வந்ததும்....
அம்மா, கோல்ட் சரியாப் போச்சா?
இன்னும் இல்லைமா.
அப்ப        டாக்டர்ட்ட போய் இன்ஜெக்ஷன்
போட்டுண்டு வா. வலிக்கவே வலிக்காது.
நான் அப்பா கிட்ட இருக்கேன்.''
பேத்தி மருமகள் டயலாக் இது.

இங்க பேரனுக்கு ரத்தத்தில் ஹீமோக்ளோபின் பரிசோதனை,.
விவரம் புரியாமல் வைத்தியரிடம் போய் விட்டு அவர் கையில்

பிளாஸ்டரை

எடுத்ததுமே அலற ஆரம்பித்தவன்,
கைகளை விவேகானந்தா போஸில் வைத்துக் கொண்டு
எடுக்கவே இல்லையாம்;)

மூன்று நபர்கள் பிடித்துக் கொண்டு சாம்பிள்
ரத்தம் எடுத்து கையில்

ப்லாச்ட்டரும்
 போட்டு இருக்கிறார்கள்.


''நான் இனிமே இங்கே வரவே மாட்டேன். யூ டுக் மை  ப்ளட்


யு ஹர்ட்டட்ட்   மி.!!!:)

என்று வீர வசனம் பேசிவிட்டு வந்திருக்கிறான்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, June 19, 2011

அன்புத் தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அன்புத் தந்தையர் அனைவருக்கும்  வாழ்த்துகள்!!

எந்த ஊர் வழக்கமாக இருந்தாலும்  என்ன.
தந்தையர்  தினம்   கொண்டாடப் படவேண்டிய ஒன்றுதான்.

போற்றி வளர்க்கும் தாய்க்கு ஆதரவு தந்தை.

புகழ் மகன் பெற  வழிகாட்டி தந்தை.
மணம் மகள் பெற மற்றவர்
முகம் கோணாமல் மாப்பிள்ளை
அழைத்துவரும் தந்தை.
தந்தையை
 இழந்த   குழந்தைகளுக்குத் தந்தையாக
வளம்  தரும்
வரும்

 சித்தப்பாக்கள் ,பெரியப்பாக்கள்,மாமாக்கள்


முதிர்ந்தவயதில் மனைவியின் கைக்கு இன்னொரு ஊன்றுகோல்
 தந்தை.
பேரன்கள் ஏறி விளையாட முதுகு காட்டும் தாத்தா.

பலப்பல அவதாரங்கள் எடுத்துக் கடவுளையும் மிஞ்சும் மண்ணுலகத் தந்தைகளுக்கு என் அன்பான
வாழ்த்துகள்.


Thursday, June 16, 2011

Eeffffalaalaa soup
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, June 11, 2011

கோடையிலே இளைப்பாறி..--

ஞானப் பழம் செடிகளின் ஊடே
சின்னவனின்  கைவண்ணங்கள்
பெரியவன்
  உருவாக்கிய
 லெகோ மைண்ட்    ஸ்ட ராம்

  ரிமோட் கண்ட்ரோல் வண்டி. 
சின்னவன் சேர்த்து வைத்த உலகம்
தாத்தா  துணையோடு சின்நவன்  வரையும் சித்தன்னவாசல் ஓவியங்கள்.
கடையில் பார்த்தா கப்பல். எம்ஜிஆர் கூடத் தெரிகிறார் பாருங்கள்:)
அனுப்ப நினைத்த பட்டாMபூச்சி.
ஐரோப்பிய  கல்லூரிச்சாலை.

இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன.
குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்த கையுடன் மழை வந்தது.
இவர்களின் சிநேகிதர்கள் இந்தியா நோக்கிப் பறந்துவிட்டார்கள்.
இருப்பதெல்லாம் ஒரு சைனீஸ் பையனும், இன்னும் இரண்டு மூன்று அமெரிக்கர்களும்.
தான்.
சின்னவனின் தோழர்கள் வீட்டுக்குத் தனியாகப்
போகும் அளவுக்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை.
அதனால் இப்போதைக்கு அவனுக்கு தாத்தா பாட்டி வரப்பிரசாதம்.
வெளியே இருக்கும் வெளி மரங்களையெல்லாம் வெட்டிவிட்டு, மணலை கிளறி, புது MAN
வாங்கி வந்து வந்து ஒரு காய்கறித்தோட்டம் ஆரம்பித்தார் சிங்கம்.
வெகு ஆசையோடு குடும்பமே கலந்து கொண்டது.
உணவுக்கு அலையும் அணில்கள், முயல்கள் இவை வந்து சாப்பிடாமல் இருப்பதற்காக, முதலில் பெரிய தொட்டியில் விதைகளை நாட்டுப் பிறகு கொஞ்சம் வளர்ந்தபிறகு
பூமியில் பதிந்திருக்கிறார்கள்.
தக்காளி,வென்டை, குடமிளகாய், கார மிளகாய், புதினாக்கீரை எல்லாம் கடவுள் கிருபையில் பிழைத்துக் கொண்டுவிட்டன.
அன்று அந்த வெய்யிலில் நின்றது சின்னவனுக்கு ஆகவில்லை. நச் நச் என்று தும்மல்.
என்ன ஊரு, என்ன காத்தோ.:(
கருவேப்பிலை மட்டும் வீட்டுக்குள் தான் வளர்கிறது.:)
செல்லப்பொண்ணு.
எங்க பொண்ணுக்கு அப்படியே அவள் அப்பா குணம்.
சுறுசுறுப்புக்கும், எடுத்த வேலையை முடிக்க வேணும்கற மும்முரத்தில் அவரை மிஞ்சி விடுகிறாள்.

--
    எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, June 06, 2011

ஜூன் பிட் போட்டிக்குப் படங்கள்

ஜூன் பிட் போட்டிக்குப் படங்கள்


பொன் வயல்  1950  படம்
நிழல்கள்...பாரதிராஜா  படம்


இருளும் ஒளியும்  வாணி  ஸ்ரீஏவி.எம்.ராஜன் நடித்த படம்
புது வெள்ளம்
 மஞ்சு  என்ற  புதுமுகம் நடித்த பழைய படம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

நேற்று ராத்திரி யோசித்தது:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்கூகிள் பஸ்ஸ்
 பதிவர்களுக்கு  இதமா
....
இல்லையா.
பின்னூட்டங்களின் இடத்தைப்  பிடித்துக் கொண்டதா.
வீடு.

நாம் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம்  இட்டால் மட்டுமே அவர்கள் நம் பதிவைப் படிப்பார்களா.

எழுத்தின் தரம் எப்படி  நிர்ணயிக்கப் படுகிறது.
சென்சேஷன்?
சுவை?

இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நல்லவேளை பத்திரிகைக்களுக்கு எழுதி அனுப்பவில்லை. 

அவர்கள்
 மறுத்தால்
சுய மதிப்பு அதல சுதல பாதாலங்களுக்கே சென்றுவிடுமே!!
.சுய நிர்ணயம்


பயணங்களில்...... மாந்தர்கள் மாதர்கள்

நாம்  விதவிதமாக

விட்டு
 சொல்லும் பெருமூச்சுகள்
அலையாகின்றன்வோ
பயணத்தில் ஒரு பகுதியான  படகு
நெடுமரம்
வந்த இடம் எதுவானால் என்ன!!. துணை சரியாக இல்லாவிட்டால்..


காடு இங்கேதான்.....................வானப்ரஸ்தம்

***********************************
இரண்டுவாரங்களுக்கும் முன்னால் நாங்கள் எங்கள் மகனோடு ச்விட்சர்லாண்டின் ஒரு அழகிய நகரமான
இன்டர்லாகன் எனும் இடத்திற்குப் பயணம் மேற்கொண்டோம்.

எங்களுக்குக் கிடைத்த நேரம்   ஏழு மணித்துகள் தான்.

பேத்தி பள்ளியில் இருந்து வருவதற்குள்
திரும்ப வேண்டும்.
-ரயிலில் ஏறியதும் இன்னொரு இந்திய தம்பதியினரின்   அறிமுகம் கிடைத்தது.
புத்திரப் பேறு கிடைக்காதவர்கள் என்றும் நல்லவசதி படைத்தவர்கள் என்பதும் புரிந்தது.
இருவரும் சென்னையில் ஒரு டூரிஸ்ட் கம்பெனியில்  பாக்கேஜ் டூர் எடுத்துக் கொண்டு
இருபது நாட்கள் ஐரோப்பியப் பயணமாக வந்திருக்கிறார்கள்.


எரிய பெரியவருக்கு ௭௫ வயதிருக்கும் .  நல்ல திடகாத்திரமான் உடல். கம்பீரத்தைப் பார்த்தால் எதோ பெரிய அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பாளராக   இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
மனைவிக்கு அறுபத்தெட்டு வயது என்று சொன்னார்..
ஆளுக்கொரு ஜன்னலோரத்தை அவர்கள் பிடித்துக் கொண்டதால்
நாங்கள்  அடுத்த இருக்கைகளைத தேடி  அமர்ந்துகொண்டோம்.

பரஸ்பர அறிமுகத்தை அடுத்து நான் மௌனமாக இயற்கைக் காட்சிகளைப் பார்த்துகொண்டு ரசித்தவாறு
வந்தேன்.
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத பசுமை. அது.
அந்த அம்மாவோ வெறித்த
 நோக்கோடு எல்லோரையும் கவனித்துவந்தார்.
 கணவரோ..  திரு  ரவிச்சந்திரன்.
எங்கள் வீட்டுக்காரரிடமும் மகனிடமும் தான் தலைமை வகித்த   உலோகங்கள் சம்பந்தப்பட்ட  கம்பெனி யில் தன
தனிமனித சாதனைகளை
 விஸ்தாரமாக எடுத்து  உரைத்துக் கொண்டு வந்தார்.

என் அருகே இருந்த   அம்மா

...வசந்தா ரவிச்சந்திரன்
கூடக் கூட  எதோ முனு முணுத்தவாறு வந்தார்.

எப்பப்   "பார்த்தாலும்" நான் நான்"  தான். மத்தவாளைப் பத்தியும் கேக்கணும்,

கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு வரக் கூடாதோ'

'நான் ''அவர் எதோ சுவையாகத்தானே சொல்கிறார்."

இல்ல,
" நான் இந்தக் கதையை பத்துவருஷமாக் கேக்கறேன்.
விடவும் முடியலை. சேரவும் முடியலை "என்றவள்
 கண்ணில் தண்ணீர்.
சங்கடமாக இருந்தது.நீங்களாவது தமிழ் பேசறவர்களாகக்   கிடைத்தீர்கள்.

இல்லாவிட்டால் நான் பேசவே முடியாது."

எப்படி இந்த வயதிலும் உங்களுக்குக் கருத்து வித்தியாசம் இருக்கிறது. ?

இது   நான்.
(என்னவோ சம்சாரக் கடலில் சாதித்துவிட்ட  தொனி வந்துவிட்டதோ?)

''எங்கள் திருமணம் நடந்து நாற்பத்தி ஐந்து  வருடங்கள் ஆகின்றன. முதலில் குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தைப் பகவான் கொடுத்தான்.

அது இல்லாமல் போயிற்று.
அதன் பிறகு என்ன  முயற்சி மேற்கொண்டும் ஒன்றும் பயனில்லாத நிலையில்

தம்பி மகனைத் தத்தெடுக்கலாம் என்று நான் சொல்ல, உங்கள் பிறந்தகம் வந்து

சாப்பிட, நான் சம்பாதிக்க முடியாது. நாம் இருவர் போதும் என்று ஒரே உறுதியாக இருந்துவிட்டார்.

கொஞ்சக்காலம்
தனிமையில் வருத்தப் பட்டேன்.
பிறகு வேறு விஷயங்களிலும் ஆன்மீகத்திலும்
மனதைச் செலுத்தி விட்டேன்."

என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே நாங்கள் இறங்கும் இடம் வந்தது. அங்கிருந்து
படகுப் பயணமாகக் கடைசி நிலையத்தை
அடைவதாக ஏற்பாடு.

திருவாளர்களும் திருமதிகளுமாக  அந்த அழகான  படகில் ஏறி உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். .எங்க
மகன் அனைவருக்கும் காபி, கேக்  என்று வரவழைத்து உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்தினான்.

அவனையே கண்ணிமைக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தார்  வசந்தா.

அவரது கவனத்தைக் கலைக்கும் வண்ணமாக அவர்களது பயண விவரங்களைக் கேட்டேன்.

இங்கேயே  முடிந்தாலும் சரி என்று அவர் சொன்னது ,எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

'உடனே  அவர் முகத்தில் சிரிப்பு. அப்படியெல்லாம் செய்யமாட்டேன். ஜஸ்ட்   ஒரு நினைப்பு. என்றார்.
படகின் ஓரத்தில்   நின்று அலைகளின் அழகைப் பார்த்தவாறு வந்தோம்.
காற்று அதிகமாகவே
இருந்ததால்.நான் உள்ளே செல்ல முற்பட்டேன்.
தடால் என்ற சத்தம்.
என்னவோ எதோ என்று மீண்டும் வெளியில் வந்தால் ,

 மாமி அங்கேதான் இருந்தார்.

மாமாவைக் காணோம்.

அதற்குள் படகின் அடித்தளத்தில்
 சலசலப்பு.
திரு. ரவிச்சந்திரன் அவர்கள் படிகளில் சறுக்கி ,கழிப்பறைக்குச் செல்லும் இடத்தில் விழுந்திருந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
வசந்தா மாமியின் முகத்தில்   கலவரம் கூடிக்  கொண்டே சென்றது.

'பாவி மனுஷன். பக்கத்துக் கைப்பிடியப் பிடித்துக் கொண்டு இறங்கக் கூடாதோ." என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்.

அதற்குள் அந்தப் படகின்   முதலுதவி  டாக்டர் வந்து. மாமாவின்  உடல் நிலையைப் பரிசோதித்துக் காலில் சிறிய காயம் மட்டும் பட்டிருப்பதாகவும், மற்றபடி அவருக்குக்  கவலைப் பபும்படியாக
அடி படவில்லை என்று
கைத்தாங்கலாக   அவரை

 மேலே அழைத்து வந்தனர்.
'ஏனன்னா, என்றபடி அருகில் விரைந்த
வசந்தாவை அவர் பக்கத்தில் அணுக விடவில்லை.
ஐ ஆம் ஒகே.
நீ விழாமல் போய் வா., என்றபடி எங்கள்

மகனின் உதவியோடு   இருக்கையில் அமர்ந்தார்.

நான் கீழே சென்ற வசந்தாவுடன்
 கொஞ்ச நேரம் இருந்து ஆறுதல் சொல்லிவிட்டு, மேலே வந்தோம்.

'நாம் ஊருக்குத் திரும்பி விடலாமா. பாஷை தெரியாமல் அவஸ்தைப்

படவேண்டாமே என்றவளை எரிப்பது போலப் பார்த்தார் அந்த மனிதர்.''

ஊரிலிருந்து கிளம்பும்போதே உன் அபசகுனப் பேச்சை ஆரம்பிச்சையே.

இப்ப எனக்கு ஏதாவது ஆகணும்னு காத்துக் கொண்டிருந்தியாக்கும்

என்று''படபடத்தார்.
மற்ற பயணிகள் வசந்தா வடித்த கண்ணீரைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் , அருகில் வந்து ஆறுதல் சொன்னார்கள்.
எனக்குத்தான் கவலை
 அதிகமானது.

அப்பொழுது வாய மூடியவர்தான்  வசந்தா.. படகு விட்டு இறங்கி   சக்கிர
 வண்டியில் கணவரை ஏற்றிக் கொண்டு,  பக்கத்தில் இருக்கும
 அவசர வைத்திய உதவியை  நாடிச் சென்றனர்..

விடைபெறும்போது வசந்தாவின் கண்கள் என்னைப் பார்க்கவில்லை.

உலகத்தில் மனைவிகளாகப் படைக்கப் பட்ட எத்தனையோ மரக்கட்டைகளைப் போல நடந்து கொண்டிருந்தார்.

**************************************************************************
டிஸ்கி
எல்லா  மனைவியரும் எல்லாக் கணவர்களுக்கும் இது பொருந்தாது.நமக்குத் தெரியும் தானே.:)
 அனுபவம் பலவிதம்!!
-


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்Thursday, June 02, 2011

சிகாகோ வந்தோம்

Add caption
மகள்வீட்டுப்  புது   பசு:))
எட்டு மணி சூரியன்
காமிரா  இந்திய நேரமே காட்டுது:))
வந்த
 உடன் வரவேற்ற   கண்கண்ட கடவுள்
பூப்போல   இலை
 வரும்போதே வானம் மழை   தூவியது.
மழையின் தகப்பனும் தாயும் இல்லாதததால் எனக்கு நிம்மதி.

சேர்த்துவைத்து மறுநாள் மதியம் டொர்னாடோ
 வரலாம் ,பலத்த காத்து  இப்படி வெதர் சானலில் சொல்ல ஆரம்பித்தார்கள்.
நான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு
 மாடியில்  மகளின்    துணிகள்  தொங்கவிடும்  கிளாசெட்  அறையில் நாற்காலியும் போட்டு உட்கார்ந்துவிட்டேன்.

எனக்கே என்னைப் பார்த்தால்
   அலுப்பாக
 இருந்தது.
வளர மறுக்கிற  மனோ நிலையோ:(  
வட   அமெரிக்கப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, June 01, 2011

Green to gold
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

The Secret Language of Trees