Blog Archive

Tuesday, February 22, 2022

22/2/2022

வல்லிசிம்ஹன்






இன்று ஒரு புதுவிதமான நாள். முன்னால் ஒரு பதிவில்
சொன்னது  தான்.
நாம் சொன்னது ,கணினி திருப்பி சொல்கிறது என்பதைத் தான் மீண்டும்
சொல்ல வருகிறேன்.

அன்பின் கீதா சாம்பசிவம் முக நூலில் வாஷிங் மெஷின்
பற்றிய விவரங்கள் 
வந்ததையும். தான் புது வாஷிங்க் மெஷின் வாங்கியதையும் சொல்லி 
இருந்தார்.

நானும் பெரிய பேரனும் இதைப்பற்றிப்
பேசிக்கொண்டிருந்த போது,
நீ கூகிள்ள தேடினா  முக நூலிலும் வரும் என்றான்.

நேற்று மதியம் இன்னோரு அதிசயம் 
காத்திருந்தது. நாங்கள் திரு வேளுக்குடி ரங்க நாதனின் கீதாசாரம் வகுப்புகள்

பதிவு செய்து நற்செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
அதுவும் பேரனின் கணினியில்...
போன சனிக்கிழமை காலையில்,
அவனுக்கு  விஸ்வரூபம் பற்றி விவரித்துக் கொண்டிருந்தேன்.

பார்த்தனுக்கும் ,த்ருதாஷ்டிரனுக்கும் கண்ணன் தன் விராட் ஸ்வரூபத்தைக்
காண்பிக்கிறான்.
என்று மற்ற சங்கதிகளைச் சொல்லி 
வேறெதோ செய்திகளுக்குச் சென்று விட்டோம்.

இன்னிக்கு வந்தது இன்னோரு அதிசயம்.
யூடியூபில் , திரு வேளுக்குடியின் உபன்யாசம்.
கண்ணனின் ஆரமுது. பொதிகையில் 
10 வருடங்கள் இருக்குமா?
இன்று எனக்கு வருகிறது. அதில்  அவர் கண்ணன் 
தரிசனம் விவரிக்கிறார். கூடவே நம் காஞ்சி வரதர் கோவிலும் பின்னணியில்.

இது தற்செயலா. இல்லை நம் செயல்களும் பேச்சுகளும்

எல்லா கணினிகளும் கவனித்துக் கேட்கின்றனவா. யாராவது 
தெரிந்தால் சொல்லுங்கள்.






எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

12 comments:

ஸ்ரீராம். said...

வீட்டில் அலெக்ஸ்சா இருக்கிறது என்றால் இதெல்லாம் சாத்தியம்தான்!  வேளுக்குடி பெயர் கிருஷ்ணன்தானே?  நீங்கள் ரெங்கநாதன் என்று சொல்லி இருக்கிறீர்களே... 

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
நான் சொல்பவர் திரு வேளுக்குடியின் மகன் ரங்கனாதன்.

அவரும் நிறைய சத்விஷயங்கள் சொல்கிறார்.

ஸ்ரீராம். said...

ஓ... இது எனக்கு நியூஸ் மா..

Geetha Sambasivam said...

@ஸ்ரீராம், ஆமாம், வேளுக்குடியின் இரண்டாவது பிள்ளை. திருப்பதியில் படித்துத் தேர்ந்தவர். நன்றாகச் சொல்லுவார். அவ்வப்போது கேட்டிருக்கேன். பார்க்கவும் வேளுக்குடியைப் போலவே இருக்கார்.

Geetha Sambasivam said...

அலெக்சா நான் பயன்படுத்துவதில்லை. எப்படினு கூடத் தெரியாது. ஆனாலும் எங்க வீட்டின் ரகசியங்கள் எல்லாம் (ஹிஹிஹி) முகநூலில் வந்துடுது. நான் சமையல் காடரர் பற்றிப் பேசினாலோ/தேடினாலோ ஒரு நூறு காடரர் விலாசங்கள், விபரங்கள் முகநூலில் வருகின்றன. இஃகி,இஃகி,இஃகி. நாங்க சண்டை போடறதையும்/போட்டுக்கறதையும் கேட்டிருக்குமோ? அதெல்லாம் கூட வருமோ? :)))))))

Geetha Sambasivam said...

அது சரி, இதெல்லாம் கணினி திறந்திருக்கையில் தானே நடக்கும். அதை மூடிட்டு நாம பேசறது கூட வருமா? ஏன்னா, நாங்க வாஷிங் மிஷின் பத்திப் பேசவே இல்லை. கடைக்குப் போய்ப் பார்த்து வாங்கிட்டு வந்தது தான். இணையத்தில் யாரிடமும் அதைப் பற்றிச் சொல்லவே இல்லை. அப்புறம் எப்படித் தெரிந்திருக்கும்? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கோமதி அரசு said...

இன்றைய விஷயங்கள் அருமை.

நம் எண்ணங்களுக்கு யார் மூலமாவது பதில் கிடைக்க செய்வார் இறைவன். அது போல கூகுள் ஆண்டவர் நம் கேல்விகளுக்கு, தேடல்களுக்கு பதில் தருகிறார், தேடுவதை தருகிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எனக்கும் இதே சந்தேகங்கள் வருகின்றன.
கணினி திறந்து இருந்தாலாவது யோசிக்கலாம். அதை மூடி லாக் அவுட் செய்த பின்னால்
அதற்கு எப்படிக் கேட்கும்!!!

அதுவும் நீங்கள் வாஷிங்க் மெஷின் பற்றி சொல்வது
இன்னும் விபரீதமாக இருக்கிறது.:)

வல்லிசிம்ஹன் said...

அலெக்ஸா கூட இல்லை என்கிறீர்கள்.
நாங்களும் அலெக்சாவின்

வால்யூம் துண்டித்துத்தான் வைத்திருக்கிறோம்.
இந்த வேளுக்குடி விஸ்வரூபம் , யூடியூபில் வந்தது தான்
இன்னும் வேடிக்கையாக இருக்கிறதுமா.

ஏதோ ஒரு சினிமாவில் டிவி நம்மைப் பார்ப்பது
போலக் காண்பிப்பார்கள்.
இந்த விஷயம் கொஞ்சம் வினோதமாகத் தான் இருக்கிறது.
வீட்டிலேயே இருக்கும் பால்காரர் மாதிரி
வீட்டிலேயே இருக்கும் காவல்காரர்!!!!!

நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

நம்மைக் கண்காணிக்கும் காவல்காரர் கடவுள் தான்.
நீங்கள் சொல்வது போல அவரும் காது கொடுத்துக்
கேட்டு நம் தேவைகளைப்
பூர்த்தி செய்கிறாரோ.
நல்ல நேர் எண்ணம். துணைவன் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நலமுடன் இருங்கள் மா.
நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே இருக்கும் கணினி.... எல்லாம் AI எனும் Artificial Intelligence படுத்தும் பாடு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் என்றும் நலமுடன் இருங்கள்.

AI படித்தும் பாடு.:)
ஏழை படுத்தும் பாடு படம் நினைவுக்கு வந்தது.
இதுவும் முன்னேற்றத்தோடு தானே சேரும்!!!!
நன்றி மா.