Showing posts with label எதிர்பாராதது நடந்தே விட்டது. Show all posts
Showing posts with label எதிர்பாராதது நடந்தே விட்டது. Show all posts

Wednesday, September 25, 2019

எதிர்பாராதது நடந்தே விட்டது 8

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

எதிர்பாராதது நடந்தே விட்டது 





அன்பு கோமதி அரசு

சொன்ன பிறகுதான் இந்தப் பாடல் மனதில் தோன்றியது.

நம் இரு கதா நாயகிகளும் அவரவர் மன இருப்பை அறிந்தாலும் தைரியமாகப் பேசிக்கொள்ளவில்லை .
பெற்றோர் மேலிருந்த மரியாதை  அவர்களை

அடக்கி வைத்தது. இருந்தும் மனது நினைவுகளில் மூழ்கும் போது
இருவரும்   மற்றவரைப் பார்த்துப் புன்னகைத்த வண்ணம் இருந்தனர்.

மாதுவும் தோழர்களும்  விடுதிக்கு கிளம்பினார்.
அத்தையைப் பார்த்து மாது 
சென்னைக்கு எல்லோரும் வாருங்கள்.
பிறகு படிப்பு ஆரம்பித்துவிட்டாள் சந்திப்பது கடினமாகிவிடும் 
என்று பொதுவில் சொன்னான்.
பிரசாத்தும் எங்கள் வீட்டிற்கும்  வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தான்.

"பெரியவர்கள் மட்டும் என்று இல்லை வால்  பசங்களும் வரலாம் என்றதும் பொய்க் கோபத்தில் கோகிலாவும்,மாலாவும் 
சிரித்தார்கள். ஒரு வாலு க்குத் தான் இன்னொரு வாலை த்  தெரியும் இ ல்லையாடி  கோகி"  என்றாள்  மாலா.

"ஹே இருட்டுகிறது ,  நாம்  கிளம்பினால்  சரியாக 
இருக்கும்". என்று மாதவன் முன்னேற, மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

நன்றிடா மாது  உன்னால்  இந்த மழை நாள் மகிழ்ச்சியாகச் சென்றது என்று 

தோழர்கள் சொல்வதை அமைதியாகக் கேட்டு நடந்தான் அவன்.

இதென்ன புது விதமாக மனதில்  எண்ணங்கள்.

படிக்கும் வயதில் இதெல்லாம் சற்று ஒதுக்கி வைக்க வேண்டும்.
எதிர்காலம் என்ன  தீர்மானத்தில் இருக்கிறதோ தெரியாது.

மனம் தளர்ந்தஆல்  குறிக்கோள்  தவறும் என்று நினைத்தபடி 
திரும்பி பிரசாத்தைப் பார்த்தான்.
அவன் எதோ மேகத்தில் நடப்பது போல் 
மிதந்து  வந்துகொண்டிருந்தான்.

"பாதையைப் பார்த்து வாடா. விழுந்து வைக்காதே."
" ஆளு நேத்திக்கே விழுந்துட்டாருப்பா என்றான் 
இன்னொரு நண்பன்.
கூடவே பொன் ஒன்று கண்டேன்  பெண்ணங்கு  இல்லை என்று பாட ஆரம்பித்தான்.
மாதவனுக்கு  கோபம் வந்து விட்டது. இது விளையாட்டு விஷயம் இல்லை.
நம்மைத் தாண்டி யாரிடமும் இப்படிப் 
பேசாதீர்கள்.

இன்னும் 4 வருடங்கள் கடந்தால் தான் நாம் எதையும் தீர்மானிக்க முடியும் 
என்று அடக்கினான். அந்தப்  பெண்கள் நம்மைவிடச் சிறியவர்கள்.
அவர்கள் விளையாட்டாகச் செய்ததை நீங்கள் மறந்து விடுங்கள்.
கௌரவம் காக்க வேண்டும்.

நண்பர்கள் மௌனமானார்கள்.

மாதவனின்  சொல்லில்  இருந்த உண்மை உறை த்தது.

தீவிர  யோசனையுடன்  வந்த மாணவர்களை பார்த்து அதிசயித்தார்
ஆசிரியர்.

இரவு உணவுக்குப் பிறகு சீக்கிரம்  தூங்குங்கள்.
நாளைக்காலை  கிளம்புகிறோம் .
கொடைரோடிலிருந்து  பஸ்  பிடித்து மாலை சென்னைக்குச் சென்று விடலாம் என்று சொன்னார்.

இங்கு நீங்கள் பெற்ற அனுபவப்  பாடங்கள் உங்களது மேல் படிப்புக்கு உதவும் என்றதும் எல்லோர் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.
ஆமாம் சார். நல்ல பிராக்டிகல்  பயிற்சி என்ற படி உணவருந்தச் சென்றார்கள்.

அன்றிரவு நான்கு  மனங்கள்  விழித்திருந்தன. எதிர்காலம் என்ன என்று யோசித்தபடி.
மறு  நாள் மழையில்லாத    லேசான சிலிர்ப்புடன்  விடிந்தது.

மாதவன் அத்தை வீட்டுக்கு தொலைபேசித்  தான்  மதராஸ் கிளம்புவதைத் தெரிவித்தான்.
 பொன்னாவும்  நல்லபடியாகச் சென்று வர வாழ்த்துக்கள் 
சொல்லி   தொலைபேசியை வைத்தாள் .

மனம்   சில வினாடிகள் கலங்கியது. எத்தனை நல்ல பையன். எவ்வளவு அடக்கம்.

நிலைமை மாறாதா என்று  தோன்றியது .

அடுத்த நாள் எதிர்பாராத விருந்தாளியாக  வந்தவர் 

கிச்சம்மாப் பாட்டியின் நண்பர்   காவிசேரி  ஜோசியர்.

பொன்னாவுக்கு  அவரைப் பார்த்ததும் மிக மகிழ்ச்சி.
 என்ன சமாச்சாரம்.  பொண்ணை படிக்க வைக்கப் போகிறியா 
இல்லை கல்யாணமா  என்று குறும்பாக்க கேட்டார்.

மாமா உங்களுக்குத் தெரியாததா.
அவள் பட்டப்படிப்பு படிக்க ஆவலாக இருக்கிறாள்.

அது முடிந்ததும்  பையனைத் தேட வேண்டியதுதான் என்றாள் .

நல்ல வேளையாகப்  பெண்கள் காலை நடையாக  சுற்றிவர போயிருந்தார்கள்.
காவிசேரி  மாமா,"  என்னது இது உங்க அம்மாவிடம் சொல்லி இருந்தேனே  மாதவனுக்கு மாலாவுக்கும் தான் திருமணம் செய்யணும்னு" என்று வியந்தார்.
மூல  நட்சத்திரம் பற்றி  அவர்கள் அசௌகர்யப் படுகிறார்கள் .
எனக்கும் தயக்கம் தான் என்றாள் . அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
பிறகு  தன்னிடமிருந்த  பழைய காலப் புத்தகத்திலிருந்து சில  கோடிட்ட 
வரிகளைப்  படித்தார்.

மூல நட்சத்திரம் வேர் போன்றதுமா. நேர்மையாக இருப்பார்கள் மனதில் 
நேர்மை எனப்பட்டது  என்றால் 
பட்டதைத் தயங்காமல் செய்வார்கள்.

ஒருவர் காரணமாக இன்னொருவர் வாழ்க்கை பாதிக்கப் படாது.
நாம்  பிறக்கும்போது என்ன  வரம் வாங்கி கொண்டு வந்தோமோ 

அது நடக்கும். மாதவன்,உங்கள் தம்பி இருவருக்கும் நல்ல 
பலன்களே  தெரிகின்றன. நல்லதே நடக்கும் . என்று சொல்லி முடித்தார்.

//அதேபோன்று, ‘மூலத்து மாமியார் மூலையிலே’ என்றும் சொல்வழக்கு உண்டு. அதாவது, மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆணையோ, பெண்ணையோ மணந்தால், மாமனார் உயிர்நீத்து விடுவார்; அதனால், மாமியார் விதவையாகி, மூலையில் உட்கார்ந்து விடுவார் எனும் பொருளில் அப்படிச் சொல்வார்கள். ஆனால், இதுவும் மூடநம்பிக்கையே! மாமனாரின் மரணத்தை நிர்ணயிப்பது அவரது ஆயுட்பலமும், அவர் மனைவியின் மாங்கல்ய பலமும், அவரது மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் தெரியும் கர்ம பலனும்தான் என்று சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. இதில் மருமகனையோ மருமகளையோ மூல நக்ஷத்திரத்தை வைத்துக் காரணம் காட்டுவதும் பயப்படுவதும் அறியாமை.//  இதுதான் அவர்  படித்துக் காட்டியது.
நன்மையை எதிர்பார்ப்போம். 


















சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...