Blog Archive

Wednesday, September 25, 2019

எதிர்பாராதது நடந்தே விட்டது 8

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

எதிர்பாராதது நடந்தே விட்டது 





அன்பு கோமதி அரசு

சொன்ன பிறகுதான் இந்தப் பாடல் மனதில் தோன்றியது.

நம் இரு கதா நாயகிகளும் அவரவர் மன இருப்பை அறிந்தாலும் தைரியமாகப் பேசிக்கொள்ளவில்லை .
பெற்றோர் மேலிருந்த மரியாதை  அவர்களை

அடக்கி வைத்தது. இருந்தும் மனது நினைவுகளில் மூழ்கும் போது
இருவரும்   மற்றவரைப் பார்த்துப் புன்னகைத்த வண்ணம் இருந்தனர்.

மாதுவும் தோழர்களும்  விடுதிக்கு கிளம்பினார்.
அத்தையைப் பார்த்து மாது 
சென்னைக்கு எல்லோரும் வாருங்கள்.
பிறகு படிப்பு ஆரம்பித்துவிட்டாள் சந்திப்பது கடினமாகிவிடும் 
என்று பொதுவில் சொன்னான்.
பிரசாத்தும் எங்கள் வீட்டிற்கும்  வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தான்.

"பெரியவர்கள் மட்டும் என்று இல்லை வால்  பசங்களும் வரலாம் என்றதும் பொய்க் கோபத்தில் கோகிலாவும்,மாலாவும் 
சிரித்தார்கள். ஒரு வாலு க்குத் தான் இன்னொரு வாலை த்  தெரியும் இ ல்லையாடி  கோகி"  என்றாள்  மாலா.

"ஹே இருட்டுகிறது ,  நாம்  கிளம்பினால்  சரியாக 
இருக்கும்". என்று மாதவன் முன்னேற, மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

நன்றிடா மாது  உன்னால்  இந்த மழை நாள் மகிழ்ச்சியாகச் சென்றது என்று 

தோழர்கள் சொல்வதை அமைதியாகக் கேட்டு நடந்தான் அவன்.

இதென்ன புது விதமாக மனதில்  எண்ணங்கள்.

படிக்கும் வயதில் இதெல்லாம் சற்று ஒதுக்கி வைக்க வேண்டும்.
எதிர்காலம் என்ன  தீர்மானத்தில் இருக்கிறதோ தெரியாது.

மனம் தளர்ந்தஆல்  குறிக்கோள்  தவறும் என்று நினைத்தபடி 
திரும்பி பிரசாத்தைப் பார்த்தான்.
அவன் எதோ மேகத்தில் நடப்பது போல் 
மிதந்து  வந்துகொண்டிருந்தான்.

"பாதையைப் பார்த்து வாடா. விழுந்து வைக்காதே."
" ஆளு நேத்திக்கே விழுந்துட்டாருப்பா என்றான் 
இன்னொரு நண்பன்.
கூடவே பொன் ஒன்று கண்டேன்  பெண்ணங்கு  இல்லை என்று பாட ஆரம்பித்தான்.
மாதவனுக்கு  கோபம் வந்து விட்டது. இது விளையாட்டு விஷயம் இல்லை.
நம்மைத் தாண்டி யாரிடமும் இப்படிப் 
பேசாதீர்கள்.

இன்னும் 4 வருடங்கள் கடந்தால் தான் நாம் எதையும் தீர்மானிக்க முடியும் 
என்று அடக்கினான். அந்தப்  பெண்கள் நம்மைவிடச் சிறியவர்கள்.
அவர்கள் விளையாட்டாகச் செய்ததை நீங்கள் மறந்து விடுங்கள்.
கௌரவம் காக்க வேண்டும்.

நண்பர்கள் மௌனமானார்கள்.

மாதவனின்  சொல்லில்  இருந்த உண்மை உறை த்தது.

தீவிர  யோசனையுடன்  வந்த மாணவர்களை பார்த்து அதிசயித்தார்
ஆசிரியர்.

இரவு உணவுக்குப் பிறகு சீக்கிரம்  தூங்குங்கள்.
நாளைக்காலை  கிளம்புகிறோம் .
கொடைரோடிலிருந்து  பஸ்  பிடித்து மாலை சென்னைக்குச் சென்று விடலாம் என்று சொன்னார்.

இங்கு நீங்கள் பெற்ற அனுபவப்  பாடங்கள் உங்களது மேல் படிப்புக்கு உதவும் என்றதும் எல்லோர் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.
ஆமாம் சார். நல்ல பிராக்டிகல்  பயிற்சி என்ற படி உணவருந்தச் சென்றார்கள்.

அன்றிரவு நான்கு  மனங்கள்  விழித்திருந்தன. எதிர்காலம் என்ன என்று யோசித்தபடி.
மறு  நாள் மழையில்லாத    லேசான சிலிர்ப்புடன்  விடிந்தது.

மாதவன் அத்தை வீட்டுக்கு தொலைபேசித்  தான்  மதராஸ் கிளம்புவதைத் தெரிவித்தான்.
 பொன்னாவும்  நல்லபடியாகச் சென்று வர வாழ்த்துக்கள் 
சொல்லி   தொலைபேசியை வைத்தாள் .

மனம்   சில வினாடிகள் கலங்கியது. எத்தனை நல்ல பையன். எவ்வளவு அடக்கம்.

நிலைமை மாறாதா என்று  தோன்றியது .

அடுத்த நாள் எதிர்பாராத விருந்தாளியாக  வந்தவர் 

கிச்சம்மாப் பாட்டியின் நண்பர்   காவிசேரி  ஜோசியர்.

பொன்னாவுக்கு  அவரைப் பார்த்ததும் மிக மகிழ்ச்சி.
 என்ன சமாச்சாரம்.  பொண்ணை படிக்க வைக்கப் போகிறியா 
இல்லை கல்யாணமா  என்று குறும்பாக்க கேட்டார்.

மாமா உங்களுக்குத் தெரியாததா.
அவள் பட்டப்படிப்பு படிக்க ஆவலாக இருக்கிறாள்.

அது முடிந்ததும்  பையனைத் தேட வேண்டியதுதான் என்றாள் .

நல்ல வேளையாகப்  பெண்கள் காலை நடையாக  சுற்றிவர போயிருந்தார்கள்.
காவிசேரி  மாமா,"  என்னது இது உங்க அம்மாவிடம் சொல்லி இருந்தேனே  மாதவனுக்கு மாலாவுக்கும் தான் திருமணம் செய்யணும்னு" என்று வியந்தார்.
மூல  நட்சத்திரம் பற்றி  அவர்கள் அசௌகர்யப் படுகிறார்கள் .
எனக்கும் தயக்கம் தான் என்றாள் . அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
பிறகு  தன்னிடமிருந்த  பழைய காலப் புத்தகத்திலிருந்து சில  கோடிட்ட 
வரிகளைப்  படித்தார்.

மூல நட்சத்திரம் வேர் போன்றதுமா. நேர்மையாக இருப்பார்கள் மனதில் 
நேர்மை எனப்பட்டது  என்றால் 
பட்டதைத் தயங்காமல் செய்வார்கள்.

ஒருவர் காரணமாக இன்னொருவர் வாழ்க்கை பாதிக்கப் படாது.
நாம்  பிறக்கும்போது என்ன  வரம் வாங்கி கொண்டு வந்தோமோ 

அது நடக்கும். மாதவன்,உங்கள் தம்பி இருவருக்கும் நல்ல 
பலன்களே  தெரிகின்றன. நல்லதே நடக்கும் . என்று சொல்லி முடித்தார்.

//அதேபோன்று, ‘மூலத்து மாமியார் மூலையிலே’ என்றும் சொல்வழக்கு உண்டு. அதாவது, மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆணையோ, பெண்ணையோ மணந்தால், மாமனார் உயிர்நீத்து விடுவார்; அதனால், மாமியார் விதவையாகி, மூலையில் உட்கார்ந்து விடுவார் எனும் பொருளில் அப்படிச் சொல்வார்கள். ஆனால், இதுவும் மூடநம்பிக்கையே! மாமனாரின் மரணத்தை நிர்ணயிப்பது அவரது ஆயுட்பலமும், அவர் மனைவியின் மாங்கல்ய பலமும், அவரது மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் தெரியும் கர்ம பலனும்தான் என்று சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. இதில் மருமகனையோ மருமகளையோ மூல நக்ஷத்திரத்தை வைத்துக் காரணம் காட்டுவதும் பயப்படுவதும் அறியாமை.//  இதுதான் அவர்  படித்துக் காட்டியது.
நன்மையை எதிர்பார்ப்போம். 


















21 comments:

துரை செல்வராஜூ said...

இனிய பாடல் பகிர்வுகளுடன் பதிவு...

மூல நட்சத்திர விளக்கம் சிறப்பு..

வாழ்க நலம்...

கோமதி அரசு said...

எனக்கு பிடித்த பாடல் அதை இங்கு பகிர்ந்தது பொருத்தம்.
இலங்கை வானொலியில் இசையும் கதையும் வைப்பார்கள். அது போல் தேர்ந்து எடுத்த பாடல்கள் கதை என்று அருமையாக கதை சொல்கிறீர்கள்.

மாதவன் நன்பர்களிடம் பேசுவது அருமை.
மூல நட்சத்திரம் பற்றி மாமா சொல்வதும் அருமை.

கோமதி அரசு said...

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் பாடலும் பிடித்த பாடல் தான் கேட்டு மகிழ்ந்தேன்.

மாதேவி said...

நான்கு மனங்கள் ஓடி.....
பொறுத்திருப்போம்.

ஸ்ரீராம். said...

மூல நட்சத்திர பலன்களுக்கு சுட்டி கொடுத்திருக்கிறீர்கள்.  இன்றும் எங்கள் வீட்டில் இரண்டு மூலங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  ஆண் மூலம்!

ஸ்ரீராம். said...

கதை போகும் போக்கில் என்ன ஆகுமோ என்று படித்துக் கொண்டிருக்கிறேன்.  மாலாவும் மாதவனும் இணைவார்களா?  மாலா மாதவன் ஆவார்களா?

ஜீவி said...

நட்சத்திர அலசலிலேயே இந்தப் பகுதி போய்விட்டது என்று சொல்ல முடியாது.

மாதவனின் கோபம் பிடித்திருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
உண்மையை நம்ப மறுப்பவர்களே அதிகம்.
சில பெர் ஜாதகத்தையே மாற்றி எழுதிவிடுகிறார்கள் கணினி உதவியால்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
இசையும் கதையும் கேட்பதற்காகப் பள்ளியிலிருந்து ஓடி வந்த நாட்கள்

மிக இனிமை.
கைகால் அலம்பாமல் ரேடியோவைத் தொடுவதற்காக
அம்மா கோபித்துக் கொள்வார்.
இசையும் கதையும் புதன் அன்று வருமோ.
பள்ளியில் கேம்ஸ் இருக்கும். முடித்துவிட்டு விரைய வேண்டும்.
அந்த நாள் நினைவுகளுக்கு மிக நன்றி.

Geetha Sambasivam said...

பதிவுக்குப் பொருத்தமான பாடல் தேர்வு. மிக அழகாய் இளைஞர்களின் மனங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பொறுப்பும் அதே சமயம் நினைத்தது நடக்கவேண்டுமே என்னும் எண்ணமும் சேர்ந்து வெளிப்பட மாதவன் பேசி இருப்பது அழகு. மூல நக்ஷத்திரம் குறித்த தகவல்கள் எல்லாம் உண்மையே! பொதுவாக எந்த நக்ஷத்திரமானாலும் நக்ஷத்திரத்தினால் தீங்கோ, நன்மையோ நேராது என்றே ஜோசியர்கள் சொல்லுகின்றனர். ஆனால் கேட்பவர் யார்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி பாடல்களை ரசித்ததற்கு மிக நன்றி.
மூல நட்சத்திரம் பற்றி எங்கள் ஜோசியரும் இதையே சொன்னார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி நான்கு மனங்களும் நாலு வருடங்களும் ஓட வேண்டூம்.
இறைவன் அருள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
என் மாமா பையன் மூலம் தான். அவன் மாமனார் இன்னும் நன்றாகத்தான் இருக்கிறார்.
இதோ பெண்ணுக்குத் திருமணம் நவம்பரில். மாமியார் மாமனார் வந்து விட்டார்கள். எல்லாம் அவரவர் வினைப் பயன் தான்.
இதை எப்பொழுது உணருவார்களோ மனிதர்கள்.

ஆஞ்சனேயர் பார்த்து செய்ய வேண்டும். சட்டுனு அமைந்து விடும் பாருங்கள்.

பாடல்கள் இல்லாமல் என்னால் கதை எழுத முடியவில்லை ஸ்ரீராம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் அவர்களை சேர்ப்பதற்குத்தானே இந்தக் கதை.
மாலா மாதவன் உண்டு.:_)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார் வணக்கம்.
ஜாதகங்களைப் புரட்டிப் போடும் இந்தக் காலத்தில் அப்போது எத்தனை நேர்மையாகக் கையாள முடியுமோ அப்படிக் கையாண்டார்கள்.
மாதவன் பொறுப்புள்ள பையன்.
அவனுக்குத் தோழர்கள் விட்டேத்தியாகப் பேசுகிறார்களே.
நம் குடும்பத்தை விட்டுக் கொடுத்த மாதிரி பேசக்கூடாது என்றே
அந்தப் பேச்சை நிறுத்தினான்.
கவனித்து சொன்னதற்கு மிக நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா
உண்மைதான். பசங்க திருமணத்தின் போது எத்தனையோ தகிடு தத்தங்கள் பார்க்க நேர்ந்தது.
நான் தான் முட்டாளா, இல்லை உலகம் தான் மாறிவிட்டதா
என்று தோன்றியது.
நன்றாகத் தெரிந்த இடத்திலிருந்து நல்ல குடும்பத்திலிருந்த பெண்கள் அமைய நாலு வருடம் தேவைப்பட்டது.

நீங்கள் சொல்வது போல ஆயில்யம்,கேட்டை,மூலம் எல்லாவற்றுக்கும்
யோசிக்கிறார்கள். எத்தனை முதிர் கன்னிகள், இளைஞர்கள் எல்லோரையும்
காணும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல்கள்...

மூல நக்ஷத்திரம்.... பார்க்கலாம் என்ன நடக்கும் என. இப்போது கூட நண்பர் மகள் மூல நக்ஷத்திரம் என்பதால் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
உண்மைதான் மா. அவர்களுக்குக் காலமும் கடவுளும் உதவி செய்ய விருப்பம் நிறைவேறியது.

quotes in tamil said...

Nice post I m expect more post from you site

quotes in tamil said...

அற்புதமான கவிதை போன்ற வரிகள்

sai baba prashnavali said...

Beautiful song and the lyrics too.
Regards,
sai baba answers
Sai Baba Quotes
Sai Satcharitra in Tamil
Sai Satcharitra in Telugu
Sai Satcharitra in Marathi
Sai Satcharitra in gujarati
Sai Satcharitra in bengali
Sai Satcharitra in kannada
Sai Satcharitra in hindi
Sai Satcharitra in Malayalam
Hanuman Chalisa PDF
Hanuman Chalisa Hindi PDF