Showing posts with label vadaam posts. Show all posts
Showing posts with label vadaam posts. Show all posts

Sunday, March 11, 2018

மாசி மாதமும் வடாம் பிழிதலும். 6

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
வடாத்துக் கூழ் மகிமை.
+++++++++++++++++++++++++++++++
எல்லோருக்கும் வற்றல் வடாம் பொரித்துச் சாப்பிடுவது எவ்வளவு பிடிக்குமோ அத்தனை
அந்தக் கூழும் பிடிக்கும்.

எங்கள் வீட்டில்  கூழ் கிளறும்போதே, சாப்பிட என்று தனியாக எடுத்து வைப்போம்.
சாயந்திர வேளை டிஃபனுக்கு உதவும்.

ஜவ்வரிசியைக் கிளறி முடித்த பெண்கள், வெந்த பதம் போதுமா என்று கேட்க,
அருகில் வந்து ,கூழின் வண்ணத்தைப் பார்த்தே சரி என்று சொன்னார் ஜயம்மா,.

அடுத்தாற்போல அரைக்க வேண்டியது புழுங்கலரிசி.
சௌபாக்யா க்ரைண்டர் இரண்டு வைத்திருந்தார் ஜயம்மா.
இரண்டு கிலோ அரிசியையும் தனிதனியாக அரைக்க,
செங்கமலம் வேதாவைக் கேட்டுக்கொண்டார்.
இருவருக்கும் கீது நல்ல மசாலா டீ போட்டுக் கொடுத்தார்.
அந்தப் பெண்களும் ஆற அமர உட்கார்ந்து டீயைக் குடித்தனர்.
அரை டஜன் வேஷ்டிகளோடு வந்து சேர்ந்தான் மாது.
பிள்ளைக்கும் டீ கொடுத்த கீது ,வேட்டி கிழியாமல் வந்திருக்கிறதா என்று சோதித்தாள்.

அடுத்த நாளுக்கான வேலைகள் பட்டியலிடப்பட்டன.
1, காலை நான்கு மணிக்கு எழுந்ததும்,
  ஏழெட்டு எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து,
பச்சை மிளகாய் அரைத்து,உப்பு,பெருங்காய ஜலத்துடன்
கலந்து ஜவ்வரிசிக் கூழுடன் கலக்கவேண்டும்.

2,சீனுவும் மாதுவும் தயாராக இருக்கும்
கூழ்களை எடுத்துக் கொண்டு மாடிக்குக் கொண்டுபோகவேண்டும்.

3,செங்கமலம் ,வேதா வந்ததும் அன்றைக்கான சாப்பாட்டு தயாரிப்பு வேலைகளில்
 இறங்க வேண்டும்.
4, சமையல் வேலை முடிந்ததும் மாடிக்கு வந்து மிச்ச வடாம் வகையறாவை பிழிந்து விட்டு
 நிழலில் உட்கார்ந்து  காவல் இருக்க வேண்டும்.
அங்கே சுற்றி மாமரங்கள் ,தென்னை இருப்பதால்
காகம்,அணில் தொந்தரவு நிறைய. கறுப்புத் துணிக்கோ, குடைக்கோ அவைகள் அஞ்சுவதில்லை.
5, பத்துமணி வாக்கில் ,ஜயம்மா,கீது இருவரும் லஸ் சர்ச் ரோடு வீட்டுக்குச் சென்றால்
வேலை முடிய மதியம் ஒரு மணி ஆகும்.
அந்த மாமி அழகாக இலை போட்டு சாதம் பரிமாறும் அழகை நினைத்தே ஜயம்மாவுக்கு
சந்தோஷமாக இருந்தது.
அவர்களிடமே சமையல்காரர்  இருந்தார்.
செய்து பரிமாறிவிட்டுப் போய்விடுவார்.

6, மதியம் வீடு திரும்பி சிரம பரிகாரம்.
மாடியிலிருந்து வேஷ்டிகள்,வற்றல் கனத்தோடு இருப்பதால் இருவர் இருவராகக்
கொண்டு வந்து  அலங்காமல் மடித்து வைக்க வேண்டும். அடுத்த நாள்
 குழம்பு வடாம் செய்ய வேண்டியதுதான்.
எழுதி விட்டு நிமிர்ந்த ஜயம்மா,சீனுவைப் பார்த்து, லஸ் வீட்டிலிருந்து
 ஓலைப் பாய்களை எடுத்து வரமுடியுமா என்றாள்.
ஒரு ஃபோன் இருந்தால் நானே மாமியைக் கேட்பேன்.
என்றதும், சீனு உடனே கிளம்பினார். அரைமணி நேரத்தில் சைக்கிள் ரிஷாவில் ஓலைப் பாய்கள்
வந்திறங்கின.  தொடரும்.


Add caption

பழைய கதை. முதல் கொலு.

வல்லிசிம்ஹன் 1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம்.  இப்போதைய பெரியவர்கள் அப்போது சின்னப் பசங்க:) நவராத்திரி நாட்கள் வந்தன. மகளுக்கு மா...