Follow by Email

Thursday, May 28, 2015

Remembering Appa. May 30.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அப்பா 1921- மே  30  பிறந்த நாள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அப்பா  என் முகம் வாடப் பொறுக்காத  ராமலிங்க ஸ்வாமிகள்.
எங்கள் வீட்டிற்கு  என்  டெபாசிட்  பேப்பர்களில் என் கையெழுத்தை வாங்க அந்தத் தள்ளாத வயசிலும் பஸ்ஸில்
வந்துவிடும்  திடம்.
நான் மனம் பொறுக்காமல் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு விட்டு வருவேன். 
ஏம்மா உன்னை  நான் கொண்டு வந்து விடட்டுமா  என்று நையாண்டி செய்வார்.

எனக்கு மட்டும் இல்லை. என் தம்பி  ,பிகாம்  படிக்கும் போது  எதையெல்லாம் நினைவில் வைக்க வேண்டும் என்பதை  கோடிட்டுக் காண்பித்து ,அவன் நடு இரவில் படித்தாலும் தானும் வராந்தாவில் உலவிக் கொண்டிருப்பார்.
அம்மா  சொல்வார். அப்பாவையே  போய் எழுதச் சொன்னால் எழுதிவிடுவார்  .எனக்குச் சிரிப்பே வரும்.

அவரும் அம்மாவும் பின்னிய வலையில் நாங்கள்   பாதுகாப்பாக
சுகமாக  உலவிக் கொண்டிருந்தோம்..

அப்பா என்கிற அசைக்க முடியாத தூணுக்கு ஒன்றும் ஆகாது என்ற எண்ணத்துக்கு
வயிற்று  அலசர்  முற்றுப்புள்ளி.
வைத்தது. அதையும்  அடக்கி வைத்தார் நல்ல பழக்கங்களால்.
அம்மாவின் மேல்பார்வையில்   அப்பா நலமடைந்தார்.

அவர்களின் ராம  நாமம் அவர்களையும் ராம்னருகில் வைத்து
எங்களையும் காப்பாற்றும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  அருமை அப்பா.

Add caption
உனக்கோ அம்மாவுக்கோ  அதிகம் உதவி செய்திராத  உங்கள் பெண்..

Wednesday, May 27, 2015

கண்ட புதுமுகங்கள் பிட் போட்டி மே மாதத்திற்கு

z ermaat     மலைச் சிகரம் 
பத்திரிகைகள் விற்கும்  பெண்.
தீ அணைக்கும் படை வீரர்களில்   ஒருவர்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பழைய பயணங்களில்  போஸ்  கொடுத்த     வில்லி, நில்லி  
மகாபலிபுரம் ஜிஆர் டி  விடுதியின்   சீஃப்  செஃப் . இவர்களைத்தவிர

ஜெம்மா  என்கிற சிறுமியின் படமும் அனுப்பி இருந்தேன். எல்லாம் கச்சிதமாக எடுத்த படங்கள் என்று சொல்ல மாட்டேன். அதுவும் அந்தப் பத்திரிகைப் பெண் மிக சோகமாக நின்று கொண்டிருந்தார். படம் எடுத்துவிட்டு எனக்குத் தெரிந்த ஜெர்மனி  ல்  மகன் உதவியோடு விளக்கினேன்..  நம் ஊரில் மக்கள்    போஸ் கொடுப்பதே அலாதி.

Saturday, May 23, 2015

முதுமை தனிமை இனிமை

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


முதியோர் இல்லங்கள் ...சீனியர் சிடிசன்ஸ் ஹோம் என்று   பதிவர்கள்
நாங்கள்   ஒரு ஆறெழு  வருடங்கள் முன் நடத்திய  ,எழுதிய பதிவுகள் நினைவுக்கு
வருகின்றன. அப்போது கண்மணி டீச்சர்,துளசிகோபால்,  நான் எல்லோரும்

பதிவர்கள்  எல்லாம் சேர்ந்து ஒரு இடம் தேர்ந்தெடுத்து... ரிஷிகேஷ்  போன்ற இடங்களில்

குடில்கள் அமைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம்  எழுதிக் கொண்ட  நினைவு. அந்தப் பதிவைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஆளுக்கொரு  கணினி,குளிரூட்டப்பட்ட  அறைகள்,அவ்வப்போது  கங்கையில்
குளிப்பு,  சமையல்  கண்டிப்பாகச் செய்யக் கூடாது.
புத்தகங்களும் வேண்டும்.,தினம் பதிவர் சந்திப்பு. கணவர்களைப் பற்றி அப்போது ஏன் மறந்தோம்னு
தெரியவில்லை.

Add caption

Saturday, May 16, 2015

Wedding Anniversaries in May

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மே  17 ஆம் நாள்   எனக்கு  வாழ்வு  கொடுத்த  தம்பதியருக்கு  மணநாள் 
முதலில்  வருவது என் பெற்றோர்.

14 வயது ஜெயலட்சுமியும்   22  வயது நாராயணனும் மனமுவந்து தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட நாள்.

53 வருடங்கள்    ஒரு   பரபரப்பிலாத நீரோடை போன்ற  தெளிவான வாழ்க்கையை   வா ழ்ந்துவிட்டு   ,தந்தை மறையத் தாய் எங்களுக்காக இருந்தாள் .2005இல்   அதே அமைதியுடன்     மறைந்தாள். உலகத்தின்   கருணையே  உருவம் எடுத்த வந்தது போலத் தெளிவான   நினைப்புகளுடன், தீர்க்கமான அறிவுடன்   இருவரும் ஆன்மீக பலத்தை எங்களுக்குக் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள்.

அவர்கள் என்றும் இணைந்திருக்க   இறைவன் அருள் புரிவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் பெற்றொருக்கு  நமஸ்காரங்கள்.
##############################################################


Saturday, May 02, 2015

உள்ளத்தில் குடிகொண்ட உத்தமன்

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
லட்சுமி அன்னையுடன்  வீற்றிருக்கும் பெருமான் என்றும் என் உள்ளத்தில் தங்கி  அருள் புரிவான்.  .இன்று அவனது  அவதார தினத்துக்கு என் உள்ள எண்ணங்களே  அர்ப்பணம் துதி எல்லாம்..  அன்பான தந்தையே  கரையேற்றிவிடு,.  எல்லோரும்  நலமாக இருக்கட்டும்.
முந்தைய பதிவு கீழே
இன்று    அழைத்த குழந்தையின்  வாக்கைக் காக்க அவதாரம செய்தான் எம் பெருமாள் அழகியசிங்கம்.
வைகாசி சுவாதி
மாலை நேரம்.
இந்த வருடம்  சித்திரை சதுர்த்தி அன்றே வருகிறான்.  வேகமாக.

அவனுக்கு வேண்டியது என்ன. பக்தர்களின்'
மாறாத பக்தி.
அண்டசராசாரங்கள்  கிடுகிடுக்க
ஒரு வெற்றித் தூணைப் பிளந்து கம்பீரமாய் வந்த
நரசிங்கா
உன் கருணை எத்தகையது!
என்றும் துணை இருப்பாய்.

சம்சார சாகரத்தில்  அகப்பட்ட  துண்டுகள் நாங்கள்.
துன்பம் வந்தால் மட்டுமே
நரசிம்மா காப்பாத்து  என்று கூவுவோம்.
நீயோ இமைப்  பொழுதும்
எங்களைவிட்டு அகலுவதில்லை.
ஒரு நாள்  ஒரு மணித்துகள் சரணம் சொன்னால்
போதும். நினைத்தால் போதும்.
அபார கருணா சாகரம் நீ.
பெற்றதாய்க்கும் மேலே  உடன்   வந்து காப்பாய்.


அப்பனே  உன்னை என்றும் மறவாமல்  நினக்கும் வரமதை எப்போதும் அளிப்பாய்.
வாயில் உன்நாமம்    ஒலித்துக் கொண்டிருக்கட்டும். சிந்தையில் உன் கருணைமுகம் பதிந்திருக்கட்டும்.
வேறு ஒன்றும் வேண்டாம்.
சிங்கவேள் குன்றம் சிங்கவடிவில் குன்று.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹா சரணம்.
பானகநரசிம்மன்

அஹோ!பிலம்!!!  ஆஹா பாருங்கள் ஒரு குகை.அங்கிருந்து கிளம்பிய சிங்கப் பெருமான்.
அஹோ பலம். என்ன ஒரு வீர்யம்!!! இன்றும் அந்தக்  குகை இருக்கிறது. ஹிரன்யனை வதை செய்யும் கோலத்தில் மஹா உக்ரமாக க் காணக் கொடுக்கிறார் ஒரு நல்ல   தரிசனம்.

கூடவே நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன்.கெட்டவனுக்குத் தான் இந்த கதி என்று சொல்வது போலத் தோன்றும்.

நாங்கள் 1993  இல் அஹோபலம்  சென்ற போது  மேலே காணும்
உக்ரஸ்தம்பத்தின்   அருகில் செல்ல  வழி கடினம். தம்பி சின்னவன் .மேல போய் விடலாம் என்று    சொன்னாலும்,அப்பா மறுத்துவிட்டார்.
கற்கள்,முள். துளிதப்பினாலும் உருளவேண்டியதுதான்.

கீழிருந்துபார்க்கும்போதே    ஒரு சிங்கம் பிடரி மயிர் சிலிர்க்க நிற்பது போல
சிகர    வடிவம்.

அதன் உச்சியில் உக்ரஸ்தம்பம்..
கஷ்டப்பட்டு ஏறினால்   ஸ்தம்பத்தைச் சுற்றி வந்து சேவிக்கலாம்.
அதுதான் நிருசிம்ஹன் அவதாரஸ்தலம் என்றார்கள்.
முதன் முறையாக அப்பாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன்.
'அம்மா எனக்கு முதல் போஸ்டிங்  சிம்மாசலத்தில்தான்.

அப்பொழுதெல்லாம்  இவ்வளவு தீவிர  வழிபாட்டுச் சிந்தனை இருந்ததில்லை. ஸஹஸ்ரநாமம் மட்டும்  தினம் பாராயணம் செய்வேன்.
தாத்தாவின்   முறைகளைப் பின்பற்றி.நினைத்திருந்தால் இந்த   புண்ணிய  இடங்களுக்கெல்லாம் வந்திருக்கலாம். முடியவில்லை 


இப்போழுது உடலில் வலிமை இல்லை. இங்கிருந்தே உன்னைச் சேவிக்கிறேனப்பா என்று கைகூப்பினார்.
அப்பாவும் அம்மாவும் அழைத்துச் சென்றதால் அங்கே போகமுடிந்தது .
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

The Secret Language of Trees