| நிழல் தேடி.... |
ஏப்ரில் மாதம் ஏழாம் தேதியிலிருந்து 15 வரை துபாய் வாசம்.
சென்னையை விட்டுக் கிளம்பு முன்னமே
மண்ணைத் தொட்டுப் பூசிக்கொள்ளும் ஆசை என்
காலுக்கும் முட்டிக்கும் வந்ததால்,
வலிநிவாரண மருந்துகள், சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகள் சகிதம் விமானத்தில் ஏறி
துபாயின் புதிய டெர்மினலில் வந்து இறங்கினோம்.
ஹுசைனம்மா,தக்குடு எல்லோருக்கும்
தந்தி அடித்துவிட்டேன்.:)
மற்றவர்களுக்கு என்னை நினைவில் இருத்திக் கொள்ள வழியில்லை.
வெகு காலமாயிற்று.:)))
துபாயில் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள்.
ஏகப்பட்ட சாலைகள் . வாகனங்கள் .கட்டிடங்கள்.
ஒரு சின்ன ஆணி வாங்க நாசர் சதுக்கத்துக்குப் போனால்
திரும்பி வர நான்கு மணி நேரம் ஆகிறது.
மெட்ரோ சௌகர்யமாக இருக்கிறது.
போன வாரமோ என்னவோ ஒரு பெண் கதவுகளுக்கு நடுவில்
மாட்டிக் கொண்டாராம்.
நினைத்தாலே நடுக்கம்:(
எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை எல்லாக் கோவில்களிலும் கூட்டம்.
எல்லா ஹோட்டல்களிலும் நெரிசல்.
விமானத்தில் ரேடியோ மிர்ச்சி சுசி, பாடகர் ஸ்ரீநிவாஸ், நடிகர் வினீத் (மே மாதம்,சந்திரமுகி)
என்று பல கலைஞர்களைப் பார்க்க முடிந்தது,.
ஸ்ரீனிவாஸ் நின்று என்னிடம் பேசவும் நேரம் எடுத்துக் கொண்டார்.
ஃபெஸ்டிவல் சிடியில் விஜய் டிவியின் நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார்கள்.
இங்கே வீட்டுப் பக்கத்தில் இந்தியன் பள்ளியில்பாடகர். 'எஸ்பி பி' பாடும் நிகழ்ச்சி,.
காற்றினில் மிதந்து வந்த சில துளிகளை ரசிக்க முடிந்தது.
உலகம் எத்தனை சுருங்கி விட்டது!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



