Blog Archive

Sunday, April 10, 2011

இந்த ஏழு நாட்கள் அமீரகத்தில்

நிழல்  தேடி....
 அனைவரும் நலமா.


ஏப்ரில் மாதம் ஏழாம் தேதியிலிருந்து 15 வரை துபாய் வாசம்.

சென்னையை விட்டுக் கிளம்பு முன்னமே

மண்ணைத் தொட்டுப் பூசிக்கொள்ளும் ஆசை என்

காலுக்கும் முட்டிக்கும் வந்ததால்,

வலிநிவாரண மருந்துகள், சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகள் சகிதம் விமானத்தில் ஏறி

துபாயின் புதிய டெர்மினலில் வந்து இறங்கினோம்.

ஹுசைனம்மா,தக்குடு எல்லோருக்கும்

தந்தி அடித்துவிட்டேன்.:)

மற்றவர்களுக்கு என்னை நினைவில் இருத்திக் கொள்ள வழியில்லை.

வெகு காலமாயிற்று.:)))
துபாயில் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள்.


ஏகப்பட்ட சாலைகள் . வாகனங்கள் .கட்டிடங்கள்.

ஒரு சின்ன ஆணி வாங்க நாசர் சதுக்கத்துக்குப் போனால்

திரும்பி வர நான்கு மணி நேரம் ஆகிறது.

மெட்ரோ சௌகர்யமாக இருக்கிறது.

போன வாரமோ என்னவோ ஒரு பெண் கதவுகளுக்கு நடுவில்

மாட்டிக் கொண்டாராம்.

நினைத்தாலே நடுக்கம்:(

எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை எல்லாக் கோவில்களிலும் கூட்டம்.

எல்லா ஹோட்டல்களிலும் நெரிசல்.

விமானத்தில் ரேடியோ மிர்ச்சி சுசி, பாடகர் ஸ்ரீநிவாஸ், நடிகர் வினீத் (மே மாதம்,சந்திரமுகி)

என்று பல கலைஞர்களைப் பார்க்க முடிந்தது,.

ஸ்ரீனிவாஸ் நின்று என்னிடம் பேசவும் நேரம் எடுத்துக் கொண்டார்.

ஃபெஸ்டிவல் சிடியில் விஜய் டிவியின் நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார்கள்.



இங்கே வீட்டுப் பக்கத்தில் இந்தியன் பள்ளியில்பாடகர். 'எஸ்பி பி' பாடும் நிகழ்ச்சி,.

காற்றினில் மிதந்து வந்த சில துளிகளை ரசிக்க முடிந்தது.

உலகம் எத்தனை சுருங்கி விட்டது!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

26 comments:

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை:)!

ஸ்ரீராம். said...

அருமையான படங்கள்.

நானானி said...

அமீரக்கத்தின் செழுமை பிரமிக்க வைக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

துளசி கோபால் said...

ஆஹா...... ஆரம்பம் ஆச்சு!!!!!!!!!

கால்வலி தேவலையா? நேரத்துக்கு மருந்து எடுத்துக்குங்க.

தக்குடு said...

நடை பழகும் சின்னகுழந்தை மாதிரி தொபகடீர்னு கீழ விழவேண்டியது, அதுக்கு அப்புறம் எங்கவீட்டு சிங்கம்தான் அதுக்கு காரணம்!னு அக்ஷதையை அவர் தலைல போடவேண்டியது....:)))

நானும் ஹுசைனம்மாவும் சேர்ந்து "உலகம் சுற்றும் வாலிபி வல்லிம்மாவே வருக! வருக!"னு ஒரு பெரிய கட்-டவுட் அமீரகத்துல வெச்சுருக்கோம், அதை பாத்தேளா?..:))

ஹுஸைனம்மா said...

வல்லிமா, வந்தவுடன் என்னை நினைவு வைத்து மெயில் அனுப்பியது மகிழ்ச்சி. சென்ற முறைபோலவே, இம்முறையும் உங்களைச் சந்திப்பது முடியாததாகிவிட்டது.(என் பெற்றோர் வந்துள்ளனர்) யூ.எஸ். ஸ்லிருந்து திரும்பி, சென்னை போகும் நாளை முன்னமே தெரிவித்தால் திட்டமிட வசதியாக இருக்கும். மறக்காமல் தெரிவியுங்கள்.

நீங்கள் விழுந்தும், தரை உடையவில்லை பாருங்க. நல்ல ஸ்ட்ராங் கட்டுமானம் - உங்கள் காலைப் போலவே என்று சொல்ல ஆசை. :-))))

பிரபலமே
பிரபலங்களைச்
சந்தித்ததே!!
ன்னு கவிதை எழுதலாம்போல!!

தக்குடு அமீரகத்தில்தான் இருக்காரா? என்னை “ஏப்ரல் ஃபூல்” பண்ணிட்டாரே, பழிவாங்கணும், அதான் கேக்கிறேன். :-)))))

இனிய பயணத்திற்கு வாழ்த்துகள் வல்லிமா.

பாச மலர் / Paasa Malar said...

பயணம் சிறக்க வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. அதில் பசுமஞ்சள் படம்தான் நான் எடுத்தது. மற்றவை கூகிள் ஆண்டவர் கொடுத்தார்.:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி. எனக்கும் பார்க்கப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. பிரமை கலையும் முன்
கிளம்பி விடவேண்டும்.வாழ்த்துகளுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இன்னிக்கு மீண்டும் வைத்தியரைப் பார்த்து விட்டு வந்தாச்சு. அவர் அட்வைஸ்
(பாட்டி மாதிரி)காலை நீட்டி வைத்துக் கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்ளச் சொன்னார்:)
வலி போயிடும்பா. துளசி.

சரியாகிவிடும்.
இங்க கோவிலில் வசந்த நவராத்திரிக்கு ஒரு நீலக்கலரில் யானை பார்டர்
போட்ட புடவை ,ஷேராவாலி மாதாவுக்குக் கொடுத்துவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

தக்குடு வரணும் வரணும்.
நீங்களும் ஹுசைனம்மாவும் கொடுத்திருந்த்ய்ஹ ஃப்ளேக்ஸி பானரைப்
பார்த்ததும் அசந்தே போய் விட்டேன்.:)

அதுவும் விமானம் தரையிறங்கினதும் கண்ணில் பட்டதா.!!
பக்கத்து சீட்டுக் குழந்தை பாட்டி உங்களுக்கு வோட் போடணுமா.
நான் இங்க வந்துட்டேனேன்னு கேட்டது:)
இல்லை கண்ணா, உன்கையில இருக்கிற சாக்கலேட் கொடு
போறும்னு வாங்கிக் கொண்டேன்:))
ஆமாம் விழுந்தால் அந்தப் பாவம் முறைப்படி மறுபாதிக்குத்தான் , தெரியாதா.
நம்ம ஊர் வழக்கமே இதுதானே!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஹுசைனம்மா. ஊருக்குத் திரும்ப, (இங்கே)ஆகஸ்ட் கடைசியாகிவிடும்.
கட்டாயம் சொல்கிறேன்.
எப்படியாவது பார்த்து விடலாம். பெற்றொருக்கு
என் அன்பைச் சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மலர்.
நீங்களாவது பக்கத்தில் இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
சென்னை வாருங்கள் அப்போது பார்க்கலாம்.

தக்குடு said...

ஹுசைன்னம்மா, தக்குடு பக்கத்து ஊரான தோஹால இருக்கான், வரும் போது சொல்லுங்கோ! பழிவாங்கலாம் சரியா!..:)))

Thenammai Lakshmanan said...

என் பயண நினைவுகளை தூண்டிவிட்டது .. அமீரகம் அழகுதான்..வல்லி சிம்மன் அப்படியே இருக்கிறது..:))

சாந்தி மாரியப்பன் said...

வழக்கமா வெளிநாட்டுப்பயணம்ன்னா நீங்க வழியை தொலைச்சுட்டு நிக்கறதும் உங்க சிங்கம் கண்டுபிடிக்கறதும்தானே வழக்கம். இதென்ன வழக்கத்துக்கு மாறா, தாய் மண்ணே வணக்கம்ன்னு விழுந்து கும்பிடறதெல்லாம்... நல்லாவேயில்லை, சொல்லிட்டேன்
:-))))))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

என்ஜாய்'ங்க வல்லிம்மா...:))

வல்லிசிம்ஹன் said...

வாங்க தேன். நீங்களும் இங்கே இருந்திருக்கிறீர்களா!மா.
கட்டாயம் உங்களை நினைத்துக் கொள்வேன்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சாரல். இது ரொம்ப டென் மச்:) யாராவது விழுவாங்களா. ;00

இனிக் கவனம் தேவை. சிங்கத்தை விடப் போவதில்லை. கெட்டிய்ய்அகப் பிடித்துக் கொள்வேன்.

ராம்ஜி_யாஹூ said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் எஞ்சாய் மாடிக்கறேன் புவனி.:)

மாதேவி said...

பயணம் இனிதாய் அமையட்டும்.

எல் கே said...

அம்மா உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2011/04/blog-post_17.html

வல்லிசிம்ஹன் said...

Thankyou Ramji ,L.K, mAADHEVI.
We have reached Switzerland,will soon download ekalappai and reply.