Blog Archive

Wednesday, February 12, 2025

ஞாபக மறதி

வல்லிசிம்ஹன்



ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!!
ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை.
மறதி வந்தால் நினைப்பதில்லை.
இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்?


வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் 
பாதிக்கின்றன. 
அல்லாதன மனதில் தங்குவது  அதிகம். 
நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ
என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத 
ஆரம்பித்தேன்...........

பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள்
என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள்
வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான்   வேண்டும்:)

பிறகு அவர்களின் திருமணங்கள்.
இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது.

பிறகுதான்  நினைவுகள் தடம் மாறுகின்றன.
தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான்
மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு 
முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துகளும் கணேஷ், செல்வம் , ஆனந்தி , விஜி என்று நிரம்பும்போது. யாருடைய fரண்ட் யார், என்பதில் எனக்குக் குழப்பம் வரும்:)  இவர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்த பிறகு இன்னும் அதிகம்.  என்னுடைய மறதியைப் பார்த்து அவர்களே நான் தான் மா விஜய் வந்திருக்கேன். மும்பைல இருக்கேன். இன்னோரு விஜய் லண்டனுக்குப் போயிட்டான் என்று அறிமுகப் படுத்திக் கொள்வார்கள்:)இது சுய புராணம்!!!

நினைப்பதும் சில வேண்டாத நிகழ்ச்சிகளை மறப்பதும் மெண்டல் ஹெல்த்துக்கு. மிக நல்லதாம்.  அல்லாத நிகழ்ச்சிகளை. மூளை ஏதோ ஒரு மூலையில் சேர்த்து வைத்து விடுமாம். மன நலம் கெடாமல் இருக்க வேண்டி மறைத்து வைக்குமாம். அப்படி இருப்பதால் தான் நம்மால் பல இழப்புகளிலிருந்து மீள முடிகிறது. 

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி  என்றும் இல்லை"

கண்ண தாசன் சொன்ன படி வாழ்க்கையில் எத்தனை நினைவுகளை
மனம் விழுங்கி விடுகிறது! பல  மகிழ் நினைவுகள் உடலையும் மனத்தையும் வளப்படுத்துகின்றன.   நினைவும் மறதியும் என்றும் தேவை. 










இந்தத் தனிமை அவளுக்குக் குழந்தைகள் பிறந்ததும்
மறைந்தது.
தன் உயிர் மூச்சே அவர்கள்தான் என்று சொல்லும்படி அளவில்லாத
அக்கறையோடு அவர்களை வளர்த்தாள்.




 

No comments: