Showing posts with label Vikas.. Show all posts
Showing posts with label Vikas.. Show all posts

Monday, April 04, 2022

காலம் கை கொடுக்க வேண்டும்.


வல்லிசிம்ஹன்

 அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
அனைவரும் ஆரோக்கியத்துடன் அமைதியுடன் வாழ
இறைவன் அருள வேண்டும்.

  எல்லா நாட்களும்  ஒரே மாதிரி இருப்பது
என்பது இல்லை. இன்று அதுபோல ஒரு தினம். 

நான் பார்த்துப் பிறந்த என் நாத்தனாரின் மகள்  (51)
தன் துணைவரை (52) இறைவனிடம் அடைக்கலம் கொடுத்த செய்தி
என்னுடைய காலை 10 மணிக்கு
வந்தது.

அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.
அந்தக் குழந்தையை என்ன சொல்லித் தேற்றுவது.

இப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்கும் மகள். 
கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கும்
இரண்டாவது மகள்.
டென்னிஸ் விளையாடி விட்டு வந்த கணவர்
நிலையில்லாமல் சரிந்தபோது,
என் நாத்தனார் மகள் தன் வேலை விஷயமாக
மும்பையில் இருந்திருக்கிறாள்.
என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறதோ
அந்த மன்ம்.
அவ்வளவு துடிப்பான, அழகான பெண்.
அன்பு நிறைந்த கணவர். என் நாத்தனார், கணவர் இருவரிடமும்
அத்தனை அன்பும் பாசமும் காட்டியவர்.
நல்ல ஆரோக்கியவான்.

எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம் நாங்கள்.
சென்னையிலும் பங்களூரிலும் பேசிக் கொண்டிருக்கிறேன்.

யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
  கல்லாகச் சமைகிறது மனம்.
இறைவா அந்தக் குழந்தைகளைக்கு 
ஆறுதலாக இரு.

முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...