Blog Archive

Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Saturday, March 08, 2008

குழந்தைகள் பள்ளியில் சந்திக்கும் சில தொந்திரவுகள்












பள்ளி செல்லும் காலம்தான் மிகவும் இனிமையான காலம் என்று இது நாள் வரை நினைத்திருந்தேன்.
எங்கள் நாட்கள் அப்படித்தான்.
இப்போது பாடங்கள் வேற, கட்டாயங்கள் வேறு.
போட்டிகள்.
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
படிப்பு, பாட்டு, விளையாட்டு எல்லாவற்றிலும் கடுமையான போட்டிகளுக்கு நடுவில்
ஜெயிக்க வேண்டிய நிலைமை.
நம் ஊரில் தான் இந்தப் போட்டிகளும் தவிப்புகளும் என்று நினைத்தேன்.
குழந்தைகள் அவர்களுக்கு உண்டான சூழ்னிலையில் பிழைத்து முன்னுக்கு வருவதோடு,
பள்ளியில் தங்களைவிடப் பலசாலிகளிடம்
அடியோ உதையோ பரிகாச வார்த்தைகளோ வாங்க,கேட்க நேர்ந்தால்
வீட்டுக்கு வருகையில் தெரிந்துவிடும்.
அம்மா அப்பாவிடம் சொல்லி அழும்.
மீண்டும் சமாதானப் படுத்தி சமாளித்து அனுப்புவதும் தெரியும்.
கொஞ்சம் மீறினால் நாமே பள்ளிக்கூடத்திற்குச் சென்று
சம்பந்தப் பட்டவர்களிடம் பேசிக் குழந்தைகளுக்கு
இவர்கள் தொந்தரவிலிருந்து விடுதலை கிடைக்க வழி செய்வோம்.

இப்போது புதிதாகத் தெரிய வந்த செய்தி யுஎஸ் ஏ இருப்பவர்களுக்குப் பழைய
செய்தியாகக் கூட இருக்கலாம்,
பள்ளிக்குச் செல்லும் எலிமெண்டரி க்ரேட் பையன்களும் பெண்குழந்தைகளும் இந்த மாதிரி புல்லி(bullies)களிடம்
மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் செய்திகள் நிறைய காதில் விழுகிறது.
சிகாகோ பள்ளியில் இந்தியப் பெண்குழந்தைகளை விட அங்ஏ வரும் மற்ற குழந்தைகள்
இன்னும் அதிக முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கவே,
இவர்கள் நிறமும் நடையுடை பாவனைகளும் இவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையில்
வேற்றுமை தெரிகிறது
வேற்றுக் கிரகத்து மனிதர்களைப் போல நடத்தும் செயல் அதிகமாகி வருவதாக
அங்கிருந்து வந்தவர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
""
நீ ஏன் தலைக்கு எண்ணை வைத்து வருகிறாய்.
நீ போடும் உடைகள் ட்ரெண்டியாக இல்லை.
நீ ஒரு பாட்(bad) பர்சன்"
இதெல்லாம் அவர்கள் இந்தக் குழந்தைகளைப் பார்த்து பிரயோகிக்கும் அஸ்திரங்கள்.


இத்தனைக்கும் அவர்கள் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவிகள்.
இதே போல பையன்களும் அவர்கள் வகுப்பில்
வேறு விதமாக மிரட்டப் படுகிறார்கள். பேசிக் பள்ளியிலோ ,நர்சரி வகுப்புகளிலோ
அனுபவிக்காத சிரமங்களையும் வருத்தங்களையும் இந்தக் குழந்தைகள் சந்திக்கும் போது அளவுக்கதிகமாக கோபம் கொள்ளுகிறார்கள் என்றும்,
அவர்களது மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக தியான வகுப்புகளும் ஆரம்பிக்கப் பட்டு
இந்த்க் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த சமாதான முறையில் இந்தபிரச்சினையை சமாளிக்கக் கற்று வருவதாகவும் சொன்னார்.
இது சம்பந்தமாக் எங்கள் பேரனையும் விசாரித்துப் பார்த்தேன்.

''Yes Paatti, there are some boys who think differently.
and use very bad words and behave cruelly
and they make me angry.''
I just want to take up a wand and make them suffer''
இந்தப் பதில் எனக்கு முதலில் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும்,
அவனது உண்மையான வருத்தம் புரிந்தது.ஏனெனில் அவனும் அங்கே வளர்ந்தவன் தானே.
திடீரென முளைக்கும்
சவால்களை இரண்டு வருடமாக இந்தப் புதுப் பள்ளியில் தான் அவன் பார்க்கிறான்.
இத்தனைக்கும் இந்த குட்டி நெய்பர்ஹூடில் ஒரு ஆறு இந்தியர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் பிள்ளைகளும் வேறு வேறு வகுப்புகளில் அதே பள்ளியில் படிக்கிறார்கள்.

''you are not cool''
இந்த வார்த்தைகள் அவனுடைய ஹாரி பாட்டர் புத்தியை வேறு விதமாக முடுக்கிவிட்டு விட்டு இருக்கிறது.
.
அதன் விளைவு தான் இந்தக் கோபமும், டார்த் வேடர் வேஷமும்,வீர வார்த்தைகளும்..
தினமும் அவனுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன்.
அடுத்த சாக்கர் சீசன் வந்தால் இந்தக் குளிர்கால blue moods குறையும் என்று நம்புகிறேன்.
அந்த ஊரில் உள்ள இந்தியப் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குச் சொன்னால்
கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.:)
வளர்சிதை மாற்றம்???