Showing posts with label அனுபவம்தான். Show all posts
Showing posts with label அனுபவம்தான். Show all posts

Monday, October 15, 2012

வருகிறது நவராத்திரி

பட்டுப் போல பூனைகுட்டிகள்
Aபீங்கானில் பாவைவிளக்கு
டேலியாப்பூ
காலம் மாறுகிறது






முப்பெருந்தேவியரும்  கொலுவிருந்து நம்மைக்காக்கும்   காலங்கள்  இறைவன் உலகைப் படைத்த நாளிலிருந்து நடை பெறுகிறது.
தயை,கருணை,அன்பு,இரக்கம்   எல்லாக் குணங்களும் கொண்ட தாய்களாக
அவர்கள் நம் வீட்டைச் சிறப்பிக்க வருவது இந்த நவராத்தி நாட்களில்.
நவராத்திரி ஐந்து  காலங்களில்  வெவ்வேறு நாமங்களோடு வந்தாலும்  நம் தம்ழ்நாட்டில் இந்த புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுமே கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றன.

அன்னையைர் மூவருக்கும் மூன்று நாட்கள் ஒதுக்கி,முதலில் துர்கா,பிறகு  லக்ஷ்மி தேவி,கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை
ஆவாஹனம் செய்து பிரத்தியேகப் பூகைகள் செய்வதும்


வழக்கம் என்று புகுந்த வீட்டுப் பாட்டி சொல்லிக் கொடுத்தது.

1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம். பெண்ணுக்கு வயது எட்டு.

அவளோ நச்சரிக்க ஆரம்பித்தாள்.
அம்மா கொலு அம்மா கொலு  என்று.
பாட்டி சரின்னு சொன்னால் வைக்கலாம் என்று நல்ல நேரம் பார்த்து(!)
பாட்டியிடம் வரம் கேட்டேன்.
நிறைய பேர் வந்து போகிற இடம்.
இத்தனூண்டு கூடத்தில் எங்கே வைப்பாய்.
உனக்குப் படிகள் கூடக் கிடையாதே.
முதலில் பொம்மை எல்லாம் இங்க இல்லையே .எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டேனே.
ஒரே ஒரு லக்ஷ்மி ,சாயமெல்லாம் போய் ஆனால் மகாக் களையோடு இருக்கிறாள்.
அவளை வைத்து ஆரம்பி. பின் 'மகளே உன் சமத்து என்று ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தார்.
கச்சேரி ரோடு ராஜ கல்யாண  மண்டபத்தில் கொலு பொம்மைகள் வைத்திருக்கிறார்களாம்.
அம்பாள்
குழலூதும் கண்ணன் பளிங்கில்
அங்கே போய்ப் பார்த்து வேலையை  முடி என்று அனுப்பினார்.
பூனைக்குட்டிகள், ஒரு அம்பாள்,இரண்டு பாவைகள்,ஒரு கிருஷ்ணன்   இவை 48 ரூபாயில் வாங்கிவிட்டோம்.
பஸ் சார்ஜுக்கு    ஒரு ரூபாய்,கொறிக்க  வேர்க்கடலை...

சந்தோஷமாகத் திரும்பி வந்தோம்:)

பாட்டியிடம் காட்டினால்
'அடி காமாட்சி என்று முகத்தில் கைவைத்தார்.
இதில மூணு படி எப்படித் தேத்துவே என்றும் கேட்டார்.

பொண்ணொட படிப்பு மேஜை ரெடி
தேநீர் வைக்கும் டீ டேபிள் ரெடி.
கடைசியாக சின்னவனின் உட்காரும் ஸ்டூல்


இவற்றைப் பரபரவென்று ஜன்னலோரம் வடக்குப் பார்த்து வைத்தோம்.
மாமனாரோட சலவை வேஷ்டியைக் கேட்டு வாங்கி வந்தான் பெரியவன்.
 நடு நாயகமாக மஹாலஷ்மி முகம் நிறையப் புன்னகையோடு அமர்ந்தாள்
அவளுக்குப் பக்கத்தில் அம்பாள். அந்தப் பக்கம் சரஸ்வதிபடம்.

இரண்டாம்படிக்கு கிருஷ்ணனும் பாவை  விளக்குகளும் ,சுற்றிவர சின்னவனின் டின்கி  டாய் கார்கள்.

மூன்றாம் படிக்கு பூனைக் குட்டிகளும் இன்ன்னும் கையில் கிடைத்த
குட்டி ப்ளாஸ்டிக் பொம்மைகளும்.

ஈஸி சேரில் சாய்ந்தபடி எங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார் பாட்டி.

இப்ப என்ன.?  கோலம் நைவேத்யம் எல்லாம் வேண்டாமா
என்றார்.
எனக்குத் தெரிந்த மயில் கோலம் அரிசிமாவு,காப்பிபொடி, ராபின் ப்ளு, மஞ்சள் பொடி  குங்குமம்  என்று கலந்து  கோலம் போட்டு ஸ்ரீராமஜயமும் எழுதிவிட்டேன்.

மாமியார் உள்ளே யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
கமலா வா வா,. இந்த நண்டும் சிண்டும் வைத்த கொலுவைப் பார் என்று கூவினார்.
கொலுவா  என்றபடி  வந்த மாமியாருக்கு முதலில் சிரிப்பு வந்தாலும்
கையோடு கேசரி கிளறி
கொலு முன் வைத்தார்.
முதல் முதல் வைத்த கொலு விருத்தியாகட்டும்.
சாயந்திரம்  சுண்டல் செய்துவிடலாம் என்று சந்தோஷமாகச் சொன்னார்:)
அடுத்த பதிவில் இந்நாளைய கொலுவைப் படமெடுத்துப் போடுகிறேன்:))))






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Thursday, September 18, 2008

ஊறுகாயும் பெரிய மனுஷனும்






எலுமிச்சங்காய் ஊறுகாயைப் பத்தின பதிவில்லைம்மா இது.
ஊறுகாயச் சாப்பிட்டவங்களைப் பத்தினது.
எல்லாரும் நல்லா இருக்காங்க. (சாப்பிட்டவங்களைச் சொல்றேன்)
ஊறுகாய்ப் பாத்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்.
பாதிதான் மிச்சம் இருக்கு:)

சாதாரணமா வடுமாங்கா...பாட்டி போட்டது கொடும்மான்னு கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க ரெண்டு பேரன்களும்.
சின்னவனுக்குத் துளி சாறு அவன் சாப்பாட்டில் விட்டாப் போது. பெரியவன் தயிர்சாதத்துக்கு உண்மையாவே ரசித்துச் சாப்பிடுவான்.

மாவடு தீர்ந்து போயிடும் பாட்டி,சீக்கிரம் இன்னோரு ஊறுகாய்ப் போட்டுக் கொடு என்று ஆசையாக் கேட்கிறானெ என்று
மைக்கல்ஸில் வாங்கின எலுமிச்சம்பழங்களில் சிலதை
நீர் எலுமிச்சையும், மற்ற இருபது பழங்களை ஆவக்காய் எலுமிச்சையாகவும் செய்துவிட்டேன்.
தினம் இந்த மூடியைத் திறந்து பார்த்து விட்டு இன்னும் ஊறலையா பாட்டின்னுட்டுப் போய் விடுவான்.
நானும் அவன் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாதே என்று கொஞ்சமாகத்தான் மிளகாய்,கடு எல்லாம் சேர்த்து இருந்தேன்.
அதைப் பரிசோதிக்க நேற்று அவனுக்கு எண்ணம்.
ஒரு சின்ன கப்பில் எடுத்து வைத்துக் கொண்டான்.
ஜஸ்ட் அ லிட்டில் என்று சொல்லிச் சாப்பிட்டுப் பார்த்தான்.
எங்க அவன் அம்மா கையால(சொல்லால) எனக்கு மண்டகப் படியோன்னு பயமா இருந்தது.
ஒரு துண்டு எலுமிச்சையையும் சாப்பிட்டு விட்டு,
அவன் சொல்லிய பாங்கு இருக்கிறதே அதற்காகத்தான் இந்தப் பதிவு:)

பாட்டி இப்ப உனக்கு அது எப்படி இருந்ததுன்னு சொல்லறேன். என்று என் முன்னால் வந்து நின்று கொண்டான்.
ரொம்பக் காரமாயிருக்கும்னு நினைச்சுத்தான் சாப்பிட்டேன்.
ஆனால் ஊறுகாய் அப்படியில்லை.
''You have done an awesome job paatti.

டிஸ்கி...
எல்லா வரிகளுக்கும் லைன் போட்டது நான் இல்லப்பா.

இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)

வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1  கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம்.  எல்லோரும் நல் வாழ்வு ப...