பட்டுப் போல பூனைகுட்டிகள் |
Aபீங்கானில் பாவைவிளக்கு |
டேலியாப்பூ |
முப்பெருந்தேவியரும் கொலுவிருந்து நம்மைக்காக்கும் காலங்கள் இறைவன் உலகைப் படைத்த நாளிலிருந்து நடை பெறுகிறது.
தயை,கருணை,அன்பு,இரக்கம் எல்லாக் குணங்களும் கொண்ட தாய்களாக
அவர்கள் நம் வீட்டைச் சிறப்பிக்க வருவது இந்த நவராத்தி நாட்களில்.
நவராத்திரி ஐந்து காலங்களில் வெவ்வேறு நாமங்களோடு வந்தாலும் நம் தம்ழ்நாட்டில் இந்த புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுமே கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றன.
அன்னையைர் மூவருக்கும் மூன்று நாட்கள் ஒதுக்கி,முதலில் துர்கா,பிறகு லக்ஷ்மி தேவி,கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை
ஆவாஹனம் செய்து பிரத்தியேகப் பூகைகள் செய்வதும்
வழக்கம் என்று புகுந்த வீட்டுப் பாட்டி சொல்லிக் கொடுத்தது.
1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம். பெண்ணுக்கு வயது எட்டு.
அவளோ நச்சரிக்க ஆரம்பித்தாள்.
அம்மா கொலு அம்மா கொலு என்று.
பாட்டி சரின்னு சொன்னால் வைக்கலாம் என்று நல்ல நேரம் பார்த்து(!)
பாட்டியிடம் வரம் கேட்டேன்.
நிறைய பேர் வந்து போகிற இடம்.
இத்தனூண்டு கூடத்தில் எங்கே வைப்பாய்.
உனக்குப் படிகள் கூடக் கிடையாதே.
முதலில் பொம்மை எல்லாம் இங்க இல்லையே .எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டேனே.
ஒரே ஒரு லக்ஷ்மி ,சாயமெல்லாம் போய் ஆனால் மகாக் களையோடு இருக்கிறாள்.
அவளை வைத்து ஆரம்பி. பின் 'மகளே உன் சமத்து என்று ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தார்.
கச்சேரி ரோடு ராஜ கல்யாண மண்டபத்தில் கொலு பொம்மைகள் வைத்திருக்கிறார்களாம்.
அம்பாள் |
குழலூதும் கண்ணன் பளிங்கில் |
பூனைக்குட்டிகள், ஒரு அம்பாள்,இரண்டு பாவைகள்,ஒரு கிருஷ்ணன் இவை 48 ரூபாயில் வாங்கிவிட்டோம்.
பஸ் சார்ஜுக்கு ஒரு ரூபாய்,கொறிக்க வேர்க்கடலை...
சந்தோஷமாகத் திரும்பி வந்தோம்:)
பாட்டியிடம் காட்டினால்
'அடி காமாட்சி என்று முகத்தில் கைவைத்தார்.
இதில மூணு படி எப்படித் தேத்துவே என்றும் கேட்டார்.
பொண்ணொட படிப்பு மேஜை ரெடி
தேநீர் வைக்கும் டீ டேபிள் ரெடி.
கடைசியாக சின்னவனின் உட்காரும் ஸ்டூல்
இவற்றைப் பரபரவென்று ஜன்னலோரம் வடக்குப் பார்த்து வைத்தோம்.
மாமனாரோட சலவை வேஷ்டியைக் கேட்டு வாங்கி வந்தான் பெரியவன்.
நடு நாயகமாக மஹாலஷ்மி முகம் நிறையப் புன்னகையோடு அமர்ந்தாள்
அவளுக்குப் பக்கத்தில் அம்பாள். அந்தப் பக்கம் சரஸ்வதிபடம்.
இரண்டாம்படிக்கு கிருஷ்ணனும் பாவை விளக்குகளும் ,சுற்றிவர சின்னவனின் டின்கி டாய் கார்கள்.
மூன்றாம் படிக்கு பூனைக் குட்டிகளும் இன்ன்னும் கையில் கிடைத்த
குட்டி ப்ளாஸ்டிக் பொம்மைகளும்.
ஈஸி சேரில் சாய்ந்தபடி எங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார் பாட்டி.
இப்ப என்ன.? கோலம் நைவேத்யம் எல்லாம் வேண்டாமா
என்றார்.
எனக்குத் தெரிந்த மயில் கோலம் அரிசிமாவு,காப்பிபொடி, ராபின் ப்ளு, மஞ்சள் பொடி குங்குமம் என்று கலந்து கோலம் போட்டு ஸ்ரீராமஜயமும் எழுதிவிட்டேன்.
மாமியார் உள்ளே யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
கமலா வா வா,. இந்த நண்டும் சிண்டும் வைத்த கொலுவைப் பார் என்று கூவினார்.
கொலுவா என்றபடி வந்த மாமியாருக்கு முதலில் சிரிப்பு வந்தாலும்
கையோடு கேசரி கிளறி
கொலு முன் வைத்தார்.
முதல் முதல் வைத்த கொலு விருத்தியாகட்டும்.
சாயந்திரம் சுண்டல் செய்துவிடலாம் என்று சந்தோஷமாகச் சொன்னார்:)
அடுத்த பதிவில் இந்நாளைய கொலுவைப் படமெடுத்துப் போடுகிறேன்:))))
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
25 comments:
மலர்ந்த நினைவுகளும் கொலுப் பொம்மைகளும் அழகு.
//இந்நாளைய கொலு//
நாளைக்கு அவசியம் வருகிறோம். சுண்டலும் கிடைக்கும்தானே:)?
வாவ்!!!
முதல் கொலுவிலேயே கப்பு அண்ட் ஜிக்கு வந்துவிட்டார்களே!!!!!!
நவராத்ரிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
ஆமாம்...அதென்ன ஐந்து ?
நான் வருசத்துக்கு நாலுன்னுதான் நினைச்சுருக்கேன்.
பாவை விளக்குகள் அந்தக்கால கொலுவில் வைத்தவையா வல்லிம்மா?.
இந்த வருஷக் கொலுவையும் கண்ணுல காட்டுங்க :-)
உங்காத்து கொலுவுக்கு
வரலாமா ?
சுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி.
பின் குறிப்பு: வரலாம் அப்படின்னா உங்க விலாசத்தை ஈ மெயில் லே அனுப்புங்கோ.
அருமையான மலரும் நினைவுகள் வல்லி மா எங்காத்துலேயும் இப்படி தான் முன்னாடி கொலு வைத்தோம் இப்போ படி வாங்கியாச்சு. தம்பி படிக்கட்டு செட் பண்ணறது குள்ளே வைஷ்ணவி படுத்தின பாடு....:)) அந்த படிக்கட்டுகளில் தவழ்ந்து விளையாடி ஒரே அமர்க்களம்.....:))
வாங்க வாங்கராமலக்ஷ்மி. மஞ்சள் குங்குமம் சுண்டல் ரவிக்கை,வளையல்கள் எல்லாம் உண்டு:)
பின்ன! துளசி அப்பவே உங்களை லஸ்ஸில பார்த்திருக்கேனே(கல்யாணப் பரிசு தங்கவேலு)
அதான் அஜ்ஜு புஜ்ஜு ரெண்டு பேரையும் வாங்கிட்டேன்:)
மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள். கொலு படம் பார்க்கக் காத்திருக்கிறேன்.
சிநேகிதி இதழில் எப்ப எப்ப நவராத்திரி. எதுக்காக அப்படின்னு எழுதி இருந்ததைப் படித்தேன். அதுலதான் ஐந்துனு போட்டு இருந்தது!ஆளைவிடுடா சாமி.
நன்னா வரலாம். ஈமெயில் ஐடி அனுப்பறேன் . பாதி கொலுதான் பூர்த்தியாய் இருக்கு.
நமபரும் கொடுக்கிறேன். மாமா மாமி இருவரும் வந்து எங்களைக் கௌரவிக்கணும்.
ஆமாம். அந்தக் கொலு வில் வச்சதுதான் சாரல்.35 வருஷமாச்சு:)
பாதிக் கொலு வச்சுட்டு வந்து உட்கரர்ந்துவிட்டேன். இது போல இதுவரை செய்ததில்லை.முழுசும் வச்சுட்டுப் படம் அனுப்பறேன்.நன்றிமா.
வரணும் சுபாஷினி.புக் ஷெல்ஃப் கொலு வாயிடுத்து.
பொண்ணோட பையன் இங்க வந்திருந்தபோது (2 வயசு) தினம் நானும் கொலுவில் உட்கார்ந்துப்பேன் என்பான்:)
கொலு வாழ்த்துகள்..
கொலு வைக்க முதல் தேவை பொம்மைகளும் படிகளும் இல்லை, ஆர்வம்தான் முதல் தேவை என்று தெரிகிறது. அப்புறம் பொறுமை! :))))
கொண்டாட்டம் ஆரம்பம். வாழ்த்துகள்.
வாங்கப்பா பாசமலர். உங்கள் ஊரிலயும் நவராத்திரி கொண்டாடுவீர்கள் என்று நினைக்கிறேன். இனிய நவராத்திரி வாழ்த்துகள் மா.
வரணும் ஸ்ரீராம்..திருச்சியிலிருந்து மாற்றி வருகையில் கொலுப் பெட்டி லாரியிலிருந்து மிஸ்ஸிங்.பசங்களுக்கு ரொம்ப வருத்தம்.பிரமாதமான பொம்மைகள் இல்லை. பண்ருட்டி ராமர் பட்டாபிஷேக செட் ஒன்றும் அஷ்ட லக்ஷ்மிகள் செட் ஒன்றும் தான்.
நீங்கள் சொல்வதுபோல மனசில் உத்சாகம் இருந்துவிட்டால் ஒரு பொம்மை கூடப் போதும்.நன்றிமா.
வரணும் ஹுசைனம்மா.நவராத்திரி வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
இப்படியேதான் நானும் ஆறுவயதுமகளின் நச்சரிப்புக்கு ஆரம்பிச்சேன்..:)
இப்பயும் அதே விளையாட்டுகொலுவாத்தான் :))
இனிய நினைவுகள்... ரோஷ்ணியும் போன வருடமே கேட்டாள் - கொலு வைக்கலாமென... எங்கள் வீட்டில் வழக்கமில்லை என்பதால் வைப்பதில்லை... அடுத்த வருடமாவது ஆரம்பிக்க வேண்டும் பார்க்கலாம்... :)
சுண்டல் படமாவது போடுங்கம்மா... பார்த்தே சுவைச்சுக்கிறேன்! :)
படங்கள் அழகாக இருக்கிறது... வாழ்த்துக்கள் அம்மா...
நானும் தானம் கொடுத்தது போக மிச்சம் இருக்கும் பொம்மைகளை நேத்து வைச்சிருக்கேன். அப்படியும் ஒரு அட்டைப்பெட்டி(அதிலே என்ன வைச்சிருக்கேன்?) திறந்து பார்க்கலை. ஒரே ஒரு டேபிள் போட்டு சில, பல பொம்மைகள் வைச்சிருக்கேன். இன்னிக்கு என்ன சுண்டல் பண்ணறதுனு யோசனை. போணியாகணுமே, அதோட சுண்டல் கலெக்ஷனும் இருக்குமானு தெரியலை.
ஸ்ரீராம் சுண்டல் கலெக்ஷனுக்கு உங்க பதிவுக்கு வரச் சொன்னார். அதான் வந்தேன். நீங்க என்னடான்னா சுண்டலே கண்ணில் காட்டலை. :P:P:P
கொலு வைக்க ஆரம்பிச்ச கதையை அழகா சொல்லிட்டீங்க.... இந்த வருடம் கொலுவையும் கண்ணில காட்டுங்கோம்மா.
பொம்மையெல்லாம் வாங்கி கொஞ்சம் வைத்திருக்கிறேன். அடுத்த வருடம் ஆரம்பிக்கலாம் என்று எண்ணம். பார்க்கலாம். கடவுளின் செயல்.
இனிய மலரும் நினைவுகள்.
அழகிய உருவங்கள்.
Post a Comment