Showing posts with label மணம். Show all posts
Showing posts with label மணம். Show all posts

Monday, February 11, 2019

இன்னோரு உறவு...1

வல்லிசிம்ஹன்
1971
// Someone else is in your arms tonight
while I am all alone and blue//
பாடல் இசை, ப்ளேயரில் வெள்ளமாக வந்து கொண்டிருந்தது.
ஜன்னல் வழியே அழகிய குன்னூர்  வானத்தை வெறித்துக் கொண்டு
பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் மஹேஷ்.

குழந்தைகளைப் படிக்கச் சொல்லி விட்டு வாயில் விளக்கைப் போடவந்த உஷா

பிடித்தபாடலைக் கேட்கும் ஆர்வத்தில் அறைக்குள் வந்தாள்.
அவள் வந்ததைக் கூட கவனிக்காமல்
அசையாமல் இருக்கும் கணவனை வினோதமாகப் பார்த்தாள்.

பாட்டு முடிந்து ஜிம் ரீவ்ஸின் குரலில் இன்னோரு பாடல் தொடர்ந்தது.
 என்னப்பா ஒரே சோகமாப் பாட்டு வருகிறது.
எனி திங்க் ராங்க். என்று கேட்டபடி அருகில் அமர்ந்தாள்.
ஓ ஒன்றும் இல்லை.
இன்னிக்கு இந்த மூட் என்று பாட்டை நிறுத்தினான்.
அவளை ஏறெடுத்துப் பார்த்தவன் கண்களில் 
காதலோ கனிவோ இல்லை.

உஷா மனம் சட்டென்று உறைந்தது.
ஏதோ சரி இல்லை. ஆனால் இப்போது கேட்கக் கூடாது.
டின்னர் ரெடி. சாப்பிடலாமா என்று கேட்டாள்.
எனக்கு நடக்க வேண்டும் போல் இருக்கு.
நீயும் குழந்தைகளும் சாப்பிடலாமே என்றபடியே
ஜாக்கெட் எடுத்துக் கொண்டு , காலுறை பூட்ஸ் போட்டு 
வெளியே நடந்துவிட்டான்.

அவன் மேஜையைச் சுற்றி வந்தவள் கண்களில்
பட்டதெல்லாம் மேலாண்மைப் படிப்பு சம்பந்தமான
புத்தகங்களும் இசைத்தட்டுகளும் தான்.
தொலைபேசி ஒலிக்க அதை எடுத்து ஹலோ
என்றாள். ஹல்லோ உஷா, எங்கள் வீட்டுக்கு ஏன் வரவில்லை.
வெள்ளிக்கிழமைதானே ,ரிலாக்ஸ் செய்யலாமே.
நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என்று இனிமையான
பெண் குரல் ஒலித்தது.
இண்டு ஃபில்ம்ஸ் தயார் செய்யும் அரசு அலுவலக
ஜெனரல் மானேஜரின் மனைவி காந்தா.

தனக்குத் தெரியாது என்று சொல்லாமல் இல்லாத தலைவலியின் 
மேல் பாரத்தைப் போட்டுவிட்டு
இன்னோரு தடவை பார்க்கலாமே என்று இன்னும் 
இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிட்டாள்.

என்ன ஆச்சு இவருக்கு  ...இரண்டு வாரமாக எதோ பறி 
கொடுத்த மாதிரி இருக்கிறாரே.வேலை யில் ஏதாவது தொந்தரவா. அதுக்கும் வீட்டில் சோகமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம். எப்போதும் என்னிடம் சொல்பவர் இப்போது மௌனமாக இருப்பது  ஏன் .
மனம் வருத்தப்பட,சட்டென்று சுதாரித்துக் கொண்டு 
குழந்தைகளை சாப்பிட அழைத்தாள் 


முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...