Monday, February 11, 2019

இன்னோரு உறவு...1

வல்லிசிம்ஹன்
1971
// Someone else is in your arms tonight
while I am all alone and blue//
பாடல் இசை, ப்ளேயரில் வெள்ளமாக வந்து கொண்டிருந்தது.
ஜன்னல் வழியே அழகிய குன்னூர்  வானத்தை வெறித்துக் கொண்டு
பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் மஹேஷ்.

குழந்தைகளைப் படிக்கச் சொல்லி விட்டு வாயில் விளக்கைப் போடவந்த உஷா

பிடித்தபாடலைக் கேட்கும் ஆர்வத்தில் அறைக்குள் வந்தாள்.
அவள் வந்ததைக் கூட கவனிக்காமல்
அசையாமல் இருக்கும் கணவனை வினோதமாகப் பார்த்தாள்.

பாட்டு முடிந்து ஜிம் ரீவ்ஸின் குரலில் இன்னோரு பாடல் தொடர்ந்தது.
 என்னப்பா ஒரே சோகமாப் பாட்டு வருகிறது.
எனி திங்க் ராங்க். என்று கேட்டபடி அருகில் அமர்ந்தாள்.
ஓ ஒன்றும் இல்லை.
இன்னிக்கு இந்த மூட் என்று பாட்டை நிறுத்தினான்.
அவளை ஏறெடுத்துப் பார்த்தவன் கண்களில் 
காதலோ கனிவோ இல்லை.

உஷா மனம் சட்டென்று உறைந்தது.
ஏதோ சரி இல்லை. ஆனால் இப்போது கேட்கக் கூடாது.
டின்னர் ரெடி. சாப்பிடலாமா என்று கேட்டாள்.
எனக்கு நடக்க வேண்டும் போல் இருக்கு.
நீயும் குழந்தைகளும் சாப்பிடலாமே என்றபடியே
ஜாக்கெட் எடுத்துக் கொண்டு , காலுறை பூட்ஸ் போட்டு 
வெளியே நடந்துவிட்டான்.

அவன் மேஜையைச் சுற்றி வந்தவள் கண்களில்
பட்டதெல்லாம் மேலாண்மைப் படிப்பு சம்பந்தமான
புத்தகங்களும் இசைத்தட்டுகளும் தான்.
தொலைபேசி ஒலிக்க அதை எடுத்து ஹலோ
என்றாள். ஹல்லோ உஷா, எங்கள் வீட்டுக்கு ஏன் வரவில்லை.
வெள்ளிக்கிழமைதானே ,ரிலாக்ஸ் செய்யலாமே.
நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என்று இனிமையான
பெண் குரல் ஒலித்தது.
இண்டு ஃபில்ம்ஸ் தயார் செய்யும் அரசு அலுவலக
ஜெனரல் மானேஜரின் மனைவி காந்தா.

தனக்குத் தெரியாது என்று சொல்லாமல் இல்லாத தலைவலியின் 
மேல் பாரத்தைப் போட்டுவிட்டு
இன்னோரு தடவை பார்க்கலாமே என்று இன்னும் 
இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிட்டாள்.

என்ன ஆச்சு இவருக்கு  ...இரண்டு வாரமாக எதோ பறி 
கொடுத்த மாதிரி இருக்கிறாரே.வேலை யில் ஏதாவது தொந்தரவா. அதுக்கும் வீட்டில் சோகமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம். எப்போதும் என்னிடம் சொல்பவர் இப்போது மௌனமாக இருப்பது  ஏன் .
மனம் வருத்தப்பட,சட்டென்று சுதாரித்துக் கொண்டு 
குழந்தைகளை சாப்பிட அழைத்தாள் 


19 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான இடத்தில நிறுத்தி இருக்கிறீர்கள். தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஸ்ரீராம். இனிய மாலை வணக்கம். எங்களுக்குத் தெரிந்த நல்ல குடும்பம் .
ஊட்டியில் இருந்தார்கள். நகரிலிருந்து தள்ளி இருக்கும் வனப் ப்ரதேசத்தில்
அழகான பங்களோ.

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாரஸ்யம்.... மேலே தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், எழுதுகிறேன். சம்சார சாகரம். நன்றி மா.

கோமதி அரசு said...

உறவுகளில் தான் எத்தனை எத்தனை கதைகள் ஒளிந்து இருக்கிறது.

கேட்ட படித்த விஷயங்களை அழகாய் கதையாக கொண்டு வரமுடிவது வரம்.
தொட்ர்கிறேன்.

Geetha Sambasivam said...

பழைய நினைவுகளில் ஆழ்ந்த மஹேஷ்? உண்மை தெரியாத உஷா? முடிவுக்குக் காத்திருக்கேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

காத்திருக்கிறேன்
தொடருங்கள்

நெல்லைத்தமிழன் said...

ரொம்ப நல்லா இருக்கு. முக்கியமான நேரத்துல 'தொடரும்' போட்டிருப்பதுதான் பிடிக்கலை. ஹா ஹா ஹா

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம் அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

ரிப்ளை கமெண்ட் ஸ்கிரிப்ட் மாற்ற வேண்டும் அம்மா... தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...

WhatsApp No. :- 09944345233 or dindiguldhanabalan@yahoo.com

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி வாழ்க வளமுடன். வித்தியாசமாக முடிந்த சம்பவம்.
எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் அந்த 71 ஆம் வருட காலம்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தீவு என்பதை நிரூபித்தவர்கள்
இருவரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. பலபல வித்தியாசமான சம்பவங்கள் கொண்டது
எங்கள் குடும்பம்.
எனக்கு தான் புதிதாக இருந்ததே தவிர
மற்றவர்கள் ஏற்றுக் கொண்டுதான் இருந்தார்கள்.
குடும்பத்துள் இருந்த ஒற்றுமை என்னை வியக்க வைக்கும்.
ஆஜிப் பாட்டியின் விசால மனப்போக்கு அதிசயிக்க வைக்கும்.விருந்தினர் வந்திருந்ததால் எழுத முடியவில்லை. இன்று எழுதப் பார்க்கிறேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தை ஜெயக்குமார். வருகைக்கு மிக நன்றி மா.
தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன். கதையில் எல்லாமே முக்கிய சம்பவங்கள் தான்.
புரிதலும் இருவருக்குள்ளும் அதிகம்.
பெருந்தன்மையும் அதிகம்.
உங்களுக்குப் பிடித்திருந்தது என்பதே எனக்கு நன்மை.
இன்று எழுதப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன். உங்கள் ஐடிக்கு மெயில் அனுப்புகிறேன்.

நீங்கள் சொல்வதை நான் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அது சுலபமாகிவிடும்.

Angel said...

மகேஷ் உஷா ! ஆச்சர்யக்குறியா கேள்விக்குறியா என்பதை அறிய தொடர்கிறேன் அடுத்த பகுதிக்கு

வல்லிசிம்ஹன் said...

சில குடும்பங்களீல் இது கேள்விக்குறி அன்பு ஏஞ்சல். புரிதல் தப்பாகப்
போகும்போது விரிசல் வருகிறது. இணைப்பு நீடிக்குமா என்கிற
சந்தேகமும் வருகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

கதையில் ஏதோ இருக்கிறது என்பது தெரிகிறது. என்னவாக இருக்கும் அடுத்த பகுதிக்குப் போகிறோம்...

கீதா" ஹப்பா இப்படி கொஞ்சம் தாமதமாக வந்ததும் ஒருவிதத்தில் நல்லதா போச்சு...ஹா ஹா ஹா ஹா பின்ன அடுத்த பகுதி வர வரைக்கும் காத்திருக்கனுமே மண்டை குடைந்து என்னவாக இருக்கும்னு...இதோ மற்ற பகுதிக்கும் போய் வாசித்து விட்டு வரேன் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு உங்கள் எழுத்து நடையும் அம்மா..சூப்பர்!!!! அருமையான கதை சொல்லி!!!!

துளசிதரன், கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி அண்ட் கீதா,
ஏதோ இருப்பதால் தான் எழுதத் தோன்றியது.
ஒரு விதக் கட்டாயத்தால் குடும்பத்தில் இருப்பவர்கள் நிறைய.

பிரிபவர்களுக்குத் தகுந்த ஆதாரமும் தெளிந்த மனமும், தாக்குப் பிடிக்க
தைரியமும் இருந்தால் பிரிவு கட்டாயம் நிகழ்கிறது.

அன்பினால் கட்டுண்ட மனைவி இருந்தால் குடும்பம் தழைக்கிறது.
நன்றி டா கீதா

அதே அதே.