![]() | |
| கருடாழ்வார் |
என் பெயர் ரேவதி நரசிம்ஹன். வலைப்பெயராக 'வல்லிசிம்ஹனை'த் தேர்ந்தெடுத்து
2006 ஆம் வருடம் ஏப்ரில் 26 ஆம் தேதி தமிழ்மணத்தில் இணைந்தேன்.
தமிழ் எழுத்துரு தரவிறக்கம் செய்யும் முறை தெரியாமல் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன்.
திரு மஞ்சூர் ராஜா அவர்கள் ஈமெயில் மூலமாகவே என்னை இ கலப்பைக்குப் பழக்கப் படுத்தினார்.
பிறகு கிடைத்த நண்பர்கள் துளசி கோபால், கீதா சாம்பசிவம்
இவர்கள் உதவியுடன் தமிழ்மணத்தில் இணையும் வழி கிடைத்தது.
பலவித பெயர்களில் வலைப்பூக்களை ஆரம்பித்து இப்போது
'நாச்சியார்" மற்றும் " புகைப்படப்பயணங்கள்"
வலைப்பூக்களில் எழுதி வருகிறேன்.
அஞ்சல் அலுவலகத்தில் பணி புரிந்த தந்தை திரு.நாராயணன். அவரது திருமதி, ஜயலக்ஷ்மி இவர்களுக்கு 63
வருடங்களுக்கு முன்பு பிறப்பு.
தந்தையின் அலுவல் நிமித்தமாக தென் மாவட்டங்கள் பலவற்றிலும்
படிப்பு தொடர்ந்தது.
திண்டுக்கல்லில் பள்ளி இறுதி முடிந்ததும் ,சென்னையில்
கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்து,அடுத்த வருடம் 1966ல் திருமணத்தில்
முடிந்தது.
இரு மகன்களும் ஒரு மகளும் கிடைத்த செல்வங்கள்.
கணவர் நரசிம்ஹனின் வேலையின் பலனாக மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை
பல நகரங்களுக்குச் செல்ல நேர்ந்தது.
1976இல் சென்னைக்கு நிரந்தரமாகக் குடி வந்தோம்.
35 வருடங்களுக்குப் பிறகு திருமணமான மகன்களும் மகளும் எங்களைப்
பார்க்கவரும் நாட்களை எதிர்பார்த்து வாழ்க்கை நடக்கிறது.
பிள்ளைகள் வீட்டை விட்டுக் கிளம்பியதும் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பக் கணினி கிடைத்தது.
டயல் அப் மோடம்,விஎஸ்என் எல் என்று இருந்த போது ப்ராட்பாண்ட் வந்தது. பிறகு
இணையம், சில வருடங்களுக்குப் பிறகு தமிழ் எழுத வாய்ப்பு வலைப்பூ வழியாக.
இப்பொழுது நட்சத்திரமாக வலம் வர வாய்ப்பு.
உங்கள் நேரத்தை இதற்கு மேல் எடுத்துக் கொள்ள விரூப்பம் இல்லை.
இந்த வாரத்தில் எல்லோருக்கும் சுவையானதாக என் எழுத்து இருக்க உங்கள் வாழ்த்துகளை
வேண்டி, பூர்த்தி செய்கிறேன்.

