Blog Archive

Monday, October 17, 2011

நானும் ஒரு நட்சத்திரம்

கருடாழ்வார்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
என் பெயர் ரேவதி நரசிம்ஹன். வலைப்பெயராக 'வல்லிசிம்ஹனை'த் தேர்ந்தெடுத்து
2006  ஆம்  வருடம் ஏப்ரில் 26 ஆம் தேதி  தமிழ்மணத்தில் இணைந்தேன்.

தமிழ் எழுத்துரு தரவிறக்கம் செய்யும் முறை தெரியாமல் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன்.
திரு மஞ்சூர் ராஜா  அவர்கள் ஈமெயில் மூலமாகவே என்னை இ கலப்பைக்குப் பழக்கப் படுத்தினார்.
பிறகு கிடைத்த நண்பர்கள் துளசி கோபால், கீதா சாம்பசிவம் 
இவர்கள் உதவியுடன் தமிழ்மணத்தில் இணையும் வழி கிடைத்தது.

பலவித பெயர்களில் வலைப்பூக்களை ஆரம்பித்து இப்போது
'நாச்சியார்"  மற்றும்  " புகைப்படப்பயணங்கள்"
வலைப்பூக்களில் எழுதி வருகிறேன்.
அஞ்சல் அலுவலகத்தில் பணி புரிந்த தந்தை திரு.நாராயணன். அவரது திருமதி, ஜயலக்ஷ்மி இவர்களுக்கு 63
 வருடங்களுக்கு முன்பு பிறப்பு.
தந்தையின் அலுவல் நிமித்தமாக தென் மாவட்டங்கள் பலவற்றிலும்
படிப்பு தொடர்ந்தது.
திண்டுக்கல்லில் பள்ளி இறுதி முடிந்ததும் ,சென்னையில்
கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்து,அடுத்த வருடம் 1966ல் திருமணத்தில்
முடிந்தது.

இரு மகன்களும் ஒரு மகளும் கிடைத்த செல்வங்கள்.
கணவர் நரசிம்ஹனின் வேலையின் பலனாக மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை
பல நகரங்களுக்குச் செல்ல நேர்ந்தது.
1976இல் சென்னைக்கு நிரந்தரமாகக் குடி வந்தோம்.
35 வருடங்களுக்குப் பிறகு திருமணமான மகன்களும் மகளும் எங்களைப்
பார்க்கவரும் நாட்களை எதிர்பார்த்து வாழ்க்கை நடக்கிறது.

பிள்ளைகள் வீட்டை விட்டுக் கிளம்பியதும் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பக் கணினி கிடைத்தது.
டயல் அப் மோடம்,விஎஸ்என் எல் என்று இருந்த போது ப்ராட்பாண்ட் வந்தது. பிறகு
இணையம், சில வருடங்களுக்குப் பிறகு தமிழ் எழுத வாய்ப்பு வலைப்பூ  வழியாக.

இப்பொழுது நட்சத்திரமாக  வலம் வர வாய்ப்பு.

உங்கள் நேரத்தை இதற்கு மேல் எடுத்துக் கொள்ள விரூப்பம் இல்லை.
இந்த வாரத்தில் எல்லோருக்கும் சுவையானதாக என் எழுத்து இருக்க  உங்கள் வாழ்த்துகளை
வேண்டி, பூர்த்தி செய்கிறேன்.

21 comments:

geethasmbsvm6 said...

நக்ஷத்திரம் பிரகாசமாய் ஜொலிக்க வாழ்த்துகள்.

geethasmbsvm6 said...

தொடர

கோமதி அரசு said...

வாருங்கள் அக்கா, தமிழ்மண நட்சத்திரமாய் ஜொலிக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் .

துளசி கோபால் said...

ஆஹா ஆஹா ஆஹா...........

ஜமாய் ராணி ஜமாய்.

இனிய நல் வாழ்த்து(க்)கள்.

பொழுதுவிடிஞ்சு வந்து வந்து எட்டிப் பார்த்துக்கிட்டே இருந்தேன்:-)

ராமலக்ஷ்மி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, இன்னும் தமிழ்மணம் முகப்பிலியே வரவில்லை. நீங்கள் வாழ்த்துச் சொல்ல விரைந்துவந்து
விட்டீர்கள்.
மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கை கோமதிக்கு என் அன்பு நன்றிகள். சரியாக எழுத வேண்டுமே என்ற படபடப்பு இருக்கிறது. தேறிவிடுவேனா:)
நன்றிம்மா.

Unknown said...

வல்லியம்மா, எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு நீங்க நட்சத்திரம் ஆனதில், என்னவோ நானே ஆனாற் போல! நட்சத்திரத்துக்கு நமஸ்காரங்கள்; மனமார்ந்த வாழ்த்துகள்!

நீங்கள் அருமையாய் இந்த வாரத்தை பிரகாசிக்க வைக்க வாழ்த்துகளும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி நீங்கள் இல்லாமல் நான் எப்படி ஜமாய்க்க முடியும் குறை நிறை பார்க்காமல் நட்புக்காகவே பிறந்திருக்கும் தங்கைகள் நிறைந்த
இடம் இல்லையா. ஜொலிக்கலாம்!!

பாச மலர் / Paasa Malar said...

நட்சத்திர வாழ்த்துகள்...

மாதேவி said...

நட்சத்திரம் ஒளிர்கின்றது...

நல் வாழ்த்துக்கள்.

geethasmbsvm6 said...

வல்லி, நான் தமிழ்மணம் பக்கம் வந்தே பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னோட ப்ளாகில் அப்டேட் ஆகி இருந்தது அதிசயமா. அதான் உடனே தெரிந்தது. மீண்டும் வாழ்த்துகள்.

கவிதா | Kavitha said...

வல்லிஜி , வாழ்த்துக்கள் ! :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாசமலர்,
கீதாமா,
அன்பு துரை,
அணிலை விட்டு வந்த கவிதாமா,
அன்பு மாதேவி
அனைவருக்குமென் நன்றிகள் மா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திரமே நட்சத்திரமே மின்னிப்பிரகாசிக்க இன்னோரு வானமா..:))
வாழ்த்துக்கள்..

ஜோதிஜி said...

இன்று தான் வரமுடிந்தது. எங்கள் வாழ்த்துகள்.

sultangulam@blogspot.com said...

நட்சத்திர வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு முத்து கவிதையால வாழ்த்திட்டீங்க.
அம்மாவுக்கு ஏத்த நல்ல பொண்ணு. நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜோதி ஜி.
எப்ப வந்தால் என்னமா.
வாழ்த்தணும்னு தோன்றுகிறதே அதுவெ நல்ல முனைப்பு இல்லையா.
மிக மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுல்தான் இன்றுதான் நாம் அமீரகத்தில் சந்தித்ததைப் பதிவிட நினைத்தேன்.
அன்பு நினைவுகளை மறக்காமல் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றிப்பா.

Anonymous said...

வணக்கம்

இன்று உங்களின் வலைப்பக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் அருமையான பதிவு உங்களின் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/02/6.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-