சேலத்திலிருந்து கோவை வரும் வழியில்
நல்ல விலை கொடுத்து வாங்கிய ஹாமர்மாஸ்டர்
டபிள் ஃப்ளாஸ்க் உடைந்தது.இரண்டு வாக்வம் ஃப்ளாஸ்க் கொண்ட
நல்ல சாதனம். ஒன்றில் வென்னீர், மற்றொன்றில்
சில்லென்ற பால்.
எப்படி உடைந்தது என்று கேட்கக் கூடாது:)
கோவை வந்து பார்க்கும் போது ஃப்ளாஸ்க் இருக்கவேண்டிய இடத்தில் தூள்கள்
இருந்தன.
சிங்கத்தின் நல்ல குணம் எப்போதும் உதவியாக இருக்கும்.
யார்கையிலும் குத்தவில்லை. காயம் இல்லை
அதைத் தூக்கிப் போடும்மா என்று
அடுத்த இரண்டு குடுவைகள் வாங்கியாகிவிட்டார்.
அடுத்த நாள் காலை உணவுக்கு அப்புறம் உதகை மண்டலம்
வந்தோம். டிசம்பர் மாதக் குளிரும்
மழையும் வரவேற்றன.
இரண்டு குழந்தைகளுக்கும் ஸ்வெட்டர் மாட்டி விட்டு
டிராவலர்ஸ் பங்களோவில் முன்பதிவு செய்திருந்த
அறைக்கு சென்றோம்.
அப்போது தமிழ் நாடு கெஸ்ட் ஹௌஸ் என்று சொல்வோம்.
அங்கிருந்த உணவுக் கூடம் அப்போது
நல்ல புகழ் பெற்றது.
அதில் தலைமை பொறுப்பில் இருந்தவரும் சிங்கத்துக்குப்
பழக்க மானவர். அவர்களின் வண்டிகள்
சேலத்துக்குத் தான் வரும். உரிய உபசாரம் செய்து
நல்ல வாகனங்களாகத் திரும்பிச் செல்லும்.
தம்பியும் இவரும் , குழந்தைகளுக்குச் சூடான பருப்பு சாதம்
தயார் செய்து கொண்டுவந்தார்கள்.
எங்களுக்குக் காப்பியும்,மாலை வேளைக்கான
மசால் தோசையும் வந்தன.
இந்தப் பயணத்தில் நடந்த ஒரு செய்தியை முன்பே
ஒரு கதையில் சொல்லி இருந்தேன்.
ஒரு குடகு நாட்டுப் புதுமணமக்களின் கதை:)
எங்கள் வாழ்வில் சாகசங்களுக்கும்
சுவாரஸ்யங்களுக்கும் குறையே இல்லை:)
As requested by Nellai Thamizhan .@ Mural Seshan
here are the links.
https://naachiyaar.blogspot.com/2022/01/blog-post_5.html
https://naachiyaar.blogspot.com/2022/01/blog-post_4.html