அனைவருக்கும் ஆவணித் திங்கள் பொன்னோண வாழ்த்துகள். ஓண சத்யா சாப்பிடும்போது மகிழும் அனைத்துக் குடும்பங்களும் இதே போல என்றும் ஒற்றுமையாக இருக்க அந்த மாபலியையும், திரிவிக்கிரமனையும் பிராத்திக்கிறேன்.அடுத்து வருவது ரக்ஷாபந்தன் எனப்படும்
சகோதர சகோதரிகளுக்கான பந்தக் கயிறு. பாச நூல். நம்மிடம் அந்தப் பழக்கம் இல்லாவிட்டாலும்.,
அனைத்துச் சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பரிசுகள் பெறும் சகோதரிகளுக்கும் அன்புகள். பாசம் விட்டுப் போகாமல் ஒன்றுபட்டு இருக்கவேண்டும்.
குற்றம் குறை இல்லாத சுற்றம் ஏது.
அனைத்தையும் போக்கும் அந்த இறைவன் நம் எல்லோரையும் பாதுகாக்கட்டும்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

