Blog Archive

Sunday, November 30, 2014

Zermaat 2 ஸெர்மாட் பயணம்.

Add caption
Wilhelm  Tell
Luzern top
william tell

.

நாங்கள் செர்மாட் எக்ஸால்சியர் எனும் விடுதியில் மாலை 4மணிக்குப் போய்ச்சேர்ந்தோம்.

சுமாரான் மூன்று நக்ஷத்திர விடுதி.

கொஞ்சம் சிறியதோ என்று தோன்றியது.படிகள் ஏறி அறையை அடைந்தோம்.

அறையா கியூபிகிளா என்னும் படி சந்தேகம் வந்தது. இத்தனை காசு கொடுத்து இத்தனூண்டு இடத்திலா, என்று யோசித்தபடி

அங்க்கிருந்த ஒரேஒரு நாற்காலியில் அப்பாடி என்று உட்காரப்

போனேன்.

அம்மா ஒரு நிமிசம்னு"" மகன் சொல்லுவதற்கும் முன் கையோடு கால் வந்துவிட்டது.

தடால்....

சே,னு போயிட்டது.

அம்மா தரையில் திடீரென்று உட்கார்ந்த அதிர்ச்சியிலிருந்து

மகன் மீளுவதற்குமுன்னால் அப்பா கட்டிலில் உட்கார்ந்தாச்சு.

கட்டில் இன்னோரு டமால் ஒரு பக்கமாகச் சரிந்தது.

நம்ம சிங்கம் உஷார் சிங்கம்.உடனே சமாளித்து எழுந்தாச்சு.

மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் தெரியும்.

சுவரோடு சுவராகக் கட்டில் இருக்கும்.தலைக்கு

மேலெ பாதி சுவர் ஜன்னல்.

அது வழியாக அறுபத்துமூவர் கும்பல் மாதிரி ஒரே சத்தம்.

அதுசரி!!!! சந்தோஷமா இருக்கத்தானே வந்து இருக்கிறார்கள்.!!!!

நமக்கு விழுந்த அதிர்ச்சியில் பாலும் கசந்ததடின்னு

பாட்டு வருது.
மேடராவது ஹார்னாவது.போப்பா சரிதான்னு

தோன்றியது.

இத்தனை குட்டி அறைக்கு 200  ஃப்ரான்க்  வாடகை.அட்டாச்சிடு  பாத்ரூம் இருக்காம்.

நம்ம ஆகிருதியோ சைட்வேஸ்ல

கூடப் போகமாட்டேன் என்கிறது. எப்படியோ சமாளித்து கிடைத்த காபியை முழுங்கிவிட்டு வெளியே வந்தோம்.

இங்கெ ஒரு சுவையான செய்தி என்னன்னால் புகையே கிடையாது.

மனுஷப்புகை பற்றி சொல்லவில்லை. வாகனப்புகையைச் சொல்கிறேன்.

போக்குவரத்து என்பது குதிரை வண்டியில்,இல்லாவிட்டால் மின்சாரக் காரில்.

சுற்றுப்புறத் தூய்மைக்காக இந்த ஏற்பாடாம்

ஆனால் இந்தக் குளிருக்கு மனிதர்களின் சிகரெட் புகை அதிகம்.

மலைக்குப் போவதற்குத் தனி ரயில். உச்சியை அடைந்த கணம்

மறக்கமுடியாத தருணம்.அப்படி ஒரு உயரம்,கம்பீரம்.

சூரியன் சிகரத்தில் விழும் ஒளி கண்கூசவைக்கும் ஜாலமாக

இருந்தது.

அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ

தொடர்பு கொள்ளவோ முயலுவதாகத் தோன்றியது.அது எல்லோருக்கும்

நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.
 இந்த அழகும் மேன்மையும் நம் எவரெஸ்ட்,கைலாச பர்வதம்,கங்கை நதி

,ஹரித்வார் இந்த இடங்களிலும் இயற்கையோடு சேரும் , ஐக்கியமாகும்,அந்த உணர்வு நம்மை மேன்மைப்படுத்துகிறது.

கொஞ்ச நேரத்தில் சூழ்ந்த மேகங்களும், பனித்திரையும்

மற்ற எதையுமே பார்க்க முடியவில்லை.

அன்றைய வெதர்மேன் எண்ணம் அப்படி.!!

கீழே இறங்கி வந்ததும் சாப்பாடு நினைவு வந்தது.

இவர்கள்தான் எட்டு மணிக்குக் கடைகளை மூடிவிடுவார்கள்.

அதற்குள் நமக்கு வேணும் என்கிற மரக்கறி உணவு கிடைக்கவேண்டுமே

என்ற கவலை.

திறந்த கடை ஒன்றில் வெறும் சாண்ட்விச் கேட்டோம்.

அந்த அம்மாவுக்கு அது பெரிய ஆர்டராகத் தோணவில்லை.

இரண்டு நிமிஷத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள்.

திறந்து பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி.

ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.

அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.

இருந்தபசியில் கண்மண் தெரியாமல் கோபம்.

என்ன செய்வது. சரிம்மாசாதா ப்ரெட் இருந்தாக் கொடுதாயேனு கேட்டு வெண்ணையும் தயிருமாய் இரவு உணவை முடித்தோம்.

நாங்கள் சென்ற காலம் அங்கே அவ்வளவு குளிர் இல்லை.

காலையில் எழுந்து இலவச காலைச்சாப்பாடும் காப்பியும் சாப்பிட்ட கையோடு க்ளேசியர் எக்ஸ்ப்ரஸ் வண்டியைப் பிடித்து

 ஆல்ப்ஸ் மலைகளின் ஊடே அது சென்ற வேகத்திலும்,நடுவில் வந்த குகைளின்

அற்புதத்திலும்,

இத்தனை திடமான ரயில்பாதை மலைகளுக்குள்ளே

அமைத்த ஸ்விஸ் எஞ்சினீயர்களின் அதிமேதாவித்தனத்தையும்,

உழைப்பையும் அதிசயத்தவாறே வில்லியம்டெல் கிராமத்துக்கு வந்து

அந்தக் கதையையும் கேட்டுவிட்டு இண்டர்லாகென் வந்தோம்.

அங்கிருந்து போட்.

லுசெர்ன் மறுபடி வந்து ஒருமணிப் பயணத்தில் வீடு வந்து

விழாத கட்டிலில் நிம்மதியாகப் படுத்தேன்.

தூக்கத்தில் விழுவது போலக் கனவு வந்தது.

பரவாயில்லை,அந்த மலையைப் பார்க்க இன்னோரு தடவை போக நான்ஆசைப்படவில்லை.:-))))












எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, November 28, 2014

179,(ZERMATT) செர்மாட் போய் வந்த கதை


























Add caption










இந்த ஊருக் கோமுகம் இதுன்னு நான் நினைத்துக் கொண்டேன்.





அவ்வளவு கொண்டாடுகிறார்கள் இந்த மேட்டர்ஹார்ன் சிகரத்தை.





நாங்கள் இந்த மலைப்பக்கம் 2002ல் போனோம்.










ஒரு மாதம் இங்கெ இருக்கும்படி வந்தோம்.
மகன் இங்கே வந்து ஆறு வருடங்கள் ஆனபிறகுதான் எங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வாய்த்தது


அதுவரை நான் ஸ்விட்சர்லாண்ட் வருவேன், சுற்றிப்பார்ப்போம் என்றெல்லாம் நினைத்தது கூட கிடையாது.

வேலைபார்த்துக்கொண்டிருந்த நிறுவனம் இங்கே அவர்களது கிளையில்
ஆட்கள் தேவைப்பட்டதால் இங்கே மகன் வந்தபோது கூட,


மொழி தெரியாத ஊரு,சாப்பாடு கிடைக்காதே என்றுதான் நினைத்தேன்.
எங்களைத் தனிக்குடித்தனம் வைத்தபோது என் பெற்றோர்

பட்ட கவலைதான்!!!!

எப்படியாவது பிழைத்துக்கொள்ளும் இந்தக்காலத்துப் பிள்ளைகள்.
இது இங்கே வந்தபிறகுதான் தெரிந்தது.

எங்க வீட்டைவிட இங்கே சுத்தம் அதிகம். வைத்தபொருள் வைத்த இடத்தில் இருந்தது,.

வாரம் ஒரு முறை சுத்தம் செய்து வெளியேறும் பத்திரிகைகள்.

இரண்டு நாளைக்கு ஒருதடவை சுத்தம் செய்தால் போதுமான சின்ன அபார்ட்மெண்ட்.

அப்போது பேச்சு இலராக இவர் இருந்த நாட்கள்!


நல்லாவே சமைக்கக் கத்துக்கிட்டாங்க.:)


இங்கே என்ன திரும்பினால் சரவணபவன்,
ஓடினால்  முருகன் இட்லிகடைன்னு இருக்கா:(

இருக்கிற ஒரே ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டும் ஈ அடிச்சுட்டு இருந்தாங்க.

பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு முக்கியப்பட்ட இடங்களுக்குப் போய் விட்டு வரலாம்னு திட்டம்.

எல்லாம் காலைலே கிளம்பி இரவு திரும்பி வர மாதிரி.

அதுக்குத் தனி மூன்றீல் ஒருபங்கு கட்டணத்தில்!!!!!

டிக்கெட்டுகளும் வாங்கியாச்சு,.
ஒரே  டிக்கெட்டில்,
பஸ்,ட்ராம், ட்ரெயின்,போட்  எல்லா  வாகனங்களில் போகலாம்.

கேபிள் காருக்குத் தனியாக  வாங்கவேண்டும்.

இப்படித்தான்
ZERMAT    எனும் மலைச் சிகரத்துக்குப் போகலாம் என்று தீர்மானம் செய்தோம்.

நாங்க இருந்த ஊரிலிருந்து ஒரு ஊருக்குப் போகணும்.

அங்கேருந்து  இன்னொரு வண்டி கிளம்பத் தயாரா இருக்கும்.:)

எல்லாம் சரியான டைமிங்ல தான் செய்து வைத்து இருக்காங்க.
என்ன ,,,,,ஒரு நாலு தண்டவாளத்தைத் தாண்டிப் போகணும்.இறங்கின
தடத்திலிருந்து    படிகள் மேல போகும்.
அங்கேயிருந்து நாலு  வாயில்களைத் தாண்டி  அந்த இன்னோரு வண்டி நிக்குமே அங்க இறங்கணும். சாமி!!


கையில்  சோத்து மூட்டை.
வரும்போது எனக்கு கைவீசி வரலாம்னு நினைப்பு.

ஆனாப் போகும்போதே நம்மளை ஒரு வழியாக்கி விட்டது.
முழங்கால்  கெஞ்ச ஆரம்பித்தது.

அப்போதான் மும்பையில் விழுந்த,ரிப்பேர் செய்த கால்:)
அது கம்ப்ளெயின் செய்ய ஆரம்பித்துவிட்டது.
வேகமாக நடக்காதேன்னு கட்டளை போடுகிறது.
மேலே இருக்கிற   க்ளேசியர் எக்ஸ்ப்ரஸ் வா வா நேரமாச்சுனு'' கூப்பிடுகிறது.


அப்பாடி அம்மாடின்னு ஏறியாச்சு.
சுத்துமுத்தும் பார்த்தால் ஸ்கியிங்  கம்புகளோடும்,சைக்கிள்களோடும் ஜோடிகள் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
 ஒரே கலகலா.

உடம்பு சிக்குனு இருக்கு. உலகமே எங்கள்  காலடியில்னு ஒரு சந்தோஷம்.
நமக்கோ  நம் காலும்  பூமியும்  ஒட்டி இருந்தாலே போதும்னு நினைப்பு:)

இது ஒருபக்கம்.
வண்டி கிளம்பியது. பையனுக்குப் பசி.
அம்மா இட்லி சாப்பிடலாமா என்றான்.

பேப்பர்,தட்டுகள் ஸ்பூன்கள் சகிதம்
சிப்லாக்கில் தனிதனியாக இட்லிகளும் ,தேங்காய்ச் சட்னியும்.
அதே போல  சப்பாத்தியும்,  தாலும்  இன்னோருலன்ச் பொட்டியில்.

அதை எடுத்துவைப்பதற்குள் அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது.

நாங்க தட்டுக்களை எடுப்பதற்கும் ஸ்பீக்கரில் அடுத்த ஸ்டாப்


  நிற்கும் இடத்தில் உணவுவிடுதி மழையினால் மூடிவிட்டதால்,

மதிய உணவு வேண்டும் என்பவர்கள்

வண்டியில் இருக்கும்

டைனிங் காரை பயன்படுத்திக் கொள்ள சொன்னார்கள்.

அத்தனைகூட்டமும் மேல்மாடிக்குப் படையெடுக்க

வெளியே மழை ஆரம்பித்தது.

அழகான மழை.

அந்த மழையில் பக்கத்தில் இருக்கும் சாலையில் வழுக்கிச் செல்லும் கார்கள்


Add caption



Add caption

செர்மாட் 




















































.





,.




























.

























.



இந்த  இடம்  காலியாகி இருப்பதற்கு  காரணம்  தெரியவில்லை:)


.















































































நாங்கள் தங்கின  ஹோட்டல் ரூம்













Thursday, November 27, 2014

இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ஸ்டோன்லீ.

Add caption
தென்னாடுடைய சிவனே போற்றி.
பிள்ளையாரப்பன்  காப்பான்.
அன்னையும் அவளது  இரு குமாரர்களும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அகிலாண்ட நாயகி.

Saturday, November 22, 2014

போகவேண்டிய இடங்கள்

மழையில் நனையும்  கிறிஸ்துமஸ் விளக்குகள்
வீட்டைச் சுற்றி ஓடும் ரயில் தண்டவாளங்கள்
அழகான பால்கனி. உட்கார்ந்து பார்க்கக் குளிர்தடை .வண்ணம் மாறிய இலைகள் கேட்கும் நீ எப்படி உள்ளே இருக்கிறாய் என்று.
காட்சிகள்  ஜன்னலோரமாக
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
west minister abby

Thursday, November 20, 2014

நவம்பர் பிட் போட்டிக்கான படங்கள். மனிதன் உருவாக்கிய பொருட்கள்.

அப்பம்  எந்தப் பெண்ணரசியோ செய்தது
அடையாறு ஆலமரம்  இருக்கும் இடத்தில் படம் பிடித்த ஸ்தூபி
நேபர்வில்  சிகாகோ பெல் டவர்  மணிக்கூண்டு

இந்த மாலைகளை உருவாக்கின கைகளுக்கு என்னகொடுக்கலாம்.   கூடவே அந்த வண்ணத்துக்கு அழகு சேர்க்க  தொடுக்கப்பட்ட ப்ளாஸ்டிக் ரோஜாக்களின் அழகுதான்  என்ன,
ஜெர்மனியின்   ப்ளாக் ஃபாரஸ்ட்டில்  விற்கப்படும் குயில் கடிகாரங்கள் மிகச் சிறிய அளவில்.
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.கறுப்பு சூட் போட்டுக் கொண்டு இவைகளையும் வரிசையாக அணிந்தால்   நாமும் ராக் ஸ்டார்தான்....

Monday, November 17, 2014

இன்னும் ஒரு புதிய பயணம்.

மழையும்    விளக்குகளும்
லண்டன் விமான நிலையத்தில் இறங்கும் காட்சி.                                                           மீண்டும் ஒரு விமானம் ஒரு காத்திருப்பு,ஒரு தயிர் சாத மூட்டை. பெட்டிகள் தயார்.  வெறும் குதிரை வண்டியில் ஏறி  கோவிலுக்கோ சினிமாவுக்கோப்   போகும் சந்தோஷம்  இவ்வளவு வசதிகளோடு  எங்கெல்லாமோ  கிளம்பும்போது    கிடைக்கவில்லை.        லண்டன்  சிங்கம் படித்த வேலை பார்த்த இடம்.    அவருக்குத்தான்      பிடித்த பல     உறவுகளும் இருக்கின்றார்கள்.                                 இது இருக்கட்டும்...                            உலகத்தின் அழகான   நகரம் என்பதில்  சந்தேகம் இல்லை. வீட்டுக்கு  எதிரிலியே ரயில்  நிலையம். நம்மூர்ப் பழையகால ரயில்கள் போலவெ ஓடுகின்றன.   பணக்காரர்கள் ,மத்திமர்கள் பாகுபாடு இல்லாமல் அனைவரும் பயணிக்கிறார்கள். ஏனெனில் லண்டன் போக்குவரத்து அத்தனை    கடினம்.  இரண்டு மணிப் பயணம்    செய்தால் அலுவலகம்  என்றுதான் வாழ்க்கை. நம் ஊரே அப்படித்தானே ஆகி இருக்கிறது.   இன்னும்   பார்க்க வேண்டிய இடங்களும்  காட்சிகளும்   இருக்கின்றன. தொடரலாம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வீதி முனை