எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Monday, November 17, 2014
இன்னும் ஒரு புதிய பயணம்.
மழையும் விளக்குகளும்
லண்டன் விமான நிலையத்தில் இறங்கும் காட்சி. மீண்டும் ஒரு விமானம் ஒரு காத்திருப்பு,ஒரு தயிர் சாத மூட்டை. பெட்டிகள் தயார். வெறும் குதிரை வண்டியில் ஏறி கோவிலுக்கோ சினிமாவுக்கோப் போகும் சந்தோஷம் இவ்வளவு வசதிகளோடு எங்கெல்லாமோ கிளம்பும்போது கிடைக்கவில்லை. லண்டன் சிங்கம் படித்த வேலை பார்த்த இடம். அவருக்குத்தான் பிடித்த பல உறவுகளும் இருக்கின்றார்கள். இது இருக்கட்டும்... உலகத்தின் அழகான நகரம் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டுக்கு எதிரிலியே ரயில் நிலையம். நம்மூர்ப் பழையகால ரயில்கள் போலவெ ஓடுகின்றன. பணக்காரர்கள் ,மத்திமர்கள் பாகுபாடு இல்லாமல் அனைவரும் பயணிக்கிறார்கள். ஏனெனில் லண்டன் போக்குவரத்து அத்தனை கடினம். இரண்டு மணிப் பயணம் செய்தால் அலுவலகம் என்றுதான் வாழ்க்கை. நம் ஊரே அப்படித்தானே ஆகி இருக்கிறது. இன்னும் பார்க்க வேண்டிய இடங்களும் காட்சிகளும் இருக்கின்றன. தொடரலாம்.
கொட்டும் மழை ,காய்ந்த இலைகள் மொட்டை மரங்கள் ..கடும் குளிர் ,பனி உறைபனி எல்லாமிருக்கும் ஆனால் :) சந்தோஷத்துக்கும் புதிய அனுபவங்களுக்கும் பஞ்சமிருக்காதுஎங்க ஊரில் :) வெல்கம் டு லண்டன் :)
தொடருங்கள். அதே போல் வேர்ட் வெரிஃபிகேஷன் உங்க பதிவிலேயும் தொடருது! :)))) அது என்னமோ என்னைத் தான் முதலில் கேட்குது! :)))) நான் தான் வலை உலகத் தலைவினு அதுக்குக் கூடத் தெரிஞ்சிருக்குமோ? :))))
உண்மைதான் அம்முமா. குளிருக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. ஹீட்டர் போட்டால் கண்ணெரிகிறது. போடவில்லை என்றால் சில்லென்றிருக்கிறது.வித்தியாசமான அனுபவங்கள் காத்திருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது,.
20 comments:

இப்போல்லாம் அதைக் கண்டுக்காம பப்ளிஷ் கொடுத்தால் டெலீட் ஆகாமல் மீண்டும் வருது. அப்போ மறுபடி பப்ளிஷ் கொடுத்தால் சரியா இருக்கு. :)))
அனுபவப் பகிர்தல்களை எதிர்பார்க்கலாமா?
நன்றி ஏஞ்சலின்.நன்றாகத்தான் இருக்கு உங்க ஊரு.இனிதான் வெளியில் போகணும். ஃபோன் நம்பர் அனுப்புகிறேன்.
கீதா இனிமேதான் அதைக் கவனிக்கணும்மா. எனக்கு மற்ற பதிவுகளிலும் வெரிஃபிகேஷன் கேட்கிறதான்னு பார்க்கணும்.
வரணும் ஸ்ரீராம். இனி வார இறுதியில் தான் முருகன் கோவில் இந்த இடமெல்லாம் போகணும். போனபிறகு எழுதமுடியுமான்னு பார்க்கிறேன் மா.
உங்களுடன் நானும் லண்டன் பயணிக்கிறேன் வலை வழியாக. மழையில் விமானம். அழகான புகைப்படம்.
கவிதைபோல் படங்கள்
தொடருங்கள்
நன்றி
அழகான படங்கள்...
தொடர்கிறேன் அம்மா...
நன்றி ஜயக்குமார். முடிந்த அளவு செய்கிறேன்.
நன்றி தனபாலன். உங்கள் வருகை இனிமை.
லண்டன் ட்ராபிக்,குளிர் என நிறைய வித்தியாசமான அனுபவங்கள் இருக்கும் உங்களுக்கு வல்லிம்மா. உங்க பகிர்வுகளை நேரமிருக்கும்போது பகிருங்கள்.
உண்மைதான் அம்முமா. குளிருக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. ஹீட்டர் போட்டால் கண்ணெரிகிறது. போடவில்லை என்றால் சில்லென்றிருக்கிறது.வித்தியாசமான அனுபவங்கள் காத்திருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது,.
வரணும் ராஜி சிவம். நலமாப்பா.இவர்கள் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கிறது.பார்க்கலாம்.ஒட்டுகிறதா இல்லையா என்று.:)
லண்டனுக்கு போயாச்சா... மனதிற்கு இதமான சூழ்நிலை நிலவட்டும் அம்மா.
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
நன்றி ஆதிமா. உங்களை எல்லாம் பார்த்ததில் அத்தனை சந்தோஷம் எனக்கு. ஏகத்துக்குப் பேசிவிட்டேன். நன்றி கண்ணா.
சூப்பர் வல்லிம்மா,
தொடரும் பதிவுகளுக்காக வெயிட்டிங்
ஆஹா வரணும் கலாமா. நன்றிப்பா. இன்னும் வீட்டை விட்டுக் கிளம்பவில்லை.கிளம்பியதும் படங்கள் போடலாம்.
அருமை.
நன்றி.
Post a Comment