மழை,புயல் பயம்,நியூசியில் மீண்டும் பூகம்பம் எல்லாம் சேர்ந்து புத்தாண்டைக்
கொஞ்சம் களையிழக்கச் செய்தாலும்,
மக்கள் மீண்டு வந்து மெரினாவில் புத்தாண்டை ஆரவாரமாக வரவேற்றது
அதிசயமாக இருந்தது எனக்கு.
ஆமாம் கடலென்ன செய்யும். அதன் உள்ளே புகுந்து ஆட்டி வைத்த புயலுக்கு அது ஆட்டம் காட்டிவிட்டது.
கடலில் மீன் பிடிக்காது தவித்தவர்களுக்கு நிலக்கரி டன் கணக்கில் வலையில்
அகப்பட்டது இன்னோரு ஆச்சரியம்.
'தானே'' வரப் போகிறது. வந்து விட்டது. இல்லை புதுச்சேரி போகிறது. கடைசியில்
கடலூருக்கு அருகில் மைய்யம் கொண்டதாக, செய்தி.
சென்னையில் மின்சாரம் போய் வந்தது. மழையும் காற்றும் விடவில்லை.
எங்களுக்கோ அவசரமாக , ஒரு நோய்வாய்ப்பட்ட
உறவினரைப் பார்க்க வேண்டிய அவசியம்.
கொஞ்சம் மழை நின்றதும் ராதாகிருஷ்ண சாலையில் பயணித்தோம்.
அவங்க வீடோ சாலை முடிவில் இருந்தது.
கடல் வரை சென்று சிடி செண்டருக்கு அருகில் திரும்பி வரவேண்டும்..
சாலை விதி அப்படி!
முக்கால் தொலைவு போனதுமே கடலின் வண்ணமும் அலைகளின் ஆக்ரோஷமும்
தெரிந்தது.
காணக்கிடைக்காத காட்கி.
கடலைக் கறுப்பு வண்ணத்தில் நான் பார்த்ததே இல்லை.
அதுவும் அந்தப் பத்தடி உயர அலைகளின் சீற்றம்... அதையும் பார்த்ததில்லை.
ஊழிக் காற்று இதுதாணனோ என்ற வண்ணம் மழையையும்
குடையையும் தூக்கும் காற்று..
கையில் காமிரா இல்லையே என்றிருந்தது.
கூட வந்தவருக்கு (சிங்கம்தான்)ப் பொறுமை இல்லை.
ஒரே சமயம் போல இருக்காது கிளம்பு என்று என்னைக் கிளப்பிவிட்டார்..
அடுத்த நாள் இங்கே கமராஜர் சாலை வரை வந்த கடலும், புதுச்சேரியிலும், கடலூரிலும்
125,135 கிலோமீட்டர் வேகத்தில் நாசம் விளைவித்தது இதே "தானே".:(
இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று சொல்கிறார்கள். இல்லை ஓரிரு மாதங்களாவது
ஆகும் சாதாரண நிலைமைக்குத் திரும்ப என்றும் கூறுகிறார்கள்.
ஆண்டாள் அவள் தன் திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணனை அழைக்கையில்
தீங்கில்லாத மழையைத் தான் கொடுக்கச் சொல்லுகிறாள்.
''வாழ உலகினில் பெய்திடாய்''
இன்றைய செய்தி யாரோ கிளப்பிவிட்ட பூகம்பம் பற்றியது.
கடலூர் மக்கள் இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியே
தவித்தபடிக் காத்திருக்கிறார்கள்.
தானாக வரும் குழப்பம் , தீங்கு நினைப்பவர்கள் செய்யும் குழப்பம் .
இதிலிருந்து கடவுள் தான் நம்மைக் காப்பாற்றணும்.
இன்னொரு அதிசயம் என் ப்ளாக் ரான்க் 128 லிருந்து 69 ஆகியிருப்பதை நம் ராமலக்ஷ்மி சொல்லித் தெரிந்து கொண்டேன். நன்றி ராமலக்ஷ்மி!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்