Blog Archive

Thursday, May 30, 2013

அப்பா 1921- மே 30 பிறந்த நாள்

தெய்வமான அப்பா
வணங்கிய தெய்வம்

 தன்னைப் பற்றியப் புகழோ  பேச்சோ விரும்ப மாட்டார்.
எப்பொழுதும் கீதை.
இல்லாவிட்டால்   குழந்தைகளுக்காக நல்ல விஷயங்களை

எழுதிவைப்பார்.
அபார்ட்மெண்டில் குடியிருந்ததால்  பொக்கிஷதார்  பொறுப்பும் கொடுக்கப் பட்டிருந்ததால் அந்தக் கணக்குகளைச்  சரி   பார்ப்பார்.

பேத்தியை ஹோலி ஏஞ்சல்ஸ்  பள்ளியில் கொண்டு போய் விடுவார்.

வீட்டுக்கு ஏதாவது வாங்கி வரவேண்டிய
பொருட்களை  பட்டியல் போட்டுக் கொள்வார். கடைக்குப் போவதும்
கோவிலுக்குப் போவதும் மிகவும் பிடித்த விஷயங்கள்.

பாண்டிபஜார் வழியே   நான் ஏதோ வேலையாகப் போய்க் கொண்டிருப்பேன் பஸ்ஸில். திடிரென்று அப்பா பண்டியன் காஃபிப் பொடி
கடையிலிருந்து வெளியே  வந்துகொண்டிருப்பார்.''அப்பா'' என்று வாயோட முணுமுணுப்பதோடு  பஸ்ஸில் போய்விடுவேன்.


வீட்டுக்குப் போகும் வரையிலும் அப்பாவின் உருவம் கண்ணிலேயெ நிற்கும்.

வீட்டுக்கு வந்து சமையல் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது
தொலைபேசி  கூப்பிடும். மகள் எடுத்துவிட்டு,அம்மா.....தாத்தா
ஃபோன்ல.

அவசரமாக வருவேன். ஏம்மா  பாண்டிபசார்வழியாப் பஸ்ஸில போனியா?
அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு ஆமாம்பா. ஜோசியர் வீட்டுக்குப் போய்
வந்தேன்.
ஜன்னலில் உன் முகம் மாதிரி தெரிந்தது.
நீதானா  என்று சந்தேகம். இவ்வளவு தூரம் வந்த பொண்ணு
வீட்டுக்கு    வருவியேன்னு நினைச்சேன்.

குற்ற உணர்வை மறைத்துக் கொண்டு
இரவு சமையலுக்கு நேரமாகிவிட்டதுப்பா.
 சாரி.!!
அடடா  இல்லம்மா.இவ்வளவு சாயந்திர வேளையில் தனியாகப் போகிறாயே.
உன் வேலைகளில் பாதி எனக்குக் கொடேன்.
நானும் நன்றாகச் செய்து கொடுக்கிறேன்.

இனிமேல் உங்கள் வீட்டுக்கு வந்து....
ஏன்மா இது உனக்கும் வீடுதான்...அப்பா சிரிக்கும் சத்தம் கேட்கும்.

சரிப்பா நம்ம வீட்டுக்கு வந்து,  உன்னையும் அழைத்துக் கொண்டு

ஜாதகங்கள் விஷயமாக நாம் யோசித்து   முடிவு செய்யலாம்.

ஆமாம்  இரண்டு ஜீனியஸ் சேர்ந்தால்  செய்ய முடியாத வேலையா
ஒரு கல்யாணம்:)

குறுக்கே  அம்மா குரல். பொண் குரல் கேட்டால் அப்பாவுக்குத் தனி உற்சாகம்.

ஏம்மா நீயும்   சேர்ந்துக்கோயேன். உனக்குத்தான் எல்லாவற்றிலும் ஆசைகள்  நிறைய. நான் அம்மாவைக் கிண்டலடிப்பேன்.

அம்மாவை ஒண்ணும் சொல்லாதே ஆண்டாள்.
அவளுக்குத் தெரியாததே கிடையாது.

இந்த அப்பா  இயங்குவது அம்மாவுடைய சக்தியால்தான்!!!

சாமி. உங்க     வைஃபை  ஒண்ணும் சொல்லலைப்பா.

நாம் எல்லாம் சேர்ந்து இந்தத் திருமணத்தை முடிக்கலாம்
என்பதோடு அந்தத் தொலைபேசி  சம்பாஷணை முடியும்.

இப்பொழுது நினைக்கிறேன்  பாண்டி பசார் பக்கம் போகும்போது
அம்மாவீட்டுக்கும் போயிருக்கலாமோ.

இன்னும் நிறைய சமாசாரங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமோ என்று.
அதற்கென்ன செய்வது.
அந்த நேரம் அப்படி. இப்பொழுது அப்பாவுக்கு மரியாதை சொல்லி அன்போடு நினைக்க வேண்டிய    நேரம்.

அப்பா  உன்னை மாதிரி தந்தை   இனிப் பிறக்கப் போவதில்லை.
எங்கே இருந்தாலும் நன்றாக இருப்பாய்.
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் உனக்கு அம்மாவாக இருக்கவேண்டும். உன்னைச் சீராட்ட வேண்டும்.

வணக்கங்கள் நமஸ்காரங்களுடன்
உன் குடும்பம்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, May 27, 2013

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே:) .....1963ஆம் வருடம்

 

 இரும்பு  கிராதிக்குப் பின்னால் வண்டியின்  ஹார்ன் கேட்டது.
அவசரமாக ஒலிப்பதைக் கேட்ட   விமலா
தோட்டக்கார பலராமனைக் கூவினாள். 'ஐயா வந்துவிட்டார்.
ஓட்டிப் போய்க் கதவைத் திற.
ஏய் மாலு இன்னும் என்ன ஃபோன்ல... அப்பா வந்தாச்சு  ஃபோனைக் கீழே வை'


இதோ நல்ல காப்பி கொண்டு வருகிறேன் என்று கனத்த சரீரத்தைத் தூக்கிக் கொண்டு பால் காய்ச்சும் அறைக்குச் சென்று குளிர்ப் பெட்டியிலிருந்து பாலை வெளியில் எடுத்தாள்.

அதற்குள்  கணவர் வேகமாக நடந்துவரும் சத்தம் அவள் வயிற்றைக் கலக்கியது.
என்ன சமாசாரமோ .குத்தகைப் பணம் கைக்கு  வந்து சேர்ந்ததோ.வராததால் தான் இந்தக் கோபமோ.
கூடத்தில்  ஊஞ்சல்  வேகமாக ஆட ஆரம்பித்தது.

பத்துகஜமும் அழகாக உடலைச் சுற்றி யிருக்க அப்பொழுது கறந்த பாலைக் காய்ச்சிக் கலந்த காஃபியை மணக்க மணக்க
எடுத்துக் கொண்டுவந்த விமலாவை,
ஓரகத்தி மாடிப்படியின் பக்கம்   வந்து ''என்ன சமாசாரம் ? மச்சினருக்கு என்ன கோபம்''என்று சைகையால்  விசாரிக்க,

கண்களை உயர்த்தி  எனக்கு ஒன்றும் புரியலை என்றபடி ஊஞ்சல் பக்கத்தில்
வந்து நின்றாள்.

இப்போதான்  இன்னோரு ஃபோனுக்கு   அப்ளிகேஷன் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.அதுவரை பொறுமையாக   இருக்கலாம் எல்லாரும்.'
என்றார்    சுந்தரம்.

எதுக்கு இன்னோரு ஃபோன்? குழப்பத்தோடு  கேட்டாள் விமலா.

காஃபியை  ஒரு மடக்குக் குடித்தவர் கொஞ்சம் தெளிவடைந்தாற்போலத் தெரிந்தது.
'நான் எங்கே போயிருந்தேன்?
மாங்காடு,குன்னத்தூர் பக்கம்..

அங்கேயிருந்து இங்க வந்து ஒரு   ஃபைல்  எடுத்துக் கொண்டு போக
எவ்வளவு நேரம் ஆகும்?
என்ன   ஒரு  இரண்டு மணி நேரம் ஆகும்.

இதையே ஃபோனில சொன்னால் உன் பெண் இன்னோரு வண்டி எடுத்துக் கொண்டு    என்னிடம் ஃபைலைக் கொடுத்திருக்கலாம் இல்லையா?

'ஆமாம்''
ஆங்க்.

ஃபோன் கிடைத்தால்  சொல்லி இருப்பேன்.
திடிரென்று  அவர் குரல் உயர்ந்தது.

யார் இத்தனை நேரம் போன் பேசினது. நானும் வெற்றிலைபாக்குக் கடைப்பக்கம்   ஏதோ ஃபோன் கிடைத்ததுனு  கூப்பிட்டுக் கொண்டே இருந்தால்
எங்கேஜ்டாகவே இருக்கு. ரெண்டு மணி நேரம் பேச உங்களுக்கெல்லாம்
என்ன விஷயம்.
வெய்யில்ல வெந்து கொண்டு ,வியாபாரம் பேச வந்தவனோட  விவாதம் செய்ததற்கு என்ன லாபம்.
எனக்கும்   பொறுமைக்கு எல்லை இல்லையா. வியாபாரத்துக்கு வாங்கின ஃபோன் தானே இது. !!!!


அவர் கத்த ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் எகிறிவிவிடும்.
குற்றவாளி மாலுதான் என்று விமலாவுக்குத் தெரியும்,.
மாலுவையும் காண்பித்துக் கொடுக்க முடியாது.
மௌனமாக இருந்தாள்.

படிப்பறையைவிட்டு   வெளியே வரவே இல்லை   மாலு.

ட்ரிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
அலறியது தொலைபேசி. எல்லோருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

அந்த .....கோவிந்தலுவாகத்தான் இருக்கும்.
என்ன சொல்லப் போகிறானோ'
என்றபடி எழுந்து   போய் ஃபோனை எடுத்துக் காதில் வைக்கும் முன்
கீச்சென்றது ஒரு பெண்குரல். 'ஏய் மாலு  ஏன் ஃபோனை வச்சுட்ட. நாளைக்கு க்ளியோ பாட்ரா போகலாம்னு பேசிண்டிருந்தோமே.
என்று வளவளத்தது   மறு முனையில் பெண்குரல்.

யாரு  சாருவாம்மா. இரண்டு வாரத்தில எக்ஸாம் வரதே நினைவில்லையா. நீதான் இத்தனை நேரம் அரட்டை செய்த்ததா,. அடுத்த தெருவில தானே

இருக்கே.
நேரிலியே வந்து அளந்திருக்கலாமே'என்ற  பெரியவரின் குரலைக் கேட்டதும் அந்தப் பெண் வெலவெலத்துவிட்டது.


மாஆஆஆலூஉ  உனக்குப் ஃபோன் மா.
.நான் மாங்காடு போறேன். உங்களுக்குச்
சினிமா டிக்கட் புக் பண்ண   வேணும்னால் நான் கியூல நிக்கட்டுமா.என்றவர்
பீரோவைத் திறந்து  ஒரு  ஃபைலை எடுத்துக் கொண்டு,

அடுத்தபடி அவர் செய்ததுதான் எல்லார் வாயையும் பிளக்க வைத்தது!!!

விமலா நான் டாக்ஸி பிடித்துக் கொண்டு போகிறேன்
.ஏழுமணிக்குள்   வரப் பர்க்கிறேன். நீ  உன் மன்னி,உன் மாமியார் எல்லோரும் கதை கேட்கப் போங்க.
மாலு சினிமா போகட்டும்.''

அவர் வாயிலை நோக்கி த் தோட்டத்தைத் தாண்டி நடந்த போது ஒலித்தது அவர்குரல் தான்

''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'   இருட்டினில்  நீதி  ஒளியட்டுமே.
தன்னாலே வெளிவரும்  தயங்காதே''

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்.அகப்பட்டவன் நானல்லவோ''


இதற்கப்புறம்   வெகு நாளுக்கு அந்த வீட்டில் ஃபோனைத் தொட பயந்தது
பெரிய கதை.:)


உண்மை சம்பவம்!எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, May 25, 2013

வைகாசி பூரண நிலா

Add caption
காமிராவின்   இமைகள் திறக்க மறுத்தன. பாதிக் கண்திறந்து எடுத்த படங்கள்.
பூரண  நிலா   கொஞ்சம் மேகங்களோடு பேசிக் கொண்டிருந்தது!

ஆரவல்லியா!!
பிற்சேர்க்கை ஏதும் செய்யாத     பதிவு.அலைகடல் பொங்கியிருக்கும் நிலாமகளைச் சந்திக்க

எட்டா  உயரத்தில் இருக்கும் அழகி
முதல் படம்.பூரண ஒளி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
Posted by Picasa

Thursday, May 23, 2013

பதின்மூன்றாம் நாள் நிலா

பாதிநிலாவை விண்ணில் வைத்து மீதி நிலாவைக்  கண்ணில்  வைத்தானோ!
காமிரா,கைகள்  நடுக்கத்தில்  பிடிபட்ட  நிலா
Add caption
இலைகள் மேகங்களுக்கு  நடுவில்  சந்திரன்
தோசை கொஞ்சம் பிய்ந்து விட்டது
பறக்கும் தட்டு போலக் காட்சி அளிக்கும் மஞ்சள் நிலா:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஆடி ஆடிப் பாடிப் பாடிப் போற்றுதும் என் சிங்கப்பெருமானே

பிரஹ்லாதவரதன்
எங்கள் சிங்கப்பெருமான்
ஹரேகிருஷ்ணா சிங்கம்
மதுரையின் சிங்கம்
Add caption
Add caption
Add caption

இன்று    அழைத்த குழந்தையின்  வாக்கைக் காக்க அவதாரம செய்தான் எம் பெருமாள் அழகியசிங்கம்.
வைகாசி சுவாதி
மாலை நேரம்.

அவனுக்கு வேண்டியது என்ன. பக்தர்களின்'
மாறாத பக்தி.
அண்டசராசாரங்கள்  கிடுகிடுக்க
ஒரு வெற்றித் தூணைப் பிளந்து கம்பீரமாய் வந்த
நரசிங்கா
உன் கருணை எத்தகையது!
என்றும் துணை இருப்பாய்.

சம்சார சாகரத்தில்  அகப்பட்ட  துண்டுகள் நாங்கள்.
துன்பம் வந்தால் மட்டுமே
நரசிம்மா காப்பாத்து  என்று கூவுவோம்.
நீயோ இமைப்  பொழுதும்
எங்களைவிட்டு அகலுவதில்லை.
ஒரு நாள்  ஒரு மணித்துகள் சரணம் சொன்னால்
போதும். நினைத்தால் போதும்.
அபார கருணா சாகரம் நீ.
பெற்றதாய்க்கும் மேலே  உடன்   வந்து காப்பாய்.


அப்பனே  உன்னை என்றும் மறவாமல்  நினக்கும் வரமதை எப்போதும் அளிப்பாய்.
வாயில் உன்நாமம்    ஒலித்துக் கொண்டிருக்கட்டும். சிந்தையில் உன் கருணைமுகம் பதிந்திருக்கட்டும்.
வேறு ஒன்றும் வேண்டாம்.
சிங்கவேள் குன்றம் சிங்கவடிவில் குன்று.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹா சரணம்.
பானகநரசிம்மன்

அஹோ!பிலம்!!!  ஆஹா பாருங்கள் ஒரு குகை.அங்கிருந்து கிளம்பிய சிங்கப் பெருமான்.
அஹோ பலம். என்ன ஒரு வீர்யம்!!! இன்றும் அந்தக்  குகை இருக்கிறது. ஹிரன்யனை வதை செய்யும் கோலத்தில் மஹா உக்ரமாக க் காணக் கொடுக்கிறார் ஒரு நல்ல   தரிசனம்.

கூடவே நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன்.கெட்டவனுக்குத் தான் இந்த கதி என்று சொல்வது போலத் தோன்றும்.

நாங்கள் 1993  இல் அஹோபலம்  சென்ற போது  மேலே காணும்
உக்ரஸ்தம்பத்தின்   அருகில் செல்ல  வழி கடினம். தம்பி சின்னவன் .மேல போய் விடலாம் என்று    சொன்னாலும்,அப்பா மறுத்துவிட்டார்.
கற்கள்,முள். துளிதப்பினாலும் உருளவேண்டியதுதான்.

கீழிருந்துபார்க்கும்போதே    ஒரு சிங்கம் பிடரி மயிர் சிலிர்க்க நிற்பது போல
சிகர    வடிவம்.

அதன் உச்சியில் உக்ரஸ்தம்பம்..
கஷ்டப்பட்டு ஏறினால்   ஸ்தம்பத்தைச் சுற்றி வந்து சேவிக்கலாம்.
அதுதான் நிருசிம்ஹன் அவதாரஸ்தலம் என்றார்கள்.
முதன் முறையாக அப்பாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன்.
'அம்மா எனக்கு முதல் போஸ்டிங்  சிம்மாசலத்தில்தான்.

அப்பொழுதெல்லாம்  இவ்வளவு தீவிர  வழிபாட்டுச் சிந்தனை இருந்ததில்லை. ஸஹஸ்ரநாமம் மட்டும்  தினம் பாராயணம் செய்வேன்.
தாத்தாவின்   முறைகளைப் பின்பற்றி. நினைத்திருந்தால் இந்த   புண்ணிய  இடங்களுக்கெல்லாம் வந்திருக்கலாம்.
அப்பாவை மீறி ஒன்றும் செய்ய முடியாது.

இப்போழுது உடலில் வலிமை இல்லை. இங்கிருந்தே உன்னைச் சேவிக்கிறேனப்பா என்று கைகூப்பினார்.
அப்பாவும் அம்மாவும் அழைத்துச் சென்றதால் அங்கே போகமுடிந்தது.

பத்துவரி எழுதி விட்டேன் துரை:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, May 20, 2013

மே மாதம் நல்ல மாதம்

என் அம்மாவுக்குப் பிடித்த அவர் கணவர்
என் அம்மாவுக்குப் பிடித்த மென்மை
உணவாகிறேன்
நான் தான் எவ்வளவு அழகு

 மே மாத  20க்கு எட்டு வருடங்களும் ஓடிவிட்டது அம்மா.

இனி உன்னை நினைத்து வருத்தப் படமாட்டேன்.
உனக்கு அன்பானவர்களைத் தேடி  நீ போயிருக்கிறாய்.

நீ இருக்கும் இடத்தில் ஆனந்தமாக  இருக்கவேண்டும்.

நீயும் அப்பாவும்  சொன்ன அறிவுரைகளை
மட்டும்  நினைவில் வைத்துக் கொள்கிறேன்.
நீங்கள் நடந்த தர்ம வழியில் நடக்கப் பழகுகிறேன்.
அப்பழுக்கில்லாத    நலம் தரும் சுத்தமான சுற்றுப்புறத்தை வைத்துக்
கொள்ள ப் பழகிக் கொள்கிறேன்.
உங்களின் தெய்வ பக்தியும் எங்களிடம் வளரட்டும்.

இறைவனாக  எங்களைப் பாதுகாத்த அன்னை தந்தையைக் கொடுத்த
இறைவனை என்றேன்றும் வணங்கும்
நற்புத்தியையும் எளிமையையும் கொடுங்கள் அம்மா.
என் அருமைத்தாய்க்கு  நமஸ்காரங்கள். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, May 17, 2013

ஆதவனின் கிரணங்கள் வளர்த்த உயிர்கள்

ஏடெல் வைஸ்  ஸ்விஸ் நாட்டின் தேசிய  மலர்
Add caption
Add caption
Add caption
Add caption
பெயர்தெரியாத மலர்
Add caption
Add caption
மழைக்குப் பின்  சூரியன் வருவது  அவசியம் இல்லையா.

காமிராவுக்குப் பின்னால் நிழலுக்கருகில் நின்று  வெய்யிலில் குளிக்கும் இயற்கையைப் படம் பிடிப்பதும்    ஒரு   நிகழ்வுதான்.

மேலே  இருக்கு  கேசியா பூக்களைப் பிடித்தது சிங்கம்!!
அவருடைய   கையில் வளர்ந்த செடி மரமாகி
வருடா வருடம்  தங்க மலர்கள் கொட்டுகிறது.
இப்பொழுது    மகிழமரமும்   இறைவனுக்கு
மலர்களைக் கொடுக்க  ஆரம்பித்துவிட்டது.

போன வருடம் பெய்த மழையை இலைகளில் வாங்கி  வேரில் விட்டு
மண்ணை நனைத்து
மண்ணும் சலிக்காமல் அதை உறிஞ்சி எடுத்துக் கொண்டு


மரங்களின் தலையில் மலர்களாகவும்,
மாமரத்தில் மாங்காய்களாகவும்
செம்பருத்திப் பூக்கள் ஒரு  முப்பது ஆவது  பூக்கின்றன.

அதற்காகத்தான் கேட்கிறேன் மழைத் தாயே
என்று வருவாய்.
அடுத்த வருடமும்    நிலம் மகிழமும் மகிழ வேண்டாமா.

தருமப்பயிர் வாழத்
தருண மாமழையே
தன்குலம் எங்கிலும்
மங்கலம்  தங்கவே
அருள் பொழிவாய்
கருணைக்கடலே..
இந்தப் பாடல்   திரு சுத்தானந்த பாரதியின்   படைப்பு.
கீதா  கீழே குறிப்பிட்டிருப்பது போல்

தினம் பள்ளி அஸ்ஸெம்பிளியில் இந்தப் பாடலும்,
செந்தமிழ் நாடென்னும் போதினிலேயும்
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழரும் உண்டு. ரகுபதி ராகவராஜராமும் உண்டு.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, May 15, 2013

908,மழை வருது மழை வருது குடையை ரெடி பண்ணு!

Add caption
துளிதுளித்துளித்துளி   மழைத்துளி
Add caption
பச்சைமாமலை போல் மேனி  ஆழி மழைக் கண்ணா
ஒன்றுகூடி   தாகம் தணிப்போம்
என்று வருவாய்?
எப்போதோ மழைபெய்யும் பூமி இது. இவ்வளவு செழிப்பு...........................

 எங்கெல்லாமோ செழுமை.
நாமோ இருக்கும் மரங்களையும் ஆறுகளையும்
வயல்வெளிகளையும் ஓடவிட்டு வேலைகள்
பார்க்கிறோம். அத்துணை கட்டிடங்களிலும்
குளிர்ச்சி இயந்திரங்கள்  வெளியேஏற்றும்
வெப்பம் வானை முட்டி   ஓட்டைகள் போடுகின்றன.

அன்று   இறைவனைக் காண வழிவகுத்தார் மாமுனி நம்மாழ்வார்.
இன்றைய தமிழ்நாட்டின் மண்வளத்தை
வளர்த்துப் பசுமைவளம் அதிகரிக்கப் போராடி வரும் முதியவரும்
நம் நம்மாழ்வார்.

ஆழிமழைக் கண்ணனை அன்றே  வேண்டினாள் ஆண்டாள்.
இன்று நமும் வேண்டுவோம்.
வரப் போகிற்து என்ற புயல் மழை
என்று சொல்லி அதுவும் மையன்மார் போகிறதாம்.
இன்று இலங்கையில் பெய்திருக்கிற்து,.
இலங்கையிலிருந்த நம் ஊர் கொஞ்ச தூரம்தானே.

அதனால் மழையே  மழையே   இதயம் நனைய
வேகமே வா.
அனல் மேகத்தை ஓட்ட  அந்தமேகத்தில்  அருள்   கருமைநிறைந்து
எங்கள் வயல் வெளிகளிலும் ஏரிகளிலும்   அடை மழையாகப் பெய்து பயிர் காப்பாய்.
கிணற்றிலும்  தண்ணீர் நிறையச் செய்வாய்.
வேறு யாரிடமும்  நாங்கள் கையேந்தும் நிலையை வைக்காதே..


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa