Blog Archive

Wednesday, October 04, 2017

அம்மாவின் கடிதம் #2 .... 1969

Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  மகள்  பிறந்து, சேலம் வந்ததற்குப் பிறகு காரைக்குடிக்குப்
போக இயலவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் அம்மா அப்பாவைப் பார்க்கவில்லை.  பாட்டியிடம் கடிதம் ஒரு மத்திய வேலை வந்தது. அப்பாவுக்கு வயிற்று வலி என்று அம்மா எழுதி இருந்தாலே நீ போய்ப் பார்க்கவில்லையா என்று கேட்டிருந்தார்
சட்டென்று வருத்தமானது.  எனக்குத் தெரிந்தால் சலனப் படுவேன் என்று அம்மா சொல்லவே இல்லை.

உடனே சிங்கத்திடம் சொல்லிக் காரைக்குடிக்குப்  பேசச்  சொன்னேன். ஆபீஸ் வழியாக .
   அவர் மதியம் வரும்போது ,
அப்பா கிட்டத்தட்ட   மூன்று மாதங்களாகக் கடும் வலி யில் அவதி பட்டது தெரிந்து ,
என் மடமையை நொந்து அழுதேன்.  இரண்டு குழந்தைகளும் சிறிய வயது. சமாளிக்க முடியாமல் போனாலும் ,அம்மாவுக்கு கடிதம் எழுத்தாக கூடவா ஒரு பெண்ணிற்குத் தெரியாது,.😞😟😠
இருபத்தொரு வயதுக்கான மன முதிர்ச்சி இல்லையே
என்று வருத்தம் மேலிட்டது.

அடுத்த நாள்  என் வருத்தத்தை மெலிதே விரட்டுவதாக அம்மாவின் கடிதம் வந்தது.
பிறகு  வண்டி எடுத்துக் கொண்டு அப்பாவைப் பார்க்கப் போனது, அப்பாவுக்குச் சென்னையில் மருத்துவம் பார்த்தது,
பயப்படும் அளவு  வயிற்றில் அல்சர் பரவாமலிருந்து,
அம்மா அப்பாவைக் கண்ணின் இமையாகப் பார்த்துக் கொண்டது தனிக்கதை   இது   போன்ற பெற்ரோரைப் பெற நான் என்ன புண்ணியம் செய்திருந்தேனோ  தெரியாது.
அனைவரும் வாழ்க வளமுடன்.



17 comments:

கோமதி அரசு said...

அம்மாவின் நேசம் மிகுந்த கடிதம் அருமை.
நினைவுகள் அருமை.
நானும் முதியோர் தின பதிவில் அம்மாவுக்கு கடிதம் எழுத சோம்பல் பட்டது பற்றி குறிபிட்டு இருக்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

கடிதம் உறவின் பலத்தைச் சொன்னது.

எப்போதும், அன்பு என்பது மலைமேலிருந்து வரும் நீர் போல. அது எப்போதும் மேலிருந்து கீழ்தான் வரும். கீழிருந்து மேலே செல்ல உலகில் வாய்ப்பு இல்லை, வெகு வெகு அபூர்வம். அதனால்தான் நம் பெற்றோர் நம்மிடம் செலுத்திய அன்பில் நூற்றில் ஒரு பங்குகூட நம்மால் அவர்களிடம் செலுத்தமுடிவதில்லை. ஆனால் அவர்கள் செலுத்திய அன்புக்கு இணையாக, நாம் நம் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவோம். இதுதால் உலகின் இயற்கை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

உங்கள் அம்மாவின் கடித ஆரம்ப வரிகள்தான் நான் என் பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் கடிதம் எழுதும்போது உபயோகப்படுத்துவது.

ஸ்ரீராம். said...

அம்மாவின் கையெழுத்து அம்மாவின் அன்பைப்போலவே அழகாயிருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: தங்களின் அம்மாவின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. கடிதம் போற்றிப் பாதுகாத்துவருகிறீர்களே அதுவும் இத்தனை வருடங்களாய்!! பொடியாமல் இருக்கிரதோ?!!!

கீதா: எனக்குப் பல நினைவுகள் வந்துவிட்டது. நானும் அப்போதெல்லாம் கடிதம் எழுதுவேன்..பாட்டிக்கும், மாமியாருக்கும்...ஷேமம் ஷேமத்திற்குப் பதில் இது கண்டிப்பாக இடம் பெறும் வரி....

அம்மா 21 வயதிலேயே இரு சிறு குழந்தைகளா?! அப்போ ரொம்பச்சின்ன வயதில் கள்யாணம் ஆகிவிட்டதோ?! அன்பு சொட்டும் கடிதமது!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,
உங்கள் பதிவைப் படித்தேன்.

கடிதங்கள் அம்மாவிடமிருந்து ரெகுலராக வரும்.
நான் தான் பதில் போட நாட்களாகும்.

அவர்கள் சென்னை வந்த பிறகு தொலைபேசி உரையாடல்களாக நீடித்தது.
நான் கொஞ்சம் நல்ல மகளாக நடந்து கொள்ள ஆரம்பித்தது பிறகு தான்.

சூழ்னிலைக் கைதிகளாக மாறிவிடுகிறொம்.

இந்த முதுமை வந்த பிறகு நல்ல வார்த்தைகளுக்கு அல்லால் வேறு ஒன்றும் , குழந்தைகளிடம் பேசுவதில்லை. முக நூல் போய் எழுதுவதும் பழக்க தோழம் . குறைத்து வருகிறேன். நன்றி அம்மா. வருங்காலம் இறைவன் அனைவரையும் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். எப்பவும் செல்ஃப் கண்ட்ரோல்
அம்மாவிடம் அதிகம். தன்
தம்பிகள், தான் பெற்ற குழந்தைகள், தன் அம்மா
எல்லோருக்கும்
வார வாரம் கடிதங்கள் பறக்கும். இனிமையான மனுஷி.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
இன்னும் எத்தனையோ கடிதங்கள் என் பெட்டியில் இருக்கின்றன.
அவற்றை எல்லாம் தோழிகள், கணவர், பிள்ளைகள், என்று பாகுபாடு செய்து வைக்க வேண்டும். எல்லாவற்றையும் பிரதி எடுத்து என் சொத்து இதுதான் என்று கொள்ள வேண்டும். பெற்றோரால் இன்னிலைக்கு வந்தேன். மறக்கக் கூடாது இல்லையாமா. நன்றி ராஜா.

அன்பு கீதா , 1966இல் 18 வயதில் திருமணம். பத்துமாததில் முதல் மகன், இரண்டு வருடத்தில் 20 வயதில் ஒரு மகளும் ,22 வயதில் சின்னவனும் பிறந்துவிட்டார்கள்.

இன்பமான வாழ்க்கை தான் உட்கார நேரமிருக்காது. என் வயதொத்தவர்கள் பட்டப் படிப்பு முடித்தார்கள். இப்போ ஓய்வில் தானே இருக்கிறேன் கண்ணா.
என்னைவிட இளவயதில் திருமணம் முடித்தவர்கள் வலை உலகில் இருக்கிறார்கள்.
தமிழ்க் கவிதாயினியாகக் கூட பெயர் பெற்றிருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

They all are intact Thulasidharan.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

அனைவருக்கும் இதுபோல அமைவது என்பது சாத்தியமில்லை. இதுபோல அமைய கொடுத்துவைத்திருக்கவேண்டும்.

'பரிவை' சே.குமார் said...

அம்மாவின் கடிதம் அருமை அக்கா...
கடிதங்கள் சுமந்த மகிழ்ச்சியும் துக்கமும் மனசுக்கு கொடுத்ததை இன்றைய மின்னஞ்சலும் குறுஞ்செய்திகளும் கொடுப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். சோழ நாட்டில் பௌத்தம்.
எப்பவும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார்,
இந்த அருமையை அனுபவிக்க எனக்குக் கொடுத்து
வைத்திருந்தது. தம்பிகள், கணவர், பெற்றோர்,
புக்ககம் எல்லாமே ஆதரவு தான்.
அம்மா எல்லோருக்கும் மேல். மிக நன்றி
இது போல தம்பி இப்பவும் உங்கள் ரூபத்தில்.

Geetha Sambasivam said...

அம்மாவுக்கு மிகவும்அழகான கையெழுத்து. பொதுவாகவே அந்த நாட்களில் கடிதங்களில் விபரம் ஏதும் சொல்ல மாட்டார்கள். சின்னக் குறிப்புகள் இருக்கும். அதுக்கே மனம் கலங்கும். கடிதம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்ததும் தபால்காரர் மணிச் சப்தம் கேட்டதும் ஓடிப் போய் தபாலை வாங்கினதும்! மறக்க முடியா நாட்கள்.

Bhanumathy Venkateswaran said...

உங்கள் அம்மாவின் கடிதத்தில் வழிந்து ஓடிய அன்பு என் இதயத்தையும் நனைத்து விட்டது. நானும் கூட என அம்மாவின் கடிதங்களை வைத்துக் கொண்டிருந்தேன். சின்ன சின்ன எழுத்துப் பிழைகளோடு எழுதுவாள். எப்படி இருந்தால் என்ன? அது அம்மாவின் கடிதம். சமையல் அறையில் ஜன்னல் அருகில் உட்கார்ந்து கொண்டு மடியில் ஒரு புத்தகத்தின் மீது இன்லேண்ட் லெட்டர், அல்லது ஏரோக்ராம் வைத்துக் கொண்டு அக்காக்களுக்கும், அண்ணனுக்கும் அம்மா கடிதம் எழுதும் காட்சி மனதுக்குள் விரிகிறது. நம் குழந்தைகளுக்கு இந்த பாக்கியம் இல்லை, நம் தொடர்பு எல்லாம் மின்னஞ்சல் மூலம்தான் நடை பெறுகிறது. அதை சேமித்து வைத்துக் கொண்டாலும் அம்மாவின் கை எழுத்தை பார்க்க முடியுமா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, அம்மாவின் மனம் அதில் தெரியும். நிஜத்தில் எங்கள் அருகாமை அவளுக்குத் தேவைப் பட்டிருக்கிறது.
என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது தானே சமாளித்துக் கொள்ளலாம் என்றே பேசாமலிருந்திருக்கிறார்.
நாங்கள் வருவோம் என்று எதைபார்த்திருக்கிறார். கடைசி வரி உங்களுக்கு எப்போது சௌகரியமோ அப்போது வாருங்கள் என்று முடித்துவிட்டாள்.

பாவம்.
எனக்கு பெரியவனைப் பள்ளியில் சேர்க்கும் மும்முரம்.வெறும் கேஜி வகுப்புதான்.
அப்பா,வாயுத்தொல்லையால் நெஞ்சுவலி வந்து கஷ்டப்பட்டிருக்கிறார். தம்பி ஒருவனே அந்த அத்துவானக் காட்டில் துணை.
இப்போது நினைத்து வருத்தப் பட்டு என்ன பயன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமதி, மிக மிக நன்றி.
எங்க பாட்டி கூட, கடிதம் எழுதுவார். ஒரு மாத சமாசாரத்தை, ஒரு
கார்டில் , நுணுக்கி நுணுக்கி எழுதி அனுப்பிவிடுவார்.
அம்மா விவரம் சொல்வது பூராவும் குழந்தைகளைக் கேட்டுப்
பதில் எழுதச் சொல்வார்.
நீங்கள் உங்கள் அம்மாவின் கடிதங்களை வைத்திருப்பது
சந்தோஷமாக இருக்கிறது.
நம் குழந்தைகளுக்கு என்ன விட்டுவிட்டுப் போகப் போகிறோமோ.
தெரியவில்லை.

ஏகாந்தன் ! said...

உங்களது கடிதம் பற்றிய பதிவைப் பார்க்கிறேன். Quite sentimental. உங்களது அம்மாவின் கையெழுத்து அருமை.

அந்தக் காலத்துக் கடிதங்கள் இருக்கின்றனவே, கடிதங்களா அவை? காவியங்கள். உணர்ச்சியின் ஓவியங்கள். பிள்ளைகளிடமிருந்து அப்பாவுக்கும், அப்பாவிடமிருந்து அல்லது அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்குமென – சிலசமயங்களில் அது ஒரு hotline; வேறு சில சமயங்களிலோ அது ஒருவிதப் ப்ரவாகம். ஒரு நல்ல செய்தியை கடிதமூலம் எதிர்பார்த்து நாளெல்லாம் காத்துக்கிடக்கையில், என்றாவது ஒரு இனிய காலையில் தெருவோரத்தில் போஸ்ட்மேன் வருவது தெரிகையில், நமக்குள் எழும் எதிர்பார்ப்பு கலந்த படபடப்பிருக்கிறதே, அடடா! அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். போஸ்ட்மேன்கூடத் தேவாதிதேவனைப்போல் தெரிவார்!

இப்போதெல்லாம் முனைந்து பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், பேயாய் நம்மைச் சுற்றி அலையும் மெயில்களும், வாட்ஸப்புகளும், அந்தக்காலக் கடிதத்தின் கால்தூசு பெறுமா? கைபட வரைந்த, மனதின் கதைசொல்லும் கடிதம்போலாகுமா எதுவும்?