Saturday, October 07, 2017

#எழுதினதில் பிடித்தது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பாட்டி என்ன பண்றே.
அரிசி உப்புமா கண்ணா.
இட் ஸ்மெல்ஸ் நைஸ். .
வாசனை டேபிள் வரை வருது நான் சாப்பிடட்டுமா.
இன்னும் ஆகலைடா ராஜா. உப்புமா ஆனதும் தரேன்.
அவன் வந்து கேட்டதே போதும். குழந்தைக்கு உடம்பு சரியாகி விட்டது.
உப்புமாவை அவன் சாப்பிடவில்லை என்பது வேற கதை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்னொரு  கதை.😍😍😍
+++++++++++++++++++++++++++++++
சுத்தம் என்பது எமக்கு
 வருடத்துக்கொரு முறைதான்.
அசுத்தம் என்பதை மறக்க விட மாட்டார் சிலர்தான்
பொட்டிகள் உள்ளே நுழையும்
அன்புகள் அரவணைக்கும்போதே
வந்த கண்கள் மேலே நோக்கும்.
ஆசையுடன் காத்திருந்த பல்லியோ அந்நேரம் பார்த்து முகமன்  சொல்லும்.
அரளுவான் பேரன்.
‘’தர் இஸ் அ  giant லிசர்ட் சம்வேர் ஹியர் மா’’
லெட்ஸ் லீவ்.
அனுபவப்பட்ட மூத்தவனோ அது குட்டிப் பல்லிதான் ப்ரதர்
நைட்தான் வெளில வரும்’
மாடியில் நம்    அறையில் பல்லி இருக்கிறதா என்று பார்த்துவருகிறேன்
என்று புறப்படுவான்.
அவன்வரும்போதே பெரிய  கறுப்பு பீரோ பின்னிருந்து

அண்ணா  என்று பல்லி விளிக்கும்.:)
ஓ ரியலி,!
!பாட்டி  ஐ தாட் யூ

  ஹேவ் டன் அவே வித் ஆல் தெ பல்லீஸ்.
ஹௌ ஆர் வி டு  ஸ்லீப்  இன் திஸ்  ரூம்?
அடுத்தநாள் தாத்தாவும் பேரன்களும் பல்லிவேட்டையாடப் போவார்கள்.

மாயமாய் மறைந்திருக்கும் பல்லிகள்.
கஞ்சி வரதா
நான் என் செய்வேன்
நீ இந்தப் பல்லிகளையும் தங்கப் பல்லிகளாக மாற்றி இன்னும் இரு வாரங்களுக்கு வைத்துக் கொள்.
உனக்குக் கோடி கோடி கும்பிடு.
இப்படிக்கு,
பல்லி கரப்பான்களுக்குப் பயப்படாத பாட்டி.

20 comments:

ஸ்ரீராம். said...

இனிய நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். சில பதிவுகளைப் ப்ரிண்ட் எடுக்கப் போகிறேன். அதில் இதுவும் ஒன்று.

ஸ்ரீராம். said...

ப்ரிண்ட்டா? எதற்கும்மா? புத்தகம் போடப் போகிறீர்களா?

கோமதி அரசு said...

அருமையான நினைவுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: வல்லிம்மா உங்கள் நினைவுகள் உங்கள் பேரன்களுடனான அனுபவங்கள் பதியப்பட வேண்டியது. எனக்கும் என் பாட்டிதாத்தா அனுபவம் இல்லை என் குழந்தைகளுக்கும் கிடைத்ததில்லை...அருமை...

கீதா: வல்லிம்மா அருமையான பொக்கிஷமான நினைவுகள்!!! மிகவும் ரசித்து வாசித்தோம். குழந்தைகள் பெற்றோரையும் விட பாட்டி தாத்தாக்களிடம் கொஞ்சம் கூடுதலாகவே ஒட்டிக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் பாட்டி தாத்தா தங்கள் குழந்தைகளைக் கட்டுப்பாட்டில் வளர்த்திருந்தாலும் பேரக் குழந்தைகளைக் கொஞ்சம் லீனியன்டாகத்தான் கையாள்கிறார்களெ என்றும் தோன்றுவதுண்டு...ஆனால் இப்போதெல்லாம் அந்தத் தாத்தா பாட்டி அனுபவங்கள் கூட இந்தத் தலைமுறைக்கு, பெரும்பான்மையோருக்கு அவ்வளவாகக் கிடைப்பதில்லை என்றே தோன்றுகிறது. எனக்குக் கிடைத்த அருமையான அனுபவம் என் மகனுக்கு என் அம்மாவிடமிருந்து சிறுவயதில் கிடைத்தது. அம்மா இப்போது இல்லை. இருந்திருந்தால் பேரனைக் கண்டுப் பூரித்துப் போயிருப்பார். ஏனென்றால் என் அம்மாவும் ஒரு காரணம் அவன் இன்று கால்நடை மருத்துவனாக இருப்பதற்கு...அவன் சிறுவயது ஆசை அறிந்து அவனை எங்கள் கிராமத்தில் மாடு, ஆடு, வான் கோழி என்றும் தாமரைக் குளம், ஆறு, ரப்பர் தோட்டம் என்றும் அழைத்துச் செல்வார்...உங்கள் பதிவு என் அம்மாவின் நினைவுகளை மீட்டி விட்டது வல்லிம்மா...தாங்களும் தங்கள் பேரன்களும் உங்களுக்கிடையேயான அன்பும் வாழ்க நலமுடன் சந்தோஷமாய் இனிதாய்...!!

Nagendra Bharathi said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இங்கே ஒரு தோழி புஸ்தக பப்ளிஷிங்குக்கு உதவி செய்கிறாள்.
பழைய தொடர்கதைகளை பைண்ட் செய்ய மாட்டோமா. அது போலச் செய்ய முயற்சி ஒரு பத்து
புத்தகங்கள் மட்டும்.

வல்லிசிம்ஹன் said...

Thanks Gomathy. vaazhka vaLamudan.

வல்லிசிம்ஹன் said...

MIKA NANRI NAGENDRA BHARATHY. NALAMAA

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன், அருமை கீதா,
மனம் நிறை நன்றி மா.
என் அம்மா, தன் கொள்ளுப் பேரனுடனும் விளையாடி இருக்கிறார்.
அப்பாவுக்குத்தான் லபிக்கவில்லை.

உங்கள் அம்மா, பேரனைக் கண்ணாரக் களித்துப் பார்க்கிறார் என்றே தோன்றுகிறது.
மகன் மருத்துவர் ஆனது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது

பதின்ம வயதுப் பிரச்சினைகளை இந்த ஊரில்
கடக்க ,பெற்றோர் நிறைய சிரமப் பட வேண்டி இருக்கிறது.
இதிலிருந்து தப்பிக்கவே சில பெற்றோர்கள் சென்னை சென்று விடுகிறார்கள்.
தீய வழிகளில் போகாமல் இருக்க இறைவன் காக்க வேண்டும்.
நீங்களும் உங்கள் வாரிசுகளும் அனைத்து நலனும் பெற
இறை, அருள் செய்யட்டும். வாழ்க வளமுடன்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

பேரக்குழந்தைகளுடனான உங்கள் அனுபவங்கள் குட்டிக்கதையாக, கவிதையாக அரங்கேறியிருப்பதை கவனித்தேன். சின்னச்சின்னப் புத்தகங்களாக அனுபவங்களை வெளியிடுங்கள். நன்றாக அமையும்.

தாத்தா, பாட்டிகளோடு கொஞ்சிக் குலவ, சேர்ந்திருக்க எல்லாக் குழந்தைகளுக்கும் இப்போதெல்லாம் வாய்ப்பதில்லை. பல காரணங்கள். சில தவிர்க்கமுடியாதவை; சில தவறவிட்ட வாய்ப்புகள்; பல நொண்டிச்சாக்குகள். தாத்தா/பாட்டி-பேரக்குழந்தைகள் அருகிலிருப்பதன் முக்கியத்துவத்தை முதலில் இந்தக்காலத்து இளம் பெற்றோர் உணரவேண்டும். இப்படி எத்தனையோ ‘..வேண்டும்.. டும்..டும்-கள்’ இருக்கின்றன. ஆனால், எது நடக்கவேண்டுமோ அதுவே நடக்கும், உலகெங்கும்.

பரிவை சே.குமார் said...

அருமை...
இனிமை....

பரிவை சே.குமார் said...

அருமை....
இனிமை....

Geetha Sambasivam said...

அருமையான நினைவுகள். வாட்ஸப் காலில் பேசும்போதே எங்க பேத்தி (அப்பு) லிஸார்ட் எங்கே பாட்டினு தான் கேட்பாள். அமெரிக்கக் குழந்தைகளுக்கே இந்தப் பல்லிகள் ஓர் அதிசயம் போலும்! தனியாப் போய்ப் படுக்க மாட்டாள்! :)

புத்தகங்கள் போடப் போகிறீர்களா? அச்சிலா? அல்லது மின் நூலாகவா? வாழ்த்துகளை முன் கூட்டியே தெரிவிச்சுக்கறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, அந்த மாதிரி பப்ளிஷிங்க் இல்லை.
நம்ம வீட்டில இருக்கிற ப்ரிண்டர்ல எடுத்துண்டு,

தனித்தனி டாபிக்ல சேர்த்து மூன்று குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறேன்.
அப்பா எனக்கு கீதை எழுதிக் கொடுத்தார்.
ஒரு நினைவுப் பரிசாகக் கொடுக்க எண்ணம். புத்தம எல்லாம் போட மாட்டேன் மா. என் எழுத்தின் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன்,
நாங்கள் எங்கள் இரண்டு வழித்தாத்தா பாட்டிகளுடனும்
நிறையக் கற்றுக் கொண்டோம்.
எங்க குழந்தைகளுக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது.

எங்கள் சின்னப் பேரன்கள் பேத்திகளுக்குத்
தாத்தாவின் அருகாமை கிடைக்காமல் போயிற்று.
கிடைத்த வரை லாபம் என்று வைத்துக் கொள்ளவேண்டியதுதான்.
என்னால் இயன்ற வரை அவர்களின் அருகாமயை உணர வெகு ஆசை. இறைவன் விட்ட வழி. அற்புதமாக வார்த்தைகளை வடிக்கிறீர்கள் நன்றி ராஜா.
புத்தகம் போடுவது என் குறிக்கோள் அல்ல. சேர்த்து வைத்துக் குழந்தைகளிடம்
பாட்டி நினைவாகக் கொடுக்கவேண்டும்.
மருமகள்களுக்குத் தமிழ் தெரியும். பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் புத்தகமாக வெளியிடப் போவதில்லைப்பா.
வீட்டுக்குள் மட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிவை குமார் , கொசுவத்தி தான் மீண்டும் சுழல்கிறது.
நன்றி மா.

கவிநயா said...

இனிமையான நினைவுகள்.. வல்லிம்மா. குழந்தைகளுக்கு பாட்டி தரும் மிகச் சிறந்த பொக்கிஷம்!

Bhanumathy Venkateswaran said...

தமிழும் ஆங்கிலமும் கலந்து ஒரு புதிய மணிப்பிரவாள நடையில் சுவையான கவிதை.