Blog Archive

Wednesday, March 24, 2010

ஸ்ரீ ராமா பக்தி சாம்ராஜ்யம்

ஸ்ரீ ராமா சரணம்.
அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துகள்.
எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, March 10, 2010

புது வசந்தம்
!!">

பாப்பா!! ஜோ குளிக்கலாமா?
ஜோ னானா,.
மம்மு சாப்பிடலாமா மம்மு நானா.
என்ன வேணும் பாப்பாக்கு. மானுப் பாப்பா மைத்தொத்து.
என்னது???
மானுப் பாப்பா மைத்தொத்து.
பையனைப் பார்த்தேன். அவளுக்கு உன்னை மாதிரி பொட்டு வச்சுக்கணுமாம்.
மைப்போட்டு .
ஓ. அதுக்கென்ன. வச்சாப் போச்சு.


மம்மம் சாப்பிட்டுட்டு வச்சிப்பியாம்.
ஜோஜுப் புத்தாக்கு மம்மம் வேணும். சரி கொடுக்கலாம். ஜோஜுப் புத்தா பெசட்டு வேனும்.
பிஸ்கட்டாம்மா. சரி.
சிடுசிடு முகம் காட்டுகிறாள் பேத்தி.அந்த அழகில் சொக்கிப் போகிறேன்.
நானாஆஆஆஅ.
பெசட்டு .
என்னடா கேக்கறா?.
அவளுக்குப் பெசரட் வேணுமாம்மா:)
பெசட்டு இல்ல இட்லி வேணுமா பாப்பாக்கு?
ம்ம்ம்ம்.டீலி மாவு என்று எழுந்தாள். கையில் ரெண்டு பூனைப் பொம்மை.

இட்லி ஆச்சு. சுகர் வேணுமா,நெய் வேணுமா. பாப்பாக்கு.
ஜீயா வேணும்.
நான், மகன்..ஜீரக பொடிம்மா.
அதுக்குள்ள பசி முற்றிவிட்டது. ம்ம்ம் என்று சங்கு முழங்குமுன் வேறேன்னடா கொடுக்கலாம் என்றால் தக்காளி வெங்காயம் வதக்கிச் சட்டினி செய்தால் சாப்பிடுவாம்மா.
அவசரத்துக்குத் தக்காளி சாசில் சர்க்கரை போட்டு
தட்டில் வைத்தால்,
யூ டூப்...
என்னது?
கம்மி பேர் .(Gummy bear)
ஓஹோ கம்மி பேர் பாட்டை யு டியூபில் பார்த்து சாப்பிடும் வழக்கமா.
சரி வா கம்ப்யூட்டர் போலாம்.

நாற்காலியில் நான் ,என் மடியில் பாப்பா.

ஸ்பூனில் இட்லியை எடுத்தால்,
''தாத்தி நானா, கீயாம்மா வேணும்.:)


எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, March 07, 2010

பிறந்த நாள் வாழ்த்துகள்.

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை செய்தினும் ,
பொறுத்துக் கொண்டு சகித்து வாழும் சக ஜீவன்
பாதுகாவலர் ,
எங்கள் வீட்டு எஜமானருக்கு
மார்ச் ஐந்து எழுபது வயது பூர்த்தியானது.
இறைவன் கருணையால் அவர் ஆரோக்கியமாகவும் , சாந்தியோடும்,(அமைதி)
என்னோடும் மகிழ்ந்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.


எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, March 04, 2010

சிந்தாகூலம் ,கலக்கம்,நிவர்த்தி.பிறகென்ன. கவலை அதிகமானது. ஒரு மணி நேரம் மாறி மாறி இரண்டு நம்பர்களையும்
அழைத்துக் கொண்டு இருந்தேன்.

திடீரென பெண்ணின் தோழிகள் கிட்டக் கேட்கலாம் என்று
நினைத்தேன். ஒரு நம்பரும் தெரியாதே.
கூகிளைச் சரணடைந்து ,அவர்கள் பெயரையும், இருப்பிடத்தையும் குறிப்பிட்டேன்.

வரிசையாக அந்த ஆறு தெருக்களில் இருக்கும் அத்தனை பேர்களோட
விவரம் வந்தது. நான் அழைக்க நினைத்த தோழியின் நம்பர் அன்லிஸ்டட் என்று வந்தது.
பெண்ணின் அடுத்த காம்பவுண்டில் இருக்கும் ஆண்ட்ரூ நம்பர் கிடைத்தது. இவர்கள் வீட்டுக்கும் அவர்கள் வீட்டுக்கும் ஒரே ஒரு வேலிதான் நடுவில் இருக்கும்.

சென்ற தடவை அங்கே தங்கி இருக்கும் போது கொஞ்சம் பழக்கம் உண்டு.
அமெரிக்கன். பெண்டாட்டி ஹெதர்,பெண்கள் கரோலின்,இலியானா.

சந்தேகம் என்ன வென்றால்,அவர்களுக்கு என்னை நினைவு இருக்குமா என்பதே.

துணிந்து ஆண்ட்ரூவுக்குப் போன் செய்ஹ்தேன்.

''ஹை நான் ஸோ அண்ட் ஸோ.

''ஓ'
உங்க பக்கத்துவீட்டுக்காரப் பெண்ணின் அம்மா.
ஓ'
யூ ஆர் கால்லிங் ஃப்ரம் இந்தியா!!!
யெஸ், நான் என் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்.
பதிலே இல்லை.
உங்களிடம் ஒரு உதவி கேட்க முடியுமா.
சில செகண்ட் மௌனம்.
ஒகே டெல் மி.

நீங்க அவர்களைப் பார்த்து சொல்ல முடியுமா.
அவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
மேலும் உளறாமல் நான் போனை வைத்துவிட்டேன்.

அந்த ஆண்ட்ரூ, எங்கள் பெண் வீட்டை அணுகவும் ,
வெளியில் சென்றவர்கள் திரும்பவும் சரியாக இருந்தது.
,'' யுவர் மாம் கால்டு.
ப்ளீஸ் கால் ஹர். ''

என் பெண்ணிற்கு முதலில் அதிர்ச்சி. எப்பவுமே ஒரு புன்னகையோடு
.

அந்த ஆண்ட்ரூ பெண் வீட்டை அணுகவும் ,
வெளியில் சென்றவர்கள் திரும்பவும் சரியாக இருந்தது.
அந்த ஆண்ட்ரூ , யுவர் மாம் கால்டு.
ப்ளீஸ் கால் ஹர். ''

என் பெண்ணிற்கு முதலில் அதிர்ச்சி. எப்பவுமே ஒரு புன்னகையோடு
நிற்கும்,
ஹை ,பை சொல்லும் பக்கத்துவீட்டுக்காரர்
திடீரென்று வந்து சேர்ந்தாற்போல் பத்துவரிகள் பேசுவது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டு,.
''ஷ்யூர் ஆண்ட்ரூ, ஐ வ்வில் கால் ஹர் இம்மீடியட்லி'' என்று அவருக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டு என்னைக் கூப்பிட்டு விட்டாள்.'

என்னம்மா ஆச்சு.?
''ஒண்ணும் இல்ல''. பின் ஏன் பக்கத்து வீட்டுக் காரனைக் கூப்பிட்ட? அமமா. உனக்கு அவன் நம்பர் எப்படித் தெரிந்தது.
ஏன்மா இப்படி கவலைப் படற ?
நான் எங்க போயிடப் போறேன்.
உனக்குத்தானம்மா பிரஷர் ஏறும்.??
''இல்ல மொபைல் கூட எடுக்கலியே''
இது நான்.
மறந்து போய் வச்சிட்டுப் போயிட்டேன்மா. அவசரமாகப் பால் தயிர் வேண்டி இருந்தது .
அதுதான் போனேன். என்னம்மா நீ!!! என்று அவள் அங்கலாய்க்கவும்
எனக்கு ஒரு நிமிடம் என்னடா செய்தோம் இப்படி என்று வெகு யோசனையாகப் போய்விட்டது.

எல்லாத் தொல்லைக்கும் காரணம்
மனதைக் கலங்க விடுவது,
ஏதாவது ஆகி இருக்குமோ என்கிற வேண்டாத சிந்தனை.

ஒரு நிமிடம் சாந்தமாக உட்கார்ந்து யோசித்து இருக்கலாம்.
கடவுளைப் பிரார்த்தித்து இருக்கலாம்.
பைத்தியம் பிடித்துப் பாயைப் பிராண்டாத குறையாக இவ்வளவு டென்ஷன் அவசியமா.

மாற்றிக்கொள்ளவேண்டும், மாற வேண்டும். சேதி ஒண்ணும் இல்லையா ,அதுவே நல்ல செய்திதான் என்று தோழி சொன்னார்கள். அதைப் போல வாழ்க்கையை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்!

எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, March 02, 2010

503 ,பதட்டத்தின் காரணம் என்ன
வயசாகிவிட்டது என்பதற்கு அருமையான அடையாளங்கள்.
நான் உடலை மட்டுமே சொல்கிறேன். அது பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டது.
இப்பொழுது மாத்திரை வம்சங்களும் உடலில் சேர,
எப்போது உற்சாகமாக இருப்போம் ,எப்போது தனிமையாக உணருவோம் என்பது தெரிவதில்லை.
இத்தனைக்கும் இரவு படுக்கும்போது மேலே ரொம்ப உயரத்தில் அண்ட சராசரத்துக்கெல்லாம் தள்ளி இருப்பவனைக் கண்ணில் நிறுத்தித் தூங்குவது தான் ஆகி வந்தது.
கூடவே அன்றைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்து,செய்யாமல் விட்டதை எண்ணி முகம் சுளித்து, நாளைக்குச் செய்தே முடிப்பது என்று திட்டமும் போட்டுத் தான் தூங்கும் வழக்கம்.

அநேகமாக அடுத்த நாள் ராத்திரியும் இதே தொடரும்.:)
இப்படியாகத்தானே பெண், பசங்க இவர்களிமெல்லாம் தொலைபேசியிலும், கணினியிலும் பேசிவிட்டுப் படுத்துத் தூங்கியும் ஆச்சு.

பின்மாலை என்று சொல்லப்படும் காலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விட்டது,.
ஒழுங்கா பக்தியோடு இருக்கும் வயதானவர்கள் என்ன செய்வார்கள்??
அப்பா!!,சாமி!!. நல்லபடியா பொழுது விடிந்தது. தூக்கத்திலும் துணை இருந்தாய். இன்று முழுவதும் நான் செய்யும் எல்லாப் பணிகளிலும் நீயே கூடவே இரு. காப்பாத்து சாமி'' என்று சொல்லி
எழுந்து மற்றவேலைகளைப் பார்ப்பார்கள். (நானும் செய்வேன்.)
காப்பி,பால் எல்லாம் ரெடி செய்யவேண்டும், சுவாமி விளக்குகளை அழகா ஏற்றி தீப மங்கள ஜோதி நமோ நம என்று சொல்லி வணங்க வேண்டும் .
சரி .செய்தாச்சு.
ஆனால் நாம் என்ன செய்வோம்...... கட்டிலிலிருந்து முதலில் காலைக் கீழே வைத்ததும் ,வலது கை நேரே கணினியை ஸ்விட்ச் ஆன் செய்யும்.
அது பாஸ்வேர்ட் கேட்டு ,நான் கொடுத்து, பிஎஸ்எனெல் கனெக்ஷனைச் சரி பார்த்து, அப்புறம்தான் பல்லே தேய்க்கப் போவோம்.:)
பேரன்களுக்கு அந்த நான்கு மணி என்பது விளையாட்டு நேரம். நல்ல மூடில் இருப்பார்கள்.
அவர்களிடம் ஒரு ஹலோ சொல்லிவிட்டால் என் ஜன்மம் சாபல்யம் ஆகிவிடும் அன்னிக்கு.

காப்பியை ருசி பார்த்தபடி, மாஜிக்ஜாக் என்று சொல்லப் படும் செலவில்லாத தொலைதூரத் தொலைபேசியைக் கையில் எடுத்துக் குப்பிடவும் கூப்பிட்டாச்சு.

ஒரு ரிங் ரெண்டு ரிங் ,மூணு ரிங் போகிறது.பதில் சொல்ல யாரும் இல்லை.
வி ஆர் நாட் அவைலபிள்....இந்த செய்திதான் வருகிறது. அன்று வெளி வேலை ஒன்றும் கிடையாது தெரியும் .வில்வித்தை, கூடைப் பந்து ஒன்றும் கிடையாது. பின்ன எங்க போனார்கள்.

சரி கைபேசியை எடுத்துப் போயிருப்பார்களே.
அதில அழைக்கலாம் என்று கேட்டால் , ....பிரயோசனமில்லை. நாட் ரீச்சபிள்னு வருகிறது.
மாப்பிள்ளையைக் கூப்பிட்டுக் கேட்கலாம்.
அவர் ஏதாவது மீட்டிங்ல இருப்பார். 'மாமியார் கொஞ்சம் எக்சைடபிள் லேடி' என்று அவருக்குத் தெரிந்தாலும் நான், அவரை விளித்து, என் பெண் எங்கய்யான்னு கேட்க முடியுமா.
அப்புறம் முழுதாக மறை கழண்டு விட்டது என்று நினைத்து விட்டால்.??ஏனெனில் இந்தியாவில் அப்போ, காலைநாலரை மணி என்று அவருக்கும் தெரியுமில்லையா.
நான் கூப்பிடப் போய் ஏதாவது அவசரமோ என்று நினைக்கவும் வாய்ப்பு உண்டு.
கஷ்டப்பட்டுக் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தேன்.
எல்லாம் ஒரு பத்து நிமிடத்துக்குத் தான்.
அப்புறம் நடந்த திருவிளையாடலை அடுத்த பதிவில் காணவும்:)எல்லோரும் வாழ வேண்டும்.