அனைவருக்கும் இனிய தினங்களுக்கான வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
புத்தகங்கள் துணையாக இருக்கும் குளிர்காலம்.
அடுத்து வரப்போகும் இளவேனிலுக்காக காத்திருக்கும் வேளை.
குளிரில் மனமும் சுருங்கி விடுகிறது.
அன்புத் தோழி எனது எழுத்துக்களைப்
பதிப்பித்து வெளியிடலாம், என்று மிக மிக
விருப்பம் தெரிவித்தார்.
புத்தகம் போடுவது இருக்கட்டும்.
அது எத்தனை நபர்களைப் ;போய் அடையும்?
என்னைவிடப்பெரிய திறமை வாய்ந்த
எழுத்துலகின் அருமையான எழுத்துகள்
சீக்கிரம் விற்றுப் போக வழியுண்டு.
எனக்கு இருக்கும் பயம், ஒரு 500 புத்தகங்கள் எங்கள் வீட்டு வரவேற்பறையில் காவல்
இருக்க வந்து விடுமோ என்பதுதான்:)))))))
கணவர் இருந்தால் கருத்து சொல்லி இருப்பார்.
47 வருடங்களை என்னுடன் இருக்க வைத்துவிட்டு
அவரும் கிளம்பிவிட்டார்.
இந்தத் தைமாத திருமண நாளில்
எனக்கே நான் வாழ்த்து சொல்லிக்
கொண்டு மிச்சம் இருக்கும் நாட்களை வலி இல்லாமல்
கடத்த வாழ இறைவனை வேண்டி நிற்கிறேன்.
அன்பு நட்புகளுக்கு நன்மைகள் வளரட்டும்.
10 comments:
வணக்கம் சகோதரி
நலமாக இருக்கிறீர்களா? தங்கள் பதிவு நெகிழ்ச்சி உண்டாக்குகிறது. உங்கள் புத்தகங்கள் வெளி வருவது மகிழ்ச்சியே..அவற்றை வெளியிட விரும்பும் தங்கள் தோழிக்கு வாழ்த்துகள். நான் எப்போதும் தங்களை நினைத்துக் கொண்டேதான் உள்ளேன்.இப்போதெல்லாம் தாங்கள் அதிகம் பதிவாக எழுதுவதில்லை. உடல் நலம் எப்படியிருக்கிறீர்கள்.? முடிந்த பொழுது பதிவுகளை எழுதுங்கள்.நட்புகளிடம் நம் எழுத்து மூலமாக பகிரும் போது நம் மனகஸ்டங்கள் சற்று குறைவதை நான் உணர்கிறேன்.உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதியிருக்கீங்க. நலமறிந்து மகிழ்ச்சி.
உங்கள் எழுத்துகள், குறிப்பாக மற்றவர்களின் அனுபவங்கள் பற்றிய கதைகள் நன்றாக இருக்கும். அவற்றில் நாம் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள ஏதோ ஒரு செய்தி இருக்கும்.
பெங்களூரில் வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது.
அன்பின் கமலா, என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.
என் மன உடல் நலம் சரியாக இருக்கப்
பல முயற்சிகள் செய்து கொண்டு வருகிறேன்..
உபாதைகள், இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற
கனவும் இருக்கிறது.
இனி கவனம் எடுத்து எழுதவும் படிக்கவும் ஆரம்பிக்க வேண்டும்.
உங்கள் அனுசரணையான அன்பு மிக ஆறுதல் அம்மா.
நீங்கள் மகள் பேரன் பேத்திகள் எல்லோரும் நலம்
என்று நினைக்கிறேன்.
இறைவன் அருள் எப்பொழுதும் நம்முடன்
இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
உடல் நலமாக இருக்கத் தனி கவனம்
எடுத்துக் கொள்ளுங்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா. அப்பா என்றும் உங்களுடன் / உங்களுக்குள் இருக்கிறார்..படிப்பதும் எழுதுவதும் சுகமான அனுபவங்கள்.
அன்பின் முரளிமா,
எப்பவும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
ஒருவருடனும் வாட்ஸாப் தொடர்பு கூட இல்லாமல்
தான் இருந்தேன். எல்லாமே போதும் என்ற
நினைப்பு வந்து விட்டது. அன்பான பின்னூட்டதுக்கு நன்றி மீண்டும் எழுத
ஆரம்பிக்கிறேன்.
இனிய திருமண நாள் வாழ்த்துகள் அக்கா. சாருக்கும் தான் வாழ்த்துகள்.
பகிர்ந்த பாடல்கள் இருவருக்கும் பிடித்த பாடல்கள்தானே.
நிறைய எழுத முடையவில்லை என்றாலும் நாலுவரி எழுதுங்கள் வல்லை அக்கா.
நாம் தொடர்பில் இருப்போம். எழுத்துதான் நம்மை தொடர்பில் வைத்து இருக்கும். புத்தகமாய் போட முடிந்தால் போட்டு விடுங்கள்.
சில நேரம் எதுவும் வேண்டாம் என்று தோன்றி விடும். எல்லோருக்கும் அவர் அவர் வேலைகள். மன ஆறுதல் தருவது பாட்டு கேட்பது, எழுதுவது, ஒருவர் பின்னூட்டம் போட்டாலும் மனம் மகிழ்ந்து விடும். மீன்டும் எழுத எண்ணம் வந்து விடும். எனக்கும் உடல் தொந்தரவுகள் இருக்கிறது, அதை எல்லாம் தாங்கி கொண்டுதான் பதிவுகள் முடிந்த போது போட்டுக் கொண்டு இருக்கிறேன் வல்லை அக்கா.
உடல் சோர்வு, மனசோர்வு எல்லா வற்றையும் தாங்கி கொண்டுதான் நாட்கள் நகர்கிறது. இடயில் கிடைக்கும் இன்பம், குழந்தைகளுடன் உரையாடுவது, நட்புகளுடன் உரையாடுவது பதிவுகள் மூலம். அவை தான் சிறு சிறு நம்பிக்கை வெளிச்சங்கள் வாழ்க்கை பிடிப்புக்கு.
வணக்கம் அம்மா
நலம் வாழ பிரார்த்தனைகள் தொடர்ந்து எழுதுங்கள்.
முடிந்தபோது எழுதுங்கள் அம்மா. உங்கள் எழுத்துக்களை நூலாக வெளியிடலாம். பிரதிலிபி போன்ற தளங்களில் வெளியிடலாம். அல்லது பதிப்பகத்தின் மூலம். இதில் சில அனுபவம் மிக்கவர்கள் இருக்கிறார்கள். அப்பாவி தங்கமணி கூட ஓர் பதிப்பகம் வைத்திருக்கிறார்.
இனிய திருமணநாள் வாழ்த்துகள்.உங்களுடைய கடந்த கால இனிய தருணங்களை நினைத்து மகிழுங்கள்.
புத்தகம் வெளிவருவது மகிழ்ச்சி.வாழ்த்துகள்.
Post a Comment