


அரிசி டப்ப இருக்கிற அலமாரி திறந்து வைத்தால் ஆபத்து:0
குட்டிக் கையால அஞ்சாறு கைப்பிடி இறையும் கீழ.
''அச்சச்சோ ,கீய வீனுடுத்தே'' என்று அது மேலயே நடப்பான். நடந்துவிட்டு,''கால் நாஸ்தின்னு'' வேற சொல்லுவான்.
இதெல்லாம் எனக்கு ஞாபகப் படுத்தியது எங்க குழந்தைகளின் மழலைப் பருவம்.
அத்றகு முனால் என் தம்பிகளின் சிறிய வயது மழலைகள்.
இதென்ன ஒரே மாதிரி வருதே என்று யோசிக்கும்போதுதான்.,
அப்படியே அச்சில வார்த்த மாதிரி இருக்கே என்கிற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
எங்க பெரிய பையன் பிறந்த போது, எல்லாரும் அவன் என்னை மாதிரியே இருப்பதாகவும், அப்பா வீட்டைக் கொள்ளவில்லை என்றும் சொல்லிகொண்டிருந்தார்கள்.
இப்ப ஒண்ணும் சொல்ல இல்ல. அப்பாவுக்குப் பக்கத்தில பையனும் அதே போல இன்னொரு சிங்கமாத்தான் இருக்கான்:)
இதில என்ன கவலைப் பட இருக்கு. யாரையாவது கொள்ள வேண்டியதுதானே.
அந்தந்த ஜீன்ஸுக்கு ஏத்த மாதிரி அமைப்பும், எண்ணங்களும் அமையும்.
சில நிறைகுறை இருக்கும். கோபத்துக்கு பெரிய தாத்தா, குணத்துக்கு பெரிய பாட்டி, ஓடறத்துக்கு சித்தப்பா, மொழிக்கு மாமா என்று எங்கயாவது குறித்து வைத்து இருக்கிறதா என்றும் ஆராய்ச்சி செய்யணும்:)
குழந்தை சிரிக்கும் போது எல்லோரும் மனக்கண் முன் வந்து போகிறார்கள். அது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டால் என் தந்தை ஞாபகம் வருகிறார்.
ஸ்விஸ் பேத்தி முறைக்கும் போது என் பாட்டி நினைவு வருகிறது.
காலை வேற நீட்டி,''பாட்டி !!! காலைப் பிடிச்சு விடு'' என்றால் என் பாட்டி சொல்லுவது போலவே இருக்கிறது:)
''எனக்கு புளூ கலர்ல வாலு வச்சுக் கொடு'' என்றால் என் தம்பி நினைவு வருகிறது!!
ஆகக் கூடி , குழந்தைகள் பிறக்கும் போது அவர்களைக் கொள்ளவில்லை, இவர்கள் ஜாடை இல்லை என்று கவலையே வேண்டாம் ஏதாவது ரூபத்தில் நம் அணுக்கள் இந்தத் தளிர்களிடம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
புது சிங்கம் |