வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக இருக்கவேண்டும்
எல்லோரும் நலமாக இருக்கவேண்டும்
ஏற்கனவே தூக்கம் தொலைந்து போகிறது.
வேறு வேறூ ஊர்களின் நிலவரம்
அலறிக் கொண்டிருக்கும் தொலைக் காட்சிகளின் மத்தியில் நம்ம ஊர்ப் பெயரும் வந்துவிட்டது.
தன் பாட்டுக்கு முதியோர் ஓய்வில்லங்களில் வாழ்க்கையின் கடைசிப்பகுதியை
நிம்மதியாகக் கழிக்க வந்தவர் ஒருவரைத் தாக்கி இருக்கிறது இந்த்
நோய்.
ஒரு திகிலை ஊட்டுவதாக இருந்தாலும்,
சரியான நேரத்தில் அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள், கேளிக்கை இடங்கள் எல்லாம் மூடப்படுகின்றன.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே சென்று
ஆறடி இடைவெளிவிட்டு, மகளும் தோழிகளும்
வால்மார்ட் சென்று வாங்க் வந்து விடுகிறார்கள்.
கையில் கையுறை அணியாமல் செல்வதில்லை.
அத்தனை பயம் ஏறியிருக்கிறது உள்ளத்தில்.
ஒரு வாரத்துக்கு மேலாகிறது,
இவர்கள் சந்தித்து
எல்லாம் வாட்ஸாப் தான்.
வெளியூரில் வேலை நிமித்தம் சென்றிருக்கும் மகன்,மகள் கவலைதான்.
வேலை முடிந்தால் தான் வரமுடியும்,
அதற்குள்
விமானப் போக்குவரத்து நிறுத்தப் பட்டால் என்ன செய்வது என்ற புதுக்கவலை.
அங்கிருக்கும் உணவு விடுதிகளுக்கு
செல்ல தடை விதிக்கப் பட்டதால், இந்திய உணவுகளை
கட்டிக் கொடுக்கும் பாக்கெட்டுகளை வீட்டுக்கே
வரவழைத்து உண்கிறார்கள்.
சில சமைக்கத்தெரிந்த பசங்களுக்கு இங்கிருந்தும்
பார்சல் போகிறது.
சனிஞாயிறுகளில் தான் அவர்கள் பாடு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
எல்லாம் வீடியோ சாட் தான்.
இந்தக் கஷ்டத்துக்கு அந்தக் குழந்தைகளை
வீட்டுக்குச் சென்று ,அங்கிருந்து வேலை செய்யுங்கள் என்றால் தேவலை.
பார்க்கலாம்.நம்மை நாம் பார்த்துக் கொள்வதோடு மற்றவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும்.
மனம் நிறைய நேர்மறை எண்ணங்களைத் தேக்கி,
நல்ல செய்திகளைப் படித்து,
நல்ல பாடல்களைக் கேட்டு
பயத்தைக் கொடுத்துப்
பயத்தை நீக்கும் ஸ்ரீமன் நாராயணனை எப்போதும் தியானித்து இருக்க வேண்டும்.
நாம் மீண்டு விடுவோம்.