கிளம்பும்போது எடுத்த படம். இரவினில்
கலகலத்த வீதி ஞாயிறு காலை தூங்கிக் கொண்டிருந்தது:)
இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே சென்று
வந்தோம்.
பேரன் இந்த ஊரின் down town Chicago அலுவலகத்தில்
வேலை செய்வதால் அங்கேயே
100 yaards தூரத்தில் வீடெடுத்து இருக்கிறான்.
வார இறுதிகளில்
வீட்டுக்குவந்து விடுவான்.
இந்த வாரம் சிறிய பேரனுக்கும் இரண்டு நாட்கள்
அதிக லீவு கிடைத்ததும் கிளம்பி விட்டோம்.
சொல்வது சுலபம்.
ஏற்பாடு செய்ததெல்லாம் மகள் தான்.
ஒரு air mattress ஆறடிக்கு ஆறு அகலத்தில்வாங்கியதிலிருந்து,
இரண்டு நாட்கள் அங்கே ,
எல்லா வேளை சாப்பட்டுக்கும் வழிசெய்து,
சின்னப் பேரன் உதவியோடு
பெரிய பெரிய பைகளில் போர்வை, தலையணைகள்
என்று அடைத்து
வண்டியில் ஏத்தும் வரை அவளுக்குத் தான் வேலை.
வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமாக வாழ வேண்டும். உயர உயரமாகக் கட்டிடங்கள். 100 தளங்கள் அதற்கும் மேலே
என்று இருந்தன.
பேரன் இருக்கும் இடம் 40 மாடிக் கட்டிடம்.
அதில் 38 ஆவது மாடிக்கு 38 நொடிகளில்
சென்று விட்டோம்.
சகல வசதிகளும் அந்தச் சின்ன அபார்ட்மெண்ட்டில் இருந்தது.
சமைக்க,துவைக்க,பொருட்களை, துணிகளைப்
பத்திரப் படுத்த அடுக்கி வைக்க என்று நிறைய
இடங்களும் அலமாரிகளும்.
அறையின் ஒரு சுவர் கண்ணாடியால் ஆனது.
அதருகே உட்கார்ந்து விட்டால் பொழுது போவதே
தெரியவில்லை.
ஒரு வேளைக்கு பீட்சாவும்,
மற்ற வேளைகளுக்குத் தோசை மாவு, சப்பாத்தி, குழம்பு,
கொத்தவரங்காய்க் கறி என்று கொண்டு போயிருந்ததால்
வேலைத் தொந்தரவு இல்லை.:)
இணையம் கொஞ்சம் கிடைக்கவில்லை.
அத்தனை பேருக்கும் கணினியில் வேலை
இருந்தது.
நான் வெறும் வாட்ஸாப்புடன் நிறுத்திக்
கொண்டேன். இனிதான் வலைப்பக்கம் வரவேண்டும்.
இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தது.
எப்போதும் ஒலிக்கும் சைரன்,
ஆம்புலன்ஸ்கள் , தீ அணைப்பு வண்டி, காவல் துறை
என்று இரவு முழுக்க ஒலிகள் தான். நாம்
ஒரு நவீன நகரத்தில் இருக்கிறோம்
என்று நினைவூட்டின.