வல்லிசிம்ஹன்நிலா எங்கே வந்தாலும் பாட்டுகளும்
தொடரும்.
பலப்பல இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகளை முழு நிலவு
கொடுத்திருக்கிறது.
பழைய பழைய இந்திப் பாடல்கள்
எங்கள் சிங்கத்துக்கு மனப்பாடம்.
நல்ல நிலவை அனுபவிக்கும் போது
இதமான அவர் குரலையும், அமைதியையும்
உணர்ந்து நிலைக்கிறேன்.
மோன நிலைக்குக் கொண்டு செல்லும்
மன சலனத்தை நிறுத்தும் பாடல்கள்
நேர்( பாசிடிவ்)எண்ணங்களை விதைக்கின்றன.
நூதனோடு தேவ் ஆனந்தைப் பார்க்கும்போது
நல்ல மைசூர்பாகு பக்கத்தில்
ஸ்திரமில்லாத வேறெதையோ பார்க்கும்
நினைவு.:))))))) நம் அப்பாதுரை கைதட்டும் சத்தம் கேட்கிறதோ:)
பிஸ்வஜித் வஹீதா ரஹ்மானின் பீஸ் சால் பாத்
படம் சக்கைப் போடு போட்டது.
வஹீதாவின் கரிஸ்மா படம் முழுவதும்.
நமது பழைய முதல்வர் செல்வி இந்தப் பாடலை
அருமையாகப் பாடி இருப்பார். ஒரு பேட்டியில் தன் இளமைக் கால நினைவாகப்
பகிர்ந்து கொண்ட பாடல்
ஆஜா ஸனம் ! மதுர சாந்தினி மேன் ஹை ஹம்........
மீண்டும் தேவ் ஆனந்த் ,,கீதா தத்.
பிரபலமான 1952 பாடல்.
இந்த மாதத்துக்கான நிலவுப் பாடல்கள் இத்துடன் அமர்கின்றன.
அடுத்த நிலவில் சந்திக்கலாம்:)