கண்ணே என் கணினியே!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் ஐந்து நாட்களுக்கு முன் மதியம் 12 மணிக்கு என் கணினி பூரண ஓய்வு எடுத்துக் கொண்டது. சட சடவென்று ஜன்னல்கள் மூடின. சைரன் ஒலிக்காத குறையாக கறுப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துகள் கணினியை நிறுத்து. குறுந்தட்டைப் போட்டு . எஃப் 8 நம்பரைத்தட்டு. இல்லாவிட்டால் உன் கணீனிதயாரிப்பாளர களைக் கூப்பிடு என்றெல்லாம் கட்டளைகள் வந்த வண்ணம் இருந்தன. அப்போதுதான் ஒரு பதிவு எழுதி முடித்திருந்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவே பத்து நிமிடங்கள் ஆயின எனக்கு:( அடுத்து என்ன செய்ய. தேடு. பழுது பார்ப்பவரை. மூளையின் கட்டளை. அப்புறம் நிதானித்தேன். ஒண்ணும் வேண்டாம். இன்று விடுமுறை. மற்ற வேலைகளைப் பார்க்கலாம். இந்த முடிவு எடுத்த இரண்டே நிமிடங்களில் கணினிதானே நமக்கு தொடர்பு சாசதனம். நான் பெற்ற செல்வங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள உபயோகிக்கும் சாதனம்!! சரி சுற்று அந்த எண்ணை. சுற்றியாச்சு. அவர் உடனே உதவி செய்வதாக உறுதி அளித்தார்.. ஆனால் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளும்படியும், ஊரெல்லாம் சுற்றும்...