Blog Archive

Saturday, December 17, 2011

மார்கழிப்பூக்கள் கண்ணனுக்கு

ஸ்ரீராம் கேட்ட வேண்பொங்கல்  கூகிளார்  கொடுத்தது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
 மல்லாண்ட  திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
.
அந்தச் சேவடிகளுக்கு  மலர் தூவி உன் தோழியும் பத்தினியும் ஆன ஸ்ரீஆண்டாளின்  செம்பஞ்சுப் பாதங்களுக்கும் பல்லாண்டு பாடி மார்கழியின் ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும்
பாவைப் பாட்டுகளை ப் பாடி உய்யுமாறு அருள்வாய்.

16 comments:

ஸ்ரீராம். said...

அதெல்லாம் விடுங்கோ....பொங்கல் எங்கே....!

கோமதி அரசு said...

பாவைப் பாட்டுகளை ப் பாடி உய்யுமாறு அருள்வாய்.//

மார்கழி பிறந்து விட்டால் எல்லோரும் திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி பாவை நோன்பு நோற்றால் வாழ்வில் எல்லா பேறுகளும் அடையலாம்.

ஆண்டாள், கண்ணாடியில் கண்ணனை பார்க்கும் படமும், மார்கழி பாடல் பாடி அனைவரையும் துயில் எழுப்பும் படமும் அருமை அக்கா.

பால கணேஷ் said...

நீஙகள் வேண்டியவாறு வரத்தை ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிஙகம் தங்களுக்கு அருளட்டும். அவனருள் பூரணமாய் நமக்கு கிட்டட்டும் வல்லிம்மா. படங்கள் அனைத்தையும் மிக ரசித்தேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அருமை! பொங்கலைப் பார்த்தால் பசிக்கிறது!
பகிர்விற்கு நன்றி அம்மா!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

சாந்தி மாரியப்பன் said...

கண்ணனுக்காக பூத்திருக்கும் ஆர்கிட் பூக்கள் அழகாருக்கு.

Geetha Sambasivam said...

அட?? நேத்திக்கு நான் வெண்பொங்கல் பண்ணினேனே! தெரிஞ்சால் படம் பிடிச்சுப் போட்டிருக்கலாமே!

Geetha Sambasivam said...

பொங்கலோடு சேர்ந்த பதிவு அருமை.

வல்லிசிம்ஹன் said...

பொங்கல் போட்டாச்சு ஸ்ரீராம்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி.இங்கே காலையில் கோலம் போடும்போதே காற்றில் வரும் கானங்கள் இனிமையாக அருள் பொழிகின்றன.
பத்துப் பதினைந்து குழந்தைகள் பஜனைப் பாடல்களைப் பாடியவாறு செல்கின்றனர். எனக்கென்னவோ பழையபடி மதுரைக்குச் சென்றுவிட்ட உணர்வு வந்துவிட்டது.இறைவன் அருள்
என்றும் நிலைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாருங்கள் கணேஷ். என்னவொரு அன்புடன் வாழ்த்துகள் சொல்லி இருக்கிறீர்கள்.
படங்கள் கிடைத்தது ஆண்டவன்(கூகிள்) அருள்தான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபால்.

வல்லிசிம்ஹன் said...

கண்ணனுக்குப் பூத்த பூக்கள் மரத்திலியே அவனுக்காகத் தான் காத்திருக்கின்றன.
பறிப்பதில்லை சாரல்.
அதனாலயே அழகாக இருக்கின்றன:)

வல்லிசிம்ஹன் said...

நானும் செய்தேன் கீதா. படம், எடுக்கத் தோன்றவில்லை:)

பாச மலர் / Paasa Malar said...

ஆர்கிட் பூக்கள் அழகு....

கீதமஞ்சரி said...

மார்கழிப் பூக்களின் வாசம் மனத்துக்கு இதமளிக்கிறது. மிகவும் நன்றி.

மாதேவி said...

சூடிக்கொடுத்த சுடர்கொடி மணம் கமழ்கின்றாள் நாச்சியார் வீட்டில்.

கண்ணனுக்காகக் காத்திருக்கும் பூக்கள் அழகு.