கண்ணே என் கணினியே!
ஐந்து நாட்களுக்கு முன் மதியம் 12 மணிக்கு என் கணினி பூரண ஓய்வு எடுத்துக் கொண்டது.
சட சடவென்று ஜன்னல்கள் மூடின. சைரன் ஒலிக்காத குறையாக
கறுப்பு பின்புலத்தில்
வெள்ளை எழுத்துகள் கணினியை நிறுத்து. குறுந்தட்டைப் போட்டு
. எஃப் 8 நம்பரைத்தட்டு.
இல்லாவிட்டால் உன் கணீனிதயாரிப்பாளர
களைக் கூப்பிடு
என்றெல்லாம் கட்டளைகள் வந்த வண்ணம் இருந்தன.
அப்போதுதான் ஒரு பதிவு எழுதி முடித்திருந்தேன்.
இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவே பத்து நிமிடங்கள் ஆயின எனக்கு:(
அடுத்து என்ன செய்ய.
தேடு. பழுது பார்ப்பவரை. மூளையின் கட்டளை.
அப்புறம் நிதானித்தேன்.
ஒண்ணும் வேண்டாம். இன்று விடுமுறை. மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.
இந்த முடிவு எடுத்த இரண்டே நிமிடங்களில்
கணினிதானே நமக்கு தொடர்பு சாசதனம். நான் பெற்ற செல்வங்கள்
எங்களைத் தொடர்பு கொள்ள உபயோகிக்கும் சாதனம்!!
சரி சுற்று அந்த எண்ணை.
சுற்றியாச்சு.
அவர் உடனே உதவி செய்வதாக உறுதி அளித்தார்..
ஆனால் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளும்படியும், ஊரெல்லாம் சுற்றும் காய்ச்சல் தன் கம்பெனியையும் பிடித்திருப்பதாகச் சொன்னார்.
இதென்னடா சனிப் பெயர்ச்சி இப்படி விளையாடுகிறதே.
முதலில் மைக்ரோவேவ், பிறகு தண்ணீர் பில்ட்டர்
,இப்பொழுது இது.
இரண்டு நாட்களும்
புத்தகங்களும், சினிமாக்களும் ,கச்செரிக்களுமாகக் கழிந்தன.
என்ன செய்தாலும் அம்மாவைத் தேடும் குழந்தை போல(!)
கை தானாகக் கீபோர்ட் பக்கம் போகும் விந்தைதான் வேடிக்கையாக இருந்தது
இதோ நேற்று வந்து ஹார்ட் டிஸ்கிக் கழட்டிவிட்டுப் புதிது போட்டுவிட்டு
இணைய இணைப்புக் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போனார் கணினி ரிப்பேர் செய்பவர்.
பிறகு தட்டுத் தடுமாறி இணையுமும் வந்தது.
பதிவெழுத விஷயமும் கிடைத்தது.
நஷ்டம் என்று சொல்லப் போனால் ,நூசி பூகம்பம் பற்றித் தெரிந்த பொது துளசியுடன் பேசமுடியாமல் போனதுதான்.
இப்பொழுது எல்லாம் நலம்.
கலப்பைதான் கிடைக்கவில்லை.
அழகிதான் இருக்கிறாளே:)
அனைவருக்கும் இனிய விழாக்கால வாழ்த்துகளும், புத்தாண்டு வாழ்த்துகளும்.
Comments
கண் செக்கிங்க் முடிஞ்ச்சாச்சு.
நான் தான் தை பிறக்கட்டும்னு தள்ளி வைத்தேன்.
சொட்டு மருந்து மூன்று வேளைகள் . உதவியாக இருக்கிறது..
கண்ணுக்கு ஓய்வு தேவை என்று என் கணினிக்குத் தெரிந்து ஓய்வு கொடுத்துவிட்டது
என்று நினைக்கிறேன்:) நன்றி மா.
மீண்டும் மீண்டும் வரும்படிச் செய்துவிடுகிறது.
இந்தப் பழக்கம்.கிட்டத்தட்ட 14 வருடப் பழக்கம்.
நட்பு ஆக்கிரமிப்புச் செய்துவிட்டது:)
கண்ணுக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுத்துக்கொள்ளவும்.
கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.
இணைய கனெக்ஷன் கிடைக்க கொஞ்ச நேரம் ஆயிற்று.
இந்த இணையத்திலிருந்து விலகி இருக்க ஒரு சந்தர்ப்பம்
கிடைத்தது.:)
http://thamizha.com/ekalappai-anjal
E kalappai 3.0.1 version
//அப்போதுதான் ஒரு பதிவு எழுதி முடித்திருந்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவே பத்து நிமிடங்கள் ஆயின//
ஆமாம். கஷ்டப்பட்டு டைப்பிய பின் காணாமல் போனால், அதிர்ச்சிதான். ஒண்ணும் ஓடாது.
படிச்சிங்களா?:
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
பெற்றோல் பங்க் ஓரமா கிடந்தது. அதை எடுத்துவந்து வளர்த்தது.நல்லாப் பெரிசாகிவிட்டது.
கணினி இல்லைன்னால் கஷ்டம்தான் பா.
உண்மைதான். எனக்கு இணையம் இல்லாவிட்டால் வெளினாட்டில் இருக்கும்
குழந்தைகளுடன் பேசுவது சிரமம் ஆகிவிடுகிறது. அதுதான் சிரமமாகிவிடுகிறது.
காலத்தின் மாற்றம்.:(
கட்டாய ஒய்வு ஐந்து நாளைக்கு:)
கதா காலட்சேபம் கேட்க முடிந்தது. புத்தக அலமாரியை தூசி தட்டி அடுக்க முடிந்தது:0)
இணையம் பிரச்னையா அங்கே? :((
இதானே? :)
இப்போது கணினியும் சரியாகிவிட்டது.
நேரம் தான் சுருங்கிவிட்டது.மார்கழியில் செய்ய வேலையா இல்லை..
தானே புயலும் சேர்ந்து கொண்டது.